மனம் எனும் குரங்கு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
2.60 ஓ குந்தியின் மகனே! கொந்தளிப்புள்ள புலன்கள்,முயற்சியுள்ள புத்திசாலியான மனிதனின் மனத்தைக் கூடப் பலவந்தமாக இழுத்துச் சென்று விடுகின்றன.
2.61 அந்த அனைத்துப் புலன்களையும் வசப்படுத்தி ஒருமுகப்படுத்தி என்னையே பரமகதியாகக் கொண்டு தியானத்தில் அமர வேண்டும். யார் ஒருவருடைய புலன்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவோ, அவருடைய புத்தி ஸ்திரமாகிறது.
2.62 புலன்நுகர் பொருட்களையே சிந்தித்துக் கொண்டிருக்கிற மனிதனுக்கு அவ்விஷயங்களில் பற்று ஏற்படுகிறது. பற்றுதலிலிருந்து ஆசை உண்டாகிறது. ஆசையிலிருந்து கோபம் உண்டாகிறது.
2.63 கோபத்தினால் மிகுந்த அறிவின்மை ஏற்படும். அறிவின்மையால் நினைவுத் தடுமாற்றம் உண்டாகிறது. நினைவு தடுமாறுவதனால் புத்தி அதாவது விவேகத்தின் அழிவு உண்டாகிறது. விவேகம் அழிவதனால் மனிதன் தன் நிலையிலிருந்து வீழ்ச்சியடைகிறான்.
2.64 ஆனால் தம்மால் வசப்படுத்தப்பட்டுவிட்ட புலன்களின் மூலம் விருப்பு வெறுப்பின்றி போக விஷயங்களில் சஞ்சரிக்கும் தம்வசப்பட்ட மனதுடைய சாதகர் உள்ளத்தெளிவை அடைகிறார்.
2.65 அந்த அமைதியில் இவருடைய எல்லாத் துக்கங்களுக்கும் அழிவு ஏற்பட்டுவிடும். அமைதியடைந்துவிட்ட பட்டறிவு மனம் விரைவிலேயே நன்கு ஸ்திரமாகி விடுகிறது.
22.66 தன்னைனப் பற்றிய விழிப்புணர்வு இல்லாத ஒரு மனிதர், அறிவுடையவராகவோ மகிழ்ச்சி உடையவராகவோ அமைதி உடையவராகவோ இருக்க முடியாது. அமைதியற்றவர் மனத்தில் மகிழ்ச்சி எப்படி இருக்க முடியும்.
2.67 நீரில் இருக்கும் படகை, காற்றானது அடித்துச் செல்வதுபோல், மனத்தைப் புலன்கள் இழுத்துச் செல்கின்றன. மனம், அலைபாயும் புலன்களை தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் போது, அவர் நிகழ்காலத்தில் விழிப்புணர்வுடன் இருப்பதில்லை. அவர் நிகழ்காலத்தை இழக்கிறார்.
உங்கள் மனம் உங்களின் வயப்பட்டுவிடும்
கிருஷ்ணர், புலன்களை அடக்குவது எவ்வளவு கஷ்டமானது என்றும், ஒருவர் புலன்களின் கட்டுப்பாட்டை இழந்தால் என்ன நடக்கும் என்றும் மேலும் விவரிக்கிறார்.
ஒரு சின்ன கதை:

ஒருமுறை, குரங்கு ஒன்று வேர்க்கடலைகள்
நிறைந்த ஜாடி ஒன்றைப் பார்த்தது. அந்த
ஜாடி பெரிதாக, கனமாக, நீண்ட
குறுகிய கழுத்துடன் இருந்தது. அந்தக்
குரங்கு உள்ளே கையை விட்டு,
கை நிறைய கடலையை அள்ளியது.
அதனால் கையை ஜாடியிலிருந்து எடுக்க
முடியவில்லை. தனது கை ஜாடியில் மாட்டிக் கொண்டதாக அந்தக் குரங்கு நினைத்துக் கொண்டது.
கையில் உள்ளதைப் போட்டு விட்டால், கையை வெளியில் எடுத்துவிட முடியும் என்பதை அது உணரவில்லை.
