குறைகளைத் தீர்க்கும் குருவின் ஸாந்நித்யம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தங்களைத் துளைத்துக் கொண்டி்ருக்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்குமான விடைகளைப் பல வருடங்களாக தேடிக் கொண்டிருக்கும் ஆன்மிகத் தேடுதலுடைய பட்டறிவாளர்கள் கேட்பதுண்டு, "ஸ்வாமிஜி, நான் உங்களிடம் வரும்போது நூற்றுக்கணக்கான கேள்விகளோடுதான் வருகிறேன்.
ஆனால் உங்கள் முன் வந்து நின்றவுடன், அவற்றைப் பற்றியெல்லாம் கேட்கவேண்டிய அவசியமே ஏற்படுவதில்லையே, அது ஏன்? என்னுடைய எல்லாக் கேள்விகளுக்குமான பதில்களும் அங்கு ஏற்கெனவே இருப்பதுபோல் உணர்கிறேன்."
இது வெறும் கற்பனை அல்ல. உண்மை.
கேள்விகள், மேலும் புதிய கேள்விகளைத்தான் உருவாக்கும். கேள்விகள் உங்கள் உள் இருக்கும் அஹங்காரத்தின் வெளிப்பாடு. அந்த அஹங்காரம் உங்களுக்குள் இருக்கும் வன்முறையின் வெளிப்பாடு, அவ்வளவுதான்.
நீங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட ஒரு குருவின் முன் நிற்கும்போது, அங்கு நடக்கும் முதல் சம்பவம், உங்கள் அஹங்காரம் கரைவதுதான். சூரியனைக் கண்ட பனிபோல, குருவின் முன் உங்கள் அஹங்காரம் மறைந்துவிடும். அதனால் உங்கள் கேள்விகளும் மறைந்து விடுகின்றன. அந்த இடத்தில், இதுநாள்வரை அஹங்காரத்தாலும் அறியாமையாலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த, உங்களுக்குள் எப்போதும் இருந்து கொண்டிருக்கும் தெளிவை உங்களால் உணர முடியும். உங்கள் குருவின் ஸாந்நித்தியத்தில் ஏதோ மந்திரம்போல், மாயம்போல் பதில்கள் தோன்றியதாக நீங்கள் நினைப்பீர்கள்.
> நீங்கள்
> ஏற்றுக் கொண்ட
> ஒரு குருவின் முன்
> நிற்கும்போது,
> அங்கு நடக்கும்
> முதல் சம்பவம்,
> உங்கள் அஹங்காரம்
> கரைவதுதான்.
உண்மை என்னவென்றால், ஏற்கனவே
பதில்கள் அங்கேயே இருக்கின்றன.
ஆனால் அவற்றை ஏற்றுக்கொள்ளவும்
உணர்ந்துகொள்ளவும் நம்முடைய
அஹங்காரம் அனுமதிப்பதில்லை. குருவின்
ஸாந்நித்யம் அஹங்காரத்தைக் கரைத்து
நமக்குள் இருக்கும் பதில்களை நாமே உணர
வழி செய்கிறது.
ஒரு விறுவிறுப்பான ஜென் கதை ...
போர்வீரர் ஒருவர், ஒரு பிரச்சினைக்கான தீர்வை வேண்டி நான்சென் என்னும் ஞானியை சென்று சந்திக்கிறார். அவருடைய பிரச்சினை இதுதான்: அவர் ஒரு வாத்துக் குட்டியை ஒரு குடுவைக்குள் வைத்து வளர்த்து வந்தார். அந்த வாத்து வளர்ந்து குடுவை முழுவதும் அடைத்துவிட்டது. அதற்கு மேல் வளர அந்தக் குடுவையில் இடம் இல்லை.
அதனால் குடுவையில் இருந்து வாத்தை வெளியில் எடுக்க வேண்டுமென நினைக்கிறார். இப்போது குடுவையையும் உடைத்துவிடக் கூடாது; அதே சமயம் வாத்திற்கும் எந்தவிதமான பாதிப்பும் வந்துவிடக் கூடாது.
என்ன செய்வது? எப்படி வாத்தை வெளியில் எடுப்பது? இதுதான் அந்தப் போர்வீரரின் பிரச்சினை.
நான்சென் அழைத்தார், "ஓ போர்வீரரே!"
போர்வீரர், "என்ன குருவே?" என்று கேட்டார்.

நான்சென் உரத்தகுரலில்,
"அதோ, குடுவையில் இருந்து
வாத்து வெளிவந்து விட்டது!"
என்று உற்சாகத்துடன் கூவினார்.
நான்சென்னைத் தம்முடைய
குருவாக ஏற்றுக்கொண்டு, "என்ன
குருவே," என்று அழைத்த அந்த
நிமிடமே, அஹங்காரம் என்னும் அந்த வாத்து, இந்த உடல் - மனம் என்னும் குடுவையில் இருந்து வெளிவந்து விட்டது!
குருவின் முன் உங்கள் மனத்தைத் திறந்தால் மட்டும்தான், நீங்கள் உங்களுடைய பிரச்சினைகளைத் தெளிவாக உணர்ந்துகொள்வீர்கள். அப்பொழுதே தீர்வுகளையும் தெரிந்துகொள்வீர்கள்.
இதனை மூன்று வழிகளில் செய்ய முடியும். முதலாவது, குருவுடன் நேரடியாக வார்த்தைகளின் மூலம் உரையாடி உங்கள் பிரச்சினைகளைச் சொல்வது.
இரண்டாவது, பேசுவதற்குப் பதிலாக அமைதியான இதயத்திலிருந்து எழும் _பாவனா சக்தியின்_ மூலமாக, உங்களுடைய எண்ணங்களை குருவுக்குத் தெரியப்படுத்த முடியும். மூன்றாவது, முழு அமைதி நிலையில் அவரோடு கலந்து இருப்பது. இந்தக் கடைசி நிலையில் குருவால் உங்கள் பிரச்சினைகளை முழுமையாக உணர்ந்துகொள்ள முடியும்.
இங்கே கிருஷ்ணர் அர்ஜுனனை முழுமையாகப் பேச அனுமதிக்கிறார். அதனால் அர்ஜுனனுக்கே தம்முடைய பிரச்சினைகளைப் பற்றி ஒரு தெளிவு கிடைக்கிறது. தம்முடைய குழப்பத்தை வெளிப்படுத்தியவுடன் அவரால் ஆழ்ந்த அமைதிக்குள் செல்வதற்கும் குருவோடு கலப்பதற்கும் முடிகிறது.
