KAILASA Library/பகவத்கீதை/அந்த மனிதரைப் பின் தொடருங்கள்Sign in
பகவத்கீதை

அந்த மனிதரைப் பின் தொடருங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna with flute

2.54 கேசவா! நிகழ்காலத்திலேயே நிலைபெற்று, சத்தியத்தின் விழிப்புணர்விலும் ஞானத்திலும் கரைந்திருக்கும் ஒருவடைய இலக்கணம் என்ன? இந்த ஞானத்தில் நிலைகொண்ட மனிதர் எப்படிப் பேசுவார்? எப்படி உட்காருவார்? மேலும் எப்படி நடப்பார்?

2.55 பார்த்தா, எப்பொழுது இந்த மனிதர் மனத்திலுள்ள எல்லா ஆசைகளையும் அறவே துறந்துவிட்டு, ஆத்மாவினால் ஆத்மாவிடமே ஆனந்தமாக இருக்கிறாரோ, அப்பொழுது அவர் ஸ்திதப்ரஜ்ஞன் (ஞானத்தில் நிலைபெற்றிருப்பவர்) என்று சொல்லப்படுகிறார்.

2.56 துன்பங்கள் நேர்கையில் எவருடைய மனம் கலங்குவதில்லையோ, செல்வ வளம் மிக்க நிலையிலிருந்தாலும் யார் ஒருவருடைய மனம் புலனின்பங்கள் பின்னால் ஓடுவதில்லையோ, விருப்பு, பயம், கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டிருக்கிறதோ அந்தத் துறவி ஸ்திதப்ரஜ்ஞன் என்று சொல்லப்படுகிறார்.

2.57 யார் ஒருவர், இது நல்லது, இது கெட்டது என்று எதிலுமே பற்று வைக்காமல், எல்லாவற்றையும் எல்லா சமயங்களிலும் விருப்பு வெறுப்பு இல்லாமல் ஏற்றுக்கொள்ளுகிறாரோ அவருடைய புத்தி ஸ்திரமானது.

2.58 எல்லாப் பக்கங்களிலிருந்தும் தனது அங்கங்களை உள்ளிழுத்துக் கொள்ளும் ஆமையைப்போல, புலன்நுகர் பொருட்களிலிருந்து தம்முடைய புலன்களை ஒரு மனிதர் முற்றிலும் உள் இழுத்துக்கொள்ளும்போது அவருடைய புத்தி ஸ்திரமாகிறது.

2.59 புலன்நுகர் பொருட்கள், உடலிலிருந்து விலகி நிற்கின்றன. ஆனால் அவற்றின் மேல் உள்ள ஆசைகள் விலகுவதில்லை. பரமாத்மாவைத் தரிசித்த பிறகு அவருடைய அந்த ஆசைகளும் விலகி விடுகிறது.

அம்பை மட்டும் எய்யுங்கள், அதை எங்குச் சேர்க்க வேண்டும் என்பது என் பொறுப்பு

feather

அர்ஜுனன் இப்பொழுது மேலும் தெரிந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறார். கிருஷ்ணரிடம், "நீங்கள் மிக உயர்ந்த விஷயங்களைப்பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நான் எதிர்பார்ப்பு, பற்றுதல் இல்லாமல் ஞானத்தில் மையம்கொள்ள வேண்டும் என்கிறீர்கள். நான் ஞானப் பாதையில் நடந்து, நீங்கள் சொல்வதுபடியே வாழ வேண்டுமென விரும்புகிறேன். எப்பொழுதும் விழிப்புடன் நிகழ்காலத்திலேயே இருக்கும் ஒருவர் எப்படிச் செயல்படுவார்? எப்படிப் பேசுவார், எப்படி நடப்பார்? நானும் அதைப்போல் ஸ்தித ப்ரஜ்ஞனாக மாற உதவுங்கள்."

