KAILASA Library/பகவத்கீதை/அறிவை விட்டுவிட்டு அனுபவத்தில் மலருங்கள்Sign in
பகவத்கீதை

அறிவை விட்டுவிட்டு அனுபவத்தில் மலருங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஓ பார்த்தனே! இதுவரை உனக்கு ஸாங்க்ய யோகத்தைப்
(ஞானயோகம்) பற்றிய விஷயங்கள் சொல்லப்பட்டன. இனி
கர்மயோகத்தைப் பற்றிய விஷயங்களைக் கேள். இதைத் தெரிந்து
கொள்வதன் மூலம் கர்ம பந்தத்தை முழுமையாக விலக்கி
விடுவாய்.

இந்தக் கர்மயோகம் வீண்போவதும் இல்லை; ஆபத்தான
விளைவுகளை ஏற்படுத்தப் போவதும் இல்லை. இந்தக் கர்மயோகம்
என்கிற தர்மத்தைச் சிறிதளவு கைக்கொண்டால்கூடபோதும்,
இது மிகப்பெரிய பயத்திலிருந்து காப்பாற்றுகிறது.

குருகுலத்தில் உதித்தவனே, இப்போது உனக்குத் தேவை
ஒருமுகப்பட்ட தீர்மானமான புத்தி ஒன்றே! மன உறுதி இல்லாத
மனிதர்களுடைய புத்தி, பல நோக்கங்களுடையனவாகவும்
முடிவற்றவையாகவும் இருக்கின்றன.

ஓ, பார்த்தா! வேதங்களின் புகழ்ச்சி மிக்க வார்த்தைகளிலேயே
இன்பம் காணும் முட்டாள்கள், “ இதைத்தவிர வேறு
ஒன்றுமில்லை,” என்று சொல்கிறார்கள்.

சொர்க்கம் போன்ற மேல் உலகங்களையும், மேலான பிறப்பு
மற்றும் அதிகாரம் போன்ற இந்தக் கீழ் உலகச் செல்வங்களையும்
அடைவதற்கு உதவுகிற, அதாவது பலன்களை அடிப்படையாகக்
கொண்ட பல்வேறு விதமான செயல்களைப் பற்றிப் பேசுகிற
வேதங்களின் மலர் போன்ற பேச்சுகளில் மிகக்குறைந்த அறிவை
உடைய அறிவிலிகள் பற்றுதல் வைக்கின்றனர். புலன்களின்
ஆசைகளைத் திருப்திபடுத்திக்கொண்டும், செல்வ வளம் மிக்க
வாழ்க்கையினை வாழ்வதும் தவிர, வேறு சிறந்த வாழ்க்கை
இல்லை என்று இவர்கள் சொல்கிறார்கள்.

இவ்வாறு வேறு நோக்கங்களில் மனம் திருப்பப்பட்டவர்களும்,
உறுதியற்றவர்களும் தியானத்திற்கும் ஸமாதி அனுபவத்திற்கும்
தகுதி வாய்ந்தவர்களாக இருப்பதில்லை.

ஓ அர்ஜுனா, வேதங்கள் சொல்கிற முக்குணங்களையும்
கடந்தவனாக இரு; இருமைகளிலிருந்து விடுபட்டவனாய்,
ஸத்வ குணத்தில் நிலைபெற்றவனாய், பொருள் சேர்ப்பது,
அதைக் காப்பாற்றுவது என்கிற எண்ணங்களிலிருந்து
விடுபட்டவனாய், உன்னிலே நிலைகொண்டவனாய் இரு.

ஏற்கெனவே வெள்ளதினால் மூழ்கடிக்கப்பட்ட இடத்தில்
இருக்கும் ஒருவருக்கு கிணற்று நீரினால் என்ன பலனோ, அதே
போலத்தான் தம்மை உணர்ந்து கொண்ட துறவி, வேதங்களினால்
மிகக் குறைந்த பலனே அடைகிறார்.

கிருஷ்ணர் கர்மயோகத்தைப் பற்றி இங்கு விளக்க ஆரம்பிக்கிறார். வேதங்கள் சொல்லும் கருத்துகளின் சாரத்தைப் புரிந்துகொள்ளாமல், அவற்றை வெறுமனே மேம்போக்காகப் புரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் செயல்படும் மனிதர்கள் இந்த ஸ்லோகங்களைக் கவனமாகப் படிக்க வேண்டும்.

கிருஷ்ணர், "வேதங்களை மறந்து விடு," என மிகத் தெளிவாகச் சொல்கிறார்.

"நாலாப் பக்கங்களிலும் எங்கும் வெள்ள நீர் நிறைந்திருக்கிறபோது, கிணற்று நீர் ஒருவருக்கு எந்த அளவுக்குப் பயன்படுமோ, அந்த அளவுக்கு மட்டுமே தம்மை உணர்ந்த ஒரு ஞானிக்கு வேதங்களில் இருக்கும் ஞானம் பயன்படுகிறது.

