KAILASA Library/பகவத்கீதை/ஞானமடைவதற்கான எளிமையான வழிSign in
பகவத்கீதை

ஞானமடைவதற்கான எளிமையான வழி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஞானம் அடைவதற்காக அர்ஜுனனை கிருஷ்ணர் எளிமையான பாதையில் அழைத்துச் செல்கிறார். அர்ஜுனனிடம், "செயல்கள் எதுவும் செய்யாமல் சோம்பி இராதே, நீ எதைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டுமோ அதைச் செய். அதன் பலனின்மேல் பற்றுதலோ, எதிர்பார்ப்போ இல்லாமல் செய். ஒருமித்த எண்ணத்தோடு, ஞானத்தில் நிலைபெற்றுச் செய். உனது உள்ளுணர்வின் ஞானத்திற்கு ஏற்ப செய்ய வேண்டுமே தவிர, வெளி உலகில் யாரோ ஒருவர் சொல்லி ஏதோ ஒன்றைக் கேட்டிருக்கிறாய் என்பதற்காகச் செய்யாதே. இதன் மூலம் அனைத்துத் துக்கங்களையும் கடந்து, நீ விடுதலை அடைவாய்," என்று சொல்கிறார்.

இவை நாம் அனைவரும் பயிற்சி செய்யவேண்டிய எளிமையான வழிகளே; சொல்லப் போனால், நாம் அனைவருமே அவற்றைக் கட்டாயம் பயிற்சி செய்ய வேண்டும். முன்பு நாம் கேட்டு, அனுபவித்த செயல்களைப் பற்றிக் கவலைப்படாமலும் எதிர்காலத்தில் நாம் கேட்டு அனுபவிக்கக்கூடியவற்றைப் பற்றிய எதிர்பார்ப்புகள் இல்லாமலும் இந்த நிகழ்காலத்திலேயே முழு விழிப்புணர்வோடு இருங்கள். நிகழ்கால அனுபவத்தில் முழுமையாக மையம்கொள்ளுங்கள். அந்த ஸத்ய அனுபவங்களின் அடிப்படையில் செயல்படுங்கள்; நீங்கள் நிச்சயம் தவறிப்போக மாட்டீர்கள், நான் இதற்கு உறுதி அளிக்கிறேன்.

ஸத்யம், அது
ஆனந்தமளிப்பதாகவோ,
வேதனையளிப்பதாகவோ
இருக்கலாம்.
ஆனால் அது
வெளிப்படுத்தப்பட்டே
தீர வேண்டும்.

கேள்வி: ஸ்வாமிஜி, குழும உலகில் அனைத்துச் செயல்களும் இலக்குகளையும் வரவு செலவுத் திட்டங்களையும் சுற்றியே வருகின்றன. இந்தச் சூழலில் இலக்குகள் இல்லாமல் எவ்வாறு செயல்படுவது?

தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், இது சாத்தியமானது மட்டும் அல்ல.

இந்த ஒன்றுதான், துக்கங்கள் இல்லாமல் பேரின்பத்தில் வாழ்வதற்கான வழி.

உங்களைப் பார்த்தால் நீங்கள் ஒரு குழுமத்தின் அதிகாரியாகவோ அல்லது தொழில் அதிபராகவோ இருக்கலாம் என்று தெரிகிறது. நிச்சயமாக நீங்கள் இதுவரை, வரவு செலவுத் திட்டங்கள், எதிர்பார்ப்புகள், இலக்குகள், இலட்சியங்கள் மற்றும் பலவற்றையும் அடிப்படையாகக்கொண்டுதான் செயல்களைச் செய்திருந்திருப்பீர்கள். நீங்கள் போட்ட செயல் திட்டங்களின்படியும் வரவு செலவுத் திட்டங்களின்படியும் எத்தனை முறை சாதித்திருக்கிறீர்கள் என்பதை உண்மையாகச் சொல்லுங்கள்.

> நீங்கள்
> நிகழ்காலத்தில் சரியாக
> செயல்படாவிட்டால்
> எதிர்காலத்தில் சரியாக
> செயல்படுவீர்கள்
> என்பதற்கான வாய்ப்பே
> இல்லை.

நான் பல நிர்வாக அதிகாரிகளிடமும் பேசி இருக்கிறேன். வரவு செலவுத் திட்டங்களில் போடப்படும் செலவுகளை மட்டுமே அவர்கள் சந்தித்திருப்பதாகவும் வரவுகளை அவர்கள் சந்தித்ததே இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். இதுதான் உலக நியதி. வரவு செலவுத் திட்டத்தில் போடப்பட்டிருக்கும் செலவுகளைக் காட்டிலும் அதிகமாகச் செலவு ஆவதும், அதன் விளைவாக வரவு செலவுத் திட்டத்தில் போடப்பட்டிருக்கும் இலாபத்தின் அளவு கணிசமாகக் குறைவதுமே எப்பொழுதும் நிகழ்கின்றன.

