KAILASA Library/பகவத்கீதை/அஹங்காரம் சோர்வு அடையும்வரை உங்களுக்காகக் காத்திருப்பார்Sign in
பகவத்கீதை

அஹங்காரம் சோர்வு அடையும்வரை உங்களுக்காகக் காத்திருப்பார்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அர்ஜுனன் இரக்கத்தாலும் மனத்தளர்ச்சியினாலும் அலைக்கழிக்கப் பட்டிருக்கிறார். தம்முடைய சொந்தக்காரர்கள், பெரியவர்கள், ஆச்சாரியர்கள், நண்பர்கள் இவர்களை அவர் இப்பொழுது எதிர்த்துப் போர் புரிய வேண்டும் என்கிற எண்ணமே அவருடைய துக்கத்திற்குக் காரணம்.

போரில், தாம் அவர்களைக் கொன்றுவிடும்படி நேர்ந்தால் என்ன செய்வது என்று அவர் மனம் கலங்கினார். அவர் குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறார். அவரால் நிற்கக்கூட முடியவில்லை. அப்படியே தம் ரதத்தில் சாய்ந்து விடுகிறார். வில்லும் அம்பும் அவருடைய கைகளை விட்டு நழுவி விழுகின்றன.

உடல்ரீதியாகவும் உணர்வுரீதியாகவும் ஆன்மரீதியாகவும் அர்ஜுனன் தம்மை முழுமையாக வெறுமையாக்கிக்கொள்வதற்கு கிருஷ்ணர் அனுமதிக்கிறார். அர்ஜுனன் சொல்வதை முழுமையாகக் கவனமாகக் கேட்கிறார். நண்பனும் வழிகாட்டியும் குருவுமானதம்மிடம் அர்ஜுனன் தம் மனத்தையும் இதயத்தையும் ஆத்மாவையும் திறப்பதற்காகக் கிருஷ்ணர் காத்திருக்கிறார். இவையெல்லாம் முழுவதுமாகத் திறந்தால்தான் அவர் சொல்லும் பதில் முழுமையாக அர்ஜுனனின் இருப்புத் தன்மைக்குள் ஊடுருவ முடியும்.

அதன் பிறகே முதன்முதலாக கிருஷ்ணர் பேசுகிறார். தம்முடைய இருப்பு நிலையில் இருந்து பேசுகிறார். கிருஷ்ணர் சொல்கிறார், “என் அன்புக்குரிய அர்ஜூனா, எப்படி நீ இந்த அசுத்தங்களைச் சேகரித்துக் கொண்டாய்? வாழ்க்கையின் அருமையை உணர்ந்த உன்னைப் போன்ற ஒருவனுக்கு இந்தத் துக்கம் பொருந்தாது, அது உனக்கு நல்லதல்ல. இந்த மன அமைப்பு உன்னை உயர்ந்த தளத்திற்கு எடுத்துச் செல்லாது. மாறாக அவமானத்திற்குத்தான் எடுத்துச் செல்லும்.”

அடுத்த ஸ்லோகத்தில் அவர் தொடர்கிறார்,
“ஓ பார்த்தா! கீழ்த்தரமான
கோழைத்தனத்திற்கு நீ ஆளாகிவிடாதே.
அது உனக்குப் பொருத்தமானதல்ல. இந்தப்

சீடர், தன்
மனத்தையும்
இதயத்தையும்
ஆத்மாவையும்
திறப்பதற்காகக்
குரு
காத்திருக்கிறார்.

பலவீனத்தை விட்டுவிட்டு எழுந்து நில், எதிரிகளை அழிப்பவனே!”

மொத்தக் கீதையின் பாதையையும் நோக்கத்தையும் இந்த ஒரு ஸ்லோகம் நமக்குக் காட்டி விடுகிறது. கிருஷ்ணர் ஒரு உண்மையான ஜென் ஞானி. அவர் எதையும் சுற்றி வளைத்துப் பேசவில்லை. கிருஷ்ணர் ஒரு தத்துவவாதி கிடையாது. அவர் பிரச்சினையை நேரடியாக அணுகுகிறார்.