வேதங்கள் முக்குணங்களான ஸத்வ, ரஜஸ், தமஸ்- அமைதி, போராட்டம் மற்றும் சோம்பேறித்தனம் ஆகியவற்றைக் குறித்து மட்டுமே பேசுகின்றன; அதன் எல்லை அதோடு முடிந்துவிட்டது. ஆனால் இப்போது இந்த முக்குணங்களையும் தாண்டிச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது; குறைந்தபட்சம் ரஜஸிலிருந்து அமைதியான ஸத்வ குணத்திற்காகவாது மாறவேண்டும்.

"வேதங்கள் என்ன சொல்கின்றன என்பதைப்
பற்றி என்னிடமே சொல்லாதே"
என்கிறார் கிருஷ்ணர். "தேவதைகளையும்
முன்னோர்களையும் மகிழ்விக்கச்செய்து,
அதன் மூலம் இந்தப் பிறவியில் பொருள்
சார்ந்தப் பலன்களையும் சில பிறவிகளுக்குப்
பிறகு ஆன்மிக பலன்களையும் அடைவதற்கு,
நீ எந்தச் சடங்கு சம்பிரதாயங்களைச் செய்ய
வேண்டும் அல்லது எவற்றையெல்லாம்
செய்யக் கூடாது என்பது பற்றி என்னிடம்
சொல்ல வேண்டாம்.

இப்போது இந்த
முக்குணங்களையும்
தாண்டிச்செல்ல
வேண்டிய
நேரம் வந்துவிட்டது;
குறைந்தபட்சம்
ரஜஸிலிருந்து
அமைதியான
ஸத்வ குணத்திற்காகவாது
மாறவேண்டும்.

இவை, தம் ஆத்மாவை ஓரளவுக்கே உணர்ந்தவர்களுக்கும் சத்தியத்தை உணராதவர்களுக்கும் மட்டுமே பயன்படுகின்றன. இவர்கள், புலன் இன்பங்களை நிறைவேற்றுவதற்காகவும் பேர், புகழை அடைவதற்காகவும் பல்வேறு விதமான ஆசைகளை வளர்த்துக்கொண்டு, அவற்றிற்குப் பின் அலைந்து கொண்டிருப்பவர்களே!

"அவர்களைக் கடந்து செல், நிலைத்த, ஒருமுகப்படுத்தப்பட்ட மனத்துடன் நான் கற்றுத்தரும் யோகத்தை நோக்கி வா! படைத்தல், காத்தல், அழித்தல் இவற்றைப் பற்றிய நினைவுகளே இல்லாத ஒருநிலையில் நீ உறுதியாக நில்! நீ இவற்றைக் கடந்து பர ப்ரஹ்ம நிலையை அடைந்து விடுவாய்" என்று கிருஷ்ணர் விளக்குகிறார்.

குரு மட்டுமே, ஜகத் குரு, பிரபஞ்ச குரு
மட்டுமே இதைச் சொல்ல முடியும். அவற்றை
விட்டு விலகிவரவும் முடியும்! கிருஷ்ணர்,
இந்த வார்த்தைகளை உரிமையுடன்,
அதிகாரத்துடன் வலியுறுத்திச் சொல்கிறார்.
ஸத்யத்தின் சாரத்தை அர்ஜுனனின் மனத்தில்
ஆழமாய்ப் பதிக்க கிருஷ்ணர் தெய்வீகத்தால்
சொல்லப்பட்ட வேதங்களைப் புறக்கணிக்கிறார்.

வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஸத்யத்தின் சாரமாக இருக்கும் அந்த பர ப்ரஹ்மமே, அந்தத் தெய்வீகமே சொல்லும் ஸத்யங்கள் இவை.

பெரும் ஞானிகளும், ரிஷிகளும் அனுபவித்த அறிவின் தொகுப்பே வேதங்கள். வாய்மொழியாக, வழிவழியாக வந்ததையே ச்'ருதி என்ற சொல் குறிக்கிறது. உண்மையிலேயே இந்த அறிவு அனுபவமாகப் பெற்ற அறிவே.

ச்'ருதி என்ற வார்த்தையின் உண்மையான பொருளே – 'உள் முகமாகக் கேட்கப்பட்டது' என்பதுதான்; பிறர் சொல்லிக் கேட்கப்பட்டது அல்ல!'அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அந்த வினாடியே, அது அந்த அனுபவத்தின் ஸத்யம் ஆகாது.

எல்லா மேலான ஞானிகளும், ஞானம் அடைந்தவர்களும் இதே நித்யானந்தத்தை, நிரந்தரமான பேரின்பத்தை அடைந்திருப்பார்கள். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக வெளிப்படுத்துவார்கள்.

