வினாக்களின் வாசலில்...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- ஸ்வாமிஜி, நீங்கள் அர்ஜுனனின் நிலையைப் பற்றிச் சொல்லும்போது அவர் கொண்டது ‘இரக்கம்’ என்று குறிப்பிடுகிறீர்கள்.
ஆனால் ‘தம் உறவினர்களோடு போர் புரிய வேண்டாம்’ என்று நினைப்பது கருணையின் வெளிப்பாடுதான் என்று சிலர் சொல்கிறார்கள். இரக்கத்திற்கும் கருணைக்கும் என்ன வித்தியாசம்?
- கிருஷ்ணர், ஆர்யர் என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறார். ஆர்ய இனத்தவர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவியவர்கள் என்று சொல்லப்படுகிறது. அது உண்மையா?
- ஸ்வாமிஜி, கீதையைச் சொல்வதற்கு ஏன் கிருஷ்ணர் போர்க்களத்தைத் தேர்ந்தெடுத்தார்?
- ஸ்வாமிஜி, குரு சீடருக்கு எப்படி உதவுகிறார்? குரு சிஷ்ய உறவின் செயல்முறை என்ன?
- எப்பொழுது பகவத்கீதை உலகிற்கான பொதுமறையாக ஏற்றுக்கொள்ளப்படும்?
- அர்ஜுனன் மீண்டும் மீண்டும் கேட்ட கேள்விகளையே கேட்கிறார்! ஸத்யத்தைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு அர்ஜுனனிடம் பக்குவம் இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. பிறகு ஏன் கிருஷ்ணர் அர்ஜுனனுடன் நேரத்தை வீணடிக்கிறார்?
- நீங்கள் தத்துவவாதிகளை விமர்சிக்கிறீர்கள். அது சரிதானா? தனி மனித விழிப்புணர்விற்காக பல தத்துவவாதிகள் பெரும் பங்கு ஆற்றியிருக்கிறார்களே!
- துரோணாச்சாரியார், பீஷ்மாச்சாரியார் போன்ற மதிப்பிற்குரிய ஆச்சாரியார்களை எதிர்த்து நான் போரிட மாட்டேன் என்று அர்ஜுனன் சொன்னதில் என்ன தவறு இருக்க முடியும்? கற்றுக் கொடுத்த ஆச்சாரியர்களுக்கு எதிராகச் சண்டை போடவேண்டாம் என்றுதானே தர்மத்திற்குக் கட்டுப்பட்ட எந்தப் புத்திசாலி மாணவரும் நினைப்பார்?
✍ என்னுடைய கேள்வி, கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் என்பதைப் பற்றியது. நம் எதிர்காலத்தைக் கணிக்கிற ஜோதிடர்கள் மற்றும் கைரேகை பார்த்து குறி சொல்பவர்கள்... ഇവர்களைப் பற்றியது. சிலர் சொல்வது சரியாக இருக்கிறது. சிலர் சொல்வது தவறாக இருக்கிறது. இவற்றை நம்பலாமா?
✍ இறந்தவர்களுக்காக நாங்கள் துக்கப்படாமல் எப்படி இருக்க முடியும்? கிருஷ்ணரைப் போன்ற அல்லது உங்களைப் போன்ற ஞானிகளுக்கு வேண்டுமானால் அது சாத்தியப்படும். ஆனால் சாதாரண மக்களாகிய எங்களுக்கு அது சாத்தியமில்லை.
✍ நீங்கள் கீதையை மீண்டும் சொல்கிறேன் என்று குறிப்பிட்டீர்கள். அப்படியானால் நீங்கள் கிருஷ்ணரா? பலர், தங்களைத் தாங்களே கடவுள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்? நீங்களும் அதே போன்றுதான் சொல்லிக்கொள்கிறீர்களா?
✍ மரணம் என்பது நீங்கள் சொன்ன எண்ணங்களற்ற நிலையா? அப்படியென்றால் மரணம் தான் முழுமையான நிகழ்காலமா?
✍ நமக்கு ஏன் கடந்த பிறவிகளைப் பற்றிய நினைவுகள் வருவதில்லை? கடந்த பிறவிகளில் என்ன தவறுகள் செய்திருக்கிறோம் என்று நமக்குத் தெரிந்தால் இந்த ஜென்மத்தில் என்ன செய்ய வேண்டுமென்று நம்மால் சரியாக முடிவு எடுக்க முடியுமே?
✍ சில குருமார்கள், ஆத்மாவைப் பூரணம் என்றும், சில குருமார்கள் சூன்யம் என்றும் சொல்கிறார்கள். இந்த இரண்டினுடைய பொருளும் வேறு வேறாயிற்றே, பிறகு எப்படி இவை இரண்டும் உண்மையாகும்?

