KAILASA Library/பகவத்கீதை/விஷச் சுழற்சியிலிருந்து தப்பிக்கும் நேரமிதுSign in
பகவத்கீதை

விஷச் சுழற்சியிலிருந்து தப்பிக்கும் நேரமிது

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்கள்
எண்ணங்களை ஒரு
சாட்சியாக இருந்து
பார்க்கும்பொழுது,
படிப்படியாக
மனம்
சலனமற்று
அடங்கிவிடும்.

கிருஷ்ணன் சொல்கிறார், பற்றிலிருந்து ஆசை,
ஆசையிலிருந்து கோபம், கோபத்திலிருந்து
மனக்குழப்பம், மனக்குழப்பத்திலிருந்து
நினைவின்மை, நினைவின்மையிலிருந்து
பகுத்தறிவின்மை என்று ஒன்றிலிருந்து ஒன்று
தோன்றுகிறது. இறுதியில் பகுத்தறிவின்மை
அவரின் அழிவிற்கு வழி வகுக்கிறது.

புலன்களை அடக்கி, நிகழ்காலத்தில் மனத்தை
ஒருநிலைப்படுத்தி, பிரபஞ்ச சக்தியான
அவரைச் சரணடைந்து நிரந்தரமான
அமைதியைப் பெறுவதே இந்த அழிவை
நிறுத்துவதற்கான ஒரே வழி என்கிறார்.

சிறப்பு வாய்ந்த இந்த வரைபடத்தை, குருமார்களுக்கெல்லாம் குருவான கிருஷ்ணர் நம் முன் வைக்கிறார். நீங்கள் அவரைப் பின்பற்ற வேண்டுமென்ற விருப்பத்தினால் அவர் இதைச் சொல்லவில்லை.

நீங்கள், இந்த வரைபடத்தில் சொல்லப்பட்டவற்றைச் செயல்படுத்தினீர்களானால், 'உங்களுள் வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷங்களைப் பற்றி நீங்கள் உணர முடியும்' என்பதை, தம் எல்லையற்ற அருளாலும் கருணையாலும் உங்களுக்கு உணர்த்துகிறார். உங்களது புலன்களை அடக்காவிடில் நீங்கள் அழிந்து விடுவீர்கள் என அறிவுறுத்துகிறார்.

குரு வகுத்துக் கொடுத்துள்ளபடி, ஒவ்வொரு படியிலும் கவனமாகவும்

ஆழமாகவும் செல்லுங்கள். இந்தப் பாதை
கண்ணாடி போன்று மிகத் தெளிவாக உள்ளது.
நமது அனுபவங்கள் காரணமாக நாம்
பற்று, விருப்பு, வெறுப்பு போன்றவற்றை
வளர்த்துக்கொள்கிறோம். இந்த விருப்பு,
வெறுப்புகள் நமது விழிப்புணர்வற்ற
மனத்தில் ஸம்ஸ்காரங்களாக, நினைவுகளாகத்
தங்கி விடுகின்றன.

குரு
வகுத்துக்
கொடுத்துள்ளபடி,
ஒவ்வொரு படியிலும்
கவனமாகவும்
ஆழமாகவும்
செல்லுங்கள்.

இந்த ஸம்ஸ்காரங்கள் நம்மை விழிப்புணர்வற்ற நிலையிலேயே செயல்பட வைக்கின்றன. ஒன்று, ஆசைகள் மூலம் செயல்பட வைக்கின்றன அல்லது பயம் காரணமாக செயல்படாமலேயே இருந்துவிடச் செய்கின்றன. ஆசைகள் பூர்த்தியான உடன் தற்காலிகமான திருப்தி ஏற்படுகிறது. பிறகு மீண்டும் ஆசைகள் வளர்கின்றன. ஆசைகள் நிறைவேறாதபோது ஏமாற்றமடைந்து கோபம்கொள்கிறோம்.