இப்பொழுதுதான் முதல்முறையாக இந்த உரையாடலில் கிருஷ்ணர் சொல்வதில் அர்ஜுனன் ஈடுபாடு காட்டுகிறார். இதற்கு முன் தாம் பேசிக்கொண்டிருந்தவை எல்லாம் தம் குழப்பத்தால் ஏற்பட்டவை என்பதை அர்ஜுனன் உணர்கிறார். அர்ஜுனனுக்கு, தமக்கு எதுவெல்லாம் 'தெரியாது' என்பதைத் தெளிவாகத் 'தெரிந்து' வைத்திருக்கிற புத்திசாலித்தனம் இருக்கிறது. கிருஷ்ணர் அர்ஜுனனிடம் ஒரு வீரருக்குரிய கடமைப் படிச் செயல்படுமாறு அறிவுறுத்துகிறார். இந்த அறிவுரை அவருக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தியது. ஏனென்றால் அவர் அத்தகைய கட்டுறு மனப்பாங்குடன்தான் வளர்க்கப்பட்டிருந்தார்.

இருந்தபோதும், கிருஷ்ணரின் சொற்கள் மேலும் சில குழப்பங்களை

அர்ஜுனனுக்குள் ஏற்படுத்துகின்றன.
"பலனை எதிர்பார்க்காமல் செயல்படு," என்று
கிருஷ்ணர் சொல்வது ஒரு வினோதமான
கருத்தாக அர்ஜுனனுக்கு இருக்கிறது. அவர்,
தம் வாழ்க்கையிலேயே, செயல்களுக்கான
பலன்களைப் பற்றி யோசிக்காமல், எந்தவித
எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், மிக அரிதாகச்
சில செயல்களை மட்டுமே செய்திருப்பார்.

அர்ஜுனன் இலக்கை நிர்ணயிப்பதிலும் அதை அடைவதிலும் மிகச் சிறந்த ஒரு நிபுணராக இருந்தார். அவர் எய்கிற அம்பு, குறி தவறியதே இல்லை.

முதலில் தனது இலக்கை முடிவு செய்து விட்டு, பிறகு செயலில் இறங்கும் வகையான கட்டுறு மனப்பான்மையுடன்தான் அவர் வளர்க்கப்பட்டிருந்தார். கிருஷ்ணர் இப்பொழுது அவரை முழுமையாக குழப்பிவிட்டார். "நீ அம்பை எய். அதன் இலக்கைப்பற்றி நிர்ணயிப்பது என்னுடைய வேலை," என்கிறார் கிருஷ்ணர். கிருஷ்ணர் சொன்னதை அர்ஜுனன் எப்படிப் புரிந்து கொண்டாரோ!

எதனாலும் பாதிக்கப்படாத சக்தியையும், நிலையையும் பெறலாம்

அர்ஜுனன், கிருஷ்ணர்மேல் போதுமான அளவிற்கு நம்பிக்கை வைத்திருந்தார். தெய்வத்திடம் இருந்து வரும் இந்த அறிவுரையை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதை கிருஷ்ணர் மேலுள்ள நம்பிக்கையால் உணர்கிறார். அதனால் "யார் பலன்களில் விருப்பம் இல்லாமல் செயல்படுகிறார்கள்? யார் செயல்களின் விளைவுகளைப் பற்றி, அது நல்லதோ கெட்டதோ, துக்கத்தைத் தரக்கூடியதோ அல்லது சுகத்தைத் தரக்கூடியதோ அவற்றைப் பற்றி நினைக்காதவர்களாய் இருக்கிறார்களோ, அவர்களை நான் எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வது," என்று அர்ஜுனன் கேட்டார்.

‘நரம்பியலின் மொழியியல் சார்ந்த செயல்திட்டத்தில் (Neuro Linguistic Programing) ‘நடத்தையைப் பற்றிய உளவியல் கோட்பாடுகள் என்கிற ஒரு பிரிவு உள்ளது. இந்தக் கொள்கைப்படி, ஒருவரால் தம் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் தாம் விரும்பும் நபரின் நடவடிக்கைகளைப்போல் மாற்றி

அமைத்துக்கொள்ள முடியும். நீங்கள் காந்தியைப்போல பேசி, நடந்து, செயல்களைச் செய்தீர்களென்றால் நீங்களும் காந்தியைப்போல் ஆகலாம். இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. ஒருவரின் செயல்பாடுகளில் மூழ்கி முழுமையாகவே அவரைப்போலவே செயல்படும்பொழுது, நீங்கள் அவரைப்போலவே சிந்திக்க ஆரம்பித்து விடுவீர்கள்; அவருடைய தொகுப்பாகவே ஆகி விடுவீர்கள்.

