KAILASA Library/பகவத்கீதை/அரைகுறை அறிவு அறியாமையைவிட ஆபத்தானதுSign in
பகவத்கீதை

அரைகுறை அறிவு அறியாமையைவிட ஆபத்தானது

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna with flute

கேள்வி: ஸ்வாமிஜி, கிருஷ்ணர் ஜகத்குரு, பிரபஞ்ச நாயகன் என்றால் பாண்டவ, கௌரவ இளவரசர்களோடு மட்டுமே ஏன் உள்ளார்? உலகை ஏன் காக்கவில்லை?

மீண்டும் மீண்டும் கிருஷ்ணர் இப்புவிக்கு வந்துகொண்டுதான் இருக்கிறார். ஆனால் அவர் இப்பொழுதெல்லாம் தனது மயில்பீலியை எடுத்து வராமல் வெறுமனே வந்து விடுகிறார்! மீண்டும் மீண்டும் வருவேன் என உறுதியாக நமக்குச் சொன்ன ஒரே குரு கிருஷ்ணரே.

"நல்லதைக் காக்கவும், தீயதை அழிக்கவும் தர்மத்தை நிலைநிறுத்தவும் நான் மீண்டும் மீண்டும் அவதரித்துக்கொண்டே இருப்பேன்."

கிருஷ்ணன் எப்பொழுதும் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொண்டுதான் இருக்கிறார். அவரை உணர, உங்களுக்குத் தேவைப்படுவது சிறிய மலர்ச்சி மட்டுமே! நீங்கள் உங்கள் இதயத்தைத் திறந்து வைத்தால்போதும், அவரை உணர முடியும்! அவர் இங்கு இல்லை என மட்டும் நினைக்காதீர்கள்.

இராமகிருஷ்ணர்

இராமகிருஷ்ணரிடம் சில பக்தர்கள்,
"நாங்கள் சைதன்யர் வாழ்ந்த காலத்தில்
வாழ்ந்திருந்தால், நாங்களும் தெய்வீக
அன்பைப் பெற்றிருக்கலாம்,"
என்றார்கள். உடனே இராமகிருஷ்ணர்,
"சைதன்யர் அருகில் அமர்ந்திருந்த
சிலர், கிருஷ்ணர் வாழ்ந்த காலத்தில்
நாங்கள் வாழவில்லையே என்று
குறைப்பட்டுக்கொண்டார்கள்!" என
பதிலளித்தார்.

இதே மக்கள்தான் இரமண மஹரிஷியிடம் சென்று "தங்களால் இராமகிருஷ்ணரைக் காணமுடியவில்லையே," என்று சொன்னார்கள். இப்போது இங்கு இருக்கும் சிலரும் "இரமணரைப் பார்க்கும் பாக்கியத்தை நாங்கள் இழந்துவிட்டோம்," என்று சொல்கிறார்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், சிறிது திறந்த மனத்துடனும் ஸூக்ஷ்மமான உணர்வு நிலையுடனும் இருப்பதே! அப்படி இருக்க முடிந்தால் இங்கேயே இப்பொழுதே கிருஷ்ணரின் குழலோசையை உங்களால் கேட்க முடியும். உங்களுக்குக் கேட்கவில்லையென்றால் நீங்கள் அதை இழந்து கொண்டிருக்கிறீர்கள், அவ்வளவுதான். ஆனால் கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் தோன்றி தம் வாக்குறுதியை நிறைவேற்றுகிறார். இன்னும் சிறிது அதிகமான திறந்த உணர்வுடன் இருந்தால், நீங்கள் எங்கிருந்தாலும் அவரை உணர முடியும்.

கிருஷ்ணர் உங்களுக்குக்
கீதையைக் கொடுத்துத்
தம் பணியைச்
செய்துவிட்டார்.
இனிமேல்
நீங்கள்தான்
அமர்ந்து
கவனிக்க வேண்டும்.
இது உங்களைப்
பொறுத்தவிஷயம்.

