உங்கள் அகங்காரத்தை விட்டுவிடுங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கேள்வி: ஸ்வாமிஜி, நாம் அஹங்காரம் இல்லாமல் வாழ வேண்டும் என்கிறீர்களே. இந்தப் பொருள் சார்ந்த உலகில் இது எல்லாம் சாத்தியமா? பிறகு பொருள் சார்ந்த உலகில் நாம் தோற்று விடுவோமல்லவா?
அஹங்காரம் என்பதில் இரண்டு பகுதிகள் உண்டு. ஸம்ஸ்க்ரு தத்தில் இவற்றை அஹங்காரம் மற்றும் மமகாரம் என்பார்கள்.
அஹங்காரம் என்பது வெளியில் காட்டப்படுவது; உங்களைப் பற்றி மற்றவர்களிடம் நீங்கள் சொல்ல நினைப்பது. இது எப்பொழுதுமே உங்கள் உண்மையான நிலையைவிட அதிகமாகத்தான் இருக்கும். மற்றவர்கள் உங்களை அழகானவர், சுறுசுறுப்பானவர், பணக்காரர் என நினைக்க வேண்டுமென்றும், அதிலும் உண்மை நிலையைவிட அதிகமாக நினைக்க வேண்டுமென்றும் விரும்புகிறீர்கள்.
மமகாரம் என்பது நீங்கள், உங்களுக்குள் நீங்கள் உங்களைப் பற்றி நினைத்திருப்பது. இது உங்கள் உண்மையான நிலையைவிட குறைவாகவே இருக்கும். சிலர் என்னிடம் சொல்வார்கள், “இல்லை ஸ்வாமிஜி எனக்கு, என் மீது மிகப்பெரிய மதிப்பு உண்டு,” என்பார்கள். தெரிந்துகொள்ளுங்கள், உங்களைக் கடவுள் என உணராதவரை உங்களது சுயமதிப்பீடு வேறு எதுவாக இருந்தாலும் சரி, அது குறைவானதே!
அஹங்காரத்துக்கும் மமகாரத்துக்கும் இடையில் உள்ள இடைவெளிதான் இந்தப் பிரச்சினைக்குக் காரணம். ‘இதுதான் என்னுடைய நிலை’ என்று உங்களைப்பற்றி நீங்களே நினைக்காத ஒருநிலையையே, நீங்கள் மற்றவர்களுக்குக் காட்டிக்கொள்ள விரும்புகிறீர்கள். இதனை நீங்கள் ‘வேற்றுமைப்படுத்தும் அஹங்காரம்’ என்ற வார்த்தையின் மூலம் சொல்லலாம். இந்த ‘வேற்றுமைப்படுத்தும்’ அஹங்காரத்தைதான் நீங்கள் விட்டுவிட வேண்டும்.
உங்களுள் பார்க்கும்போதும், வெளியே
காட்டிக்கொள்ளும்போதும் ஒரே
மாதிரியாகவே நீங்கள் இருந்தால், அங்கே
பிரச்சினைகள் உருவாவதில்லை. நீங்கள்
இயல்பாக இருக்கிறீர்கள். இப்பொழுதுதான்
உண்மையில் நீங்கள் நீங்களாகவே
இருக்கிறீர்கள். நீங்கள் பெருமையாகப்
பேசவும் தேவையில்லை, ஒளிந்துகொள்ளவும்
தேவையில்லை.
இந்த நிலையை நீங்கள் அடைந்து விட்டால், பொருள் சார்ந்தவற்றிலும் நீங்கள் முன்னேறியிருப்பீர்கள். ஏனென்றால் மக்கள் உங்கள் மீது அதிக மதிப்பு வைக்கிறார்கள். நீங்களும் சொல்வதைச் செய்வீர்கள். செய்வதைச் சொல்வீர்கள்; இதிலே மாறுபாடு இருக்காது.
ஆழமாகப் பார்த்தோமானால், நீங்கள் ஆன்மீகத்திலும் முன்னேறி விடுவீர்கள். நீங்களாகவே உங்கள் உடல் மனம் புத்தியின் மீதுள்ள எல்லாப் பற்றுகளையும் விட்டிருப்பீர்கள். இந்தப் பொருள் சார்ந்த உலகில் உங்களால் செயல்பட முடியாது என்று இதற்கு அர்த்தம் இல்லை. பல ஞானிகள் இந்த நிலையில் இருந்துதான் செயல்பட்டிருக்கிறார்கள்.
அந்த நிலையில் அவர்களது அடையாளம் உடல் - மனத்தைப் பொறுத்தது இல்லை; பிரபஞ்ச சக்தியைப் பொறுத்தே அடையாளம் காட்டப்படுவார்கள். பிறகு உங்கள் அஹங்காரமும், மமகாரமும் ஒருங்கிணைந்து மிக உயர்ந்த தெய்வீக நிலையில் இருக்கும்.
கேள்வி: ஸ்வாமிஜி நீங்கள் மனத்தின் நான்கு நிலைகளைப் பற்றி விளக்கினீர்கள். மூன்றாவது நிலையான ஆழ்ந்த உறக்க நிலை - ஸுஷுப்தி மற்றும் நான்காவது நிலையான மனமற்ற துரிய நிலை இவற்றை எவ்வாறு வித்தியாசம் காண்பது?