கிருஷ்ணர் அர்ஜுனனிடம் நேரடியாகக் கேட்கிறார், "எப்படி உன்னிடம் இந்த அழுக்குகள் வந்தன? உன்னைப் போன்ற ஒரு மனிதனுக்கு இது பொருத்தமாக இல்லை. இந்த மன அமைப்பு உன்னை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லாது. அவமானத்திற்குத்தான் எடுத்துச் செல்லும்.''

அடுத்த ஸ்லோகத்தில் அவர் அழுத்தமாகச் சொல்கிறார், ''துக்கமான மன அமைப்பை விட்டுவிடு. எழுந்து நில்!''

கிருஷ்ணர் அர்ஜுனரை, "எதிரிகளை அழிப்பவனே," என்று அழைக்கிறார்.

இது ஒரு நேரடியான ஜென் அணுகுமுறை.

ஒரு சீடர் ஜென் ஞானி ஒருவரை சந்தித்து, ''குருவே புத்தர் என்றால் என்ன? நான் புத்தராக மாறுவது எப்படி?'' என்று கேட்கிறார். பதிலுக்கு குரு 'பளார்' என்று சீடரின் கன்னத்தில் ஒரு அறை விடுகிறார். சீடர் அதிர்ந்து போகிறார்.

குரு ஒரு த்யான நுட்பத்தையோ,
போதனையையோ, ஆசிர்வாதத்தையோ
தருவார் என்று எதிர்பார்த்த சீடர்
அதிர்ந்து போகிறார்.

இது எதைப் போன்று இருந்தது என்றால்
கடவுளிடம் சென்று, "கடவுளே!
ஆத்மாவை எப்படி உணர்வது?'' என்று

கேட்கும்போது, அதற்குப் பதிலாக ஒரு அறை கிடைத்ததுபோல இருந்தது.

சீடர் பக்குவமடைந்தவராக இருந்ததால், குருவின் இந்தச் செயலைப்பற்றி எதுவும் பேசவில்லை.

"குருவே நீங்கள் எதைச் செய்தாலும் காரணம் இல்லாமல் செய்யமாட்டீர்கள். உங்கள் செயலுக்கான காரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் நான் அதைத் தவறு என்று சொல்ல மாட்டேன். தயவு செய்து அதை எனக்கு விளக்குங்கள்," என்று பணிவுடன் கேட்டார்.

அதற்கு குரு சொன்னார், "முட்டாளே! நீதான் புத்தர், நீ ஏற்கனவே எதுவாக இருக்கிறாயோ, அதையே அடைய நீ ஏன் முயல வேண்டும்?

ஒரு குதிரை என்னிடம் வந்து, 'குருவே, நான் ஒரு குதிரையாக மாறுவது எப்படி? புல்லைத் தின்பது எப்படி? தண்ணீர் அடிப்பது எப்படி?' என்று கேட்டால், என்னால் என்ன சொல்ல முடியும்?

நீ ஏற்கனவே அதுவாகத்தான் இருக்கிறாய். அதனால் நீ எதையும் உன்னோடு சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை. உன்னை விழிப்படையச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் உன்னைக் கன்னத்தில் அறைந்தேன். அவ்வளவுதான்!"

அதுபோல இந்த ஒரே அறையின் மூலம் முழுக் கீதைக்கும் கிருஷ்ணர் வழிகாட்டுகிறார்.

கிருஷ்ணருக்கு அர்ஜூனனின் பிரச்சினை என்ன என்பது நன்றாகத் தெரியும். அர்ஜூனனுக்குள் ஏற்பட்ட மனச்சோர்விற்கு எந்த ஒரு ஆன்மிகத் தேடுதலும் காரணம் இல்லை. உண்மையில் அவர் தீர்வை விரும்பவில்லை. அவர் கிருஷ்ணரிடம் எதிர்பார்த்தது ஆதரவைத்தான், தீர்வை அல்ல.