இருந்த போதிலும் மொத்தக் குழும நிர்வாகங்களும் வரவு செலவு திட்டத்தின்படியே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன; அந் வரவு செலவு திட்டத்தைச் சரியாக நிறைவேற்றும்படி அனைவரையும் வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றன.

வரவு செலவுத் திட்டங்களை நீக்கி விடுமாறு கிருஷ்ணர் சொல்லவில்லை. இலக்குகள், மற்றும் வரவு செலவுத் திட்டங்கள் என்னும் பிரச்சினைகளை மனத்தில் போட்டு நிரப்பிக்கொள்ள வேண்டாம் என்றே நமக்கு அறிவுறுத்துகிறார். "செயல்களின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், "நீ செய்யவேண்டிய செயல்களை, அந்தச் செயல்களுக்காகவே செய், யுத்தத்தை, யுத்தத்திற்காகவே செய். "நிகழ்காலத்தின் மேல் கவனம்கொள்," என்கிறார் அவர்.

Archery target with arrows

இப்பொழுது நடைமுறையில் உள்ள உங்கள் நிர்வாக இயல் செயல்படும் விதம் இதுதான்.

இப்பொழுது எல்லோரும் செயல்திட்டங்களின் கட்டுப்பாடுகளைப் பற்றியே பேசுகிறார்கள். அப்படி என்றால் என்ன? நிகழ்காலத்தில் என்ன நிகழ்கிறதோ அதில் கவனம் செலுத்துங்கள் என்பதே இதன் பொருள். நிகழ்காலத்தில் நீங்கள் சரியாகச் செயல்படாவிட்டால், எதிர்காலத்தில் சரியாகச் செயல்படுவீர்கள் என்பதற்கான வாய்ப்பே இல்லை. எதிர்காலம், நிகழ்காலத்தின் மூலம் மட்டுமே கடந்தகாலமாகிறது.

ஒரு தொழிற்சாலையிலோ அல்லது ஒரு அலுவலகத்திலோ உருவாக்கப்படும் பொருட்கள் 100% முழுமையாக இருப்பது இல்லை என்றும் அதில் ஒரு 1% சதவீதமாவது குறைபாடு இருப்பதாகச் சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளதாகக் கேள்விப்பட்டேன். இந்தக் குறைபாட்டை பூஜ்யமாகக் குறைக்க முடியாது.

ஜப்பானியர்கள் உற்பத்தியில்
கவனம் செலுத்துவதற்குப் பதிலாகச்
செயல்முறைகளில் கவனம் செலுத்துவது
என்ற புதிய முறையைச் செயல்படுத்தி,
அதன் மூலம் குறைபாடுகளைப்
பூஜ்ஜியத்திற்குக் கொண்டுவந்துவிட்டதாக
அவர்கள் சொல்கிறார்கள். உங்களது
பிரபலமான சிக்ஸ் சிக்மா (Six Sigma)
என்னும் அமைப்பே, நிகழ்காலத்தில்
இருப்பதைக் குறித்த நம்பிக்கையையே
அடிப்படையாகக் கொண்டுள்ளது.

பலனை
மறந்து விடுங்கள்,
நீங்கள் செய்ய
வேண்டியவற்றின்
செயல்பாடுகளில்
மட்டுமே கவனம்
வையுங்கள்.

இதைத்தான் 5000 ஆண்டுகளுக்கு முன்பே கிருஷ்ணர் சொல்லியுள்ளார். “பலனை மறந்து விடு, செயல்முறையில் மட்டுமே கவனம் செலுத்து,” என்கிறார். இதைவிட எளிமையான வழி வேறு உண்டா?

கிருஷ்ணர் சொல்வது மிக எளிமையானது; அவர் சொல்கிறார், “பலனை எனக்குச் சமர்ப்பித்துவிட்டு, நீ உன் செயலில் மட்டுமே கவனம் செலுத்து.”

இது ஏன் கஷ்டமாக இருக்கிறது? உண்மையில் உங்கள் தோளில் இருக்கும் பெரும் சுமையை இது இறக்கி விடுகிறது. விளைவை நோக்கிய மன அழுத்தத்தில் நீங்கள் இருக்க மாட்டீர்கள். அதற்குப் பதிலாக உங்களுடைய செயல்பாட்டில் கவனம் செலுத்தி மேலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள்.

இந்த முறையைப் பின்பற்றிப் பாருங்கள். உங்களை முழுமையாகத் தளர்த்திக்கொண்டு நீங்கள் தற்சயம் செய்யவேண்டியதை மட்டும் கவனியுங்கள். அதை விழிப்புணர்வுடன் செயல்படுத்துங்கள். நீங்கள் கவலைப்படாமலேயே பலன்கள் தாமாகவே நிகழும்.

இதை உணர்ந்துகொள்ளுங்கள். உங்களது பாதை சரியாக இருந்தால் உங்கள் இலக்கும் சரியாகவே இருக்கும். உங்களுக்குப் பொருந்தக்கூடிய இலக்கை இலகுவாகவும் பேரானந்தத்துடனும் அடைவீர்கள்.

hands playing a flute