பிரபஞ்சத்தை நம்புங்கள், உங்கள் தர்க்கத்தை அல்ல
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஸ்வாமிஜி, நீங்கள் தேவைகள் மற்றும் ஆசைகள் இவற்றைப் பற்றிச் சொன்னீர்கள். தேவைகள், தங்களை நிறைவேற்றிக்கொள்வதற்குத் தேவையான சக்திகளைத் தாங்களே எடுத்து வந்துகொள்கின்றன என்று சொல்கிறீர்கள்.அப்படியென்றால் நாம் எதுவும் செய்யாமலேயே தேவைகள் தாங்களாகவே நிறைவேறி விடுமா?
பிரபஞ்ச சக்தியின் மீது உங்களுக்கு நிபந்தனையற்ற நம்பிக்கை இருந்தால் நிச்சயம் இது நடக்கும். உங்களுக்கு எது தேவையோ, அது உங்களுக்குச் சந்தேகமின்றி கிடைக்கும். இது என் அனுபவம்.
பதினேழு வயதில் வீட்டைவிட்டு கிளம்பியபோது, மீண்டும் பணத்தைத் தொடுவதில்லை என ஸத்ய ப்ரமாணம் எடுத்தேன். என்னிடம் இருந்ததெல்லாம் நான் அணிந்திருந்த இரண்டு காவித்துணிகள், ஒரு தண்ணீர்க் குவளை, ஒரு கைத்தடி மட்டுமே. இவற்றுடன் மட்டுமே இந்தியா முழுவதும், குறுக்கிலும் நெடுக்கிலுமாக ஆறு ஆண்டுகள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தேன்.
நான் சாகாமல் இருந்தது மட்டுமல்ல, ஞானமும் அடைந்தேன்!
நான் மட்டுமே இந்த நிலையைச் சாதித்துள்ளேன் என்பது இல்லை. இந்தியாவில் லட்சக்கணக்கானோர் எல்லாவற்றையும் துறந்து, பிரபஞ்ச சக்திக்குத் தங்களைச் சமர்ப்பித்து வாழ்கிறார்கள். உலகில் மற்ற பகுதியில் இவ்வாறு வாழ்பவர்கள், வீடற்றவர்கள் என வேட்டையாடப்படுவார்கள். சிறையிலும் அடைக்கப்படுவார்கள். ஆனால் இந்தியாவில், அலைந்து திரியும் ஸந்யாஸிகள் உண்ண உணவும் இருக்க இடமும் கொடுக்கப்பட்டு மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள். "ஏன் கட்டுடலுடன் இருக்கும் இவர்கள் வேலை செய்யாமல் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்?" என யாரும் கேட்பதில்லை.
இயற்கையின் மேல்
முழுமையான
நம்பிக்கை வையுங்கள்.
'எது நடக்க
வேண்டுமோ
அது
நிச்சயம் நடக்கும்.'
நேர்மையுடன் சொல்கிறேன், நான் உணவுக்காக யாசகம் கேட்டதில்லை. நான் பசியாக இருக்கும்போது எங்கிருந்தோ யாரா உணவுகொண்டுவருவார்கள். இமயமலையில் 17,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் தபோவனம் போன்ற இடங்களில் வெட்டவெளியிலும் மரத்தடியிலும் தங்கி இருக்கிறேன். இயற்கையின் மேல் முழுமையான நம்பிக்கை எனக்குண்டு. ‘எது நடக்க வேண்டுமோ அது நிச்சயம் நடக்கும்!’ இதுவே எனது நம்பிக்கை.
உங்களுக்கு அப்படிப்பட்ட நம்பிக்கை இல்லையென்றால் அது வேறு கதை. கையில் பணம் ஏதும் இல்லாமல் நான் என் சீடர்களில் சிலரை அதைப் போன்ற பயணத்தை, அதாவது அலைந்து திரியும் துறவியாக அனுப்பியிருந்தேன். அவர்களும் இந்தியா முழுவதும் சுற்றி அற்புதமான அனுபவங்களோடு திரும்பினார்கள். உலகம் எப்படி வாழ்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்வதற்கு இது ஒன்றுதான் சரியான வழி.
