KAILASA Library/பகவத்கீதை/எழுந்து நில்லுங்கள், எண்ண ஆரம்பியுங்கள்Sign in
பகவத்கீதை

எழுந்து நில்லுங்கள், எண்ண ஆரம்பியுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

2.49 இந்த ஸமபாவனையான புத்தியோகத்தைக் காட்டிலும் பலன் கருதிச் செய்யப்படும் கர்மம் மிகவும் தாழ்ந்த ரகத்தைச் சேர்ந்தது. ஆகவே அர்ஜுனா, ஸமபுத்தியில் தஞ்சம் அடைவாய். பயன் கருதுபவர்கள் இரங்கத்தக்கவர்கள்.

2.50 ஸமபுத்தியுடையவன் புண்ய பாவங்கள் என்ற இரண்டையும் இவ்வுலகிலேயே விட்டுவிடுகிறான். இதனால் நீ ஸமத்வ யோகத்தில் ஈடுபட்டிரு. கடமையை ஆற்றுவதில் உள்ள திறமையே யோகம். கர்மபந்தத்திலிருந்து விடுபடுவதற்கு உபாயமாகும்.

2.51 ஏனெனில் ஸமபுத்தியுடைய ஞானிகள் கர்மத்தினால் உண்டாகும் பலனைத் தியாகம் செய்து, பிறப்பு என்ற பந்தத்திலிருந்து விடுபட்டு எல்லாவித துக்கங்களையும் கடந்த உயர்ந்த நிலையினை அடைகிறார்கள்.

மாயையைக் கடக்க உன்னுடைய புத்தி உனக்கு உதவுகிற போது,
நீ இதுவரை கேட்ட எல்லாவற்றிலும் இனி கேட்கப் போகிற
எல்லாவற்றிலும் விருப்பு வெறுப்பு அற்ற நிலையை அடைவாய்.

நீ இதுவரை கேட்டவற்றால் குழப்பம் அடையாதவனாய், உன்
இருப்புத் தன்மையை விட்டு அகலாத புத்தியுடையவனாய்
இருக்கும்போது, நீ ‘தன்னை - உணர்தல்’ நிலையை அடைகிறாய்.

ஞானத்தையும், விடுதலையையும் தரக்கூடிய வழிகாட்டிகள்

கிருஷ்ணர், தாம் இதற்கு முன் சொன்னதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்வதுடன், அதை ஒரு மேற்கோள் வாக்கியத்துடன் வலியுறுத்துகிறார்.

“பற்றில்லாமல் செயல்படுங்கள், இறுதியில் ஏற்படும் வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். ஞானத்தில் உங்களை நீங்களே நிலைப்படுத்திக்கொள்ளுங்கள்; அது, உங்களை செயல்களைக் கடந்த நிலைக்கும், செயல்களின் பலன்களின் மேல் உள்ள ஆசையைக் கடந்த நிலைக்கும் எடுத்துச் செல்லும். இந்த ஞானத்தில் மையம் கொண்டால் மட்டுமே புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். பலன்கள் மீதுள்ள பற்றை விட்டு விட்டால், பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து விடுபட்டு, துக்கத்தைக் கடந்த நிலையில் இருப்பீர்கள்.

ஞானத்தில் மையம்கொண்டிருந்தீர்களானால், நீங்கள் கேட்கும் விஷயங்களால் ஏமாற்றப்படமாட்டீர்கள், நீங்கள் கேள்விப்படும் விஷயங்களால் ஏமாற்றமடையாது இருந்தீர்களானால், நீங்கள் விடுதலை அடைவீர்கள்.

> ஞானத்தில் மையப்பட்டு
> இருந்தீர்களானால்
> நீங்கள் கேள்விப்படும்
> விஷயங்களால்
> ஏமாற்றமடையாது
> இருந்தீர்களானால்,
> நீங்கள் விடுதலை
> அடைவீர்கள்.

இங்கே கிருஷ்ணர் புனித நூல்கள்
என்று சொல்லும்பொழுது
செவிவழியாக வந்த பாரம்பரிய மிக்க
வேதங்களையே குறிப்பிடுகிறார். இதற்கு
முன்பு கிருஷ்ணரிடம், இதே வேத நூல்களை
மேற்கோள் காட்டித்தான், “தம்முடைய
செயல்கள் சரியானவையே,”
என்று ஆணித்தரமாக வலியுறுத்திப்
பேசினார் அர்ஜுனன். “நீ

கேட்டதை, அது தெய்வீக அறிவான
வேதங்களாக இருந்தாலும் சரி,
குழப்பிக்கொள்ள வேண்டாம்,
தெரிந்துகொள், நீ உண்மையிலேயே
ஞானத்தில் ஒருமுகப்பட்டிருந்தால், நீ
ஏமாற்றப்படமாட்டாய், எப்பொழுதும்
விழிப்புணர்வுடனேயே இருப்பாய்," என்று
அர்ஜுனனுக்கு எடுத்துரைக்கிறார்.

