KAILASA Library/பகவத்கீதை/நீங்கள் ஞானமடைந்தவர்கள் என்பதைSign in
பகவத்கீதை

நீங்கள் ஞானமடைந்தவர்கள் என்பதை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உணரவிடாமல் தடுப்பது எது?

நாம் நான்கு விதமான மன நிலையை அனுபவிக்கிறோம். விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை, ஆத்ம விழிப்புணர்வு நிலை.

நாம் விழித்திருக்கும்போது, 'நான், எனது' என்பதை உணர்ந்தவர்களாகவும் நமது மனத்தாலும் புலன்களாலும் எண்ணங்களாலும் வழி நடத்தப்படுபவர்களாகவும், மாயையால் கட்டப்பட்டும் இருக்கிறோம். மாயை, 'நான்,' 'எனது' என்ற நம்முடைய அடையாளங்களிலிருந்தே தோன்றுகிறது.

'மாயை',
'நான்' 'எனது' என்ற
அடையாளங்களில்
இருந்தே
தோன்றுகிறது.

ஆனாலும் நிகழ்காலத்தில் நிலைகொண்டிருக்கும் ஒருவர், கடலின் ஆழத்திலிருக்கும் நீர் சலனமின்றி இருப்பதுபோல் நிலையாக இருப்பார். மேற்பரப்பில் அலைகள் இருந்தாலும் அவை ஆழ்கடலைப் பாதிப்பதேயில்லை. ஆசைகள் அவரைத் தாக்கினாலும் அவை விழிப்புணர்வின் மேல் மட்டத்தில் அலைகளாக இருக்குமே தவிர அவரை எந்தவிதத்திலும் பாதிக்காது. ஏனென்றால் 'நான், எனது' என்ற பற்றுகளிலிருந்து விலகி இருப்பதால் , அவை அவரை பாதிப்பதில்லை. அவர் எண்ணங்களும், ஆசைகளும் அற்று இருப்பதால், எண்ணங்களும், ஆசைகளும் அவருக்குள் வந்தாலும் , அவரை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யாமல் , அவருக்குள்ளேயே இரண்டறக் கலந்து விடுகிறது.

இது எவ்வாறு முடியும் என்று நீங்கள் கேட்கலாம்.

ஒரு முநிவர் அமைதியாகச் சலனமற்று இருக்கும்போது, தமது புலன்களை முழுக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார். புலன்களும் முழுதாக கட்டுப்படுத்தப்பட்டு, அஹங்காரமும் செயல் இழந்து இருக்கும்போது எல்லா எண்ணங்களும், ஆசைகளும் சாட்சியாக மட்டுமே பார்க்கப் படுகிறது.

இந்த முனிவர் இந்த எண்ணங்களுக்குள்ளும், ஆசைகளுக்குள்ளும் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதில்லை. அவற்றைத் தடுக்கவோ, அடக்கவோகூட முயல்வது இல்லை. ஏனெனில் அது முடியாது என்பது அவருக்குத் தெரியும்.

அவற்றை அப்படியே விட்டுவிடுகிறார். கடல் தன்னுள் வந்து கலக்கும் நதிகளைச் சலனமின்றிச் சாட்சியாகப் பார்ப்பதுபோல், அவர் தம்முள் எழுகிற எண்ணங்களைச் சலனமின்றிச் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

நாம் அனைவரும் ஞானம் அடைந்தவர்களே! ஏனெனில் இந்தப் பிரபஞ்சம், ப்ரஹ்மத்தின் ஒரு பகுதியே. நம்முடைய ஞானத் தன்மையைப் பற்றிய ஸத்யத்தை உணராமல் இருப்பதே நமக்கு இருக்கும் குறை. ஞானம் அடைய நமக்கு வழியே இல்லை. ஏனெனில் நாம் அனைவரும் ஏற்கனவே ஞானம் அடைந்தவர்கள்தான்.

நமக்குத் தேவை, நம்முடைய ஞான நிலையைப் பற்றிய விழிப்புணர்வே!