நீங்கள் எதையும் செய்வதற்கு உங்களுக்குச் சுதந்திரம் உண்டு. நீங்கள் உங்களுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளீர்கள். மேலை நாடுகள் இந்த முறையைக் கண்டு பயப்படுகின்றன. அதனால் அவர்கள் இது போன்ற நடத்தையைக் கட்டுப்படுத்துகிறார்கள். பெரும்பாலான மக்கள் இவ்வாறு செயல்பட ஆரம்பித்து விட்டார்களானால், சமுதாயத்தால் அவர்களை அடக்க முடியாது. பிறகு சமுதாயம் தனது சக்தியை இழந்து, அழிந்துவிடும்.
உண்மையில், இந்தியாவிற்கு வெளியில், மத நிறுவனங்கள்கூட இப்படிப்பட்ட சுதந்திரத்தை அனுமதிப்பதில்லை. இந்தியாவில் பார்ப்பதுபோல் அலைந்து கொண்டிருக்கும் ஸந்யாஸியை வேறு எங்கும் நான் பார்த்தது இல்லை.
ஸந்யாஸியாகவே இருந்தாலும் ஒருவர் ஒரே இடத்தில் வாழ்ந்தால், அதுவும்கூட ஒரு பந்தம்தான் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. கட்டுப்பாடுள்ள சூழ்நிலையில் உங்களால் சுதந்திரமாக இருக்க முடியாது.
அதனாலேயே நமது ஆச்ரமங்களில் வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் என்று எதுவும் இல்லை. ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதைச் செய்கிறார்கள். எதையும் யார் மீதும் கட்டாயப்படுத்தித் திணிப்பதில்லை; யாரும் எதற்காகவும் கட்டாயப்படுத்தப்படுவதும் இல்லை. ஆனால் அவர்கள், தங்கள் இயல்பு நிலைக்கும் மேல், வெகு சிறப்பாகச் செயல்படுவது வேறு விஷயம். இது முழுக்க முழுக்க அன்பு மற்றும் சுதந்திரத்தின் காரணமாகச் செய்கிறார்களே தவிர, பேராசை மற்றும் பயத்தினால் அல்ல.
கேள்வி: ஒரு ஆமை செய்வதுபோல், புலன்களை உள் முகமாகத் திருப்பச் சொல்லி அர்ஜுனனை அறிவுறுத்தும்பொழுது, கிருஷ்ணன் ப்ரத்யாஹார முறையைப் பின்பற்றச் சொல்கிறாரா?
பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தில் ப்ரத்யாஹார அல்லது புலன்களைக் கட்டுப்படுத்துதல் என்பது ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இதைத்தான் கிருஷ்ணர் இங்கு ஒப்பிடுகிறார்.
ப்ரத்யாஹார என்றால், புலன்களுக்குத் தீனி போடுவதை நிறுத்துவது என்பது பொருள். இதற்கு, புலன்களைக் கவரக்கூடிய பொருட்களை விலக்கிவிட வேண்டுமென்பதோ அல்லது புலனின்பங்களைக் கண்டு பயந்து ஓட வேண்டுமென்பதோ அல்லது புலன்களை மூடிக்கொள்வதன் மூலம் புலனின்பங்களோடு தொடர்புகொள்ளாமல் இருப்பது என்பதோ பொருள் இல்லை. இது நிச்சயம் வேலை செய்யாது.
பொருட்களிலிருந்து விலகியிருந்தால்தான் புலன்களைக் கட்டுப்படுத்த
முடியும் என்றால் நீங்கள் இமய
மலைக்குத்தான் செல்ல வேண்டும்.
அங்குதான் நீங்கள் ஞானம் அடைவீர்கள்!
புலன்கள், பொருட்களை விட்டு விலகி
இருக்க, இந்தச் சூழ்நிலை உதவும் என்பதில்
சந்தேகம் இல்லை. ஆனால் இந்தச் சூழ்நிலை
மட்டுமே அவசியமானது என்பது இல்லை.
ஆயிரக்கணக்கான ஸந்யாஸிகள் மலைகளிலும்
காடுகளிலும் ஆச்ரமங்களிலும் தனிமையில்
இருக்கிறார்கள்.