உண்மையில் சொல்லப் போனால், இப்படிப்பட்ட ஆசைகளை வைத்திருக்கிற நம்மீதேதான் நாம் கோபப்பட்டுக்கொள்ள வேண்டும் அல்லது அந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்காக முழு மனத்துடன் செயல்படாமல் இருக்கும் நம் செயலற்ற தன்மை மீதுதான் நமக்குக் கோபம் வர வேண்டும். ஆனால் நாம் மற்றவர்கள் மீது நம் கோபத்தைக் காட்டுகிறோம், நம்முடைய தோல்விகளுக்கு அவர்கள்தான் காரணம் என்று நினைக்கிறோம். எப்பொழுதாவதுதான் நமது தோல்விகளுக்கு நாம்தான் காரணம் என ஒத்துக்கொள்கிறோம்.

“நாம் ஏன் நமது தவற்றை ஒத்துக்கொள்ள வேண்டும். அதை ஏற்றுக்கொள்ளத்தான் லட்சக்கணக்கானோர் இருக்கிறார்களே! என்று சாதாரணமாகச் சொல்லி விடுகிறோம். அதனால்தான் பல கற்பனைகளையும் தவறான கண்ணோட்டத்தினையும் உருவாக்கிக்கொண்டு, பொறுப்பைத் தட்டிக் கழித்து விடுகிறோம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நமது செயல்களுக்கு நாம்தான் பொறுப்பு என்பதனையே மறந்தும் விடுகிறோம்.

பற்று - அழிவு வரைபடம்

இந்த விஷச் சுழற்சி இப்பொழுது
முழுமை அடையும் நிலையில் உள்ளது.
நமது செயல்களுக்கான பொறுப்பை
நாம் ஏற்கத் தவறும் அந்தக் கணமே,
நல்லது கெட்டதைப் பிரித்து உணரக்கூடிய
பகுத்தறிவு சார்ந்த நம்முடைய
எல்லாச் சக்திகளையும் இழக்கிறோம்.
விழிப்புணர்வற்ற செயல்களில் ஈடுபடத்
தொடங்குகிறோம். இது ஒருவழிப்பாதை.

> நீங்கள்
> உங்கள் புலன்களால்
> வழி
> நடத்தப்பட்டீர்களானால்,
> நீங்கள்
> விழிப்புணர்வுடன்
> இருக்க முடியாது.

ஹிட்லர், முசோலினி அல்லது எந்த ஒரு சர்வாதிகாரியையும் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வழிகளில்தான் அவர்களது அழிவு நிகழ்ந்திருக்கும். விழிப்புணர்வுடன் முடிவுகளை எடுப்பதற்குப் பதிலாக, நம் மீது திணிக்கப்பட்ட நன்னடத்தை விதிகளை அடிப்படையாகக்கொண்டு முடிவுகளை எடுக்கும்போது, ‘சரி தவறு’ பற்றிய நமது தீர்மானத்திலும் குறைபாடுகள் ஏற்பட்டு விடுகின்றன.

இது தனி மனித அழிவிற்கும் மொத்த மனிதகுல அழிவிற்கும்தான் வழி வகுக்கிறது.

நம்மையும் மற்றவர்களையும் மிகவேகமாக அழிவை நோக்கி அழைத்துச் செல்லும் இந்த விஷச் சுழலானது, எப்போதும் நம்முடைய ஆசைகளிலிருந்தே எழுகிறது. பதவி, அதிகாரம், செல்வம், காமம், மற்றும் மற்ற புலன் இன்பங்கள் மீதான பற்றுகளைக் கட்டுப்படுத்தும்பொழுது, அது கோபமாகவும் மனக்குழப்பமாகவும் வெளிப்பட்டு, இந்தப் பகுத்தறியும் தன்மையை அழித்து விடுகிறது.

உங்கள் மீதே நிகழ்த்தப்படும் ஏமாற்று விளையாட்டு

கிருஷ்ணர், இரண்டு மிகமுக்கியமான ஸத்யங்களை இந்தக் கடைசி இரண்டு ஸ்லோகங்களில் வெளிப்படுத்துகிறார்.

ஒன்று, நீங்கள் விழிப்புணர்வுடன் இல்லாவிட்டால், அமைதியாக ஒருபோதும் இருக்க முடியாது. இரண்டாவது, நீங்கள் உங்கள் புலன்களால் வழி நடத்தப்பட்டீர்களானால், நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க முடியாது.

