KAILASA Library/பகவத்கீதை/எல்லா ஆசைகளும்Sign in
பகவத்கீதை

எல்லா ஆசைகளும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அடிமைத்தனமே

கேள்வி: ஸ்வாமிஜி, மனத்தை நிறுத்த முடியாது என்கிறீர்கள். அதே நேரத்தில் மனமற்ற நிலையே சிறந்தது என்றும் சொல்கிறீர்கள். மனத்தை நிறுத்த முடியாவிட்டால் எப்படி நாம் மனமற்ற நிலையை அடைவது?

நீங்கள் உயிருடன் இருக்கும்வரை உங்கள் உடல்-மன அமைப்பு உயிருடன் இருக்கும்வரை உங்கள் மனம் செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கும். உங்கள் மனம் என்பது உங்கள் உடல் மன அமைப்பின் பகிர்ந்தளிக்கப்பட்ட புத்திசாலித்தனமே தவிர வேறொன்றுமில்லை. உங்களின் எண்ணங்கள் மற்றும் நினைவுகளின் தொகுப்பே இது. நீங்கள் உயிருடன் இருக்கும்வரை உங்களுடைய புலன்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்வரை நீங்கள் செய்திகளைச் சேகரித்துக் கொண்டேயிருக்கிறீர்கள், அதைச் சேமித்துக் கொண்டே இருக்கிறீர்கள், அதைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கிறீர்கள். இப்படிச் செய்வதன் மூலம், மனத்தின் பிடியில் சிக்கிக்கொள்கிறீர்கள்.

நீங்கள் இந்தச் செயலை நிறுத்த முடியாது. நிறுத்த முயற்சி செய்தால் குரங்கை மறக்க நினைத்தவனின் நிலைதான் உங்களுக்கும். ஆனாலும் நீங்கள் 'எண்ணங்களைத் தொடர வேண்டாம்' என்ற முடிவினை எடுக்க முடியும். வானில் செல்லும் மேகங்களைப் பார்ப்பதுபோல் வெறுமனே எண்ணங்களை ஒரு சாட்சியாக இருந்து மட்டும் பாருங்கள். அவற்றோடு இயைந்து செல்ல வேண்டாம். இது நிச்சயம் முடியும். பிறகு உங்கள் மனத்தின் பிடியிலிருந்து வெளிப்படுவீர்கள். உங்கள் மனம் உங்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, நீங்கள் உங்கள் மனத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

சில தியான முகாம்களில், பங்கேற்பாளர்களை 20 நிமிடங்களில் அவர்களுக்குள் வரும் அனைத்து எண்ணங்களையும் எந்த ஒரு எண்ணத்தையும் ஒதுக்காமல் எழுதச் சொல்வேன். பிறகு அவர்கள், தாங்கள் எழுதியதைப் படிக்கும்போது தங்களுக்குள் ஒரு பைத்தியக்கார விடுதியே இருப்பதை உணர்வார்கள். இந்த எண்ணங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையாகவும் தர்க்கரீதியில்லாமலும் ஒழுங்கற்றவையாகவும் அர்த்தமற்றவையாகவும் இருக்கின்றன.

இதில் இன்னும் மோசம் என்னவென்றால், இந்த ஒழுங்கற்ற எண்ணங்களில் இருந்து சில எண்ணங்களை எடுத்து, உங்களுக்கு நீங்களே இன்பத்தண்டுகளையும் மற்றும் துன்பத்தண்டுகளையும் உருவாக்கிக்கொள்கிறீர்கள். உங்களுக்குத் தோன்றும் அனைத்துப் பிரச்சினைகளுமே, உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களை தர்க்க ரீதியில் இணைத்து பார்ப்பதாலேயே எழுகின்றன.

உங்கள் எண்ணங்களில் இருந்து 'அன்க்ளட்ச்' ஆன உடனேயே இன்ப துன்ப தண்டுகளைத் தோற்றுவிப்பதை நிறுத்தி விடுவீர்கள். அதாவது உங்கள் எண்ணங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை என்பதை ஒத்துக்கொள்வீர்கள்; அதை அனுபவப்பூர்வமாக உணரவும் செய்வீர்கள். அப்போது நீங்கள் சுதந்திரத்தை அடைகிறீர்கள், மனமற்ற நிலையை அடைகிறீர்கள்.

