உங்கள் பாதை சரியாக இருந்தால், நீங்கள் சேரும் இடமும் சரியாக இருக்கும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கேள்வி: ஸ்வாமிஜி எப்பொழுதும் நாம் ஒரு செயலைச் செய்யும்போது அதன் முடிவை எதிர்பார்ப்பதுதானே இயற்கை. எப்படிப் பலனை நினைக்காது இருக்க முடியும்?
நாம் எப்பொழுதும் பலனுக்காகவே செயல்படுகிறோம். செயலைத் தொடங்கும் முன்னரே பலனின் மேல் கவனத்தை வைக்கும் நமது மனத் தினுடைய இயல்பைப் பற்றி, பகுத்தறிவுக்கு முரணான இந்தச் செயலைப் பற்றி நாம் உணர்வதில்லை. நடைமுறைக்கு ஒத்துவராத செயல்களாகத் தோன்றினால், உடனே நாம் அந்தச் செயல்களைச் செய்வதில்லை. அந்த அளவிற்கு நாம் கட்டுறு மனப்பாங்கினால் கட்டுறுத்தப் பட்டிருக்கிறோம். ஒரு செயலைச் செய்யும்போது, அதிலிருந்து என்ன பலன்களை நாம் பெறப்போகிறோம் என்பது தெரியாமலேயே, எங்களால் எப்படிச் செயல்களைச் செய்ய முடியும் என்று நீங்கள் கேட்கலாம்.
உங்களுடைய மகிழ்ச்சிக்காக நீங்கள் ஒரு செயலைச் செய்வது எப்படித் தவறாகும்? உதாரணமாக சூரிய உதயத்தையோ, சூரிய அஸ்தமனத்தையோ
பார்ப்பதை எடுத்துக்கொள்வோமா? நீங்கள்
சூரியனைப் பார்ப்பதால் ஏற்படும் பலனை
நினைத்துக்கொண்டு இருக்க முடியுமா?
குறிக்கோளில் சிக்கிக்கொண்டு
இருப்பவர்கள் வேண்டுமானால் சூரியனைப்
பார்க்கும்போதுகூட, தாங்கள் சந்தோஷத்தை
உணர வேண்டுமென்று சொல்லலாம்.
அப்படியானால் மகிழ்ச்சிக்கான
காரணத்தை எந்த அளவுகோலைக்கொண்டு
எப்படி அளப்பீர்கள்? இதை எதனோடு
ஒப்பிடுவீர்கள்?
குழந்தைகள், பலன்கள்
என்ன என்பதைப் பற்றி
அறியாமலே செயலில்
ஈடுபடுவார்கள்.
அவர்களுக்குப்
பலன்களைப் பற்றிய
சிந்தனையே இருக்காது.
நாம், குழந்தைகளிடமிருந்தும், மீண்டும் குழந்தைகளாக மாறிய ஞானம் பெற்ற குருமார்களிடமிருந்தும் இதைக் கற்போம். குழந்தைகள் ஆர்வத்தோடும், கவலையற்றும் இருப்பார்கள். அவர்களுக்கு எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லை. பலன்கள் என்ன என்பதைப் பற்றி அறியாமலே செயலில் ஈடுபடுவார்கள். அவர்களுக்குப் பலன்களைப் பற்றிய சிந்தனையே இருக்காது.
பிறகு துரதிருஷ்டவசமாக, மெது மெதுவாக பெரியவர்களிடமிருந்து ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பலன் உண்டு எனத் தெரிந்துகொள்கிறார்கள். பிறகு எந்தவொரு செயலையும் தொடங்குவதற்கு முன்பாகவே அதன் பலனைக் கணக்கிடத் தொடங்குகிறார்கள். பலனை முன்னிறுத்தியே எந்த ஒரு செயலையும் செய்யவே தொடங்குகிறார்கள். அப்போதுதான், அவர்கள் தங்களின் இயல்பான மகிழ்ச்சி யை இழக்கிறார்கள்.

"நாளையும் நாங்கள் வாழ்வோம் என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே, இன்று நாங்கள் வாழ்வோம்" என்று நம்மால் சொல்லமுடியுமா? நாளை சூரியன் நிச்சயம் உதிக்குமா? நாளை சூரியோதயத்தைப் பார்க்க நாம் இருப்போமா?