நீங்கள் ஞானம் அடைந்தவர்கள் என்பதை உணராமல் தடுப்பது எது தெரியுமா? உங்களது அஹங்காரம்தான். நாம் நினைக்கிற 'கர்வம்' என்பதற்கும் , இந்த அஹங்காரத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அஹங்காரம் என்பது உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்து! இது, 'நான்,' 'எனது' என்பவற்றை உருவாக்குகிற எண்ணங்கள், அனுபவங்கள் மற்றும் உணர்ச்சிகளின் தொகுப்பு. இந்த அடையாளம் உங்கள் உடலுக்கும் மனத்திற்குமே தவிர ஜீவனுக்கு அல்ல. இது நிலையற்றது. உங்கள் உடலோடு அதுவும் அழிந்துவிடும். அழியக்கூடிய, நிலையற்ற உடல்-மனதோடு நீங்கள் கொண்டிருக்கும் 'நான்,' 'எனது' என்ற பற்றுதான் மாயை. அழியக்கூடிய பொருட்களை நீங்கள் என்றும், உங்களுடையது என்றும் அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள்.

மாயை என்னும் போலி நம்பிக்கையே உங்களுடைய விழிப்புணர்வான ஞான நிலைக்கும் உங்களுக்கும் இடையே ஒரு தடையாக உள்ளது.

உண்மையான சரணாகதியே உங்களைக் கடவுளாக்கிவிடும்

தமது புலன்கள், மனம், எண்ணங்கள் இவற்றைத் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஒருவர் நிகழ்காலத்தில் வாழ்கிறார், தனது உண்மை இயல்பைப் பற்றிய முழு விழிப்புணர்வுடன் இருக்கிறார்; ப்ரஹ்மத்தோடு ஒன்றியிருப்பவராகிறார். அவர் ஒருவர் மட்டுமே உண்மையில் விழித்திருப்பவர், தாங்கள் விழித்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் மற்றவர்கள் விழித்துக் கொண்டிருக்கவில்லை. இன்னும் ஆழமான தூக்கத்தில் இருக்கிறோம்.ஆனால் அவரோ தூக்கத்திலும் முழு விழிப்போடு இருக்கிறார்.

'நான்' என்னும் உணர்வில் பலமாகக் கட்டுப்பட்டிருப்பவர்கள், சக்தியின் வேரான மூலாதார சக்ரம் அடைபட்ட நிலையிலேயே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருப்பார்கள். ஆன்மீகப் பரிணாமத்தில் அவர்கள் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறார்கள். அவர்களின் முக்கியமான கவலையே அவர்களும், அவர்களுடைய இனமும் உயிர் வாழ்வது பற்றியதுதான்; அவர்கள் காமம், பேராசை இவற்றில் சிக்குண்டு இருக்கிறார்கள். இந்தக் குணங்களே 'நான்' என்ற உணர்வை உங்களுக்குள் தோன்றச் செய்கின்றன.

'நான்' என்னும் உணர்வுக்குச் சொந்தமான உடைமைகளின் மீது 'எனது' என்று பற்று கொண்டிருப்பவர்கள், தங்களது இந்த உடைமைகளை இழந்து விடுவோமா என்ற பயத்திலேயே வாழ்வார்கள். அவர்களுக்கு ஸ்வாதிஷ்டான சக்ரம் பயத்தால் அடைபட்டிருக்கும். அவர்கள் எப்பொழுதும் உடைமைகளைத் தொலைத்து விடுவோமோ, அடையாளத்தை இழந்துவிடுமோ, மரணமடைந்து விடுவோமோ என்ற பாதுகாப்பற்ற உணர்வுடனேயே இருப்பார்கள்.

மூலாதார சக்ரம் மற்றும் ஸ்வாதிஷ்டான சக்ரங்களுக்குச் சக்தியூட்டப்பட்டு, அந்தச் சக்தி அநாகஹத சக்ரம் வழியாக ஆஜ்ஞாவிற்குள் பாயும்போது அவர்கள் விழிப்புடைகிறார்கள். அவர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் 'தாங்களாகவே' உணர்ந்து, இறுதியில் அஹங்காரத்தையும் விட்டு ஒழித்து 'நான்'

பிரபஞ்ச இருப்புத்
தன்மையின்
முன்
உண்மையான
சரணாகதி நிகழ்ந்தால்
'ஞானமடைதல்'
நிகழ்கிறது.

‘எனது’ என்ற அடையாளத்திலிருந்தும் விலகுகிறார்கள்.

அப்போது பிரபஞ்ச சக்தியினிடத்தில்
முழுமையான சரணாகதியும் நமது இயல்பு
நிலையை அடையாளம் கண்டுகொள்வதும்
நிகழ்கிறது; ஞானமடைதலும் நிகழ்கிறது.
பிறகு நீங்களும் கடவுளாகிறீர்கள்!