நீங்கள் தியானத்தில் அடைய வேண்டிய நிலை இதுவே ; நீங்கள் நிகழ்காலத்திற்கு நகர வேண்டும், உங்கள் எண்ணங்களைப் பற்றிய விழிப்போடு இருக்க

உங்கள் மனம்
என்பது
உங்கள்
புத்திசாலித்தனத்தின்
பகிர்ந்தளிக்கப்பட்ட
ஒருநிலையே தவிர
வேறொன்றுமில்லை.

வேண்டும், ஆனால் அவற்றோடு எந்தத் தொடர்பும்கொள்ளாமல் முழுமையாக ‘அன்கிளட்ச்’ நிலையிலேயே இருக்க வேண்டும். பிறகு, உண்மையிலேயே நீங்கள் விழிப்புணர்வுள்ளவராக மாறி விடுவீர்கள்.

இதுவே ஸாக்ஷி நிலை என்று குறிப்பிடப்படுகிறது. உங்கள் எண்ணங்களின் ஒரு பகுதியாக மாறிவிடாமல், அதைக்காணும் ஒரு சாட்சியாக மட்டும் இருங்கள். செயல்களில் ஈடுபடாமல் எண்ணங்களை ஒரு சாட்சியாக மட்டுமே இருந்து பாருங்கள். ஆகாயத்தில் செல்லும் மேகங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதுபோல் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்; நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்; ஆனால் நீங்கள் எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களோ அதிலிருந்து வேறுபட்டிருப்பீர்கள். இது நிச்சயம் முடியும். இதற்குச் சிறிது பயிற்சி மட்டுமே தேவை.

கேள்வி: கிருஷ்ணர், ஆசையே எல்லா அழிவிற்கும் காரணம் என்று எப்படிச் சொல்ல முடியும்? ஆசை இல்லாமல் எல்லோரும் தியானம் மட்டுமே செய்து கொண்டிருந்தால் உலகம் செயல்படவே முடியாதே!

நல்லது. நீங்களோ மற்ற மனித குலமோ தோன்றுவதற்கு முன்பே இந்த உலகம் இருந்தது. நாம் எல்லோரும் மறைந்த பிறகும் இது செயல்படும். புத்தபிரான் சொல்வதுபோல் இந்தப் பிரபஞ்சம் இதற்கு முன்னும் இருந்தது. இதற்குப் பிறகும் இருக்கும். இந்த உலகமும், பிரபஞ்சமும் நம்மால் செயல்படவில்லை, நாம் இருந்தும்கூட செயல்பட்டுக்கொண்டிருக்கிறது!

இந்த முழுப் பிரபஞ்ச வெளியில் நாம், மனித குலம் ஒரு முக்கியமில்லாத பகுதியாகத்தான் இருக்கிறோம். இந்தச் சக்தியில் நாம் ஒரு சிறு துரும்புதான். ஆனால் நாம்தான் இந்த உலகை இயக்க உதவுவதாக நினைத்துக்கொள்கிறோம். அதுதான் வேடிக்கை!

உண்மையில் நீங்கள் யார் என்பதையும் இருப்பு நிலையில் உங்கள் பங்கு என்ன என்பதையும் நீங்கள் உணர்ந்தபின், உடனடியாக நீங்கள் இரு விஷயங்களை உணர்வீர்கள். முதலில், நீங்கள் எவ்வளவு அற்பமானவர்கள் என்பதையும் நீங்கள் அந்த முழுமையின் ஒரு பகுதி என்பதையும் உங்களை அதிலிருந்து பிரிக்க முடியாது என்பதையும்

நீங்கள் யார்
என்பதை
உண்மையில்
உணர்ந்த பின்,
நீங்களே ‘முழுமை’
என்று
உணர்வீர்கள்.

ஆதி சங்கரர்

உணர்ந்துகொள்வீர்கள். அதே நேரத்தில்
உங்களுக்குள் பொதிந்திருக்கும் திறனையும்
நீங்கள் அந்தப் பிரபஞ்ச இருப்புத்
தன்மையின் ஒரு பகுதி என்பதையும் அந்த
முழுமையே நீங்கள்தான் என்பதையும்
உணர்ந்துகொள்வீர்கள்.