இந்து தர்மங்கள்
இன்றைய
தேவைகளுக்கு
ஏற்றாற்போல்
நம்மை நாமே
மாற்றியமைத்துக்
கொள்வதற்கு,
நமக்கு அறைகூவல்
விடக்கூடியவையாக
இருக்கின்றன.

கிருஷ்ணரின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் இன்றும்கூட ஒலித்துக் கொண்டிருக்கின்றன. சொல்லப்போனால், அவை இன்றைய சூழலுக்கு மிகப் பொருத்தமாக இருக்கின்றன. அது மட்டுமல்ல, அவசியத் தேவையாகவும் இருக்கிறது. 24 மணி நேரமும் நாம் எல்லாப் பகுதிகளில் இருந்தும் நமக்குப் பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் பலவிதமான செய்திகளால் தாக்கப்படுகிறோம். ஏதாவது ஒரு விஷயம் தொடர்ந்து மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டேயிருந்தால், முக்கியமாக ஒரு அதிகாரத்திலுள்ளவர்களால் சொல்லப்பட்டால், நாம் அதை ஒதுக்கித் தள்ளாமல், எந்தவித சந்தேகமும் இல்லாமல், அதை அப்படியே நம்ப ஆரம்பித்து விடுவோம். உங்களை யாரும் கட்டாயப்படுத்தவேண்டியதில்லை. எந்தவிதமான கட்டாயப்படுத்துதலும் இல்லாமல், உங்கள் மூளையைச் சலவை செய்துவிட முடியும்.

இதைப் போன்றுதான் அரசியல் அமைப்புகளும், மதநிறுவனங்களும், மக்களுக்குள் பயத்தையும் ஆசையையும் புகுத்தி, அவர்களைத் தங்களின் கட்டளைகளுக்குப் பணிய வைக்கின்றன. வணிக மற்றும் விளம்பர நிபுணர்கள் தங்களின் பொருட்களைப் பற்றி மீண்டும் மீண்டும் சொல்லி உங்களைக் கவர்கிறார்கள். இதனால்தான் அவர்களை ‘மறைமுகமாகத் தூண்டுபவர்கள்’ (Hidden persuader) என்கிறோம்.

ஒரு சின்ன கதை:

tதனது நண்பனைப் பார்க்க ஒருவர் மனநல மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு வேறு ஒருவரிடம் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார். எவ்வளவு காலமாக அவர் அங்கு இருக்கிறார், எப்படியெல்லாம் வைத்தியம் செய்கிறார்கள் என்பதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். மருத்துவமனையிலிருந்து திரும்பிய பிறகுதான் அவருக்குத் தெரிந்தது, அவர் யாரிடம் பேசிக் கொண்டிருந்தாரோ, அந்த நபர் அவர் நினைத்துக்

கொண்டிருப்பதுபோல் நோயாளி அல்ல,
அங்கு பணிபுரியும் மனநல மருத்துவர்
என்பது தெரிந்தது!

மீண்டும் திரும்பிச் சென்று, "மன்னியுங்கள் டாக்டர், உங்கள் தோற்றத்தைப் பார்த்து அவ்வாறு பேசிவிட்டேன்," என்று மன்னிப்பு கேட்டார்.

புரிந்துகொள்ளுங்கள், நாம் பார்ப்பதையும்
கேட்பதையும் படிப்பதையும் நம்பி
விடுகிறோம். ஆனால் நாம் நம்புவது
அனைத்துமே உண்மையாக இருப்பதில்லை.

> நாம் பார்ப்பதையும்
> கேட்பதையும்
> படிப்பதையும்
> நம்பி விடுகிறோம்.
> நாம் நம்புவது
> அனைத்துமே
> உண்மையாக
> இருப்பதில்லை.