கிருஷ்ணர், அர்ஜுனனைப் போர் செய்யத் தூண்டுகிறார். பல மேலை நாட்டவர்கள் கிருஷ்ணர் வன்முறையைப் போதித்தார் என்று சொல்கிறார்கள். இது சரியா?

மறுபிறப்பைப் பற்றி பேசும்போது, மனிதன் விலங்காகவோ அல்லது பூச்சியாகவோகூட பிறக்க வாய்ப்பு உள்ளது என்று சொல்லப்படுகிறது. இது புரிந்துகொள்வதற்குச் சிரமமாக இருக்கிறதே?

இஸ்லாமும், கிறிஸ்துவமும் மறுபிறப்பு இல்லை என்று சொல்கின்றன. ஆக உலக மக்களில் பாதி பேர் மறுபிறப்பை ஏற்றுக்கொள்வதில்லை. மறுபிறப்பு உண்மையாக இருந்தால், ஏன் இந்த மதங்கள் அதை மறுக்கின்றன?

ஸ்வாமிஜி 'வெற்றியடைவதால் வரும் மன அழுத்தத்தைப் பற்றி நீங்கள் சொல்கிறீர்கள். இளம் வயதிலேயே ஒருவருக்கு அடிக்கடி மன அழுத்தம் வந்தால் என்ன செய்வது? அவரால் அந்த மன அழுத்தத்திலிருந்து வெளிவர முடியுமா?

பல நாடுகள், 'மரண தண்டனை' என்பது மனிதாபமற்ற செயல் என்று கருதி, அதற்குத் தடை விதித்திருக்கின்றன. ஆனால் சில நாடுகள், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மரண தண்டனை அவசியம் என்று கருதுகின்றன? இந்த இரண்டில் எந்த அணுகுமுறை சரியானது?

ஸ்வாமிஜி, ஆசைகளைப் பற்றிச் சொல்லுங்கள். பல குருமார்கள் ஆசைகளை அடக்கச் சொல்கிறார்கள். அதை எப்படிச் செய்வது?

'ஆத்மாவை அழிக்க முடியாது, சேதப்படுத்த முடியாது' என்றால், அதைத் துன்புறுத்தவும் முடியாதல்லவா, ஆனால் நம் உடலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும்போது நமக்கு வலிக்கிறதே, அது ஏன்? நம் உடல் புண்படுகிறதே அது ஏன்?

'நாம் எந்த உடலைத் தேர்ந்தெடுக்கிறோம்' என்பது நம் கடந்த பிறவியைப் பொறுத்தது' என்பது உண்மையானால் ஹிட்லர் போன்ற கொடிய மனிதர்கள் தொடர்ந்து கொடியவர்களாகவே பிறந்து கொண்டிருப்பார்களா? அப்படிப்பட்ட மனிதர்கள் திருந்தி வாழ்வதற்கு வழியே கிடையாதா?

கிருஷ்ணரும் கிறிஸ்துவும் ஒன்றா? இருவரும் கிட்டத்தட்ட அடைத்து வைக்கப்பட்ட இடத்தில்தான் பிறந்தார்கள்.
கிருஷ்ணர், மதுரா என்ற ஊரில் பிறந்தார். கிறிஸ்து மதிரியா என்ற இடத்தில் பிறந்தார். இரண்டு பேருமே மேய்ப்பர்களாக இருந்தார்கள். இப்படி இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இது உண்மையா? தயவு செய்து விளக்குங்கள்.

கிருஷ்ணர் சொல்கிறார்: ஸத்யம் முதலிலும் இறுதியிலும் வடிவமற்று இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில்தான் வடிவமுடன் இருக்கிறது. அவர் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைக் குறித்துப்பேசுகிறார் என்று வைத்துக் கொண்டால், நமக்குக் கடந்தகாலம் நன்றாகத் தெரிகிறது. ஆனால் தொடக்கம் மட்டும் தெரிவதில்லை. ஏன்?

‘மறுபிறவியைப் பற்றிய முழுக் கருத்துமே எதிர்மறையானது’ என்று நான் எங்கோ படித்திருக்கிறேன். அது துக்கங்களின் தொடர்ச்சியைப் பற்றியதுதான். மறுபிறப்பின் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் அனைவரும் அதிலிருந்து தப்பிக்க தீவிரமாக முயற்சி செய்கிறார்கள். அதனால் ‘மறுபிறவியை நம்புவதில் என்ன என்ன பயன் இருக்கிறது?

