விழித்துக்கொள்ளுங்கள்!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

2.68 ஆகையால் வலிமையான தோள்களை உடைய அர்ஜுனனே! எந்த மனிதருடைய புலன்கள், புலன்களுக்குரிய போகப்பொருட்களில் இருந்து மீட்கப்பட்டு விட்டனவோ, அவருடைய புத்தி ஸ்திரமானது.
2.69 அனைத்து உயிரினங்களுக்கும் எது இரவோ, அதில் புலன்களை தம் வசப்படுத்திய யோகி விழித்திருக்கிறார். அனைத்து உயிரினங்களும் எதில் விழித்திருக்கின்றனவோ, அது, தம்மை உணர்ந்த ஞானிக்கு இரவு ஆகிறது.
2.70 எல்லாப் பக்கங்களில் இருந்து வரும் பல ஆறுகள் கடலில் புகுந்தாலும் கடல் அசைவதில்லை; அதேபோல் ஞானி எல்லாப் பக்கங்களில் இருந்து வருகிற அனைத்துவித ஆசைகள் புகுந்தாலும் அவர் நிலைதடுமாறுவதில்லை. அவரே மேலான அமைதியை அடைகிறார்; போகங்களை விரும்புபவர் அமைதியை அடைவதில்லை.
2.71 எந்த மனிதர் அனைத்து விருப்பங்களையும் துறந்துவிட்டு மமதை இல்லாதவராக, அஹங்காரமற்றவராக, சிறிதளவு ஆசையும் இல்லாதவராக ஸஞ்சரிக்கிறாரோ, அவரே அமைதியை அடைகிறார்; அவரே சாந்தியை அடைகிறார்.
2.72 ஓ பார்த்தா, கடவுள்தன்மையை உணர்ந்த நிலை என்பது இதுதான். இதை அடைந்தபின் ஞானி ஒரு போதும் மோஹமடைவதில்லை. மேலும் இந்த பிரஹ்ம நிலையில் நிலைபெற்றிருக்கும் ஒருவர், உயிர் பிரியும் நேரத்திலும் கடவுள் தன்மையோடு ஒன்றிணைகிறார்.
தூங்கும்போதும் விழிப்புணர்வோடு இருப்பவரே கிருஷ்ணர்

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு மீண்டும் ஒருமுறை, மோக்ஷத்தை அடைவது எப்படி என்பதைப் பற்றியும் ஒருவருடைய உண்மையான, இயல்பான நிலையாக இருக்கக்கூடிய அந்த ப்ரஹ்ம நிலையோடு இணைவது எப்படி என்பதைப் பற்றியும் விளக்கி இந்த அத்தியாயத்தை முடிக்கிறார்
சுய விழிப்புணர்வு இல்லாத ஒருவர் அமைதியாகவோ, மகிழ்ச்சியாகவோ, புத்திசாலியாகவோ இருக்க முடியாது. புலன்களால் வழி நடத்திச் செல்லப்படுபவர்கள் சுயவிழிப்புணர்வோடு இருக்க முடியாது; நிகழ்காலத்தில் வாழவும் முடியாது. புலன்களைத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஒருவரால் தமது மனத்தையும் கட்டுப்படுத்த முடியும். அந்த மனிதர் மட்டுமே உண்மையில் விழிப்படைகிறார்.
தமது புலன்களை
அடக்குபவர்
மனத்தையும்
கட்டுப்படுத்த முடியும்.
அந்த மனிதர் மட்டுமே
உண்மையில்
விழிப்படைவார்.
நாம் விழிப்புடன் இருப்பதாக நினைத்துக்
கொண்டிருக்கிறோம்; அது உண்மையா? நாம்
விழிப்புடன் இருக்கும்போதே கனவு கண்டு
கொண்டிருக்கிறோம். உடல் அளவில் நாம்
உறங்கவில்லை என்பதே ஒரே வித்தியாசம்.
அதனால்தான் விழிப்போடு இருப்பதாகவும்
நாம் புத்திசாலிகளாக இருப்பதாகவும்
நாம் சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும்
நாம் சரியான முடிவுகளையே எடுத்துக்
கொண்டிருப்பதாகவும் நடித்துக்
கொண்டிருக்கிறோம்.
பிறகு நாம் விழிப்பது எவ்வாறு? மன்னன்
ஜனகனின் ஆட்சியில் முரசு அறைபவர்
“விழித்தெழுக, விழித்தெழுக,” என்று
சூரிய உதயத்திற்கு வெகுநேரத்திற்குப்
பின்பு சொல்லிக் கொண்டே செல்வாராம்.
அது ஏனென்றால் மக்களுக்கு ‘அவர்கள்
விழிப்புடனும் உள்ளுணர்வுடனும்
இருக்க வேண்டும்' என்பதை
ஞாபகப்படுத்துவதற்காகவே அவ்வாறு
செய்தார்களாம்.
உண்மையில் நாம் விழிப்போடு இருக்கும் ஒரே தருணம் நாம் நிகழ்காலத்தில் இருக்கும் தருணம் மட்டுமே! அப்போது மட்டுமே தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற விழிப்புணர்வுடன் இருப்போம்.

இப்படிப்பட்ட விழிப்புணர்வு கொண்ட ஒருவரைத்தான் கிருஷ்ணர் முநி முனிவர் என்று அழைக்கிறார். முநி என்றால் தம்மைத்தாமே உணர்ந்து நிகழ்காலத்தில் இருப்பவர் என்று பொருள். அப்படிப்பட்டவர் தூக்கத்திலிருந்தாலும் விழித்துக்கொண்டு இருந்தாலும் எப்பொழுதும் விழிப்பு நிலையிலேயே இருப்பார்.
மற்றவர்கள் விழித்துக்கொண்டு இருக்கும்போது அப்படிப்பட்ட மனிதர்கள் உறங்குவார்கள் என்கிறார் கிருஷ்ணர். நாம் வாழும் இதே உலகில் வாழ்ந்து, நம்மைப் போன்றே செயல்களில் சுறுசுறுப்பாக ஈடுபடுபவராக வெளிப்பார்வைக்குத் தோன்றினாலும், நிஜத்தில், ஸத்யத்தில் வாழ்பவராகவும், செயல் திறனுடன்கூடிய செயலற்ற தன்மையில் இருப்பவராகவும் இருக்கிறார். அதாவது, இந்த உலகியல் வாழ்விலேயே மூழ்கிவிடாமல், அவர் தம்முடைய ஆத்மாவிலேயே, சுயத்திலேயே மையம் கொண்டிருப்பவராக இருப்பார் என்று பொருள். அவர் புலன்களைக் கடந்தவராக இருப்பதால், இந்த உலகினரைப் பொறுத்தமட்டில், அவர் உறங்குபவராகவும் இறந்தவராகவும் இருக்கிறார்.
தன்னை உணர்ந்த ஒருவர், மற்றவர்கள் உறங்கும்போதும் விழித்துக்கொண்டு இருப்பார். அவர் உறங்கும்போதும்கூட விழிப்புடனேயே இருப்பார். இந்த நிலையை ஸுப்த சித்தம் என்பார்கள்.