இது முதலில் ஏதோ ஒரு முரண்பட்ட கருத்தாகத் தோன்றும். ஆனால் இதுதான் ஸத்யம். நீங்கள் ஸத்யத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால் அந்த ஸத்யத்தை முதலில் நீங்கள் அனுபவித்திருக்க வேண்டும். நீங்கள் புரிந்து கொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், நம்பினாலும் நம்பா விட்டாலும் தயவு செய்து இந்தப் பேருண்மையை ஆழ்ந்து சிந்தியுங்கள். நீங்கள் என்ன நினைத்துக் கொண்டாலும் சரி, அது இந்தப் பிரபஞ்ச இயக்கத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பற்றிப் பிரபஞ்சம் கவலைகொள்வதில்லை.

அழிவிற்கு வழி வகுக்கக்கூடியவை என்று கிருஷ்ணர் நம்மை எச்சரிப்பது இவற்றைப் பற்றித்தான்: பற்று, ஆசை, கோபம், மனக் குழப்பம், மறதி, விவேகமின்மை, அழிவு. இது துன்பத்தைக் கொடுக்கும் ஒரு விஷச்சுழற்சி.

பகவான் சங்கரர் சொல்லும் வாழ்வின் நல்லொழுக்கச் சுழற்சி இது: ஸத்யத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமானால், பற்றின்மை, மூட நம்பிக்கையிலிருந்து விடுதலை, மனத்தின் சமநிலை மற்றும் விடுபடுதல் இவை அனைத்தையும் வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டும் என்கிறார்.

இவை இரண்டும் ஒன்றே; ஒன்று, கீழே
செல்லும்; இன்னொன்று, மேலே செல்லும்.
ஒன்று, உங்களை அழிவுக்கு அழைத்துச்
செல்லும்; இன்னொன்று, உங்களை
விடுதலைக்கு அழைத்துச் செல்லும்.

இந்த உடலை நீங்கள் எடுக்கும்போது,

உங்களுக்குத்
தோன்றும்
பிரச்சினைகள்
அனைத்தும்
உங்களுக்குத்
தோன்றும்
எண்ணங்களை
இணைத்துப்
பார்ப்பதாலேயே!

உங்களுடைய ஜீவன், உயிர், ஆத்மா அல்லது
சுயம் உங்கள் உடலில் நுழையும்போது, அது
ஆசைகளோடு நுழைகிறது. முற்பிறவியில்
நிறைவேறாத ஆசைகளைச் சுமந்துகொண்டு,
அவற்றை நிறைவேற்றுவதற்காகவே இந்த
உடலுக்குள் நுழைகிறது.

இந்த மன நிலையையே, அதாவது இந்த நிறைவேறாத ஆசைகளின் சாரமாக இருக்கிற மன அமைப்பையே வாஸனா என்கிறோம். புதிய உடலுக்குள்கொண்டு செல்லப்படும் அந்த ஆசைகளின் மூட்டையை ப்ராரப்த கர்மா என்கிறோம். கர்மா என்னும் மூட்டை உங்களுக்கு இல்லையென்றால், நீங்கள் மீண்டும் பிறக்கவே மாட்டீர்கள். இந்த ஜனன, மரண சுழற்சியிலிருந்து விடுதலையடைவீர்கள்.

நீங்கள் பிறந்தபோது உங்களுடன் கொண்டுவந்த இந்த நிறைவேறாத ஆசைத் தொகுப்பிற்கு ஒரு சக்தி உண்டு. இது நேர்மறையானதோ அல்லது எதிர்மறையானதோ அல்ல. இது ஒரு முழுமையான சக்தி. தன்னைத்தானே நிறைவேற்றிக்கொள்வதற்குத் தேவையான சக்தியுடனேதான் இந்த வாழ்க்கைக்குள் நீங்கள் நுழைந்துள்ளீர்கள், ஆனால் இதைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள். இதைப் பற்றிய புரிதல் உங்களுக்குள் நிகழ வேண்டுமானால், நீங்கள் செய்யவேண்டியது எல்லாம், இதுதான்: வாழ்வை, அது இப்போது எப்படி உள்ளதோ அப்படியே அதை ஏற்றுக்கொண்டு வாழ்வதும், உங்களுக்கு எது நிகழ்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வதுவும்தான்!

துரதிர்ஷ்டவசமாக, மரணத்தின்போது நிகழும்செயல்முறையில், காரண சரீரத்தில் ஒருவர் இந்த விழிப்புணர்வை இழக்கிறார். இதன் விளைவாக மற்றவர்களின் ஆசைகளைத் நம்முடைய ஆசைகளாக நினைத்துக்கொண்டு அதைத் தொகுத்து, அவற்றிற்காக நம் வாழ்க்கையைச் செலவழிக்கிறோம்.