எண்ணங்கள், 'நான்' என்கிற அடையாளம் - இவை இரண்டும் இணைந்து 'நான்கு நிலைகளை' நமக்குத் தருகின்றன.
விழிப்புணர்வின் பல நிலைகள்
விழிப்புணர்வின் பல நிலைகள்
| எண்ணங்கள் விழிப்புணர்வு | எண்ணங்களுடன் கூடிய நிலை | எண்ணங்கற்ற நிலை |
|---|---|---|
| நான் என்ற விழிப்புணர்வு உள்ள நிலை | ஜாக்ரத் விழிப்பு நிலை | துரிய நிலை நித்யானந்த நிலை |
| 'நான்' என்ற விழிப்புணர்வproperty விழிப்புணர்வற்ற நிலை | ஸ்வப்னா கனவு நிலை | ஸுஷுப்தி ஆழ்ந்த உறக்க நிலை |
நாம், நம் மனத்தில் எண்ணங்களோடும், 'நான்' என்ற அடையாள உணர்வோடும் இருக்கும்போது நாம் ஸ்தூல அளவில் விழிப்போடு இருக்கிறோம். இதுதான் முதல் நிலை. இப்பொழுது நீங்கள் இந்த நிலையில்தான் என்னைக் கவனித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
'நான்' என்ற உணர்வற்று, ஆனால்
எண்ணங்கள் மட்டும் இருந்தால் நாம்
கனவு கண்டு கொண்டிருப்போம், கனவு
காண்போம். இது இரண்டாவது நிலை.
கனவு காணும்போது அங்கு 'நான்'
என்பது இல்லை, சரியா? அதனால்தான்,
கனவில் நம் வாழ்க்கைக்கு, நம்முடைய
அடையாளத்திற்கு அச்சுறுத்தல் வரும்போது
விழித்துக்கொள்கிறோம்.
> நீங்கள் நிச்சயம்
> தவறிப்போக
> மாட்டீர்கள்.
> நான் உறுதியாக
> இதைச் சொல்கிறேன்.
மூன்றாவது நிலை ஆழ் உறக்க நிலை. இதில் எண்ணங்களும் இருக்காது. ‘நான்’ என்ற உணர்வும் இருக்காது. சொல்லப்போனால் நாம் பிணம்போல் இருப்போம். இவ்வாறு ஒவ்வொரு இரவும் இறப்பதன் மூலம்தான், ஒவ்வொரு பகலிலும் நம் உடல்-மன அமைப்பு புத்துணர்ச்சி பெறுகிறது.
நான்காவது நிலையை நான்காவது வழி என்கிறோம். இந்நிலையில் நாம் முழு விழிப்புடன் இருப்போம். அதில் எண்ணங்கள் இருக்காது! எண்ணங்கள் மீது பற்றோ அல்லது எண்ணங்களைச் சேர்த்துப் பார்ப்பதோ இருக்காது. சாட்சியாகப் பார்ப்பது மட்டுமே இருக்கும். இந்த நிலையே ஸமாதி என்கிறோம். ஸமாதி என்பது ஒருவரின் இயல்பான நிலைக்குத் திரும்புவதுஅல்லது தம்மை உணர்வது என்பது பொருள்.
ஞானம் அடைந்தவர்கள் எப்பொழுதும் ஸமாதிநிலையிலேயே இருப்பார்கள். அதற்காக அவர்கள் தொடர்ந்து கண்ணை மூடிக்கொண்டு உள்ளார்ந்த நிலையிலேயே இருப்பார்கள் என்பது இல்லை. கிருஷ்ணர் சொன்னதுபோல ‘மற்றவர்கள் உறங்கும்போது அவர்கள் விழித்து இருப்பார்கள். மற்றவர்கள் விழித்திருக்கும்போது அவர்கள் உறங்குவார்கள்.’ அவர்கள் எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருப்பார்கள். ஆனாலும் தங்களுடைய புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள் என்பதே இதன் பொருள்.
ஒரு மனிதர் தம்மை உணர்ந்தவர்தானா என்பதை அறிய உங்களுக்கு ஓர் எளிய நுட்பத்தை சொல்கிறேன். அவர் உறங்கும்போது அவரை உற்றுப்பாருங்கள். உண்மையிலேயே அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது அவருக்குத் தெரியாது. மனிதர் உறங்கும்போது ஒரு மலர்போல, பேரானந்தத்துடன், எந்தவித அசைவும் இன்றி, முகத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தால், அவர் துரிய அல்லது ஸமாதி நிலையில் இருக்கிறார் என்று பொருள்.
உடல் உறங்குகிறது. ஆனால் மனம் எண்ணங்களின்றி முழுமையான விழிப்புடன் இருக்கிறது. உடல், மனம் இரண்டும் அமைதியில், பேரானந்தத்தில் நித்யானந்த நிலையில் இருக்கின்றன.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகசா³ஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
ஸாங்க்³யயோகோ³ நாம த்விதீயோஉத்⁴யாய: ||
ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய‘ ஸாங்கிய யோகம் எனப் பெயர் படைத்த இரண்டாவது அத்தியாயம்.