பொதுவாக நம்மில் பெரும்பாலோருக்கு, சந்தேகிப்பதைவிட நம்புவதே நமது முதல் செயல்பாடாக இருக்கிறது. முக்கியமாக, சிறுவயது முதலே நம்முள் புகுத்தப்பட்டிருக்கும் விஷயங்களைப் பார்க்கும் பொழுதோ, கேட்கும் பொழுதோ, படிக்கும்பொழுதோ இது நிகழ்கிறது. சிறுவயது முதல் மீண்டும் மீண்டும், "பெரியோர் சொல் கேட்க வேண்டும், சட்டத்தை மதிக்க வேண்டும்," என்று சொல்லப்படுவதால், நாம் வளர்ந்த பிறகும் அதன்படியே செயல்பட முயற்சி செய்கிறோம். நமது கற்பனைக்கு எது பொருத்தமாக உள்ளதோ, அதைக் கேள்வி கேட்காமலேயே ஏற்றுகொள்கிறோம்.

சமுதாய, வணிக மற்றும் மத நிறுவனங்கள் இந்தச் சக்தியையே நம் மீது மிகவும் ஆற்றலுடன் பயன்படுத்துகின்றன. எல்லா மதங்களும், கலாச்சாரங்களும் தங்களுக்கென்று ஏதோ சில புத்தகங்களை வைத்துக்கொண்டு, அவை மட்டுமே தெய்வீகத்தின் மூலங்கள் என்றும், அதன் படிதான் நடக்க வேண்டுமென்றும் சொல்கின்றன. நமது உள் அனுபவம், இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளவை நமக்குப் பொருத்தமானவைதான் என்று சொல்கிறதா? மிக முக்கியமாக, அவை நம்முடைய இன்றைய நடைமுறைக்குப் பொருந்துகிறதா?

தெய்வீக தன்மை வாய்ந்த, புனிதமான வேத நூல்களோ மனு மற்றும் ரிஷிகளால் ஏற்படுத்தப்பட்ட வழிமுறைகளான ச்ருதி மற்றும் ஸ்ம்ருதிகளோ இப்படிச் சொல்லவே இல்லை. உண்மையில், இந்து தர்மங்கள் எளிமை, இறுமாப்பு இரண்டையும் ஒருங்கேகொண்டுள்ளன. இன்றைய தேவைகளுக்கு ஏற்றாற்போல் நம்மை நாமே மாற்றியமைத்துக்கொள்வதற்கு, நமக்கு அறைகூவல் விடக்கூடியவையாகவும் இருக்கின்றன.

ஆனால் அவற்றில் சொல்லப்பட்டுள்ளவற்றை நாமே முதலில் அனுபவித்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. வேத நூல்கள் நம்மீது சுமத்தப்பட்ட, அதன்படி நடக்கப்படவேண்டிய இறந்து போன, சாரமற்ற அறிவு அல்ல. அவை நம்மை ஞானத்திற்குள்ளும், விடுதலைக்குள்ளும் அழைத்துச் செல்லும் உயிரோட்டமுள்ள வழிகாட்டிகள்!

அதனால் வேதங்கள் எதை விரும்புகின்றனவோ அதைச் சொல்லட்டும்! அவற்றுள் நீங்கள் எதைக் கேட்க வேண்டுமோ அதைக் கண்டிப்பாகக் கேளுங்கள், நீங்கள் மூடநம்பிக்கைகளைக் கடந்து செல்ல வேண்டுமானால், நீங்கள் கேட்பதை, பார்ப்பதை, படிப்பதை ஞானத்தீயில் புடம் போடுங்கள்; மாயையைக் கடந்து செல்லுங்கள்.

சத்தியத்தை அனுபவித்து உணர்ந்தவர்களால்தான் தைரியத்தோடு சொல்ல முடியும்

கிருஷ்ணர் அர்ஜுனனிடம், "உனக்குச் சொல்லப்பட்ட ஞான ரகசியங்களை உன் சுய அனுபவமாக மாற்றி, நீ என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்," என்று சொல்கிறார். முன்னரே கிருஷ்ணர் கீதையில், தாமே வேதங்கள் என்றும், தாமே அறிவு என்றும் சொல்கிறார். இருந்தாலும் கேட்பதை மட்டுமே ஆதாரமாகக்கொண்டு செயல்படாமல், உள் ஞானம் மற்றும் அனுபவம் வழியாகவே செயல்படச் சொல்கிறார்.

