கருணையோடு கேட்டால், இறைவன் குரலையே கேட்கலாம்!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நாம் இப்போதுதான் உண்மையான கீதைக்குள் நுழைகிறோம்.
உண்மையில் கீதை இந்த இரண்டாம் அத்தியாயத்திலிருந்துதான் தொடங்குகிறது. இரண்டாம் அத்தியாயத்திலிருந்துதான் இறைவன் பேசத் தொடங்குகிறார். இதுவரை கிருஷ்ணர் ஒரு மனிதராக, வாஸுதேவ கிருஷ்ணராக, தம்முடைய மனித வடிவில் பேசிக்கொண்டிருந்தார்.
இரண்டாம் அத்தியாயத்திலிருந்து அவர் இறைவனாக, பரப்ப்ரஹ்ம கிருஷ்ணராக, பகவானாக, தம்முடைய தெய்வீக நிலையிலிருந்து பேசத் தொடங்குகிறார்.
இங்கு நாம் ஒரு முக்கியமான உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும், எப்பொழுதுமே புத்திசாலியான மனிதர் மட்டும்தான் மற்றவர்களைப் பேச அனுமதிப்பார். நாம் ஒருவரோடு ஒருவர் தொடர்ந்து பேசுகிறோம். ஆனால் உண்மையில், அங்கு உரையாடல் நடப்பதேயில்லை. பேசுவதற்கும் உரையாடுவதற்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது.
நாம் பேசும்போது உரையாடல் நிகழ்வதேயில்லை. நம் உரையாடல்கள் எல்லாம் உரையாடல்கள் அல்ல. ஒருவருக்கொருவர் ஒரே நேரத்தில் தனித்தனியாக பேசிக்கொள்கிறோம். அடுத்தவர் பேசும்போது அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதை நாம் கேட்பதே இல்லை, நம்முடைய பதில்களைத் தயார் செய்வதில் மட்டுமே மிகவும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதேபோல், நாம் பேசிக்கொண்டு
இருக்கும்போது, அவர் பதிலைத் தயார்
செய்து கொண்டிருக்கிறார்.
அவர் பேசுவதை நாம் கேட்டால்தான், நாம்
பேசும்போது அவர்கேட்பார்என்பதற்காகவே,
இரண்டு பேருமே கேட்டுக் கொண்டிருப்பது
போன்று நாகரிகமாக நடித்துக்கொண்டு
இருக்கிறோம். உண்மையான உரையாடல்
அங்கு நடப்பதேயில்லை. மற்ற மனிதரைப்
பேச அனுமதிப்பதற்குக்கூட, உங்களுக்குப்
புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது.
தயவு செய்து நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். பேசுவதற்குக்கூட நமக்குப்ப் புத்திசாலித்தனம் தேவையில்லை. ஆனால் கேட்பதற்குப் புத்திசாலித்தனம் கண்டிப்பாகத் தேவை.
ஒரு சின்ன கதை:
இரு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர், "நான் ஒரு வாரமாக என் மனைவியிடம் பேசவேயில்லை," என்று சொன்னார். நண்பர், "என்ன பிரச்சினை? அவரோடு ஏதாவது கோபமா அல்லது சண்டையா?" என்று கேட்டார்.
அதற்கு அவர் சொன்ன பதில்: "இல்லை. அவர் பேசும்பொழுது இடையில் குறுக்கிடுவதற்குப் பயமாக இருக்கிறது." கிருஷ்ணர் ஒரு ஆணாக இருந்ததாலோ என்னவோ, அவர் அர்ஜுனனைப் பேசுவதற்கு அனுமதித்தார்!
நாம் வெளியேயோ, உள்ளேயோ தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். ஏன் சைக்யாட்ரிக் டாக்டர்களுக்கு அதிகக் கட்டணம் கொடுக்கிறோம் என்று நினைக்கிறீர்கள்? ஏன் என்றால் அவர்களுக்குக் 'கேட்டுக்கொள்வதில்' இருக்கிற நிபுணத்துவத்திற்காகத்தான். சைக்யாட்ரிஸ்ட் என்ன செய்கிறார்? பணக்காரத்தனமான கேள்விகளைக் கேட்டுவிட்டு, நோயாளிகள் சொல்கிற பதிலைக் அவர் வெறுமனே கேட்டுக்கொண்டு இருக்கிறார். அவ்வளவுதான்!