அவர்கள் பெண்களை விட்டுத் தள்ளி
இருந்தாலும் தங்களுடைய காமத்தின் மீதான
கற்பனைகளை விட்டுவிடுவதில்லை.
ஒரு இளம் ஸந்யாஸி தனது குருவிடம் சென்று, தனது த்யானத்தின்போது இடையூறு ஏற்படுத்தும் காம எண்ணங்களை விலக்குவது எப்படி எனக் கேட்டார். அதற்கு அந்த வயதான ஸந்யாஸி, “எனக்கு 90 வயது ஆகிறது. ஆனாலும் இன்னும் காம எண்ணங்கள் குறையவில்லை. நாம் இருவரும் 120 வயது ஆன எனது குருவைச் சென்று பார்ப்போம். இதற்கு அவரிடம் பதில் இருக்கலாம்!” என்றார்.
கண்களையும் காதுகளையும் மூடிக்கொள்வது இதற்கு ஒரு தீர்வு ஆகாது. த்யானம் செய்யும்பொழுது, தங்கள் மனத்தை ஒருநிலைப்படுத்துவதற்காக, தங்களைச் சுற்றியிருப்போரை எல்லாம் அமைதியாக இருக்குமாறு கட்டுப்படுத்துபவர்களை நாம் பார்க்கலாம். செவிடாகவும் ஊமையாகவும் இருப்பது த்யானம் இல்லை.
உங்கள் கண்களை மூடிக்கொள்ளலாம், மற்றும் காதுகளையும் வெளி உலகச் சத்தங்கள் எதுவுமே கேட்காமல் அடைத்துக்கொள்ளலாம். ஆனால் உங்கள் உள்ளே திரைப்படங்கள் ஓட ஆரம்பித்து விடுகின்றன. உங்கள் உள்தொலைக்காட்சி ஓட ஆரம்பிக்கிறது.
கைகளையோ, கால்களையோ இழந்தவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் அவர்களுக்கு முன்பு கால்களோ, கைகளோ இருந்த அந்தப் பாகத்தில் இப்போதும் வலியை உணருவார்கள். இதைப் ‘பொய் வலி’ என்பார்கள். வலியை உணர்வதற்கு உண்மையில் உடலில் பாகம் தேவையில்லை. நரம்பின் எல்லைகள், இழந்த பாகத்தை நினைவுறுத்தி வலியை உணர்த்தும்.
புலன் உறுப்புகளைத்
தடை செய்வதால்
மட்டுமே,
அவற்றின்
உணரும் சக்தியில்
எந்தவொரு மாற்றமும்
இருக்காது.
பார்வையற்றவர்களும் கனவு காண்பார்கள். அவர்களின் கனவும் கண் உள்ளவர்களின் கனவுபோலத் தெளிவாக இருக்கும். உங்கள் கண்களை மூடிக்கொண்டு இரவில் கனவு காண்பதுபோல பகலிலும் காணலாம். புலன் உறுப்புகளைத் தடை செய்வதால் மட்டுமே, அவற்றின் உணரும் சக்தியில் எந்தவொரு மாற்றமும் இருக்காது. அவை முன்பே பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள நினைவுகளிலிருந்து வேலை செய்யும்.
உங்களது ஐம்புலன்களுக்குப் பின்னால் ஒரு சக்தி- ஞானேந்த்ரியம் எனப்படும் ‘உணரும் ஆற்றல்’ உள்ளது. ஞானேந்த்ரியம் உலகை உணர உதவுகிறது. ஞானேந்த்ரியங்களினால் உங்கள் உடல்-மன அமைப்பிற்கு உணர்த்தப்படும் புலன் விஷயங்களுக்கு, உங்கள் கட்டுறு மனப்பாங்கின் அடிப்படையில், உங்கள் விழிப்புணர்வற்ற மனம்தான் விளக்கம் கொடுக்கிறது. இந்த விளக்கத்தின்படியே நீங்கள் செயல்படுவீர்கள். உங்கள் செயல்பாடுகள் அந்தக் கட்டுறு மனப்பாங்கை மேலும் வலுப்படுத்தும். அந்தக் கட்டுறு மனப்பாங்கு மீண்டும் செயல்களைத் தூண்டும்; இவ்வாறு இந்தச் சுழற்சியும் தொடர்கிறது.