இதுவே நம் பெரும்பான்மையோரின் நிலையும்கூட! நம் புலன்களை முடுக்கி விடுவது எப்படி என்பதும், கற்பனையைத் தூண்டி விடுவது எப்படி என்பதும் தெரியும். ஆனால் புலன்களின் வேகத்தைக் குறைத்து அதன் செயல்பாட்டை நிறுத்துவது எப்படி என்பது மட்டும் தெரியாது. நமது மனத்தையோ புலன்களையோ கட்டுப்படுத்தத் தெரியாது. மனமும் புலன்களும்தான் நம்மைக் கட்டுப்படுத்துகின்றன.
கிருஷ்ணர், நம் புலன்கள் எப்போதும் ஒருவித குழப்பத்துடனும் பிடிவாதத்துடனுமே இருக்கும் என்கிறார். நமது புலன்களை, நாம் எந்த அளவுக்கு அடக்க முயற்சி செய்கிறோமோ, அது அந்த அளவிற்கு மூர்க்கத்தனத்துடன் நம் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் தன்மை கொண்டதாக இருக்கும். மிகப் பெரிய ரிஷிகள்கூட இந்த இந்த்ரிய ஸுதங்களால் வசீகரிக்கப்பட்டிருக்கிறார்கள். மிகப்பெரும் ரிஷியான விஸ்வாமித்திரரின் கடும் தவத்தை, தேவ மங்கை மேனகை மயக்கிய புராணக் கதை நமக்குத் தெரியும்.
த்யானம் செய்பவர்களைத் தொந்தரவு செய்வதற்காக இளம் பெண்களைக் கீழே அனுப்புவது தவிர, கடவுளுக்கு வேறு வேலை இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அதுதான் உண்மையென்றால், இன்று இரவிலிருந்தே எல்லா ஆண்களும் த்யானம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள், என்னுடைய கட்டாயம் இல்லாமலேயே!
அப்படி எதுவும் நடக்காது. இதைக் காரணம் காட்டி த்யானம் செய்யத் தொடங்கிவிடாதீர்கள். விஸ்வாமித்திரரின் அடக்கி வைக்கப்பட்ட கற்பனையே, விண்ணுலக தேவ மங்கையாக வடிவம் பெற்றது. அவருடைய புலன்கள் கட்டுக்கடங்காமல் போய்விட்டது.
இந்து மறை நூல்கள், ப்ரஹ்மசர்யத்தை ஆன்மிக மலர்ச்சிக்குத் தேவையான ஒரு முன் நிபந்தனையாகச் சொல்லி இருக்கின்றன. அதைத் 'திருமணம் செய்துகொள்ளாதவர்
'கட்டுப்படுத்துதல்'
மனத்தின் மேல்
வேலை செய்யாது;
அடக்கப்பட்ட
உணர்ச்சிகள்
சந்தர்ப்பம்
கிடைக்கும்போது
வெடித்து விடுகின்றன.
எனத் தவறாகத்திரித்துச் சொல்கிறார்கள்.
ப்ரஹ்மசரியம் என்பது ‘திருமணம்
செய்துகொள்ளாமல்’ இருப்பது அல்ல. அது
உடல் ரீதியானது மட்டும் அல்ல, கனவு,
கற்பனைகள் இல்லாத நிஜ வாழ்க்கையை
வாழ்வதைப் பற்றியது.
பல துறவிகள், துறவுக்கான உடையை அணிந்துகொண்டு, மனத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்கள், ஆனால் அவர்களில் பலர் தோல்வியடைகிறார்கள். ஏனென்றால் அவர்களால் தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. ‘கட்டுப்படுத்துதல்’ மனத்தின் மேல் வேலை செய்யாது. அடக்கப்பட்ட உணர்ச்சிகள் சந்தர்ப்பம் கிடைக்கும்போது வெடித்து விடுகின்றன. அவை சந்தர்ப்பத்திற்காகவே காத்திருக்கின்றன.
இதற்கு ஒரே வழி, மனத்தின் முழுக் கவனத்தையும் அவர்மேல் திருப்புவதே! அப்போது மட்டுமே புலன்கள் கட்டுப்படுகின்றன, மனம் ஒரு முகப்படுகிறது என்கிறார் கிருஷ்ணர். மனத்தை நிறுத்த முடியாது. உடல் இருக்கும்வரை எண்ணங்களையும் நிறுத்த முடியாது. நீங்கள் உங்கள் மனத்தை, புலன் இன்பங்களைக் கடந்த, புலன் இன்பங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றின் மேல் ஒருமுகப்படுத்தும்போது தானாகவே அது அமைதியுறும்.
