KAILASA Library/பகவத்கீதை/நம் முன்னோர்கள் அளித்த வாழ்வியல் பரிசு சாஸ்த்ரங்கள்Sign in
பகவத்கீதை

நம் முன்னோர்கள் அளித்த வாழ்வியல் பரிசு சாஸ்த்ரங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

முதல் அத்தியாயத்தில், நான் சாஸ்த்ரம், ஸ்தோத்ரம், ஸூத்ரம் (ஞானம், பக்தி, த்யான நுட்பம்) இவற்றைப் பற்றிப் பேசினேன். இந்த மூன்றுமே, மக்களின் மன அமைப்பிற்கு ஏற்ப ஞானத்தை அடைவதற்கான மூன்று முக்கிய உபாயங்கள். வேதநூல்களை ஆதாரமாகக் கொண்ட ஞானக் கருத்துகளைத்தான் சாஸ்த்ரங்கள் என்ற சொல் குறிக்கிறது. மூளையை மையமாகக்கொண்டிருக்கும் பட்டறிவுப்பூர்வமான மனிதருக்கு, ஞானத்தைப் பற்றிச் சொல்லக்கூடிய சாஸ்த்ரங்கள் தேவைப்படுகின்றன.

பயத்தைப் பற்றிப்
பயப்படாமல்
நாம் எழுந்து
நின்றால்,
பயம் என்ற
ஒன்றே இல்லை
என்பதை
நம்மால் உணர
முடியும்.

இதயத்திலிருந்து இயங்கும் மனிதர்களுக்காக பக்திப் பாடல்களும், பக்தித் கதைகளும் கொண்ட ஸ்தோத்ரங்கள் இருக்கின்றன.

உணர்வு ரீதியாக இயங்கும் மனிதர்களுக்காக த்யானங்களையும் யோகத்தையும் உள்ளடக்கிய ஸூத்ரங்கள் இருக்கின்றன.

உண்மையில் இந்த மூன்றுமே ஒன்றில் இருந்து ஒன்று வேறுபட்டதல்ல. இவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட பாதைகள் அல்ல. ஏனென்றால் ஒருவர் ஒரு பாதையைப் பின்பற்றிப் பயிற்சி செய்யும்போது மற்றொன்றை விட்டுவிட வேண்டும் என்பது இல்லை. பக்தியில் இருந்தால் ஞானம் தேவையில்லை என்று அர்த்தம் கிடையாது. ஒரே மனிதர்தான், ஆனால் அவருடைய மன நிலை மாறிக் கொண்டே இருக்கும். இன்று ஸூத்ரங்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டும் மனிதர், நாளை ஸ்தோத்ரங்களைக் கேட்பதில் ஆர்வம் காட்டலாம்.

அர்ஜுனனைப் பொறுத்தவரையில், முதலில் அவருடைய பட்டறிவுக்குத் தெளிவு அளிக்கப்படவேண்டிய நிலையில்தான் இருக்கிறார்.

அதனால்தான் கிருஷ்ணர் அவருக்கு சாஸ்த்ரங்களை வழங்கி, சரியான அணுகுமுறையைக் கையாளுகிறார். அர்ஜுனன் நம்பிக்கையிலும் பக்தியிலும் கரைவதற்கு இன்னும் தயாராகவில்லை. அதனால்தான் கிருஷ்ணர் அவரை ஸ்தோத்ர நிலைக்குகொண்டு வர அவருக்கு சாஸ்த்ரங்களை வழங்க வேண்டியிருந்தது. இந்த மொத்தப் பிரச்சினைக்கும் காரணம், அர்ஜுனனின் பயம் மற்றும் கவலைகளின் காரணமாக எழுந்த மன அழுத்தம்தான். நம்முடைய எல்லா மன அழுத்தங்களுக்கும் ஆணி வேர் பயமும், பதட்டமும்தான். பயத்தைப் பற்றிப் பயப்படாமல் நாம் எழுந்து நின்றால் பயம் என்ற ஒன்றே இல்லை என்பதை நம்மால் உணர முடியும். நாம் செய்யவேண்டியதெல்லாம் அவற்றிற்கு எதிராக எழுந்து நிற்பது மட்டுமே! அப்பொழுதுதான் அதிலிருந்து விலக முடியும்.