யோகத்தில் நிலைபெற்றிருப்பவர்களின் அடையாளம் என்ன என்று அர்ஜுனன் கேட்ட கேள்விக்கு, கிருஷ்ணர் தம்முடைய விரிவான விளக்கத்தின் மூலம் பதில் சொல்லி முடிக்கிறார். யார் ஒருவர் யோகத்தில் மூழ்கி, ஸத்யத்தில் நிலைத்திருக்கிறாரோ, அவர் ப்ரஹ்மத்து’டன் கலக்கிறார் என்று முடிக்கிறார். இவர் இந்த நிலையை, மரணத்தின்போது அடைந்தாலும்கூட விடுதலையை, முக்தியை அடைகிறார் என்று சொல்கிறார்.

> மூலாதார சக்ரம்
> மற்றும்
> ஸ்வாதிஷ்டான
> சக்ரங்கள்
> சக்தியூட்டப்பட்டு,
> அந்தச் சக்தி அநாஹத
> சக்ரம் வழியாக
> ஆஜ்ஞாவிற்குள்
> பாயும்போது அவர்கள்
> விழிப்படைகிறார்கள்.

காலங்காலமாக கீதை உறுதிப்படுத்தும் செய்தி ‘நீங்கள் கடவுள்!’

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு, அவர் உண்மையில் யார், அவர் எந்த வழியில் ஸத்யத்தை உணர முடியும் என்பதை உணர்த்துகிற செயல்முறையில் இருக்கிறார். புலன்களை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல், உங்களைக் கட்டுப்படுத்துவதற்கு புலன்களை அனுமதிக்காமல், விழிப்புணர்வு நிறைந்த மன நிலையில் நிலைகொள்ளுதல், பிரபஞ்ச சக்தியுடன் போராடாமல் அதனிடம் சரணடைதல், மனம் மற்றும் அடையாளத்தை விட்டு விட்டு, நிகழ்காலத்தில் விழிப்புடன் இருத்தல் போன்றவையே ஸத்யத்தை உணரக்கூடிய நிச்சயமான வழிகள். அந்த ஸத்யம், ‘நீங்கள் உண்மையில் கடவுள்தான்’ என்பதே!

நான் எனது சீடர்களிடம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு இருப்பது இதுதான்; "எனது தெய்வீக தன்மையை உறுதிபடுத்துவதற்காக நான் இங்கு வரவில்லை. உங்களது தெய்வீக தன்மையை உறுதிப்படுத்தவே நான் இங்கு வந்திருக்கிறேன்."

இதுதான் காலங்காலமாக கிருஷ்ணர் சொல்லும் செய்தி. இதுதான் பகவத்கீதை சொல்லும் செய்தி.

அர்ஜுனனின் குழப்பம் மெதுவாகக் குறைய ஆரம்பிக்கிறது. உண்மையில் குழப்பம் அடைவது நல்லதுதான். தமக்கு எல்லாம் தெரியும் என்ற தவறான நம்பிக்கையில் வாழ்வதைவிட தாம் குழப்பத்தில் இருப்பதை ஏற்றுக்கொள்வது சிறந்தது. அர்ஜுனனுக்கு, தமக்குப் பயமும், குழப்பங்களும் உள்ளன என்று கிருஷ்ணரிடம் சொல்லக்கூடிய தைரியம் இருந்தது. இதுதான் தெளிவடைவதற்கான முதல் படி. தெளிவடைவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்ற கவலை தேவையில்லை. அந்தப் பாதையில் சென்றாலேபோதும்.

கீதையின் இரண்டாவது அத்தியாயமான ஸாங்க்ய யோகம் தெய்வீகமான அறிவு என்று சொல்லப்படும் இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர், குழப்பத்திலிருந்து மீண்டுவரும் பாதையை அர்ஜுனன் முன் வைக்கிறார். நீங்களும் அந்தப் பாதையிலேயே செல்லுங்கள்!

நாம் எல்லோரும் இறுதி ஸத்யமான பர ப்ரஹ்ம க்ருஷ்ணரிடம் நித்யானந்த அனுபவத்தை அளிக்குமாறு வேண்டிக்கொள்வோம்!

கிருஷ்ணரின் புல்லாங்குழல் பிடித்த கைகள்
Lord Krishna