இந்தச் சுழற்சியை நிறுத்த வேண்டும் என்றால், புலன்களுடனான ஞானேந்த்ரியங்களின் தொடர்பை விலக்க வேண்டும். இந்தச் செயலின் சூழ்நிலையிலிருந்து நீங்கள் விலகி ஓடுவதால் மட்டுமே, இந்தச் சுழற்சி நின்று விடுவதில்லை. இது உங்களின் மனத்தின் கற்பனைகள் வழியாக உங்களைப் பின் தொடரும். உடல் ரீதியாகப் புலன்களைக் கட்டுப்படுத்தினாலும் அது உங்களுக்கு உதவாது. மனத்தில் பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும் உருவங்கள் தொடர்ந்து விளையாட ஆரம்பித்துவிடும். பாதுகாத்து வைக்கப்பட்ட வடிவங்கள் செயல்பட ஆரம்பித்துவிடும்.
ப்ரத்யாஹார- புலன்களுக்குத் தீனி போடாமல் இருப்பது என்றால், புலன்களுக்குப் பின்னால் உள்ள சக்தியை நிறுத்துவது அல்லது இவற்றின் செயல்பாடுகளை நிறுத்துவது என்ற பொருளைக் கொடுக்கிறது.
ஆனால் கிருஷ்ணன் இங்கு அதற்கும்
ஒருபடி மேல்சென்று, மேலான
ஒரு ஸத்யத்தை உணர்த்துகிறார். இது
வெறுமனே சக்தியை நிறுத்துவதைப்
பற்றியது அல்ல; ஏனென்றால் நீங்கள்
> ப்ரத்யாஹார என்றால்
> புலன்களுக்குத்
> தீனி போடாமல்
> இருப்பது என்ற
> பொருளைக்
> கொடுக்கிறது.
சக்தியை நிறுத்துவதனால் நடைப்பிணமாக மட்டுமே மாற முடியும் என்பதை உணர்த்துகிறார். அவர் நீங்கள் ஓர் உயிருள்ள பிணமாக இருப்பதை விரும்பவில்லை. உங்கள் சக்தி சுறுசுறுப்புடன் இயங்க வேண்டுமென்றும் ஆனால் நீங்கள் முன்கூட்டியே எதையும் தீர்மானிக்கும் மனப்பான்மையை விட்டுவிட்டவராக இருக்க வேண்டுமென்றும் அவர் விரும்புகிறார்; எந்தவொரு கட்டுறு மனப்பாங்குகளும் இன்றிச் சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமென்று அவர் விரும்புகிறார். உங்களுடைய ஸம்ஸ்காரங்களிலிருந்து நீங்கள் விடுபட வேண்டுமென்று விரும்புகிறார்.
நீங்கள் பார்க்கும், கேட்கும், தொடும், சுவைக்கும் அல்லது நுகரும் ஒவ்வொரு விஷயத்தையும் விருப்பு வெறுப்பு என்கிற உணர்ச்சிகளோடு இணைக்காமலும் இன்பம் துன்பம் என்று வேறுபடுத்தாமலும் பலனின் மீது பற்று வைக்காமலும் உங்களால் அணுக முடியும்போது, நீங்கள் ஸம்ஸ்காரங்களில் இருந்து விடுபட்டவர்கள் ஆவீர்கள். உங்கள் புலன்களுக்குப் பின்னால் உள்ள சக்தி செயல்பட்டாலும் உங்கள் மனம் செயல்படாது. நீங்கள் உணர்வீர்கள், ஆனால் அதற்கு எந்தவிதமான விளக்கமும், தீர்ப்பும் கொடுக்க மாட்டீர்கள்.
உங்களது விழிப்புணர்வின் ஆணையின்படியே நீங்கள் இயற்கையோடு இயைந்து வாழ்வீர்கள். உங்கள் விழிப்புணர்வுக்குத் தேவையானதை மட்டும் செய்வீர்கள். அதன் பலனில் உங்களுக்கு எந்தவிதமான பற்றும் இருக்காது.

