KAILASA Library/பகவத்கீதை/ஞானத்தையே அனுபவமாக்கிவிடும் சரணாகதிSign in
பகவத்கீதை

ஞானத்தையே அனுபவமாக்கிவிடும் சரணாகதி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒரு சின்ன கதை ...

பிரதமர் பதவிக்குத் தேர்தலில் நிற்கும் ஒரு வேட்பாளர் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். ''என்னுடைய எதிர்காலத்தின் மேல் எனக்குத் தளராத நம்பிக்கை இருக்கிறது.''

பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், ''பிறகு ஏன் நீங்கள் கவலையுடன் காணப்படுகிறீர்கள்?''

வேட்பாளர் சொன்னார், ''ஆனால் என்னுடைய தளராத நம்பிக்கைக்கு உத்திரவாதம் கிடையாது. அதனால்தான் நான் கவலையாக இருக்கிறேன்.''

நம் தளராத நம்பிக்கைக்கும்கூட, நாம் தொடர்ந்து உத்திரவாதத்தை எதிர் பார்க்கிறோம். நம் நம்பிக்கைக்கு, தைரியத்திற்கு உத்திரவாதம் இல்லை என்று நாம் நினைக்கும்பொழுது, கவலை வந்து விடுகிறது. ஏதோ ஒன்றை இழந்து விடுவோம் என்று நினைப்பதும், வாழ்க்கையைப் பார்த்து நமக்கு ஏற்படும் பயமும்தான் நம்முடைய எல்லாக் கவலைகளுக்கும் பதட்டங்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் காரணம். கவலை, பதட்டம், மன அழுத்தம் என்பதெல்லாம், நம்முடைய பயத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

பயங்களில் பல வகைகள் இருக்கின்றன. நம்முடைய செல்வத்தையும் கௌரவத்தையும் அந்தஸ்த்தையும் இழந்து விடுவோமோ என்கிற பயம். நம் உடல் உறுப்பையோ, ஆரோக்கியத்தையோ இழந்து விடுவோமோ

என்கிற பயம், நம்முடைய நெருங்கிய
உறவுகளை இழந்து விடுவோமோ
என்கிற பயம், மரணம் போன்ற தெரியாத
விஷயங்களைப் பற்றிய பயம்.

அதனால்நான் அர்ஜுனன் ஒரு ஆரியரைப்போல் நடந்துகொள்ளவில்லை என்று கிருஷ்ணர் சொல்கிறார். ஆரியர் என்றால் 'விழிப்புணர்வுள்ள மனிதர்' என்று சொல்லலாம். ஆரியர் என்று இங்கே கிருஷ்ணர் குறிப்பிடும்போது அவர் எந்த ஒரு ஜாதியையும் இனத்தையும் குறிப்பிடவில்லை.

ஆரியர் என்பது இங்கே கிருஷ்ணர் குறிப்பிடும்போது அவர் எந்த ஒரு ஜாதியையும் இனத்தையும் குறிப்பிடவில்லை.

ஆரியர் என்றால் விழிப்புணர்வுள்ள மனிதர் என்று பொருள். அறிவில், உணர்வில் முதிர்ந்தவராகவும் பண்பட்டவராகவும், மனிதர்களிலேயே மன்னராகவும் திகழ்பவர்தான் ஆரியர் என்று வேதங்கள் சொல்கின்றன.

இங்கே கிருஷ்ணர், அர்ஜுனன் நான்கு வகைப் பயங்களாலும் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக் காட்டுகிறார். தம்முடைய உடைமைகளை இழந்து விடுவோமோ என்ற பயமும், போரில் ஊனமாகி விடுவோமோ என்ற பயமும், சொந்தங்களை, உறவுகளை, நண்பர்களை இழந்து விடுவோமோ என்ற பயமும், உயிரையே இழந்து விடுவோமோ என்ற பயமும், அர்ஜுனனைத் தடுமாறச் செய்கின்றன. இந்தப் பயங்கள்தான் அவருடைய கவலைகளாக மாறிவிட்டன.

கிருஷ்ணர் சாஸ்த்திரங்களையும் ஞானக்கருத்துக்களையும் சொல்வதன் மூலமாக, அர்ஜுனனின் பட்டறிவிற்குப் பயத்தைப் பற்றியும், கவலையைப் பற்றியும் நேரடியாகப் புரிய வைக்கிறார்.

கீதையின் பதினொன்றாவது அத்தியாயத்தில் அர்ஜுனன் கிருஷ்ணரின் விச்வரூப தர்சனத்தைப் பார்த்தவுடன், உண்மையில் 'கிருஷ்ணர் யார்' என்பதை உணர்ந்துகொள்கிறார். கிருஷ்ணர் அனைத்தையும் கடந்தவராக, தம்மால் உணர்ந்துகொள்ள முடியாத, தம்மால் கற்பனை செய்ய முடியாத நிலையில் இருக்கிறார் என்பதை அவர் உணர்ந்துகொள்கிறார். அதன் பிறகு எல்லாக் கடவுள்களும் கிருஷ்ணரைத் துதித்து, சரணடைவதைப்பற்றி அவர் வியப்படையவில்லை. அதன்பிறகு கிருஷ்ணர் இப்போது சொல்கிற 'எழுந்து நில்' என்ற வார்த்தைகளை மீண்டும் சொல்லும்போது, அர்ஜுனன் போர் செய்யத் துணிந்து விடுகிறார். அதோடு கீதை நிறைவு பெறுகிறது.

Peather illustration