நாம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம். நாம் வெளியே யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்கும்போதும்கூட, மற்றவர்கள் பேசுவதை நாம் கவனிப்பதே இல்லை.
ஒரு உண்மையான நிகழ்ச்சி...
ஒரு ஜூனியர் சைக்யாட்ரிக் டாக்டருக்கு தம்முடைய சீனியர் டாக்டரைப் பார்த்து மிகவும் ஆச்சரியம். 'எப்படி இவரால் மட்டும் எத்தனை நோயாளிகள் வந்தாலும் அவர்கள் எவ்வளவு நேரம் பேசினாலும் அவர்கள் பேசுவதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருக்க முடிகிறது' என்று நினைத்தார்.
வரும் நோயாளிகள் எல்லோரும் அவர்களின் கவலைகளையும் வேதனைகளையும் கொட்டுகிறார்கள். அந்த ஜூனியர் டாக்டரால் நோயாளிகள் சொல்கிற கஷ்டங்களையெல்லாம் கேட்க முடியவில்லை.
ஆனால் சீனியர் டாக்டரால் மட்டும்
அமைதியாக, மனம் கலங்காமல் தொடர்ந்து
கேட்க முடிந்தது.

ஒரு வாரம் கழித்து ஜூனியர் டாக்டர்,
சீனியர் டாக்டரிடம், "சார், உங்களால்
எப்படி இவர்கள் சொல்வதையெல்லாம்
கேட்டுக் கொண்டிருக்க முடிகிறது? இவர்கள்
கதையெல்லாம் கேட்டால் என் மனம் சோர்ந்து போகிறது. ஆனால் நீங்கள் எதனாலும் பாதிக்கப்படாமல் இருக்கிறீர்களே? அது எப்படி? ஏதாவது தொழில் ரகசியம் இருந்தால் சொல்லுங்கள்...!'' என்று கேட்டார்.
சீனியர் டாக்டர் மிகவும் அமைதியாகப் பதிலளித்தார்: "அவர்கள் சொல்வதை யார் கேட்டது?''
ஆனால் இங்கு அர்ஜூனன் சொன்னதைக் கிருஷ்ணர் முழுமையாகக் கேட்கிறார். அர்ஜூனன் சொல்வதைக் கவனத்தோடு கேட்பது மட்டுமல்ல, அதற்குக் கருணையோடு பதிலும் சொல்கிறார்.
மகாபாரதத்தில், பீஷ்ம பர்வத்தின் ஒரு பகுதியாக விளங்கும் கீதையில் மொத்தம் 745 ஸ்லோகங்கள் இருக்கின்றன.
அதில் அர்ஜூனனின் 57 கேள்விகளுக்கு 620 ஸ்லோகங்களின் மூலமாக, கிருஷ்ணர் ஆழமாகப் பதிலளிக்கிறார்.

சரியான கேட்டலே தீர்வைத் தந்துவிடும்
முதல் அத்தியாயத்தில் அர்ஜூனன் பேசும்போது, கிருஷ்ணர் ஒரு வார்த்தைகூடக் குறுக்கிட்டுப் பேசவில்லை. அர்ஜூனனை முழுமையாகப் பேச அனுமதிக்கிறார். ஒரு முழு அத்தியாயமுமே அர்ஜூனனின் பேச்சுதான். அர்ஜூனன் தம் குழப்பங்களையும் மன உளைச்சலையும் கொட்டுகிறார். ஆனால் கிருஷ்ணர், அதை அமைதியாகக் கேட்கிறார்.

அவர், எந்தக் குழப்பத்தின் அடிப்படையில்
அர்ஜூனன் பேசிக்கொண்டிருக்கிறார்,
அர்ஜூனனின் எண்ணங்கள் எங்கிருந்து
வருகின்றன, அர்ஜூனனுடைய குழப்பம்
என்ன என்பதைத் தீர்மானிப்பதற்காக, அந்தக்
கேள்விகளின் 'மூல'த்தைத் தீவிரமாகவும்
விழிப்புணர்வோடும் ஆராய்கிறார்.
