நிகழ்கால விழிப்புணர்வில் நிலைபெறுவதே நிம்மதியைத் தரும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உங்கள் மனம் எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்களில் ஆழ்ந்திருக்கிறது, அதாவது இல்லாத ஒன்றில் நிலைத்திருக்கிறது. நீங்கள் யூகிப்பீர்கள், நீங்கள் கற்பனை செய்வீர்கள், நீங்கள் கனவு காண்பீர்கள், நீங்கள் உங்களுக்கு ஏற்ற கதைகளையும் விவாதங்களையும் உருவாக்குவீர்கள். உங்கள் எதிர்காலத்திற்கென்று ஒரு கூட்டையும் உருவாக்கி இருப்பீர்கள். ஆனால் யாராவது கேட்டால், "நான் இனிமேல்தான் திட்டமிட வேண்டும்," என்பீர்கள்.
உங்கள் திட்டங்கள் எவ்வளவு தூரம் நிகழ்கால நிதர்சனத்தின் அடிப்படையில் உள்ளது? நிகழ்கால உண்மையில் நிலைத்து நின்று, அந்த உண்மையை அடிப்படையாகக்கொண்டு முன்னேறுவதில் தவறு இல்லை. அதைத்தான் கால அட்டவணைத் திட்டம் என்கிறேன். பொருள் சார்ந்த உலகில் வாழவேண்டுமென்றால் கால அட்டவணைத் திட்டம் தேவை.
நானும் இதைச் செய்கிறேன். உதாரணத்திற்கு அடுத்து வரும் தினத்தைப் பற்றித் திட்டமிடுவது, எப்பொழுது எழுவது, எப்பொழுது வீட்டை விட்டுக் கிளம்புவது, எப்பொழுது அலுவலகக் கூட்டத்தைக் கூட்டுவது, அந்நாளில் என்ன வேலை செய்து முடிப்பது, எப்போது வீட்டிற்குத் திரும்புவது போன்றவற்றைத் தீர்மானிப்பது. இதை ஒருமுறை திட்டமிட்டால்தான் அந்த நாளின் இலக்கு உங்களுக்குத் தெரியும்.
புலன்களில் இருந்து
வெளியேறுங்கள்;
அதன் பிறகே
நீங்கள்
அமைதி அடைவீர்கள்.
ஆனால் பெரும்பான்மையான நேரத்தில்,
நிதர்சன வாழ்வில், நாம் திட்டமிட்டபடியே
எல்லாவற்றையுமே நம்மால் செய்துமுடிக்க
முடிவதில்லை.
அது ஏனென்றால் ஒன்று, உங்கள்
கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட
விஷயங்களைக் கண்டு கவலைப்பட்டுக்
கொண்டிருப்பீர்கள் அல்லது அந்தக்
கவலைகளில் இருந்து தப்பிப்பது எப்படி
என்றும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பீர்கள்
அல்லது பேராசையின் காரணமாக உங்களால்
அடைய முடியாத ஒன்றை எண்ணி கவலைப்
பட்டுக்கொண்டிருப்பீர்கள். தெளிவாக,
நேர்மையாகச் சிந்தியுங்கள்.
நமது புலன்கள் திறமையாக இந்த ஆசைகளுக்கும் கவலைகளுக்கும் உதவும். அவை நமது கவலைகளையும் ஆசைகளையும் உண்மை என நம்மை நம்ப வைத்து, அவற்றிற்கு ஏற்ப நம்மைச் செயல்பட வைக்கும். இது இரவில் கனவு கண்டு பயத்தால் வேர்த்து விறுவிறுத்து எழுந்திருப்பது போன்றதுதான். அது கனவுதான் என்றாலும்கூட நம்மை வேர்க்க வைத்து விடுகிறது. இதுபோல்தான், நம் மனத்தின் வெளிப்பாடுகளான இவையனைத்தும், நாம் விழிப்பு நிலையில் இருந்தாலும்கூட, அவற்றை 'உண்மை' யென நம்மை நம்ப வைத்து விடுகின்றன.
"புலன்களில் இருந்து வெளியேறுங்கள்; அவற்றின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பித்து விடுங்கள்; நிகழ்கால விழிப்புணர்வில் நீங்கள் நிலைகொள்ளுங்கள். அதன் பிறகே நீங்கள் அமைதி அடைவீர்கள்" என்கிறார் கிருஷ்ணர்.