என்ன தைரியம், என்ன உறுதியான
நம்பிக்கை! தாம் சொல்கிற ஸத்யத்தை
முழுமையாக உணர்ந்த ஒருவரால் மட்டுமே,
"நான் சொல்வதையும் செயல்படுவதையும்
கவனிக்காதே. உன்னுடைய அனுபவத்தாலும்
விழிப்புணர்வாலும் தோன்றுகிற உன்னுடைய
உள்மனத்தின் குரல்படியே செயல்படு,"
என்று சொல்ல முடியும்.

ஒருவர் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான
பக்கங்கள் எழுதலாம். ஆனால் குரு சொல்கிற
இந்த வார்த்தைகளின்படி இல்லாவிட்டால்
அவை பொருள் அற்றவையே!

> வேத நூல்கள்
> நம்மீது சுமத்தப்பட்ட,
> அதன்படி
> நடக்கப்படவேண்டிய
> இறந்து போன,
> சாரமற்ற அறிவு அல்ல.

பல சமுதாய மற்றும் கூட்டாட்சி நிறுவனங்கள் தங்களின் உண்மைகளை நேரடியாக நம்மீது திணிக்கின்றன. அதைச் சரிபார்த்து ஏற்கும் சந்தர்ப்பத்தைக்கூட அவை நமக்கு அளிப்பதில்லை.

‘எங்களது சங்கத்தில் சேர வேண்டும் என்றால் எங்களது குறிக்கோளின்படியே செயல்பட வேண்டும்,’ என்கிறார்கள். அதனால்தான் ஸந்யாஸிகளும், துறவிகளும் சட்ட திட்டங்களால் கட்டுப்படுத்தப்பட்ட உலகில் இருந்து வெளியேறி ஸத்யத்தின் விடுதலையைத் தேடுகிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர்களில் பெரும்பாலானோர் மதங்களின் சட்டதிட்டங்களுக்குள் சென்று மாட்டிகொள்கிறார்கள்.

அன்றைய சமுதாயத்தில், அறிஞர்கள்
தாங்கள் அனுபவித்த ஸத்யங்களை
வெளிப்படுத்தியபோது, அது அப்போதைய
ஆள்வோர்களின் கருத்துகளுக்கு மாறாக
இருந்தால், அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.
சாக்ரடீஸ், கோபர்நிகஸ், டாவின்ஸி
போன்றோர் தாங்கள் அனுபவமாக
உணர்ந்த ஸத்யத்திற்கு மாறாகப் பேச
மறுத்ததால் தண்டிக்கப்பட்டார்கள். அவர்கள்
மறைவுக்குப் பின்னரே தீர்க்கதரிசிகளாகப்
போற்றப்பட்டார்கள்.

நீங்கள்
மூடநம்பிக்கைகளைக்
கடந்து செல்ல
வேண்டுமானால்,
நீங்கள் கேட்பதை,
பார்ப்பதை, படிப்பதை
ஞானத்தீயில் புடம்
போடுங்கள்;

இன்றைய குழும உலகத்தில் (Corporate World) தங்களது நிர்வாகம், மனசாட்சி இல்லாமல் செய்யும் செயல்களைப் பார்க்கும்போது அதனை எதிர்த்து, தாங்கள் நியாயம் என்று நினைக்கும் கருத்தில் நிலைத்து நிற்பவர்களை ‘இரகசியங்களை வெளிவிடுபவர்கள்’ (Whistle Blowers) என்கிறார்கள். இன்று இது ஒரு மதிப்புள்ள வார்த்தை. ஆனால் முப்பது ஆண்டுகளுக்கு முன்புகூட இது துரோகிகளைக் குறிக்கும் ஒரு மதிப்புக் குறைவான வார்த்தை.

ஏன் அவர்களை துரோகிகள் என்கிறோம்? அவர்களுடைய நிர்வாகமோ, அரசாங்கமோ, மதமோ சொல்லும் உண்மைக்கு மாறுபட்டு அவர்கள் சிந்திப்பதாலா? ஒருவர், தம் அனுபவத்தில் அறிவுப்பூர்வமாக உணர்ந்த ஸத்ய கருத்துகள் தாம் இதுவரை கேட்டு வந்த கருத்துகளோடு மாறுபட்டு இருப்பதாக உணர்ந்தால், அதை இந்த மனித சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்வதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது. உரிமை மட்டுமல்ல, அது அவரது கடமையுங்கூட. ஸத்யம், அது ஆனந்தத்தை அளிப்பதாகவோ, வேதனை அளிப்பதாகவோ இருக்கலாம். ஆனால் அது வெளிப்படுத்தப்பட்டே தீர வேண்டும்.