ஒரு சின்ன கதை:
பீர்பால், சக்கரவர்த்தி அக்பரின் அரசவையில் இருந்த புத்திசாலியான மந்திரி. மற்ற மந்திரிகளின் பொறாமையால், அவர் அடிக்கடி சிக்கலில் மாட்டித் துன்பப்படுவார்.
ஒருமுறை அவர்கள், அவரை மாட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அக்பரிடம் சென்று, “பீர்பாலால் எதையும் செய்ய முடியும்,” என்றார்கள். அதற்கு அக்பர், “எப்படி முடியும்? அவரும் சாதாரண மனிதர்தானே?” என்றார். “இல்லை அவர் ஒரு அதிசய மனிதர். அவரால் ஒரு நாயைக்கூட பேசவைக்க முடியும்,” என்றார்கள். அப்பொழுது தெருவில் சென்று கொண்டிருந்த நாய் ஒன்றைக் காட்டி, “அவரை நீங்கள் அச்சுறுத்தினால், இந்த நாயை நிச்சயம் அவர் பேசவைப்பார்,” என்றார்கள்.
அக்பர் பீர்பாலை அழைத்து, “உனது அதிசய
சக்தி எல்லாம் எனக்குத் தெரியும். உடனே
ஒரு நாயைப் பேச வைக்காவிட்டால் உனக்கு
மரண தண்டனைதான்!” என்றார்.
உடனே பீர்பாலும் “அரசே எனது
சக்தியைக்கொண்டு உடனே இதைச்
செய்ய முடியாது. எனக்கு ஒரு வருட
அவகாசம் கொடுங்கள். நான் நாயைப் பேச
வைக்கிறேன் ,” என்றார்.
இதைக்க் கேள்விப்பட்ட பீர்பாலின் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அவர்கள், “பீர்பால் என்ன காரியம் செய்தாய்? எப்படி நீ நாயைப் பேச வைக்க முடியும்? நிச்சயம் நீ சாகப் போகிறாய்,” என்றார்கள்.
அதற்கு அவர்“ஒரு வருடத்தில் எவ்வளவோ நடக்கும். நாயும் இறக்கலாம். அரசரும் இறக்கலாம். நானும் இறக்கலாம். யாருக்குத் தெரியும் ஒரு வேளை நாய் பேசினாலும் பேசலாம்!” என்றார்.
நீங்கள் எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் செல்லும்போது, எது நிகழ்ந்தாலும் அது ஒரு அதிசயச் செயலே!
கிருஷ்ணரின் இந்தக் கூற்றில் ஆழமான உண்மை இருக்கிறது. கர்மயோகத்தின் சாரமே ‘எதிர்ப்பார்ப்பின்றிச் செயல்படுவதே!’
எதிர்பார்ப்போடு செயல்படும்போது, நாம்
எதிர்காலத்தை நோக்கியே செயல்படுவோம்;
நாம் ஊகத்தின் அடிப்படையிலேயே
செயல்படுவோம்; பேராசையில் இருப்போம்;
நம்மால் அடைய முடியுமோ முடியாதோ
என்ற பயத்தில் இருப்போம்.
எதிர்பார்ப்பு அதிகமாக அதிகமாக
மனஅழுத்தமும் (Stress) நமக்கு
அதிகமாகிறது. நம்மால் நம் செயலில் முழுக்
கவனத்தையும் செலுத்த முடிவதில்லை.
நாம் பலன்களுக்கே அதிக முக்கியத்துவம்
கொடுக்கும்போது, நேர்மறையான பலன்கள்
குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
பலன்களை
முன்னிறுத்தும்போது
நீங்கள்
பயணத்தை
இழக்கிறீர்கள்.
பலன்களை முன்னிறுத்தும்போது நீங்கள் பயணத்தை இழக்கிறீர்கள். அடைய வேண்டிய இலக்கையே எண்ணிக் கொண்டிருப்பதால், வழியில் உள்ள இயற்கை அழகையெல்லாம் இரசிக்கத் தவறிவிடுகிறீர்கள்.
ஒரு கடற்கரையிலோ, மலைப்பகுதியிலோ, அழகான இயற்கைக் காட்சிகளுக்கு நடுவிலோ பயணித்துக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்; அங்கே பார்த்து மகிழ எவ்வளவோ அற்புதமான காட்சிகள் இருக்கின்றன. உங்கள் மனம் இயற்கையைக் கவனிக்கும் நிலையில் இருந்தால் மட்டுமே, உங்களால் இயற்கை அழகை ரசிக்க முடியும்.
