செயல்படுங்கள்,
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பலனை எதிர்பார்க்காதீர்கள்
உனக்குக் கர்மங்களை ஆற்றுவதில்தான் பொறுப்பு உண்டு.
அவற்றின் பலன்களில் ஒருகாலும் உரிமையில்லை. பலன்களே
உன் நோக்கமாக இருக்கக் கூடாது; இதற்காக நீ செயலற்ற
தன்மையில் விழுந்துவிடவும் கூடாது.
ஓ தனஞ்ஜயா! நீ செய்யவேண்டிய கர்மங்களை, யோகத்தில் மையம்
கொண்டவனாய், பலன்களில் பற்றில்லாமல் செய். வெற்றி
தோல்விகளில் சமநிலையுடையவானாக இரு. ஸமபாவனைதான்
யோகம் என்று சொல்லப்படுகிறது.
பகவத்கீதையின் கருத்துகள் அனைத்தையும் மேற்சொன்ன இரு ஸ்லோகங்களிலும் அடக்கிவிடலாம். பிரபஞ்ச குருவின் செம்மையான புத்திக்கூர்மையே இந்த ஸ்லோகங்களில் வெளிப்படுகின்றன. எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஒருவர் எப்படி வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதற்கு இந்த ஸ்லோகங்களைச் சொல்வது வழக்கம்.
கிருஷ்ணர் இந்தச் சில வார்த்தைகளில் பல விஷயங்களைச் சொல்கிறார். “உனக்குக் கடமை செய்ய உரிமையும் உண்டு, பொறுப்பும் உண்டு. நீ செய்யும் செயலுக்கான பலனில் உனக்கு உரிமையும் கிடையாது, பொறுப்பும் கிடையாது. நீ அதற்கு உரிமை கொண்டாடவும் முடியாது; பொறுப்பேற்கவும் முடியாது.
பலனின் மேல் கருத்தை வைத்து, அதனை ஆசைக்குரிய பொருளாக நினைத்து அதைத் துரத்தவோ அல்லது அதனை வெறுப்புக்குரிய பொருளாக நினைத்து அதை விட்டுப் பயந்து ஓடவோ வேண்டாம். நீ செய்ய வேண்டிய கடமையை ஒருமுனைப்போடு செய்கையில் அது வெற்றிபெறுமா அல்லது தோல்வியுறுமா என்று கவலைப்பட வேண்டாம்.”

ஒருவர் ஏன் ஒரு செயலைச் செய்ய வேண்டும்,
எப்படிச் செயல்படவேண்டும் என்பதைப்
பற்றி இதற்குமேல் அதிகமாக எதுவுமே
சொல்லத் தேவையுமில்லை; சொல்லவும்
முடியாது.
பலர் இந்த ஸ்லோகங்களைத் தவறாகப்
புரிந்துகொண்டு, தவறாகப் பிறரிடம்
சொல்கிறார்கள். முடிவுகள் எதிர்மறையாக
இருக்குமோ என்ற பயத்தில் கடமைகளைச்
செய்யாமலேயே சிலர் இருக்கிறார்கள்.
தங்களுக்கோ மற்றவர்களுக்கோ வரும் முடிவுகள் அனுகூலமாக இருக்கும்வரை தங்களுக்கு இட்ட பணிகளைச் ச்ரத்தையுடன் செய்வார்கள். ஏதாவது கெட்டது நடக்கும் என அவர்களுக்குத் தோன்றினால் என்ன செய்து கொண்டிருந்தாலும் உடனே அதை நிறுத்தி விடுவார்கள்.
சிலர், எந்தச் செயலைச் செய்தாலும் அது ஏதோ ஒரு எதிர்ச்செயலில் போய்த்தான் முடிகிறது, அதனால் எந்தச் செயலையும் செய்யாமல் அதைவிட்டு ஒதுங்கி இருப்பதே சிறந்தது என்று நினைத்துக்கொண்டு, எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருப்பார்கள். எல்லாச் செயல்களும் எதிர்மறையில் முடியும் என்றே கர்மாவைச் சேர்த்து வைத்திருப்பார்கள்.