நீங்கள் இன்பம் தரும் பாதை என்று எதை நினைக்கிறீர்களோ, அதன் வழியாகவே புலன்கள் உங்களை அழைத்துச் செல்கிறது. ஆனால் அவ்வாறு புலன்கள் அழைத்துச் செல்லும் பாதையில் சென்று கொண்டிருக்கும்வரை உங்களால் மகிழ்ச்சியாகவோ, அமைதியாகவோ இருக்க முடியாது. இதுவும் உங்கள் மீது, உங்கள் மனம் செய்யும் மற்றொரு ஏமாற்று விளையாட்டே!

பலர் என்னிடம் “உங்களைப் பற்றிய கற்பனையே எனக்கு மகிழ்ச்சி யைக் கொடுக்கிறது.உண்மையிலேயே அது பேரானந்தமாகவே இருக்கிறது. இருந்தபோதும், நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று சொல்கிறீர்கள். உங்களது உருவத்தையும் நீக்கிவிடச் சொல்கிறீர்களே, அது ஏன்?” என்று கேட்கிறார்கள்.

உங்கள் இஷ்ட தெய்வத்தைப் பற்றிய கற்பனையாக இருந்தாலும் சரி அல்லது என்னைப் பற்றிய கற்பனையாகவே இருந்தாலும் சரி அது உங்களை ஆனந்தத்திற்கு அழைத்துச் செல்லாது. அந்த உருவங்கள் மறையும்பொழுது, நீங்கள் கடுமையான மனச்சோர்விற்கு ஆளாவீர்கள்.

உங்கள் மகிழ்ச்சி உண்மையான மகிழ்ச்சி இல்லை. அது இரண்டு துக்கங்களுக்கு நடுவே உள்ள ஒரு இடைவெளியே. உங்கள் குருவைப் பற்றிய கனவுகளைக் காணும்போதுகூட இதேதான் நிகழ்கிறது. உங்கள் குருவைப் பற்றிய கற்பனைகளேகூட உங்களை ஆனந்தத்திற்கு அழைத்துச் செல்ல முடியாது. நிலைமை இவ்வாறு இருக்கும்போது, ‘பேராசை’ என்னும் படுகுழிக்கே உங்களை அழைத்துச் செல்லக்கூடிய உலகியல் பொருட்கள் மீதான கற்பனைகளை வளர்த்துக் கொண்டால், உங்கள் நிலை என்னவாகும் என்பதை யோசித்துப்பாருங்கள்!

உங்கள் புலன்கள் அனைத்துமே நம்பகத் தன்மை அற்றவை. நீங்கள் எதைக் கேட்க வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதையே கேட்கிறீர்கள், எதைப் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதையே பார்க்கிறீர்கள். அதேபோல்தான் மற்றவையும். இந்தப் புலன்களால் பெறப்படும் புள்ளி விவரங்கள் அனைத்துமே நம்பத் தகுந்தவை இல்லை. நீங்கள் எதைப் பார்க்க வேண்டும் அல்லது

உங்கள்
குருவைப்பற்றிய
கற்பனைகளேகூட
உங்களை
ஆனந்தத்திற்கு
அழைத்துச்
செல்ல முடியாது.

கேட்கவேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களோ அதையே பார்க்கிறீர்கள், கேட்கிறீர்கள்.

‘எண்ணங்கள்’
என்றாலே, நம் மனம்
இறந்தகாலத்திற்கும்
நிகழ்காலத்திற்கும்
இடையில் மீண்டும்,
மீண்டும் பயணம் செய்து
கொண்டிருப்பதைத்தான்
குறிக்கிறது.

அதிலும் உங்களுடைய மனம், அதன் தனித் தன்மையாலும் அஹங்காரத்தாலும் தூண்டப்பட்டு, எதைப் பார்க்கவும் கேட்கவும் நினைக்கிறதோ அவற்றையே நீங்கள் பார்க்கிறீர்கள், கேட்கிறீர்கள். புலன்கள் வழியாக நீங்கள் உள் வாங்கும் ஒவ்வொரு சின்ன விஷயமும், உங்கள் மனம் மற்றும் அஹங்காரத்தால் செயல்முறைப் படுத்தப்பட்டு, வர்ணம் பூசப்பட்டே உங்களிடம் வழங்கப்படுகிறது. நீங்கள் எதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று அவை விரும்புகின்றனவோ, அதைமட்டுமே உங்களுக்குத் தருகின்றன. உங்களுடைய தனி அடையாளமும், அஹங்காரமும் நீங்கள் எதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகின்றனவோ, அதை மட்டுமே நீங்கள் தெரிந்துகொள்கிறீர்கள்.