மனம் ஒருமுறை அந்த அமைதியின் பேரானந்தத்தை, அந்தத் தன்மையைக் கண்டுபிடித்து விட்டால், அது மீண்டும் அலைந்து திரிய விரும்புவதில்லை. ஆனால் நினைவுகொள்ளுங்கள், உங்கள் எண்ணங்களை நிறுத்த முயற்சி த்தால், நீங்கள் தோல்விதான் அடைவீர்கள்.
மனத்தோடு ஈடுபடாமலிருக்க அதுவாகவே அடங்கிவிடும்
ஒரு சின்ன கதை:
ஆன்மிகப் பாதையில் செல்ல விரும்பிய ஒருவர், குரு ஒருவரிடம் சென்று மனத்தை அடக்குவது எப்படி என்று கெஞ்சிக் கேட்டார். அவர் நினைப்பதுபோல் எண்ணங்களை நிறுத்துவதினால் மட்டுமே, மனத்தை அடக்கிவிட முடியாது என அவருக்கு விளக்க குரு முயற்சித்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. சலித்துப் போன குரு அவரிடம் ஒரு மருந்தைக் கொடுத்து, மூன்று சொட்டுகள் வீதம் மூன்று வேளையும் குடிக்கச் சொன்னார்.
அதற்கு அந்த மனிதர் "அவ்வளவுதானா? இது மனத்தை அடக்கி விடுமா?" என்றார்.
"ஆனால் ஒன்று, நீ மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்கக் கூடாது," என்றார் குரு.
"இவ்வளவுதானா? இது மிக எளிதுதான்," எனச் சொல்லித் திரும்பினார். வாசல்வரை சென்றவர் திரும்பிவந்து, "ஒருவேளை நான் குரங்கை நினைத்து விட்டால் என்ன செய்வது?" என்று கேட்டார்.
"ஒருமுறை குளித்துவிடு. மீண்டும் முயற்சி செய்," என்றார் குரு.
வீட்டிற்குச் சென்றவுடன் நேரத்தை வீணடிக்காமல் மருந்தை எடுத்து திறந்து வாயருகில்கொண்டு சென்றார். அப்போது குருவின் எச்சரிக்கை நினைவிற்கு வந்தது;கூடவே குரங்கின் நினைவும் வந்தது!
'அடக்கடவுளே! நான் இப்பொழுது குளித்தாக வேண்டுமே, வேறு என்ன செய்வது' என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.
மீதிக் கதையை நீங்களே யூகித்துவிட முடியும்.
ஒவ்வொரு முறை மருந்துக் குப்பியைத்
திறந்தபோதும் குரங்கு அவர் மனத்தை
ஆக்கிரமித்தது; ஒவ்வொரு முறையும்
குளித்துக் கொண்டே இருந்தார்.
சில நாள்கள் கழிந்து, குளித்த உடனேயே
அவர் மனத்திற்குள் குரங்கின் நினைவு
தோன்ற ஆரம்பித்து விட்டது.
உடனே குருவிடம் ஓடிச் சென்று, "மருந்தைப்
பற்றிய நினைவு எனக்குப் போய்விட்டது.
இப்போது குரங்குகளின் நினைவிலிருந்து
என்னை விடுவியுங்கள்," என்று மன்றாடினார்.
> உங்களால்
> எண்ணங்களை
> அழிக்கவோ,
> அடக்கவோ முடியாது.
> உங்கள்
> எண்ணங்களைச்
> சாட்சியாக
> பார்த்துக்கொண்டு
> அவைகளில் ஈடுபடாமல்
> இருக்கலாம்.
உங்களால் எண்ணங்களை அழிக்கவோ, அடக்கவோ முடியாது. உங்கள் எண்ணங்களை ஒரு சாட்சியாக இருந்து பார்த்துக்கொண்டு அவற்றில் ஈடுபடாமல் வேண்டுமானால் இருக்கலாம். பிறகு படிப்படியாக மனம் சலனமற்று அடங்கிவிடும்.
நீங்கள் எந்தவொரு எதிர்பார்ப்பும், பற்றும் இல்லாமல் நிகழ்காலத்தில் நிலைகொள்ளும்போது, புலன்கள் அடங்குவதையும் மனம் அமைதி அடைவதையும் காண்பீர்கள்.