கிருஷ்ணரின் கீதை பாண்டவ கௌரவ இளவரசர்களுக்காக மட்டுமல்ல; அது ஒவ்வொரு தனிமனிதருக்குமானது! சாதாரண தனிமனிதரும் தாமும் இந்தப் பிரபஞ்ச சக்தியின் பகுதியே என்பதை உணரவே கிருஷ்ணர் இதைத் தெரிவிக்கிறார். கிருஷ்ணர் உங்களுக்குக் கீதையைக் கொடுத்துத் தம் பணியைச் செய்துவிட்டார். காலம் இடம் தாண்டி அகில உலகிற்கும் உதவுவதே அவர் ஆசை. இனிமேல் நீங்கள்தான் அமர்ந்து கவனிக்க வேண்டும். இது உங்களைப் பொறுத்தவிஷயம்.

இங்கு அமர்ந்துகொண்டு, "கீதையில் எனக்கு என்ன இருக்கிறது," என குறை சொல்லிக்கொண்டோ அல்லது வியந்து கொண்டோ இருக்க வேண்டாம். "உங்கள் மனத்தைத் திறந்து உள்வாங்கிக்கொள்ளுங்கள். நீங்கள் உயர்த்தப்படுவீர்கள்." குரு உங்களுக்குக் கொடுக்கும் வாக்குறுதி இதுவே .

கேள்வி: கிருஷ்ணர் தானே வேதமாக இருக்கும்போது அவரே வேதங்கள் பயனற்றவை எனச் சொல்லலாமா?

இங்கே கிருஷ்ணர், கற்பதால் பெறும் வெறும் பட்டறிவையும் அனுபவ அறிவையும் வேறுபடுத்துகிறார். வேதமும் ஸாங்க்யமும் சொல்கிற ஞானக் கருத்துகளை மட்டுமே அர்ஜுனனும் மற்ற மனித குலமும் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதை அனுபவ ஞானமாக மாற்றவில்லை என்பதையும் கிருஷ்ணர் இங்கே குறிப்பிடுகிறார்.

நான் முன்பே சொன்னதுபோல அனுபவ
ஸத்யம், ஒருமுறை வெளிப்படையாகச்
சொல்லப்பட்ட உடனேயே அது அனுபவ
ஸத்யமாக நிலைத்து இருப்பதில்லை. கற்ற
ஞானம் உங்களது ஸத்யமாக ஆக முடியாது.
இது வேறு ஒருவரின் ஸத்யம். உங்களுடையது
இல்லை.

துரியோதனன், குரு துரோணரின்
கவசத்தைக் எப்படிக் கடனாகப் பெற்றார் என
மஹாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஜயத்ரதன், அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை கொன்று விடுகிறார். அர்ஜுனனும் ஜயத்ரதனை அடுத்த நாள் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன் கொல்வதாகச் சபதம் ஏற்கிறார். தம் சபதத்தை நிறைவேற்றுவதற்காக அடுத்தநாள் அர்ஜுனன் கோபாவேசமாகப் போரிடுகிறார். அதைத் தாங்கமாட்டாமல் துரியோதனன், படைத்தலைவரான துரோணரிடம் புலம்புகிறார்.

துரோணர், தமக்கும் ஜயத்ரதனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருப்பதால், தமது மாயக்கவசத்தைத் துரியோதனனுக்கு வழங்கி அர்ஜுனன் செய்யும் பேரழிவைத் தடுக்கச்சொல்கிறார்.

அர்ஜுனன், தமது சக்தி வாய்ந்த காண்டீவத்தால் அம்புகளைத் துரியோதனன் மீது பொழிந்தாலும் அது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. இதைப்பார்த்த அர்ஜுனனுக்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்பது புரிந்து விட்டது. துரியோதனனின் தேர்க்குதிரைகளை வீழ்த்தி, துரியோதனனைத் தரையில் நிற்கச் செய்து, அவரின் கவசமில்லாத உடல் பகுதிகளை அம்புகளால் துளைத்தெடுத்து, அவரைப் போர்க்களத்தை விட்டு ஓடச் செய்கிறார்.

