KAILASA Library/பகவத்கீதை/எல்லோரும் கடவுளின் குழந்தைகளே!Sign in
பகவத்கீதை

எல்லோரும் கடவுளின் குழந்தைகளே!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பைபிளில் ‘ஊதாரி மைந்தன்’ என்று ஒரு அழகான கதை உண்டு.

ஒருவருக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள். தனது சொத்தை இருவருக்கும் பிரித்துக் கொடுக்கிறார். ஒருவர், பணம் கிடைத்ததவுடன் வீட்டைவிட்டு, வெளியேறி அவற்றையெல்லாம் ஊதாரித் தனமாகச் செலவழிக்கிறார். மற்றொருவர், தந்தையோடு இருந்துகொண்டு அவரையும் கவனித்து க்கொண்டு சொத்தையும் பாதுகாக்கிறார்.

சில வருடங்களுக்குப் பிறகு, வெளியில் சென்ற மகன் பொருள் எல்லாவற்றையும் இழந்து திரும்புகிறார். தகப்பன் அவரை அன்புடன் வரவேற்கிறார். கொழுத்த ஆட்டை வெட்டி அவருக்கு விருந்து வைத்து, அவருடைய வரவைக் கொண்டாடுகிறார்.

இதனையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு மகனுக்கு,

தந்தையின் இந்தச் செய்கை மிகுந்த வேதனை
அளிப்பதாக இருந்தது. அவர் தந்தையிடம்
இதனைப் பற்றிய தனது வருத்தத்தைத்
தெரிவிக்கிறார். அதற்குத் தந்தை "நீ
என்னுடனேயே இருக்கிறாய், நீ எப்போதும்
என் அன்பை அனுபவிக்க முடியும்; ஆனால்
இந்த மகனுக்கு என்னுடைய கவனம்
தேவைப்படுகிறது," என்கிறார்.

ஆழமாக இந்தக் கதையை நீங்கள் பார்த்தால்,
தந்தை, ஸத்யத்தின் அனுபவத்தின்படி
செயல்படுகிறார். மகன், எதிர்பார்ப்பின்படி
செயல்படுகிறார் என்பது புரியும்.

இந்த மகன், தாம்தான் மிகவும் நல்லவர் என்றும், அதனால் தம்மைத்தான் தந்தை பாராட்ட வேண்டுமென்றும் அந்த ஊதாரி மகனுக்குத் தண்டனை தரவேண்டும் என எண்ணுகிறார்.

படத்தில் முதியவரும் இளைஞரும் கட்டித் தழுவிய காட்சி

நாம் அனைவருமே ஊதாரி மைந்தர்கள்தான். நாம் கடவுள் என்றழைக்கும் இந்த ப்ரபஞ்ச சக்தி நம் தகுதிக்குத் தகுந்தாற்போல்தான் நம்மை நடத்த வேண்டுமென்று நாம் எதிர்பார்த்தோமானால், நாம் எல்லோருமே நஷ்டமடைந்தவர்களாகத்தான் இருப்போம். சமய போதகர்கள் உறுதிபடுத்துவது போல், நாம் அனைவரும் நரகத்திலேதான் இருப்போம்.

இங்கே கிருஷ்ணர் இயற்கையின் விதியைப் பற்றிச் சொல்கிறார்: இயற்கை வெறுமனே இருக்கிறது. இயற்கை நேர்மையாகச் செயல்படுகிறது. இயற்கை வெற்றி, தோல்விகளைப் பற்றி எண்ணுவதே இல்லை. இயற்கை வெகுமதிகளை எதிர்பார்ப்பதுமில்லை. தண்டனைகளைப் பற்றித் கவலைப்படுவதுமில்லை.

புல்லாங்குழல் வாசிக்கும் கைகள்