எப்பொழுது ஊர் போய்ச் சேர்வோம் என்ற எண்ணத்தோடு பயணித்துக் கொண்டிருந்தீர்களானால், நீங்கள் கடந்து கொண்டிருக்கும் இயற்கை அழகை ரசிக்க முடியாது.
நீங்கள் ஒரு திட்டத்தைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்துகொண்டிருக்கும்போதும், நீங்கள் உங்கள் செயல்களைச் சரியாகச் செய்கிறீர்களா என்று ஒருவர் கவனித்துக் கொண்டே இருக்கும்போதும் உங்களால் அந்தச் செயலைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
அடுத்தமுறை அதேபோல் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டிய நிலை வரும்போது, உலகிலுள்ள காலமனைத்தும் உங்களுடையதே என உங்களுக்கு நீங்களே உணர்த்திக்கொண்டு, எப்போது முடிப்போம் என்ற
எண்ணமின்றி, செயலில் மட்டும் கருத்தைச் செலுத்துங்கள். நீங்கள் குறுகிய காலத்திலேயே சிறப்பாகச் செய்து முடித்திருப்பீர்கள்.
ஆச்ரமத்தில் ஒருவரும் வேலை செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று நான் சொல்லும் போது, ஆச்ரம வாழ்க்கை என்பது எளிது என மக்கள் நினைக்கிறார்கள். கட்டாயமில்லை என்பது உண்மைதான். ஆனால் என் ஆச்ரமவாஸிகளைக் கேட்டால் அவர்கள் அதிகாலை இரண்டு அல்லது மூன்று மணிக்கு உறங்கச் சென்று, மீண்டும் அதிகாலை நடைபெறும் தினசரி தியானப் பயிற்சிகளுக்குக் காலை ஐந்து மணிக்கே விழித்தெழுவது தினசரி வழக்கம் என்பார்கள்.
இங்கே கட்டாயப்படுத்துதல் இல்லை. அவர்கள் காலை நிகழ்வுகளுக்கு ஏன் வரவில்லையென்றோ, பணிகளை முடித்துவிட்டீர்களா என்றோ நான் கேட்டதே இல்லை. அவர்களின் ஆர்வத்தின் காரணமாகவே அதைச் செய்கிறார்கள். நீங்கள் ஒரு செயலை ஆர்வத்தின் காரணமாகவும் பலனைப் பற்றிய கவலையின்றியும் செயல்படுத்தும்பொழுது, நீங்கள் மன அழுத்தத்திற்குள் விழமாட்டீர்கள்; அதற்குப் பதிலாகப் பேரானந்தத்தில் மட்டுமே இருப்பீர்கள்.
இலக்கு இன்றி செய்யப்படும் செயல் உங்களை நிகழ்காலத்திலேயே வைக்கும். இதுவே ரகசியம். அதனால்தான் மீண்டும் மீண்டும் கீதையில் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் பலன்களை எதிர்பார்ப்பதை விட்டுவிடச் சொல்கிறார். இம்முறையில் செயல்படுவதே த்யானம். இதுவே கர்மயோகம். விடுதலைக்கு இதைவிட மேம்பட்ட வழியில்லை.
எந்தவொரு உயிரினத்திற்கும் செயல்பாடு என்பது இயல்பான தன்மை. அது இல்லையென்றால் நீங்கள் இறந்திருப்பீர்கள். செயல்படாமல், அறியாமையோடும், மந்தமாகச் செயலாற்று இருப்பதுதான் தமஸ் நிலை. அப்பொழுது நீங்கள் இருளில் இருக்கிறீர்கள். இல்லையன்றால், இலக்கை நிர்ணயித்துக்கொண்டு அதனை நோக்கி தீவிரமான விருப்பத்துடனும் பரபரப்புடனும் ரஜோகுணத்துடன் செயல்படுகிறீர்கள். இலக்கு இன்றி செயல்பட்டால், நிகழ்காலத்தில், ஸத்வ குணத்தில், அமைதியான பேரானந்தத்தில் இருப்பீர்கள். நீங்கள் ஒளி வெள்ளத்தில் இருப்பீர்கள்.
> இலக்கு இன்றி
> செயல்பட்டால்,
> நிகழ்காலத்தில்,
> ஸத்வ குணத்தில்,
> அமைதியான
> பேரானந்தத்தில்
> இருப்பீர்கள். நீங்கள்
> ஒளி வெள்ளத்தில்
> இருப்பீர்கள்.