பிறரிடமிருந்து பெற்ற கவசம் போலவே பிறரிடமிருந்து பெற்ற அறிவும் பயனற்றதே. சொல்லப் போனால் இது இன்னும் அபாயகரமானது. இது அஹங்காரத்தைத் தூண்டிவிட்டுச் சுய அழிவிற்கு வழி வகுக்கக்கூடியதாக இருக்கிறது.

> தெய்வீக தன்மையின்
> ஒருமையை
> உணர்ந்தவர்களுக்கு,
> சங்கரருடைய
> கோட்பாடுகளுக்கும்
> இராமானுஜருடைய
> கோட்பாடுகளுக்கும்
> இடையே எந்த
> ஒரு வேறுபாடும்
> தெரிவதில்லை.

இதுதான், பல தத்துவ ஞானிகளுக்கும் சமய
சொற்பொழிவாளர்களுக்கும் நிகழ்ந்துள்ளது.
வேத நூல்களைப் படித்துவிட்டு,
அதை வெறுமனே மேலோட்டமாகப்
புரிந்துகொள்ளும் இவர்கள், அந்த
அனுபவங்களை அனுபவித்து
வெளிப்படுத்திய ஞானிகளின் சக்திகளைப்
போன்றே தாங்களும் சக்திகளைப்
பெற்றுவிட்டதாக நம்பிக்கொள்கிறார்கள்.
வேதாந்தம், ஸாங்க்ய, மற்றும் மீமாம்ஸா
முதலியவற்றை அனுபவப்பூர்வமாக உணர்ந்த
மேதைகளாகத் தங்களை கருதிக்கொண்டு,
தாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை
உணராமலேயே வாதிட்டுக் கொண்டிருப்பார்கள்.

தெய்வீக தன்மையின் ஒருமையை உணர்ந்தவர்களுக்கு, சங்கரருடைய கோட்பாடுகளுக்கும் இராமனுஜருடைய கோட்பாடுகளுக்கும் இடையே எந்த ஒரு வேறுபாடும் தெரிவதில்லை. அதில் எந்தப் பாகுபாடும் இல்லை, செயல்படும் முறை மட்டுமே மாறுபட்டது என்பதையும் அவர்கள் உணர்கிறார்கள்.

ஒரு சின்ன கதை

ஒரு புத்தகக் கடையில், கீதைக்கு சங்கரர் எழுதிய விளக்கவுரையும், இராமானுஜரும் எழுதிய விளக்க உரையும் வைக்கப்பட்டிருந்தன. அறிஞர் ஒருவர் புத்தகக் கடைக்காரரிடம் சென்று, “உங்களிடம் இராமானுஜரின் உரையும் சங்கரரின் உரையும் இருக்கின்றன இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம்,"' எனக் கேட்டார்.

"'ஓ அதுவா? ஒரு டாலர்,'' என புத்தகக் கடைக்காரர் பதிலளித்தார். ஒரு டாலர் மட்டுமே வித்தியாசம், அவ்வளவுதான்.

அதுவே வித்தியாசம். ஏதோ நமக்கு எல்லாம் தெரிந்ததுபோலவும் வித்தியாசங்களை உணரக்கூடிய ஞானம் இருப்பதுபோலவும் நாம் பேசத் தேவையில்லை. சங்கரர் ஜ்ஞானத்தில் திளைத்துள்ளதாகவும் இராமானுஜர் பக்தியில் திளைத்துள்ளதாகவும் நீங்கள் சொல்லலாம்.

ஆனால் சங்கரர் தேவியை வர்ணித்துப் பாடியிருக்கும் ஸௌந்தர்ய லஹரியில் வெளிப்பட்டிருக்கும் சங்கரருடைய பக்தியைப் போன்றதொரு பக்தியை, இராமானுஜருடைய ஸ்தோத்ரங்களிலோ அல்லது வேறு எவருடைய பக்தி இலக்கியங்களிலோ நீங்கள் பார்க்க முடியாது. அதே நேரத்தில் ராமானுஜரின் விளக்க உரைகள், சங்கரருடையதைப் போன்றே தர்க்க ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.