தாம் பின்பற்றவேண்டிய நடவடிக்கைகளைப் பற்றிய குறிப்புகளைக் கிருஷ்ணர் தமக்குத் தெரிவித்தால், தாமும் அவரைப் பின்பற்றி,

கிருஷ்ணரின் விருப்பப்படியே தாமும் வாழ விரும்புவதாக அர்ஜுனன் சொல்கிறார்.

“இந்த மனிதர் ஆசைகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் அப்பாற்பட்டவர். பயமோ, ஆசையோ அவருக்குக் கிடையாது. தம்மை ஒருநிலைப்படுத்தியே எப்போதும் இருப்பார். புலன் இன்பங்கள் மேல் அவருக்கு விருப்பம் இருக்காது. வெளி உலகிலிருந்து புலன்களை விலக்கி, அவற்றை உள்முகமாகத் திருப்பி, எல்லா ஆசைகள், உணர்ச்சிகள், இன்பங்கள் மற்றும் புலனின்ப பொருட்களையெல்லாம் கடந்து இருக்கும் மிக உயர்ந்த ஸத்யத்தை நோக்கியே செலுத்துவார். அந்த ஸத்யத்தை உணர்ந்த பிறகு, ஸத்யத்தை அடைய வேண்டும் என்ற ஆவல்கூட அவரை விட்டுச் சென்று விடுகிறது,” என்கிறார் கிருஷ்ணர்.

வெற்றி தோல்வியைப்
பற்றிய எதிர்பார்ப்புகள்
இல்லாதபோது,
அந்தப் பற்றற்ற
மனமானது
பற்று அற்றதையே
தேடும்.

அதனால் கிருஷ்ணர், ‘தன்னை உணர்ந்த ஞானியைப் பற்றி அர்ஜுனனுக்கு விளக்குகிறார். அப்படியென்றால்தான், அர்ஜுனனும் தம்மை அந்நிலைக்கு உயர்த்திக்கொண்டு தம்மையே உணர்ந்துகொள்ள முடியும் என்கிறார். மீண்டும் கிருஷ்ணர் எளிமையான வழிகள் மூலம் விளக்குகிறார்.

குருவினிடமிருந்து ஆலோசனை பெறுமாறு சொல்லும் ஆதிசங்கராச்சாரியார், நிர்மோஹத்வே நிஸ்சலதத்வம் என்கிறார். அதன்பொருள்: ஆசைகள் அற்ற தன்மையின் மூலம் தெளிவான சலனமற்ற மனம் அமைகிறது. சலனமற்ற மனம்தான் ஞானத்தை அடையவைக்கும்.

எதிர்பார்ப்புகளைவிட்டு, பற்றுதல்களையும்விட்டு விலகி,

கடந்தகாலத்தைப் பற்றிய வருத்தங்களில்
இருந்தும், எதிர்காலத்தைப் பற்றிய
கற்பனைகளில் இருந்தும் விடுபட்டு, ஒருவர்
நிகழ்காலத்தில் மனத்தை நிலைப்படுத்தினால்,
மனம் ஒருநிலைப்பட்டு ஆசைகள்
அழியும். ஆசைகள் இல்லாதபொழுது,
நமக்குள் ஏற்படக்கூடிய விருப்பங்கள்
நிறைவேறினாலும் சரி, நிறைவேறாமல்
போனாலும் சரி, அவற்றிலிருந்து பொதுவாக
எழும் இன்பம், மகிழ்ச்சி, பேருவகை, மன
அழுத்தம், துக்கம், கோபம், ஏமாற்றம்,
பொறாமை போன்ற உணர்ச்சிகள்
எழுவதில்லை.

மனத்தில் பயமோ, கோபமோ இல்லாதபோது, வெற்றி தோல்வியைப் பற்றிய எதிர்பார்ப்புகள் இல்லாதபோது, அந்தப் பற்றற்ற மனமானது பற்று அற்றதையே தேடும். அனைத்து ஆசைகள், உணர்ச்சிகள் மற்றும் பற்றுகளைக் கடந்து நிற்கும் ஸத்யத்தைத் தேடும். மனமானது புலன்களை வெளி உலகப்பொருட்களின் கவர்ச்சியிலிருந்து விலக்கி, உள் உலகை நோக்கித் திருப்புகிறது. முதலில் பொருட்கள் விலகும். பிறகு, பொருட்கள் மீது உள்ள ஆசை விலகி, ஸத்யம் மலரும்.

