KAILASA Library/பகவத்கீதை/பிரச்சனையிலிருந்து வெளியே வருவதற்கான எளிய வழிSign in
பகவத்கீதை

பிரச்சனையிலிருந்து வெளியே வருவதற்கான எளிய வழி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நமது எண்ணங்கள் எல்லாம் தர்க்க ரீதியற்றவையாகவும், கணிப்புகளுக்கு அப்பாற்பட்டவையாகவும், தொடர்புகளற்றவையாகவும் இருக்கின்றன. இந்த எண்ணங்களைத் தொடர்புபடுத்திப் பார்க்கும்போதுதான் பிரச்சினைகள் தொடங்குகின்றன; கஷ்டங்கள் நிகழ்கின்றன. நூற்றுக்கணக்கான நிகழ்வுகளில் சிலவற்றை மட்டும் நினைவில்கொண்டு, அவற்றைக் கோர்த்துப் பார்க்கிறோம். நாம் பார்த்து, அனுபவித்தவற்றில் 90 சதவீதம் நமது விழிப்புணர்வு மனத்தில் பதிவு செய்யப்படுவதில்லை. அவை உணர்வற்ற நிலைக்குள் விழுந்து விடுகின்றன.

அதனால் நாம் அனுபவித்ததில் 10% மட்டுமே நினைவில் உள்ளது. ஞாபகத்தில் தங்கியிருக்கும் அவற்றுள்ளும் பல எண்ணங்கள், அமைப்பிற்கு வெளியே வீழ்ந்து விடுகின்றன. அதிலும் அந்த நிகழ்வு நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருந்துவிட்ட hisபோதும், அவற்றை உதாசீனப்படுத்தி விடுகிறோம்; அவற்றை மறந்தும் விடுகிறோம்.

உங்கள்
எண்ணங்களை
அன்கிளட்ச்
செய்யுங்கள்.
உடனே தானாகவே
மனம் வீழ்ந்துவிடும்.
இதுவே
நிகழ்காலத்தில்
வாழ்வதற்கான வழி.

நினைத்துப் பாருங்கள். நீங்கள் வேலைக்குச்
செல்லும்போது, தினமும் தெருமுனையில்
பிச்சைக்காரர் ஒருவரைக் காண்கிறீர்கள்.
அவரைக் கடந்தவுடனேயே அவரை மறந்து
விடுவீர்கள்; அதற்குப் பிறகு அவரைப் பற்றி
நீங்கள் எதுவுமே நினைப்பதில்லை. நான்
சொல்வது சரிதானே? ஆனால் என்றாவது
ஒருநாள் அந்தப் பிச்சைக்காரர் அங்கு இல்லை
என்றால் "என்ன இன்று அந்தப் பிச்சைக்காரர்
இங்கு இல்லையே!" என்று நினைக்கிறீர்கள்.

எப்போதும் குறை சொல்லிக்கொண்டே
இருக்கும் உங்கள் மனைவி இன்றும் அதே
குறை சொல்லும் குணத்தோடு இருந்தால்
ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் அவரே
இன்று அன்பாகக் கவனித்துக் கொண்டால்,
இது ஒரு அதிசயம்! கவனிக்கப்படவேண்டிய
ஒன்று!

இங்கே பிரச்சினை என்னவென்றால், நம் மனம், வித்தியாசமான, மாறுபட்ட நிகழ்வுகளை மட்டுமே தேர்ந்தெடுக்கிறது. ஏனென்றால் நாம் மாறுபட்ட நிகழ்வுகளை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்கிறோம்; அந்த வகை மனப்பான்மையையே நமக்குள் உருக்கிக்கொள்கிறோம். நம் மனம், மற்ற எல்லா நிகழ்ச்சிகளையும் மறந்து, மாறுபட்ட ஒன்றையே நினைவில்கொள்ளும். அந்த மாறுபட்ட நிகழ்ச்சி மீண்டும் நிகழ வேண்டும் என எதிர்பார்க்கும். அது நிகழாவிடில் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறது. அது நிகழ்ந்து விட்டால், உடனே மகிழ்ச்சி அடைகிறது. மீண்டும் அது நிகழாவிட்டால் துக்கத்தில் விழுகிறது.