ஞானம் பெற்ற குருவின் அனுபவம் எப்பொழுதும் முழுமையாக இருக்கும். அதில் பக்தி, ஜ்ஞானம், தவம் என்ற வேறுபாடே கிடையாது. அவை அனைத்தும் நிறைவின் பாதைகளே. அவை ஒரே குறிக்கோளை நோக்கியே அழைத்துச் செல்கின்றன.

கிருஷ்ணர் அர்ஜுனனை வேதங்கள் சொல்கிற மூன்று பண்புகளையும் கடந்து செல்லுமாறு சொல்கிறார். புனித நூல்களும்கூட ஸத்வ குணத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு துறவியைப் போன்ற சமநிலையான மனப்பான்மையை அடைய வேண்டுமானால், அர்ஜுனன் இந்த முக்குணங்களையும், விருப்பு வெறுப்புகளையும் கடந்து செல்ல வேண்டுமென்று வலியுறுத்துகிறார். அந்நிலையில் ஆற்றில் அமர்ந்திருக்கும் ஒருவருக்கு மற்ற நீர்கள் எப்படித் தேவைப்படுவதில்லையோ, அதேபோல் வேதத்தால் பெற்ற அறிவும் ஒருவருக்குத் தேவைப்படுவதில்லை.

கிருஷ்ணர் அறிவை இழிவுபடுத்தவில்லை. வேத நூல்களைக் குறைசொல்லவில்லை.

வேதங்கள் மற்றும் ஸாங்க்யம் தந்த ஞானத்தைக் கடந்து அனுபவ ஞானமான யோகத்தைப் பெறச் சொல்கிறார். இங்கே கிருஷ்ணர் குறிப்பிடுவது ‘ஒன்றாய் இணைத்தல்’ என்ற பெயர்ச்சொல்லை அல்ல, ‘இணைதல்’ எனும் செயல்முறையையே குறிப்பிடுகிறார்.

யோகம் என்றால் ‘ஒன்றாய் இணைத்தல்’ (Union) என்றே மொழிபெயர்க்கப்படுகிறது. எவ்வளவு காலம் இதே போன்று இதை அழைக்கிறீர்களோ, அதுவரை நீங்கள் இந்த வேத விஞ்ஞானத்தால், இந்தக் கலையால் பெறப்படும் அறிவைப் பற்றிப் பேசிக்கொண்டு மட்டுமே இருக்கிறீர்கள். நீங்கள் இதைப் பயிற்சி செய்யும்போது மட்டுமே, இது ‘இணைதல்’ (Uniting) ஆகிறது. இதைத்தான் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார்.

நீர், கடலில் இருக்கும் நீரோடு கலக்கும்போது அதில் வேறுபாடு இருக்காது. அதற்கென தனிக்குணம் இருக்காது. அது எங்கிருந்து தோன்றியதோ அதிலேயே கலந்துவிடுகிறது.

அது தனித்திருப்பதாக நினைத்தால், தன்னுடைய தனித் தன்மையை விடாது பிடித்துக் கொண்டிருந்தால், அது எங்கிருந்து தோன்றியது என்பது அதற்குத் தெரிந்தாலும்கூட, அது தனித்தே இருக்கும். அது தன் தனித் தன்மையை விட்டுவிட வேண்டும். இந்த அடையாளத்தை விடுவது பட்டறிவுப்பூர்வமாகவோ, அறிவுப்பூர்வமாகவோ இயலாது. இது இருப்பிலிருந்து தோன்றவேண்டும்; அனுபவப்பூர்வமாக உணரப்பட வேண்டும்.

கேள்வி: இதுவரை அர்ஜுனனுக்குக் கற்பிக்கப்பட்டது ஸாங்க்ய அறிவு எனக் கிருஷ்ணர் சொல்கிறார். அவர் இனி அர்ஜுனனை யோகத்தின் வழியாக அழைத்துச் செல்ல விரும்புவதாகச் சொல்கிறார். இந்த இரண்டிற்கும் என்ன வேறுபாடு?