இது கேட்பதற்குக் கடினமாகத் தோன்றினாலும் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுவதுபோல மிக எளிமையானது.

தேவைகளுக்கு மட்டும் கவனமளியுங்கள், நிகழ்காலத்தில் வாழுமளவிற்கு உயர்ந்திடுவீர்கள்

இந்தப் பிரபஞ்ச சக்திதான், நம் அனைவருக்கும் பொறுப்பு. நாம் நம்மாலோ, நமது செயல்களாலோ வாழவில்லை. பிரபஞ்ச சக்தியினால்தான் வாழ்கிறோம். நம் செயல்களால்தான் நாம் வாழ்கிறோம் என்ற எண்ணத்தை விடும்பொழுது, பிரபஞ்ச சக்தியை உணருகிறோம். அப்பொழுது அது, நாம் வாழ்வதற்குத் தேவையான எல்லாவித வளங்களையும் நமக்குக் கொடுக்கிறது. ஆனால் இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் நாம் அதை உணர்வதில்லை. நாம் நம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதோடு நிறுத்திக்கொள்வதில்லை. நம் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்வதில் பேராசை கொண்டவர்களாகவும் இருக்கிறோம். நாம் பேராசை கொண்டவர்களாக இருக்கும் பட்சத்தில், உலகில் வாழும் மற்ற உயிர்களின் அடிப்படை தேவைகளைக்கூட நாம் தட்டிப் பறித்துக் கொண்டால் மட்டுமே, நம் விருப்பங்களை முழுமையாகப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

கானகத்தின் விதிமுறைகள் மனிதர்களின் இடையூறின்றி அழகாகச் செயல்படுகின்றன. மிருகங்கள், தங்கள் தேவைகளுக்காகச் செயல்படுகின்றனவே தவிர, ஆசைகளுக்காகச் செயல்படுவதில்லை. சிங்கம் தன் பசிக்காகவே மற்ற மிருகங்களைக் கொல்கிறது. மற்றொரு சிங்கம் கொல்வதைப் பார்த்து, தானும் அதுபோல் செய்ய வேண்டுமென்பதற்காகச் செய்வதில்லை. தன் சொந்த வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போதோ அல்லது தன் பசியைப் போக்கிக்கொள்வதற்காகவோ மட்டுமே, அது விலங்குகளைக் கொல்கிறது.

இந்தச் சூழ்நிலையில் மனிதன் குறுக்கிட்ட
உடனே சமநிலை மாறிவிட்டது. தமக்கு என்ன
தேவை என்பதைப் பற்றிய சிந்தனையோ,
அக்கறையோ ஒருதுளிகூட இல்லாமல் மனிதன்
வரைமுறை இல்லாமல் விலங்குகளைக்
கொல்கிறான். மனிதன் தனது இயல்பான
புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதே
இல்லை, ஆனால் மிருகங்கள் தங்கள்
இயல்பான புத்திசாலித்தனத்தையே
வெளிப்படுத்துகின்றன!

மனிதன்
தனது இயல்பான
புத்திசாலித்தனத்தை
வெளிப்படுத்துவதே
இல்லை,
ஆனால் மிருகங்கள்
தன் இயல்பான
புத்திசாலித்தனத்தையே
வெளிப்படுத்துகின்றன!