பகவத்கீதையின் முதல் சில
அத்தியாயங்களைப் படித்தாலே
போதும், படிப்பவர், ஒரு வெற்றிகரமான
வியாபாரியாக மாறிவிட முடியும்.
மொத்தமுமே கேட்கும் கலைதான். அதைச்
சிறப்பாகக் கற்றுக்கொண்டால் மட்டும் போதும். உங்களால் உங்கள் துறையின் உச்சத்தைத் தொட்டுவிட முடியும். உங்களால் மற்றவர்கள் சொல்வதைச் சரியாகக் கேட்க முடிந்தாலேபோதும், உங்களால் சரியாகப் பதில் அளிக்கவும் முடியும்.
ஒருமுறை ஒரு பக்தர் என்னிடம்,
"ஸ்வாமிஜி, அது எப்படி உங்களால் எல்லாக்
கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடிகிறது?"
என்று கேட்டார்.
இதற்கு ஒரே ஒரு ரகசியம்தான் இருக்கிறது. கேட்கப்படும் கேள்வியை, 'கவனமாகக் கேட்டுக் கொண்டிருப்பது எப்படி' என்ற கலையும் அறிவியலும் எனக்குத் தெரியும் அவ்வளவுதான்.
'கவனமாகக் கேட்டுக் கொண்டிருப்பது' எப்படி என்று தெரிந்தாலே போதும்; பதில் சொல்வது எப்படி என்று உங்களுக்குத் தெரிந்துவிடும். பதில், உங்கள் இருப்புத் தன்மையில் (Presence) தானாகவே தயாராகிவிடும்.
நமக்கு நம் மீதும், நம்பிக்கை இருப்பதில்லை; எந்தவித தயார்படுத்துதலும் இல்லாமலேயே ஒரு கேள்விக்குப் பதில் செல்லக்கூடிய அளவிற்கு ஆற்றல் கொண்ட, நம்முடைய சொந்த இயல்பான புத்திசாலித்தனத்தின் மீதும் நம்பிக்கை இருப்பதில்லை.
அதனால்தான், கேள்விகளைச் சரியாக உள்வாங்காமலேயே வேக வேகமாக நாம் பதில்களைத் தயார் செய்யத் தொடங்குகிறோம். இரண்டாவது, பிரச்சினைகளைக் கேட்கிற அளவிற்கு நமக்குப்பொறுமையும் இல்லை. கேட்பதற்கு முன்பே, பேசுபரைப் பற்றி எடை போட ஆரம்பித்துவிடுகிறோம். பிரச்சினைக்குரிய தீர்வையும் உருவாக்கத் தொடங்கி விடுகிறோம்.
உண்மையில் பார்க்கப்போனால், நமக்குத் தெரிந்ததை வெளிப்படுத்துவதில்தான் நமக்கு ஆர்வம் அதிகம். உண்மையான பிரச்சினை என்ன என்பதை தெரிந்துகொள்வதற்கோ, அடுத்தவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்கோ நமக்கு ஆர்வம் இருப்பதில்லை. இயந்திரத்தனமாகக் கேட்பதில் நாம் திறமைசாலியாக இருக்கிறோம்; நாம் ஒருபோதும் உண்மையான ஆர்வத்துடன் கேட்பதில்லை. ஆனால் இங்கு, கிருஷ்ணருக்கு அர்ஜூனனின் பிரச்சினையைத் தெரிந்துகொள்வதற்கான உண்மையான ஆர்வம் இருக்கிறது. தமக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லிவிட வேண்டும் என்பதில் அவர் ஆர்வம் காட்டவில்லை. அர்ஜூனனுக்குத் தெளிவு பிறக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். அர்ஜூனனுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு பிறப்பதற்கு உதவ வேண்டும் என்பதில்தான் அவர் ஆர்வம் காட்டினார். அதனால்தான் அவர் அர்ஜூனனைப் பேச அனுமதிக்கிறார். அப்போதுதான் பிரச்சினையின் ‘மூலம்’வரை சென்று, அந்தப் பிரச்சினை குறித்துப் பேச முடியும்.
ஒருவர் சொல்வதைக் கேட்பதற்கு நமக்குச் புத்திசாலித்தனம் வேண்டும். என்னைக் கேட்டால், ஞானம் வேண்டுமென்றுதான் சொல்வேன். ஏனென்றால் கிருஷ்ணரைப் போன்ற ஞானியால் மட்டும்தான், கேட்க முடியும்.