அதனால் எண்ணங்களைக் கோர்த்துக் கோர்த்து ஒரு துக்கத்தண்டை ஏற்படுத்த வேண்டாம். உங்கள் எண்ணங்களை அன்கிளட்ச் (unclutch) செய்யுங்கள். உடனே மனம் தானாகவே வீழ்ந்துவிடும். இதுவே நிகழ்காலத்தில் வாழ்வதற்கான வழி.

உங்களில் சிலர் அன்கிளட்ச் என்பதை 'ஒன்றும் செய்யாதிருத்தல்' என தவறாகப் புரிந்துகொள்கிறீர்கள். மனத்தைவிட வேண்டுமானால்? ஒன்றும் செய்யாமல், வெறுமனே உட்கார்ந்திருப்பது என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி இல்லவே இல்லை.

நீங்கள் உங்கள் உடலால் ஒன்றும் செய்யாவிட்டாலும்கூட உங்கள் மனத்தை எண்ணங்கள் முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்ளும். அதனால்தான் சும்மா இருக்கும் மனம் 'பேய்களின் பணிமனை' என்கிறார்கள். செய்ய ஒன்றுமில்லை என்றால் முடிவில் நீங்கள் கற்பனையில் மூழ்கி விடுவீர்கள்.

செயலற்று இருப்பதற்கு அறிவுறுத்தப்படவில்லை, புரிந்துகொள்ளுங்கள்! மனம் விடுபடும்போது, எண்ணங்கள் நின்றுவிடும்போது, உங்களது சக்தி நிலை உயர்ந்து நீங்கள் சும்மா இருக்க இயலாது. தூய்மையான தேவையின் காரணமாக நீங்கள் உடனடியாகச் செயல்பட ஆரம்பித்து விடுவீர்கள். எண்ணமில்லா மனம், உடல் அளவிலான வேலையின்மையையோ அல்லது மன அளவிலான வேலையின்மையையோ ஒருபோதும் உருவாக்குவதில்லை.

நீங்கள், 'சும்மா' இருத்தலையும் 'அமைதியாய்' இருத்தலையும் தொடர்புபடுத்தக் கூடாது. எண்ணமற்ற மன நிலையில் அமைதியாக, சலனமற்று, ஒத்திசைவுடன் இருக்கும் ஒருவர், ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒவ்வொரு நொடிக்கும் தகுந்தமுறையில் மிகவும் விழிப்புடன் தன்னிச்சையான முறையில் செயல்படுபவராக இருக்கிறார்.

எண்ணங்களற்ற மனம், விழிப்புணர்ச்சியையும் சக்தியையும் கொண்டுவருகிறது. சும்மா இருத்தலுக்கும், அதாவது சோம்பேறித்தனத்திற்கும், எண்ணங்களற்ற மனத்திற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒரு குழப்பத்தோடும், பரபரப்புடனும் தேவைக்கதிகமாக அலைந்து கொண்டிருக்கும் மனம், எப்போதும் உள் உளறலாலும் கற்பனைகளாலும் நிறைந்திருக்கும். இதன் விளைவாக அக்கறையற்ற, சோம்பேறித்தனமான மன நிலையே உருவாகிறது.

நீங்கள் அன்க்ளட்ச் மன நிலையில் இருக்கும்போது, நீங்கள் நிகழ்கால உணர்வில் இருப்பீர்கள். இந்த நிலையில் நல்ல செயல்களை மட்டுமே செய்ய முடியும். இந்த நிகழ்கால நிலையில் இறந்தகாலக் கவலைகளோ, எதிர்கால எதிர்பார்ப்புகளோ உங்கள் மனத்தில் இருக்காது.

செயல்களின் விளைவுகள் குறித்த பயத்தாலோ அல்லது பேராசையாலோ பாதிக்கப்படமாட்டீர்கள். உங்களால் என்ன முடியுமோ அதைச் செய்வீர்கள்.

அதனால்தான் கிருஷ்ணர், "நீ நிகழ்காலத்தில் செயல்பட வேண்டுமானால், செய்யும் செயலின் முடிவுகள் மீது பற்று வைக்கவேண்டாம். செயலற்ற தன்மையிலும் பற்று வைக்க வேண்டாம். செயலற்ற தன்மைதான் பிரச்சினையிலிருந்து வெளியே வருவதற்கான எளிய வழி என்று நினைத்துக்கொண்டு அதற்குள் விழுந்துவிடாதே," என்கிறார்.

Hands playing a flute