அர்ஜுன விஷாத யோகத்தில், அர்ஜுனன், வேத நூல்களில் இருந்து நிறைய மேற்கோள்கள் காட்டிப் பேசுகிறார். தனது உறவினர்களைக் கொன்றால் குருவம்சமே அழிந்துவிடும்; இந்த அழிவு சமுதாயத் தீமைகளைத் தோற்றுவிக்கும்; சமுதாயத் தீங்குகள் குடும்பத்தைப் பிரிக்கும்; பெண்கள் நெறிகெட்டுப் போவார்கள்; இது பண்பாட்டுச் சீரழிவிற்கு வழிவகுக்கும்; இந்தப் பண்பாட்டுச் சீரழிவினால் முன்னோர்களுக்குச் செய்யும் சடங்குகளில் இருந்து விலகுவார்கள்; முடிவில் அழிவே மிஞ்சும். தம் எதிரிகளுடன் போரிட்டால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி, அர்ஜுனன் கொண்டிருக்கும் புரிந்துகொள்ளுதலின் சாராம்சம் இதுதான்.

அர்ஜுனன், தமக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட வேத நூல்களை தாம் எப்படிப் புரிந்து கொண்டாரோ, அந்தவிதத்தில் அவற்றை மேற்கோள்காட்டினார். இவையெல்லாவற்றையும் கிருஷ்ணர் ஸாங்க்ய என்கிறார். இங்கே ஸாங்க்யம் என்பது கபிலமுனி தோற்றுவித்த ஸாங்க்ய தத்துவத்தை மட்டுமல்லாது, எல்லா வேத நூலறிவையும் சேர்த்தே குறிக்கிறது.

நான் முன்பே சொன்னதுபோல், இந்த அறிவை, கிருஷ்ணர் குறைத்துப் பேசவில்லை. ஆனால் அனுபவம் இல்லாத ஞானம் அபாயகரமானது என்பதை அவர் ஆணித்தரமாகச் சொல்கிறார். அவர் அர்ஜுனனை அறிவிலிருந்து அனுபவத்திற்கு அதாவது ஸாங்க்யத்திலிருந்து யோகத்திற்கு அழைத்துச் செல்லப்போவதாகச் சொல்கிறார்.

எல்லா வேத கலாச்சாரங்களும் ஞானம் பெற்ற ஜீவனின் அனுபவத்தால் தோன்றியதே. ஆனால் அது, அந்த அனுபவம் இல்லாதவர்களால் மற்றவர்களுக்கு உரைக்கப்பட்டபோது, நீர்த்துப் போய், சீரழிய ஆரம்பித்தது.

பெரும்பான்மையோர், இப்புனிதநூல்களை அறிவின் ஸ்தூல அடுக்கிலேயே உணர்கிறார்கள். அவற்றைப் புரிந்துகொள்ள மேலும் பல அடுக்குகள் இருக்கின்றன.

உதாரணமாக, இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஸாங்க்யம் என்பதைப் பற்றி வேதங்கள் சொல்லும் பல்வேறு கருத்துக்களைப் பற்றி மட்டுமே, நடைமுறைக்கு ஒத்துவbuilderக்கூடிய தீர்மானத்திற்கு வராமல், முடிவில்லா வாக்குவாதம் நிகழ்த்திக் கொண்டிருக்க முடியும்.

இப்படிப்பட்ட வாதம் எல்லாம்தான்
தத்துவவாதிகளின் அடையாளம்.கிருஷ்ணர்
இந்த வாக்குவாதங்களுக்கு அப்பால் நம்மை
அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறார்.

> ஞானம் பெற்ற
> ஜீவனின்
> அனுபவத்தால்
> தோன்றிய
> கலாச்சாரத்திலிருந்து
> வந்ததே
> வேதநூல்கள்.

Lord Krishna with flute