அமைதிகூட மிகப் பெரிய உரையாடலை நிகழ்த்திவிடும்
முதல் அத்தியாயத்தில், அர்ஜூனன் சொல்வதைக் கிருஷ்ணர் முழுமையாகவும் ஆழமாகவும் கேட்கிறார். இந்த இரண்டாவது அத்தியாயத்தில்கூட அவர் பலமுறை அர்ஜூனன் பேசுவதற்கு வாய்ப்பளிக்கிறார். அர்ஜூனனைப் பேச அனுமதித்தால் அர்ஜூனனே தம்முடைய பிரச்சினைக்கான தீர்வைக் கண்டுபிடித்துவிட முடியும் என்று கிருஷ்ணருக்குத் தெரியும்.
பலர் என்னிடம் வந்து, “ஸ்வாமிஜி, என்னுடைய பிரச்சினை என்னவென்று உங்களுக்கே தெரியும். தயவு செய்து அதற்கு ஒரு தீர்வு கொடுங்கள்,” என்று கேட்பதுண்டு. அப்படிக் கேட்பவர்களிடம், “முதலில் உங்கள் பிரச்சினைகள் என்ன என்று எனக்கு நீங்கள் தெளிவாகச் சொல்லுங்கள்,” என்று கேட்பேன்.
அதற்கு அவர்கள், “நீங்கள் ஒரு ஞானி; என்னுடைய பிரச்சினையைப்பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரியும். அதை ஏன் நான் திரும்பவும் சொல்ல வேண்டும். நீங்கள் ஒரு நல்ல முடிவை மட்டும் சொல்லுங்கள்,” என்று சொல்வார்கள்.
> நீங்கள்
> உங்களுடைய
> பிரச்சினைகளைத்
> தெரிந்துகொள்ளவே
> முடியாது.
> அதை நீங்களே
> சொல்லாத வரை!
அவர்களிடம் நான் "ஐயா, நீங்கள்
சொல்லாவிட்டாலும் உங்களுடைய
பிரச்சினை என்ன என்று எனக்குத் தெரியும்.
ஆனால் நீங்கள் சொல்லாவிட்டால்
உங்களுடைய பிரச்சினை என்ன என்பது
உங்களுக்கும் தெரியாமல் போய்விடும்!"
என்று சொல்வேன்.
நீங்கள் உங்களுடைய பிரச்சினைகளைத்
தெரிந்துகொள்ள முடியாது. அதை நீங்களே
சொல்லாத வரை!
> நீங்கள்
> என்முன் வரும்போது
> உங்கள் மனத்தைத்
> திறந்து வைத்திருந்தாலே
> போதும்.
> உங்களுக்குள்
> தேவையான மாற்றங்கள்
> நடந்துவிட முடியும்.
பல சமயங்களில் நம்முடைய பிரச்சினைகளைத் தெளிவாக நம்மால் சொல்ல முடியாவிட்டால்கூட, நம்மால் நம் பிரச்சினைகளை முழுமையாக யோசித்துப் பார்க்க நிச்சயமாக முடியும். அப்படிச் செய்தால் குறைந்த பட்சம் நம்முடைய பிரச்சினைகள் என்ன என்பது நமக்காவது புரியும். தீர்வுகள் வேண்டுமென்றால், முதலில் நம் மனம், அதற்கான சாத்தியக்கூறுகளுக்காகத் திறந்து இருக்க வேண்டும்.
த்யான நிகழ்ச்சிகளில் சக்தி தர்சனம் நடக்கிறபோது, நம் பக்தர்களிடம் அவர்கள் சந்திக்கிற பிரச்சினைகளுக்கான அறிவுரைகளை என்னிடம் கேட்கும்படி சொல்லுவேன். நீங்கள் பேசும்போது, குரு கேட்கிறார். முக்கியமாக உங்களுக்குள்ளே நீங்களே கேட்கிறீர்கள்!