ஆன்மீகத்தில் வளர வளர ஒருவர் தாம் பேசுவதைக் குறைத்து மௌனத்தில் அதிக நேரம் இருக்க விரும்புவது சரிதானா?

நமக்கு மூன்று உடல்கள் இருக்கின்றன என்று நான் படித்திருக்கிறேன். ஆனால் நீங்கள் ஏழு சக்தி அடுக்குகளைப் பற்றிச் சொல்கிறீர்கள் இந்த இரண்டும் ஒன்றுதானா?
✍🏻 ஸ்வாமிஜி, கிருஷ்ணர் ஜகத்குரு, பிரபஞ்ச நாயகன் என்றால் பாண்டவ, கௌரவ இளவரசர்களோடு மட்டுமே ஏன் உள்ளார்? உலகை ஏன் காக்கவில்லை?
✍🏻 கிருஷ்ணர் தானே வேதமாக இருக்கும்போது அவரே, ‘வேதங்கள் பயனற்றவை’ என எப்படிச் சொல்லலாம்?
✍🏻 கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கற்பிக்கப்பட்டது ‘சாங்க்ய அறிவு’ எனச் சொல்கிறார். அவர் அர்ஜுனனை யோகத்தின் மூலம் எடுத்துக்கொள்ள விரும்புவதாகச் சொல்கிறார். இதில் என்ன வேறுபாடு உள்ளது?
✍🏻 ஸ்வாமிஜி, எப்பொழுதும் நாம் ஒரு செயலைச் செய்யும்போது அதன் முடிவை எதிர்பார்ப்பதுதானே இயற்கை. எப்படிப் பலனை நினைக்காது இருக்க முடியும்?
✍🏻 ஸ்வாமிஜி, குழும (Corporate) உலகில் அனைத்து செயல்களுமே இலக்குகளையும் வரவு செலவுத் திட்டங்களையும் சுற்றியே வருகின்றன. இந்தச் சூழலில் இலக்குகள் இல்லாமல் எவ்வாறு செயல்படுவது?
✍🏻 ஸ்வாமிஜி, நீங்கள் தேவைகள் மற்றும் ஆசைகள் இவற்றைப் பற்றிச் சொன்னீர்கள்.
தேவைகள், தங்களை நிறைவேற்றிக்கொள்வதற்குத் தேவையான சக்திகளைத் தாங்களே எடுத்து வந்துகொள்கின்றன என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் நாம் எதுவும் செய்யாமலேயே தேவைகள் தாங்களாகவே நிறைவேறி விடுமா?
✍🏻 ஒரு ஆமை செய்வதுபோல், புலன்களில் இருந்து விலகச் சொல்லி அர்ஜுனனை அறிவுறுத்தும்பொழுது கிருஷ்ணன் ‘ப்ரத்யாஹார’ முறையைப் பின்பற்றச் சொல்கிறாரா?
✍🏻 ஸ்வாமிஜி, ‘மனத்தை நிறுத்த முடியாது’ என்கிறீர்கள். அதே நேரத்தில் மனமற்ற நிலையே சிறந்தது என்றும் சொல்கிறீர்கள். மனத்தை நிறுத்த முடியாவிட்டால் நாம் மனமற்ற நிலையை அடைவது எப்படி?
'ஆசை அழிவிற்கு வழி வகுக்கும்' என்று கிருஷ்ணர் எப்படிப் பொதுப்படையாகச் சொல்ல முடியும்? அதை ஒரு பொதுக்கொள்கையாக எப்படிச் சொல்ல முடியும்? உலகில் ஆசை இல்லாமல் எல்லோரும் தியானம் மட்டுமே செய்து கொண்டிருந்தால் பிறகு உலகம் செயல்படவே முடியாதே?
ஸ்வாமிஜி, நாம் அஹங்காரம் இல்லாமல் வாழ வேண்டும் என்கிறீர்களே, இந்தப் பொருள் சார்ந்த உலகில் இது எல்லாம் சாத்தியமா? பிறகு பொருளாதார ரீதியாக நாம் தோற்று விடுவோமல்லவா?
ஸ்வாமிஜி! நீங்கள் மனத்தின் நான்கு நிலைகளைப் பற்றி விளக்கினீர்கள். மூன்றாவது நிலையான 'ஆழ்ந்த உறக்க நிலை என்னும் ஸுஷுப்தி' மற்றும் நான்காவது நிலையான 'மனமற்ற துரிய நிலை' இவற்றை எவ்வாறு வித்தியாசம் காண்பது?