> நீதான் புத்தர்! .
> நீ ஏற்கனவே
> புத்தராக
> இருக்கும்பொழுது
> எதற்காகப்
> புத்தராக இருப்பதற்கு
> முயல வேண்டும்?

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஒரு பிரச்சினைக்குத் தீர்வு வேண்டுமென்று தேடுவதற்கும், ஆதரவு வேண்டுமென்று நினைப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. தீர்வு என்பது வேறு, ஆதரவு என்பது வேறு. அர்ஜூனன் விரும்புவது ஆதரவு, தீர்வு அல்ல. அதனால்தான் இந்த இரண்டு ஸ்லோகங்களில் கிருஷ்ணர், அர்ஜூனனுக்கு எந்த ஆன்மிகக் கருத்துகளையும் சொல்லவில்லை.

அர்ஜுனனின் பிரச்சினைகள்
கவலையில் இருந்தும், பயத்திலிருந்தும்
தோன்றியிருக்கின்றன. அர்ஜுனனின்
மணிபூரக சக்ரமும், ஸ்வாதிஷ்டான சக்ரமும்
கவலையாலும் பயத்தாலும் முழுவதுமாக
அடைபட்டுக்கிடக்கின்றன. அர்ஜுனன்
தன்னொள் எழுந்த பயத்தின் காரணமாக,
தம் மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்த
குழப்பங்கள், மனச்சோர்வு, கவலை
ஆகியவற்றின் மொத்த உருவமாக இருந்தார்.

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு எந்த உபதேசங்களையும் தரவில்லை. நேரடியாக அவருடைய பயத்தைப் பற்றிப் பேசுகிறார். அவருக்கு எந்த ஆறுதலையும் தரவில்லை. "உன்னுடைய முட்டாள்தனமான பலவீனத்தை விட்டுவிட்டு எழுந்து நின்று போர் செய்," என்று சொல்வதன் மூலம் நேரடியாகக் கன்னத்தில் ஒரு அறை விட்டு அவரை விழிக்கச் செய்கிறார்!

அர்ஜுனன் மட்டும் ஸ்ஸோத்ர நிலையில், அதாவது பக்திப்பூர்வமான சரணாகதி நிலையில் இருந்திருந்தால், இந்த வார்த்தைகள் அவருக்குத் த்யான ஸூத்ரமாக மாறியிருந்திருக்கும். ஆனால் கீதையின் பிற்பகுதியில்தான் அர்ஜுனன் அந்நிலைக்கு வருகிறார். அர்ஜுனன் தம்மிடம் உள்ள பயத்தை விட்டுவிட்டு, கிருஷ்ணர் மேல் ஆழ்ந்த நம்பிக்கையையும் பக்தியையும் வைத்திருந்தால், இந்த இரண்டு ஸ்லோகங்கள் மட்டுமே ஸூத்ரங்களாக, தியான நுட்பங்களாக இருந்திருக்கும்.

அவர் எழுந்து நின்றிருப்பார். இந்த இரண்டு ஸ்லோகங்களைக் கேட்ட மாத்திரத்தில் ஞானம் அடைந்திருப்பார். அடையவேண்டிய உச்ச நிலையை, இறுதி உணர்வு நிலையை அடைந்திருப்பார்; மொத்தக் கீதையும் இந்த இரண்டு ஸ்லோகங்களுக்குள் அடங்கியிருக்கும். இதைத் தாண்டி எதையும் சொல்லவேண்டிய தேவை இருந்திருக்காது. நாம் யாரும் பதினெட்டு நாள்கள் இங்கு வந்து கீதை கேட்க வேண்டிய தேவையும் இருந்திருக்காது!

illustration