KAILASA Library/பகவத்கீதை/தர்மத்தை மட்டுமே செயல்படுத்துவதற்கான யுக்திSign in
பகவத்கீதை

தர்மத்தை மட்டுமே செயல்படுத்துவதற்கான யுக்தி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மக்கள் என்னிடம் கேட்பதுண்டு, "இயற்கை ஏன் இவ்வளவு கொடூரமாக இருக்கிறது? ஏன் இத்தனை இயற்கைச் சீரழிவுகள்? ஏன் குழந்தைகள் இறக்கிறார்கள்?"

இதற்கு பதில்: கிருஷ்ணர் சொல்லியதே!

இயற்கை தமது செயலைச் செய்யும்போது அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என எண்ணுவதே இல்லை. எது நிகழ வேண்டுமோ அது நிகழும். அது நடந்தே தீரும். இயற்கை தனது நேர்மையான பாதையான அதன் தர்மத்தில் செல்கிறது. இதில் பிரச்சினை என்னவென்றால் நாம் இயற்கையின் விதியை உணர்வதில்லை. நாம், இயற்கை நிகழ்வுகளை, தர்க்கம் என்னும் நம்முடைய அளவுகோலைக்கொண்டு அளக்கிறோம்.

நீங்கள் என்னிடம், "நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? எது சரியான பாதை என்பதை எப்படி உணர்வது? எங்களது தர்மம் எது என்பதை எப்படித் தெரிந்துகொள்வது.

நாங்கள் க்ஷத்ரியர் என்று முடிவு செய்து கொண்டால், யார் சாகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சண்டையிடவேண்டுமா? நாங்கள் வைச்யர் என எண்ணினால், எங்கள் தர்மப்படி, எவ்வாறு சம்பாதிக்கிறோம் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாமா?" என்று கேட்கலாம்.

நிச்சயமாக இல்லை, கிருஷ்ணர் சுயநலத்தோடு செயல்படுவதைப் பற்றிச் சொல்லவில்லை. பிரபஞ்ச குருவான கிருஷ்ணர், விழிப்புடன் செயல்படுவதைப் பற்றியே சொல்கிறார். "யோகத்தில் ஆழ்ந்து, இறுதிப் பலனின்மேல் உள்ள பற்றை விட்டுவிட்டு, நீ செய்யவேண்டியதைச் செய்" என்கிறார்.

என்ன அழகான ஞானம்! யாகம் என்பது
இணைவது, மனிதனும் தெய்வமும்
ஒன்றிணைவது. இது, நீங்கள் உங்கள்

> கிருஷ்ணர்
> சுயநலத்தோடு
> செயல்படுவதைப் பற்றிச்
> சொல்லவில்லை.
> பிரபஞ்ச குருவான
> கிருஷ்ணர், விழிப்புடன்
> செயல்படுவதைப்
> பற்றியே சொல்கிறார்.

ஆத்மாவை உணர்ந்துகொள்வதைப் பற்றியது; நீங்கள் தெய்வீகமானவர் என்பதை உணர்ந்துகொள்வதைப் பற்றியது. இதுவே விழிப்புணர்வு நிலை, சத்தியத்தின் நிலை, நிகழ்காலத்தின் நிலை; இந்த உணர்வு நிலையில் செயல்படும்பொழுது நீங்கள் சரியான உணர்வு நிலையில் இருப்பீர்கள். இந்த உணர்வோடு நீங்கள் எதிர்பார்ப்புகள் இன்றிச் செயல்படும்போது நீங்கள் சரியானவற்றையும் நேர்மையானவற்றையும் மட்டுமே செயல்படுத்துவீர்கள்.

peacock feather decoration