நீங்கள் என்னிடம் உங்கள் பிரச்சினைகளைச் சொல்லிக் கொண்டிருப்பதன் மூலம், உங்கள் பின்னால் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்கும் மக்களைக் காத்திருக்கும்படி செய்யவேண்டிய தேவைகூட இல்லை. நீங்கள் என் முன் வரும்போது உங்கள் மனத்தைத் திறந்து வைத்திருந்தாலேபோதும். உங்களுக்குள் தேவையான மாற்றங்கள் நடந்துவிட முடியும்.
குருவிடம் உங்கள் ஆசைகளையும் பிரச்சினைகளையும் சொல்வதைவிட அவற்றை மனக்காட்சியாகப் பார்த்தாலே போதும். சொல்வதைவிட பார்ப்பதே அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும்.
குருக்ஷேத்ர போர்க்களத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கீதையைச் சொல்லும்போது இதுதான் நடக்கிறது. பட்டறிவை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் மக்கள், காலத்தை மட்டும் கணக்கில்கொண்டு, "அர்ஜுனன் நீண்ட நேரம் பேசினார், இப்போது கிருஷ்ணர் இவ்வளவு நீண்ட நேரம் பேசுகிறார். போர்க்களத்தில்
இவர்கள் இருவரும் இவ்வளவு விரிவாகப்
பேசுவது என்பது எப்படிச் சாத்தியமாகும்?
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது
மற்றவர்கள் என்ன செய்துகொண்டு
இருந்தார்கள்? துரியோதனன் பொறுமை
இழந்திருக்க மாட்டாரா? அல்லது இதுதான்
நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்து, இவர்கள்
இரண்டு பேரும் பேசிக்கொண்டு இருக்கும்
போதே இவர்களைத் தாக்க முயற்சி செய்திருக்க
மாட்டாரா?'' என்று ஆச்சரியப்படலாம்.
பகுத்தறிவான, விழிப்புணர்வு இல்லாத மனம் அப்படித்தான் நினைக்கிறது. அமைதியின் மூலமாகவே ஒரு மிகப் பெரிய உரையாடல் நிகழ்ந்துவிட முடியும் என்று விழிப்புணர்வற் ற மனத்தால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. நம்மில் பலருக்கு பாவனை செய்து பார்த்தலின் சக்தி தெரிவதில்லை. நாம் வளர, வளர பாவனை செய்து பார்ப்பதை மறந்தே விடுகிறோம்.
குழந்தைகளால் மிகவும் அழகாக பாவனைசெய்து பார்க்க முடியும். அவர்களால், தங்களுடனேயும் தங்கள் மனத்தால் பாவனை செய்த நண்பர்களுடனேயும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சத்தமில்லாமல் பேசிக் கொண்டிருக்க முடியும். நமக்குத் தரப்படும் கல்வியும் தர்க்கமும் இந்த அருமையான திறனை மழுங்கடித்து விடுகின்றன.
உயர்ந்த நிலையில் கருத்துப் பரிமாற்றம் நடக்க வேண்டும் என்றால் நம்முடைய மனம் அமைதியாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இறை சக்தியால் நமக்குள் இறங்கி, நம் மனத்தின் மீது வேலை செய்ய முடியும். மனம் அமைதியாக இருக்கும்பொழுது ஏற்படும் கருத்துப் பரிமாற்றம்தான் மிக ஸூக்ஷ்மமானது. மிகவும் சக்தி வாய்ந்தது.
அந்த நிலையில்தான், உரையாடல் உரையாடலாக இல்லாமல் உணர்வில் கலத்தலாக உயர்கிறது.
இரமண மஹரிஷி போன்ற பெரிய ஞானிகள் மௌனத்தின் மூலமே சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் கற்பித்தார்கள் என்று சொல்வதெல்லாம் உண்மைதான்.
தகவலைப் பரிமாறச் செய்வதற்கு நீங்கள் வாயைத் திறக்க வேண்டாம். மனத்தைத் திறந்தாலேபோதும். தொல்லை தரும் எண்ணங்கள் இல்லாமல் மனத்தைத் திறக்கும்பொழுது, குருவுக்கும் சீடருக்கும் இடையில் ஏற்படும் கருத்துப் பரிமாற்றம் ஒளியின் வேகத்தில் நடக்கும். குருவின் ஸாந்நித்யம் நம் மனத்தை அமைதி பெறச் செய்யும். நீங்கள் கேள்விகளைக் கேட்கும் முன்பே பதில்கள் தோன்றும்.