நமது உண்மையான தேவைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட வாழ்வை நாம் தேர்ந்தெடுத்தோம் என்றால், நாம் நமது இன்றைய நிகழ்காலத் தேவைகளின் மீது மட்டுமே கவனம் செலுத்துவோம். எதிர்கால ஆசைகளைக் கவனிக்க மாட்டோம். நிகழ்கால வினாடியிலேயே இருப்போம். அப்பொழுது இறந்தகால மற்றும் எதிர்கால ஆசைகள் கரைந்துவிடும்; மறைந்துவிடும். இந்தப் பிரபஞ்ச சக்தியுடன் நமக்குள்ள உறவையும் நமது பங்கையும் உணர ஆரம்பித்து விடுவோம். நாமும் இந்தப் பிரபஞ்ச சக்தியே என்பதை உணரும்போது, நமக்குத் தேவையான அனைத்தையும் ஆசை, பயம், பேராசை போன்ற உணர்ச்சிகளின் தாக்கம் இல்லாமல் பெற முடியும். முக்கியமாக எந்தவொரு துன்பமுமில்லாமல் அடைய முடியும்.

ஆமை

ஒருவர் எவ்வாறு புலன்களை
உள்நோக்கித் திருப்பிக்கொள்ள
வேண்டுமென்பதற்கு மிகச்
சரியான உதாரணமாக, ஆமையை
சொல்கிறார் கிருஷ்ணர். ஆமை,
சூழ்நிலைக்கு ஏற்றவாறு இயங்குகிற தன்
இயல்புணர்ச்சியின்படியே வாழ்கிறது.

அது நிகழ்காலத்தில் வாழ்கிறது. ‘அபாயம்
இல்லை’ என புலன்கள் உணர்த்தினால்
மட்டுமே நகரும். ‘அபாயம் வருகிறது’ என
புலன்கள் உணர்த்தும்பொழுது, அது தன்னை
முழுமையாக உள்வாங்கிக்கொள்கிறது.

ஆமை ஓட்டுக்குள்

ஆமை கடலைவிட்டு வெளியேவந்து கடற்கரையில் முட்டையிட்டுவிட்டு கடலுக்குள் சென்றுவிடும், பின் கடலுக்குள் இருந்தபடியே தம் மனத்தினாலேயே அடைகாத்து குஞ்சு பொரித்துவிடும். இதன் முழு வாழ்க்கைச் சக்கரமும், அந்த இயற்கையின் புத்திசாலித்தனத்தோடு இசைந்து உள்ளது. ஆமை, ஒரு சுறுசுறுப்பான, சாகசமான ஒரு உயிரி இல்லை. ஆனால் எல்லாப் பழமையான கலாச்சாரங்களிலும் இதனுடைய நீண்ட ஆயுள் தன்மைக்காகவும் தளராத நிலையான தன்மைக்காகவும் இது கொண்டாடப்படுகிறது. ஒருவர் தம்முடைய புலன்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, தமக்குள்ளேயே, தம் இருப்புத் தன்மைக்குள்ளேயே மையம்கொள்வது எப்படி என்பதற்கு உதாரணமாக, தன் உறுப்புகளை வெளி உலகத்திலிருந்து முழுமையாக விடுவித்து, தன் ஓட்டிற்குள் இழுத்துக்கொள்ளும் ஆமையைச் சொல்கிறார் கிருஷ்ணர்.

விழிப்புணர்வை உயர்த்தினாலேயே தெய்வ நிலைக்கு உயர்ந்திடுவீர்கள்

மனிதன் மற்ற விலங்கினங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவனாக இருக்கிறான். அவன் மட்டுமே சிந்தித்துச் செயல்படும் திறனைப் பெற்றிருக்கிறான். மற்ற உயிர்களைப்போல தனக்குள் இயல்பாகவே, இயற்கையாகவே அமைந்திருக்கும் புத்திசாலித்தனத்தைக்கொண்டு செயல்படுவதா? அல்லது அந்தப் புத்திசாலித்தனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ‘அஞ்ஞானியாகவே’ இருப்பதா என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை அவன் மட்டுமே பெற்றிருக்கிறான்.

ஒரு விலங்கு, எந்தச் செயலில் ஈடுபட்டாலும் சரி, அது உறவுகொள்ளும்போதும் சரி, அக்கறையுடன் கவனித்துக் கொல்லும்போதும் சரி, கொல்லும்போதும் சரி அல்லது தன்னைக் கொல்லும்போதும் சரி இந்த எல்லாச் செயல்களையுமே முழுக் கவனத்துடன் செய்கிறது. அது உறவுகொள்ளும்போது உறவில் மட்டுமே முழுமையாக ஈடுபடும்.