பெரும்பாலான நமது ஆசைகள், ஒப்பீடு செய்தல், பொறாமை மற்றும் பேராசைகளின் மூலம் பெறப்பட்டவையாகவே இருக்கின்றன. இப்படிப்பட்ட ஆசைகளுக்கு ஒரு முடிவே இல்லை.

இந்தப் பற்று மற்றும் ஆசை பற்றித்தான் கிருஷ்ணர் இங்கே சொல்கிறார். மற்றவர்களிடமிருந்து நாம் பெறும் இந்த ஆசையே துன்பத்திற்கான

> பெரும்பான்மையான
> நமது ஆசைகள்
> மற்றவர்களோடு
> ஒப்பிடுவதாலும்
> பொறாமையாலும்
> பேராசையாலுமே
> கடனாகப் பெற்றவை!

காரணம் என்கிறார் புத்தர்பிரான். இதனால்தான் சங்கரர் 'ஸத்யத்தையும் விடுதலையையும் தேடும் நம்முடைய தேடுதலிலேயே நாம் கரைந்துவிட வேண்டும்' என்கிறார்.

வாழ்க்கை என்பதே, நாம் பிறக்கும்போது நம்முடன் கொண்டு வந்த நிறைவேறாத ஆசைகளை உணர்ந்து, அதை நிறைவேற்றிக்கொள்வதுதான். அப்படி நிறைவேற்றிக்கொள்வதன் மூலம், நிறைவேறாத ஆசைகளே இல்லை என்ற நிறை நிலையை அடைகிறோம். இந்த நிறை நிலைதான் மோக்ஷம், விடுதலை, தன்னை-உணர்தல்; எப்படி உங்களுக்கு விருப்பமோ அந்தப் பெயரால் அழைத்துக்கொள்ளலாம். இதன் விளைவாக உங்களுக்கு மறு பிறவி கிடையாது, நீங்கள் விரும்பும்வரை!

| நாம் உண்மை நிலையோடு தொடர்பு கொள்வதேயில்லை. உண்மை என்று நினைக்கும் கற்பனை உலகிலேயே நாம் வாழ்கிறோம். | இது ஒரே புத்தகத்தில் விளக்கி விடக்கூடிய ஒரு எளிமையான கருத்து அல்ல. நாங்கள் இதை விரிவாக லைப் பிளிஸ் புரோகிராம் இரண்டாவது நிலை த்யான வகுப்பில் விளக்கியுள்ளோம். இதையே நித்யானந்த ஸ்புரண த்யானம் என்கிறோம். எளிமையாகச் சொல்வதானால் நமக்குள் இருக்கும் நிலையான அழிவில்லாத ஆத்மா மரணத்தின்போது அழியக்கூடிய இந்த உடல் - மன அமைப்பில் இருந்து வெளியேறுகிறது. அப்படி வெளியேறும்போது, அது ஏழு சக்தி அடுக்குகளைத் தாண்டிச் செல்கிறது. |

ஒவ்வொரு அடுக்கிலும் அது தம்முடைய வாழ்வின் நினைவுகளை மீண்டும் வாழ்கிறது; மீண்டும் அனுபவிக்கிறது. எங்களுடைய தியான வகுப்புகளில் ஒவ்வொருடுக்கிற்குரிய த்யான முறையைப் பயன்படுத்தி ஸம்ஸ்காரங்களை, நினைவுப் பதிவுகளைக் கரைக்கிறோம்.

இப்பொழுது ஒரு விஷயத்தில் தெளிவாக இருங்கள். உங்களின் பற்றுதல்களும், ஆசைகளும் கிருஷ்ணர் சொல்வதுபோல் முடிவில் துக்கத்திற்கும் அழிவிற்கும்தான் வழிகாட்டும். ஒரு கட்டத்தில் நம்முடைய ஆசைகளுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, "எனக்கு உள்ளது போதும்," என்று சொல்லக்கூடிய புத்திசாலித்தனம் உங்களுக்கு இல்லை. 80 வயது நபர்கூட தாம் இன்னும் நீண்ட நாள்கள் வாழவே விரும்புகிறார். அவருக்குப் பேரன், பேத்திகள் இருந்தாலும்கூட, கொள்ளுப்பேரன் பேத்திகளைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார். நீங்கள்

இறந்து விடுவீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும்; இறக்கும்போது எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை என்பதும் தெரியும்; ஆனாலும் ஆசைகளுக்கு முடிவே இல்லை.