குரு, ஸத்குரு செயலையும் பலனையும் விட்டுவிடச் சொல்வதன் மூலமாக, உங்களை இருளிலிருந்து ஒளிக்கும் தாமஸ குணத்திலிருந்து ஸத்வ குணத்திற்கும் அதற்கு அப்பாலும் அழைத்துச் செல்கிறார்.
பலனை எதிர்பார்க்காமல் இருப்பதும் வருகிற பலனையும் தெய்வத்திற்கே சமர்ப்பிப்பதுமே மிக உயர்ந்த ஸத்வ நிலை. நீங்கள் ஸத்வ குணத்திலிருந்து முன்னேறிச் செல்லும்போது மூன்று குணங்களையும் கடந்து விடுவீர்கள். "செய்ய வேண்டிய செயலைச் செய்துவிட்டு பலனை என்னிடம் விட்டுவிடுங்கள் உங்கள் செயலின் பலன் என்னுடையது," என்கிறார் கிருஷ்ணர். இதுவே உண்மையான சரணாகதி.
> உங்கள் அஹங்காரம்
> வீழ்ந்த பிறகே,
> இறைவன்
> உள்ளே அடியெடுத்து
> வர முடியும்.
மஹாபாரதத்தில், திருதராஷ்டிரர் சபையில், துரியோதனனின் சகோதரர் துச்சாதனன் திரௌபதியை துகிலுரியும் காட்சி மனத்தை வருத்துகிற காட்சி. "கிருஷ்ணா, என்னைக் காப்பாற்றுங்கள், என் மானத்தைக் காப்பாற்றுங்கள்," என்று கதறுகிறார். அவரின் சேலை வளர்ந்து கொண்டே இருந்தது. கடைசியில் துச்சாதனன் தோல்வியுற்று கீழே விழுந்து விடுகிறார். இந்நிகழ்வுக்குப் பிறகு, திரௌபதி கிருஷ்ணரைச் சந்தித்தபோது, "கிருஷ்ணா நீ ஏன் என்னைக் காப்பாற்ற அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டாய்," என குறைபட்டுக் கொண்டார்.
"என் அன்பு திரௌபதியே, நீ என்னை அழைக்கும்போது உனது ஆடையைக் கைகளால் பிடித்துக்கொண்டு, உன்னை நீயே காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்தாய். நீ ஆடையை விட்டுவிட்டுக் கைகளை மேலே தூக்கித் தொழுது, என்னை முழுவதுமாகச் சரணடைந்தபோதுதான் உன்னைக் காப்பாற்ற வர முடிந்தது. நீ உண்மையாகச் சரணடைந்தபொழுதுதான் என்னால் வர முடிந்தது," என்றார் கிருஷ்ணர்.

உங்கள் அஹங்காரம் வீழ்ந்த
பிறகே, இறைவன் உள்ளே
அடியெடுத்து வைத்து வர
முடியும். இப்பொழுது
நமக்கு இருக்கும் பிரச்சினை
என்னவென்றால் நம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகளை நாமே கட்டுப்படுத்த முடியும் என்று முழுக்க முழுக்க அஹங்காரத்துடன் நம்புகிறோம். நமது செயலின் பலனையும் நம்மால் கட்டுப்படுத்த முடியும் என நிச்சயமாக நம்புகிறோம். அதனால் கிருஷ்ணர் கருணையோடு நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்; அஹங்காரம் வீழும்வரை நமக்காகக் காத்திருக்கிறார்.
அதுவரை அவரால் ஒன்றும் செய்ய இயலாது. நமது அஹங்காரம் அவர் நோக்கி நெருங்கி வருவதைத் தடுக்கிறது.
உங்கள் செயல்களின் பலன்களை அவருக்குச் சமர்ப்பிக்கச் சொல்வதால் கிருஷ்ணருக்கு எந்த நன்மையுமில்லை. உங்கள் பலன்களை எடுத்துக்கொண்டு அவர் செல்வந்தராகவும் புகழடையப் போவதாகவும் எண்ணாதீர்கள். ஆழமான கருணையினாலேயே, "என்னைச் சரணடையுங்கள். உங்கள் செயலின் எல்லாப் பலனையும் எனக்கே சமர்ப்பித்து விடுங்கள் அஹங்காரத்தை விட்டுவிட்டு, என்னை அடையுங்கள். நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன். உங்களிடம் வருவேன்," என்கிறார்.
இதை நாம் செய்யும்போது, அதிசயங்கள் நிகழும்!