புலன்களிலிருந்து தப்பித்தால்
பேரின்பத்தில் திளைக்கலாம்
நிகழ்காலம் என்றால் என்ன? விழிப்புணர்வு என்றால் என்ன? நம்முடைய மனம் இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையே அலைபாயாமல் இருந்தாலேபோதும், அது தாமாகவே நிகழ்காலத்தில் நிலைத்து நின்றுவிடும். நாம் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதுவே நிகழ்காலம். இப்பொழுது நீங்கள் புத்தகம் படித்துக்கொண்டு இருந்தால் பாதி கவனத்தைப் புத்தகத்தில் வைத்துக்கொண்டு மீதி கவனத்தை இசையில் வைக்காதீர்கள்; பாதி கவனத்தைப் புத்தகத்தைப் படிப்பதிலும் மீதியைத் தொலைக்காட்சி யைப் பார்ப்பதிலும் வைக்காதீர்கள்; புத்தகம் படித்துக் கொண்டே, யாருடனாவது பேசி க்கொண்டு இருக்காதீர்கள். படிப்பதில் மட்டும் முழுமையாகக் கவனம் செலுத்துங்கள் அல்லது படிக்கவே வேண்டாம்.
படிப்பதில் மட்டும்
முழுமையாகக் கவனம்
செலுத்துங்கள்
அல்லது படிக்கவே
வேண்டாம்.
எப்பொழுது நீங்கள் கடைசியாக உண்மையாகச் சாப்பிட்டீர்கள்? சாப்பிடுவது என்று நான் குறிப்பிடும்போது, சாப்பாட்டில் மட்டும் உங்கள் முழுக் கவனத்தையும் செலுத்திச் சாப்பிடுவதையே குறிப்பிடுகிறேன். நீங்கள் பெருமுயற்சி எடுத்து நிறுத்தாதவரை இந்தப் பயணம் உங்கள் வாழ்நாள் முழுவதும் தொடரும். உங்கள் மனம், நிகழ்காலத்தில் அதாவது ஒரே ஸத்யத்தில் வாழ விரும்புவதே இல்லை.
நினைவுப்படுத்திப் பாருங்கள். கடைசியாக எப்பொழுது நீங்கள் சாப்பிடும்போது புத்தகம் எதையும் படிக்காமல், தொலைக்காட்சி யைப் பார்க்காமல், யாருடனும் பேசாமல் அல்லது ஏதோ நினைவில் இயந்திரத்தனமாக விழுங்காமல், ஒவ்வொரு கவளத்தையும் உணர்வுப்பூர்வமாக உணர்ந்தே சாப்பிட்டீர்கள் என்பதை ஞாபகப்படுத்திச் சொல்ல முடியுமா? நாம் உணவை உபயோகமற்ற குப்பையாக நினைத்தால்,
நமது வயிற்றில் அது குப்பையாகவே மாறி
விடுகிறது. அதனால் சக்தியைத் தரவேண்டிய
உணவு, சக்திக்குப் பதிலாகக் குட்டித்
தூக்கத்தைக் கொடுத்து விடுகிறது.
அடுத்த முறை நீங்கள் எது செய்து கொண்டிருந்தாலும் அந்த வினாடியில் அதில் முழுமையாகக் கவனம் செலுத்தி அதை மட்டுமே செய்யுங்கள். நீங்கள் பல் துலக்கிக்கொண்டு இருந்தால், அந்தப் பற்பசை எவ்வாறு சுவைக்கிறது, அந்தப் பிரஷ் எவ்வாறு அசைகிறது என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அலுவலகத்தில் நடக்க இருக்கும் கூட்டத்தைப் பற்றியோ, குழந்தைகளை எழுப்பி பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதைப் பற்றியோ அல்லது அடுத்த சில மணி நேரங்களில் நீங்கள் செய்யவேண்டியவை என்ன என்பது பற்றியோ நினைக்காதீர்கள்.
நீங்கள் நிகழ்காலத்தில் நிலைகொள்ளும்போது உங்கள் புலன்கள் மற்றும் மனத்தின் பிடியிலிருந்து வெளியேறுகிறீர்கள். நீங்கள் இப்பொழுதும் பார்ப்பீர்கள், கேட்பீர்கள். ஆனால் நீங்கள் பார்ப்பதோ அல்லது கேட்பதோ நீங்கள் செய்துகொண்டு இருக்கும் செயல்களில் இருந்து உங்களைத் திசை திருப்பாது. அந்த நிகழ்கால வினாடியில் நீங்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதில் மட்டுமே நீங்கள் விழிப்புணர்வுடன் இருப்பீர்கள். இதையே நாம் த்யானம் என்கிறோம். த்யானம் என்பது நாம் தற்சமயம் செய்யும் செயலில் முழுமையாக ஈடுபடுவதுதானே தவிர வேறு ஒன்றுமில்லை. இதைத்தான் புத்தர் 'மனம் நிறைந்த நிலை' என்கிறார்.
கிருஷ்ணர் சொல்லும் இந்த ஸத்யங்கள் நம்மை அமைதிக்கு அழைத்துச் செல்லும். நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்பொழுது, புலன்கள்தான் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். அதன் கட்டுப்பாட்டில் நீங்கள் இருக்க மாட்டீர்கள். அதன் மூலம் நீங்கள் அமைதியை அடைகிறீர்கள். நித்யானந்தத்தில் நிலைபெறுகிறீர்கள்.