குற்ற உணர்ச்சியைச் சுமப்பதே நிஜமான பாவம்

உங்களுடைய மனம் எண்ணங்களின் வடிவில் எதிர்காலத்திற்கும் இறந்தகாலத்திற்கும் இடையில் தொடர்ந்து அலைமோதிக் கொண்டே இருக்கிறது. 'எண்ணங்கள்' என்றாலே, நம் மனம் இறந்தகாலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் மீண்டும் மீண்டும் பயணம் செய்து கொண்டிருப்பதைத்தான் குறிக்கிறது.

இந்தப் பயணத்தை நிறுத்த நீங்கள் தீவிரமான முயற்சி எடுக்காதவரை இது உங்கள் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். உங்கள் மனம், தாமாகவே, ஒருபோதும் நிகழ்கால ஸத்யத்தில் நிலைக்க விரும்புவதில்லை.

உங்களுடைய இறந்தகாலம் என்பது ஒரு வரலாறு. உங்களது ஒரு துக்கங்களையும் குற்றஉணர்வையும்போட்டு வைக்கக்கூடிய ஒரு சேமிப்புக் கிடங்காக இருக்கிறது. இந்தக் குற்ற உணர்ச்சியையும் துக்கங்களையும் சுமந்து செல்வதைக் காட்டிலும் பெரியதொரு பாவத்தை நீங்கள் செய்துவிட முடியாது. ஒரு சமுதாயமோ அல்லது மதமோ எவற்றைப்

பாவச் செயல்கள் என்று சொல்கின்றனவோ,
அவற்றைச் செய்வதுகூட சிறிய பாவம்தான்!
ஆனால் குற்ற உணர்ச்சியைச் சுமப்பதுதான்
உண்மையான பாவம். இவையே உங்களை
நரகத்திற்கு அழைத்துச் செல்கிறது, நீங்கள்
இந்த உலகில் வாழும்போதே!

நம் இறப்பிற்குப் பிறகு நரகம் என்று ஒன்று இல்லை. செயின்ட் பீட்டரோ அல்லது எமதர்மரோ உங்களை நரகத்திற்கு அழைத்துச் செல்ல முத்து வாயிலுக்கு (Pearl gates) முன் வந்து நிற்கப்போவதில்லை. பயத்தின் மூலம் உங்களைக் கட்டுப்படுத்துவதற்கென்றே, மதங்களால் புனையப்பட்ட கதைகள் இவை.

நீங்கள்
வாழும்போது
உங்கள் வாழ்க்கையில்
அடையும்
துக்கங்களே
உங்களுக்கு
நரகம்.

உங்களது ஒவ்வொரு எண்ணங்கள், செயல்கள் எல்லாவற்றையும் நல்லவை எவை, தீயவை எவை என அட்டவணைப்படுத்தி, அவற்றிற்கு ஒரு பள்ளி ஆசிரியர்போல் மதிப்பெண் இட்டு, அதில் நீங்கள் குறைந்த மதிப்பெண் பெற்றால் தண்டிப்பதற்காக உங்களை நரகத்திற்கு அனுப்புவதைத் தவிர, கடவுளுக்கு வேறு வேலையே இல்லை என்று நினைக்கிறீர்களா?

அவருக்கு இதற்கெல்லாம் நேரமே கிடையாது! நீங்கள் வாழும்போது உங்கள் வாழ்க்கையில் அடையும் துக்கங்களே உங்களுக்கு நரகம். குற்ற உணர்ச்சி, வருத்தம், மன உறுத்தல் இவற்றால் துக்கப்படுகிறீர்கள். இப்பொழுதே நரகத்தில் வாழும் நீங்கள் இறந்த பிறகு நரகத்திற்குச் செல்லவேண்டியதே இல்லை.