இந்தக் குறிப்பிட்ட செயலைச் செய்தால் பொன்னும் பொருளும் கிடைக்கும் என்று யாராவது சொன்னால் உடனே அதைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறோம்.
கிருஷ்ணர், "நிறுத்து, உன்னை யாரென்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நீ இங்கு என் பணியைச் செய்யவே இருக்கிறாய். எனக்குச் சொந்தமான பலன்களை எடுத்துச் செல்ல உனக்கு உரிமை கிடையாது," என்று சொல்கிறார். இங்கே கிருஷ்ணரின் நிலை, தம் நிலத்தில் பணிபுரிவதற்கென பல ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தியிருக்கும் ஒரு நில உரிமையாளரின் நிலையைப் போன்றதே.
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குத் தங்கள் கூலியைத் தவிர வேறு எந்த உரிமையும் கிடையாது. நிலம் நன்கு விளைகிறதா, இல்லையா என அவர்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. நிலத்தைப் பராமரிக்கும் தங்கள் கடமைகளைச் செய்தாலே போதும். நில உரிமையாளரே அதன் பலனை அனுபவிக்கக்கூடிய உரிமையாளர்.
இங்கே கிருஷ்ணர் என்ன சொல்கிறாரோ,
அதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அதைப்
பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பதே நாம்
அன்றாடம் காணும் பிரச்சினைகளுக்குத்
தீர்வு. நீங்கள் செய்யும் செயலின் பலனைப்
பற்றிய கவலையில்லாமல் செயலைச்
செய்யுங்கள்.
பரிசுகள் கிடைக்கும் என எண்ணி எந்தச்
செயலையும் செய்யாதீர்கள். அடுத்து
என்ன நிகழுமோ என்ற பயத்தில், செய்கிற
செயலை நிறுத்திவிடாமல் தொடர்ந்து
செய்யவேண்டியதுதான் உங்கள் பொறுப்பு.
> விழிப்புணர்வே
> நாம்
> அன்றாடம் காணும்
> நடைமுறை
> பிரச்சினைகளுக்கான
> தீர்வு.
கூட்டு வாழ்வில், பலனை எண்ணி மட்டுமே நம்மில் பெரும்பாலானோர் இருக்கிறோம். பயனுள்ளதாக இருக்கும் என எண்ணினால் மட்டுமே, நாம் எந்த ஒரு செயலையுமே செய்கிறோம். நாம் செயலை ஆரம்பிக்கும் முன்னரே பலனில் நாம் மாட்டிக்கொள்கிறோம். பிறகு, நல்ல பலன் எது என்று எப்படித் தீர்மானிப்பது, அது யாருக்கு நல்ல பலனைக் கொடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும்?
பெரும்பாலான சமயங்களில், கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம், நமக்கு பலன்களைத் தரக்கூடிய செயல்களை மட்டுமே நல்ல செயல்கள் என்று சொல்லிக்கொள்கிறோம். சிலசமயம் நாம் பணிபுரியும் நிறுவனங்களுக்குப் பயனளிக்கக்கூடிய செயல்களையும் நாம் செய்வது உண்டு. ஆனால் அதுகூட, நம் செயல்கள் பாராட்டப்படும், அதற்குரிய பரிசுகள் நமக்கு அளிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பினால் மட்டுமே செய்யப்படுகின்றன.
இதை நாம் சிறு வயதிலேயே கற்றுக்கொள்கிறோம். "இதைச் செய்தால் உனக்கு வெகுமதி, அதைச் செய்தால் உனக்குத் தண்டனை," எனப் பெற்றோரும் பெரியோரும் நமக்குக் கற்பித்திருக்கிறார்கள். எது நமக்கு நல்லது, எது தீயது, எது வெற்றியாக இருக்கும் எது தோல்வியைத் தரும் என்பன போன்ற கட்டுறுமனப்பாங்குகளுடன் வளர்க்கப்படுகிறோம். வெற்றி, தோல்வி இரண்டுமே எதிர்பார்க்கப்படும் வெகுமதியையோ அல்லது தண்டனையையோ சார்ந்தள்ளன.