வெறும் கையோடு இறக்க நீங்கள் விரும்புவதில்லை. நீங்கள் பெயரோடும், புகழோடும், சொத்து சுகத்தோடும், உங்கள் பெயரைச் சொல்லும் ஒரு அரச மரபோடும் இறக்கவே விரும்புகிறீர்கள். இவை எல்லாம் எதற்கு?

நீங்கள் மீண்டும் பிறக்கும்போது இதில் ஏதாவது உங்களுக்கு ஞாபகம் இருக்குமா? ஒருவேளை, உங்கள் மூளையின் செயல்பாட்டை மாற்றியமைப்பதன் மூலம், இவற்றை மறுபிறவியிலும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும் என்றால் மட்டும், இந்த ஆசைகளின் மூலம் ஏதாவது ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா?

> உங்களை
> விருப்பு வெறுப்புகளுக்கு
> ஆட்படுத்துகிற
> இந்த
> உலகப் பொருட்களும்,
> உறவுகளும்
> மாயையின் வடிவங்களே.

நாம் அடிமைகளாக இருக்கிறோம். ‘அடிமைப் பழக்கம்’ என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிற போதை மருந்துகளுக்கு மட்டும் நாம் அடிமையாகவில்லை, ஆனால் நாம் உலகத்தில் உள்ள பல பொருட்களின் மீது உள்ள பற்றால் அவற்றிற்கு அடிமைகளாக உள்ளோம், நமது பற்று நேர்மறையாக இருக்கும்போது நாம் கவரப்படுகிறோம். நமது பற்று எதிர்மறையாக இருக்கும்போது வெறுக்கிறோம். ஒருமுறை எது நம்மைக் கவர்ந்ததோ மறுமுறை அதுவே நம்மை பயமுறுத்துகிறது. ஒருவர் விரும்புவதை அடுத்தவர் வெறுக்கிறார். இந்த மனக்குழப்பத்தைப் பற்றித்தான் கிருஷ்ணர் சொல்கிறார். நாம் உண்மை நிலையோடு தொடர்புகொள்வதேயில்லை. நாம் உண்மை என்று நினைக்கும் கற்பனை உலகிலேயே வாழ்கிறோம்.

புத்தர், “அனைத்துமே அநிச நிலையற்றவை, நிச்சயமற்றவை,” என்று சொல்கிறார். உங்களை விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்படுத்துகிற இந்த உலகப் பொருட்களும், உறவுகளும் மாயையின் வடிவங்களே என்பதையும் அவை நிலையற்றவை என்பதையும் உணர்ந்துகொள்ளும்போது மட்டுமே, நீங்கள் ஸத்யத்தை நோக்கிச் செல்ல முடியும். இல்லையென்றால், இந்த மாயா வடிவங்கள் உங்கள் மனத்தைக் கீழ் நிலைக்குத் தள்ளி, உங்களை அழித்து விடுகிறது.

சுக்கான் இல்லாத ஒரு கப்பல் பெரிய கடலில் காற்றோட்டத்தால் அடித்துச் செல்லப்படுவதுபோல், நீங்களும் அழிவை நோக்கி அடித்துச் செல்லப்படுகிறீர்கள்.

கிருஷ்ணர், தனது கருணையால் நமக்குத் தீர்வும் காட்டுகிறார். "புலன்களைக் கட்டுப்படுத்தி, விருப்பு வெறுப்புகள் அற்ற, நல்லது கெட்டது என்ற தீர்மானங்கள் அற்ற, இன்பம் துன்பம் என்ற பற்றுதல் அற்ற மன நிலையை வளர்த்துக்கொள். பிறகு நீ அமைதியையும் ஆனந்தத்தையும் அடைவாய்," என்று சொல்கிறார்.

இவ்வாறு உங்கள் வாழ்க்கையை உருமாற்றிக்கொள்ளுங்கள்! நீங்கள் என்றும் நித்யானந்தத்தில் இருப்பீர்கள்.

கிருஷ்ணரின் கைகள் புல்லாங்குழல் வாசிக்கும் சித்திரம்