அது பேசிக்கொண்டோ அல்லது தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டோ செயலில் ஈடுபடுவதில்லை. அதனால்தான் அதன் இச்சை முழுமையடைகிறது. தனது முழுக் கவனத்தையும் ஒரு செயலில் ஈடுபடுத்துவதன் மூலம், அந்தச் செயலுக்குரிய முழு பலனையும் பெறுகிறது.

விலங்குகள் எப்பொழுதும் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்கின்றன. மனிதர்கள்போல் இல்லை. மனிதனுக்கு உடல் இருக்கும் இடத்தில் ஒருபோதும் மனம் இருப்பது இல்லை.

சரியான முடிவுகளை எடுப்பது எப்படி என்று குழும நிறுவன (Corporate) மக்கள் பலர் என்னிடம் கேட்பதுண்டு. இது மிக எளிது. தற்சமயம் கையில் உள்ள வேலையில் முழுக் கவனத்துடன், அப்பொழுதுள்ள செய்திகளைக்கொண்டு செயல்பட்டால் உங்களது முடிவு எப்பொழுதும் சரியாகவே இருக்கும். ஆமை செய்வதுபோல் உங்களுடைய புலன்களை உள்நோக்கித் திருப்பும்போதும், நீங்கள் உங்களுக்குள் நிலைபடும்போதும், ஒருமுகப்படும்போதும், பிரபஞ்ச சக்தி, முடிவு எடுப்பதில் உங்களை, வழிநடத்துகிறது.

ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் தெரியுமா? உங்கள் முடிவுகளால் ஏற்படும் விளைவுகளைக் கண்டு பயந்து, பாதிநேரம் முடிவு எடுப்பதையே தள்ளிப் போடுகிறீர்கள். அதனால் நிகழ்வுகள் உங்களுடைய கட்டுப்பாட்டை மீறி நிகழ்ந்து விடுகிறது, அது உங்களுக்குச் சாதகமாக இல்லாமலும் இருக்கிறது.

மீதிப் பாதி நேரம், நீங்கள் பேராசையாலும் கடந்தகால அனுபவங்கள் மற்றும் எதிர்காலக் கற்பனைகளை அடிப்படையாகக்கொண்டு முன்கூட்டியே நீங்கள் தீர்மானித்து வைத்திருக்கும் முடிவுகளாலும் வழி நடத்தப்படுகிறீர்கள். நிகழ்கால நிகழ்வுகளுக்கு பொருத்தமில்லாத முடிவுகளையே எடுக்கிறீர்கள்.

நீங்கள் சாப்பிடுவதையாவது சரியானமுறையில் செய்கிறீர்களா? மனத்தில் கை வைத்துச் சொல்லுங்கள், சென்ற முறை நீங்கள் சாப்பிட்டபோது அரட்டை அடிக்காமல், படிக்காமல், யாரையோ அல்லது எதையோ பார்த்துக்கொண்டிராமல் முழுமையாக உணவில் மட்டும் கவனம் செலுத்தி உணவை உண்டீர்களா?

நீங்கள் இதற்கு முன் கடைசியாக எந்தச் செயலைச் செய்தீர்களோ, அதில் 100% முழு கவனத்தையும் செலுத்திச் செய்தீர்களா?

"நாங்கள் எல்லாம் சராசரி மனிதர்கள், புலன் இன்பங்களை அனுபவிக்க வேண்டுமென்றும், வாழ்வை அனுபவிக்க வேண்டுமென்றும் விரும்புகிறோம் என்று நீங்கள் சொல்லலாம். நன்றாக விரும்புங்கள்! விரும்பியதை அனுபவிக்கும்போது, முழுமையாக அனுபவியுங்கள். சந்தோஷம் தரும் பொருளின் மீது முழுமையாக மனத்தை ஒருமுகப்படுத்துங்கள். உங்களது புலன்கள் அனைத்தையும் அந்தச் செயலில் மட்டுமே நிலை நிறுத்தி இன்பமாக அனுபவியுங்கள்.

நீங்கள் எதைச் செய்தாலும் அதை 100 சதவீதம் முழுமையான கவனத்துடன் செய்யும்போது, நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறீர்கள்; நீங்கள் கடவுளாகிறீர்கள்!

Hands playing a flute