> நீங்கள்
> ஒன்றைச் செய்வதாகச்
> சொல்லிவிட்டு,
> மற்றொன்றைச்
> செய்யும்போது நீங்கள்
> உங்கள் ஆத்மாவுக்கும்
> உங்கள் சக்திக்கும்
> உண்மையானவராக
> இல்லை.
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் சக்தி
பேராசை மற்றும் பயம் என்னும் கோட்பாட்டின்படி செயல்படும் சமுதாயம், அது விரும்பாத எந்த ஒரு செயலையும் நம்மைச் செய்ய விடுவதில்லை. மதங்களும் இதையே செய்கின்றன. சமுதாயம் உங்களை இங்கேயே உடனேயே சட்ட ரீதியான தண்டனை என பயமுறுத்துகிறது. மதம், நரகத்தில் தண்டனை எனப் பயமுறுத்துகிறது.
நரகம் மற்றும் சொர்க்கம் என்றால் என்ன? அவை இருக்கின்றனவா?
இல்லை! அவை இல்லவே இல்லை. அவை கோயில் குருக்கள் மற்றும் மதபோதகர்கள் மனத்தில்தான் இருக்கின்றன. அதை நம்முள் செலுத்தி நம்மைக் கட்டுப்படுத்துகிறார்கள். உண்மையில் இவர்களே மக்களைத் தவறான பாதைக்கு இட்டுச் சென்று நரகத்தின் சூழலை உருவாக்குகிறார்கள்.
நீங்கள் ஒன்றைச் செய்வதாகச் சொல்லிவிட்டு, மற்றொன்றைச் செய்யும்போது நீங்கள் உங்கள் ஆத்மாவுக்கும் உங்கள் சக்திக்கும் உண்மையானவராக இல்லை. நீங்கள் சொல்கிற படி, நீங்கள் நடப்பதே இல்லை. ஆசார்ய என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தைக்கு உண்மையான ஆசிரியர் என்று பொருள். ஆசார்ய என்ற வார்த்தைக்கு, 'மாணவருடன் கூடவே செல்பவர்' அல்லது 'தாம் சொல்கிற கருத்துகளின் வழியிலே நடப்பவர்' ‘தம்முடைய வார்த்தைகளின் சொரூபமாகவே வாழ்பவர்’ என்றே பொருள்.
நமது தியானபீடத்தில் ஆச்சாரியர்களை நியமிக்கும்போது அவர்களிடம் ஒன்றே ஒன்று மட்டும்தான் சொல்வேன்: “நீங்கள் பேசுவது போன்றே செயல்படுங்கள்.”
நீங்கள் பேசுவது போன்றே நடந்தால், உங்களுக்குப் பிரச்சினையே தோன்றாது. நீங்கள் பேசுவதே பொய் என்றால், உங்களுடைய செயலும் பொய்யே! இவை எல்லாமே, சத்தியத்தையும் உங்கள் விழிப்புணர்வையும் நிகழ்கால நொடியில் இருப்பதைப் பற்றி மட்டுமே குறிக்கின்றன. இவை எல்லாமே ஏன் வலியுறுத்தப்படுகின்றன என்றால், நீங்கள் ஸத்யம் பேசுபவராகவும் விழிப்புணர்வுள்ளவராகவும் நிகழ்காலத்தில் வாழ்பவராகவும் இருக்க வேண்டுமென்பதற்காகத்தான்.
நீங்கள் பிரச்சாரம் செய்யும் அனைத்தும் உங்களின் விழிப்புணர்விலிருந்து, உங்களுடைய சொந்த ஸத்யத்தின் அனுபவத்திலிருந்து மலர்ந்ததாய் இருக்க வேண்டும். நீங்களும் அந்த விழிப்புணர்வுக்கும், ஸத்ய அனுபவத்திற்கும் ஏற்றாற்போல் செயல்பட்டால், பிறகு உங்கள் எண்ணம், சொல், செயலிலே எவ்வித மாறுபாடும் இராது. எல்லாமே சத்தியமாகவே இருக்கும்.