மஹாவீரர் பேரின்பத்தில் ஆடையின்றி நடந்தார். மஹாவீரருக்கு முற்றும் மாறுதலாக புத்தர் சொன்னார். இருவருமே சமகால இளவரசர்கள். ஒரு குரு போதிக்கும் ஸத்யம் மற்றொரு குரு போதிக்கும் ஸத்யம் போல் இருக்காது; அப்படி இருக்கவும் முடியாது.

குருமார்கள் உடல் அசைவுகள் மூலமும், வார்த்தைகள் மூலமும், நெருங்கிய சீடர்களிடம் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது பலவிதமான கருத்துகள் தோன்றும்.

வேதாந்த, ஸாங்க்ய, மீமாம்ஸ போன்ற மற்ற தத்துவப்பாதைகளும் வேதத்தை ஆதாரமாக வைத்து தோன்றியவையே! கற்றறிந்த சான்றோர்கள் பல தலைமுறைகளாக, இந்த ஸத்யங்களின் மேல் ஆராய்ச்சிகள் செய்து, அதனோடு தாங்கள் கற்றதையும் தங்களுடைய அனுபவங்களையும் சேர்த்தார்கள்.

வேதங்களுக்கும் உபநிஷதங்களுக்கும் கீதைக்கும் ஏழு விதமான ‘புரிதல் நிலைகள்’ இருக்கின்றன. ஒருவர் எந்தச் சக்தி நிலையில் நிலைகொண்டிருக்கிறாரோ, அதைப் பொறுத்தே அவருடைய புரிதலும் நுட்பம் பெறுகிறது. மிக உயர்ந்த நிலையில் எல்லாம் ஒன்றே என ஒருவரால் உணர முடியும். இந்த உயர்ந்த நிலையில் அனுபவம், அனுபவிப்பவர், அனுபவித்தல் என்பதே கிடையாது. ‘எல்லாம் ஒன்றுதான்.’

கிருஷ்ணர் இந்த உயர்ந்த நிலை சத்தியத்தையே இந்த ஸ்லோகங்களில் சொல்கிறார். “வேதங்களை அரைகுறையாகப் படித்துவிட்டு, அதனுடைய உட்பொருளைப் புரிந்துகொள்ளாமல், வெளிப்படையான சடங்குகளை மட்டும் செய்யச் சொல்லும் அரைகுறை பண்டிதர்களின் பேச்சைக் கேட்டு, அந்த வழியில் செல்ல வேண்டாம்,” என்று சொல்கிறார்.

குரு சொல்கிறார், “இருமையைத் தாண்டிச்செல். இவையெல்லாம் மகிழ்ச்சி யைத் தருவதுபோல் தெரியும். ஆனால் இவை தற்காலிகமானவையே! இந்தச் சந்தோஷங்கள் இரு துயரங்களுக்கு இடைப்பட்ட நிகழ்வே! அதையும் தாண்டிச் சென்று நிலையான ஸத்யத்தை, ஐக்கியமான ஒன்றைத் தேடு. இதுவே யோகம்.”

“மேம்போக்கான புரிதலையும் தாண்டி, இங்கே சில விஷயங்கள் இருக்கின்றன. அவை உன்னை உலக இயல்புகளான ஸத்வ, ரஜஸ், மற்றும் தமஸ் இவற்றைத் தாண்டி அழைத்துச் செல்லும். உண்மையான புரிந்துகொள்ளுதலிருந்து மலரும் விடுதலைக்கு இது உன்னை அழைத்துச் செல்லும்.

அந்த இறுதி சக்தியின் நிலையான தன்மையைப் புரிந்து கொண்டபின், படை த்தல், காத்தல், அழித்தல் இந்த மூன்றிற்குமே எந்த ஒரு அர்த்தமுமே இல்லை என்பதைப் புரிந்துகொள்வாய். இந்த நிலையில், நீ படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றையும் கடந்து செல்கிறாய்.

கிருஷ்ணர் இறுதியாக, “உன்னுள் நீ
ப்ரஹ்மனை உணர்ந்தபின், நீ இதுவரை
உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்லிக்

வேதாந்த, ஸாங்க்ய,
மீமாம்ஸ
போன்ற மற்ற
தத்துவப்பாதைகளும்
வேதத்தை
ஆதாரமாக
வைத்து
தோன்றியவையே!

கொண்டிருந்த வேத கருத்துகள் அனைத்தும் கடல் நடுவில் உள்ள ஏரி போன்றது என உணர்வாய்” என்று சொல்கிறார்.

குழந்தைக்கு நடக்கக் கற்றுக் கொடுப்பதுபோல், கிருஷ்ணர் அர்ஜுனனை கையைப் பிடித்துப் படிப்படியாக உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்கிறார். குருவாக இருந்து அர்ஜுனனது வாதங்கள், பயங்கள், தயக்கங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக உடைத்தெறிகிறார்.

இந்தக் குழந்தைத்தனமான நடை, இதுநாள்வரை செயல்பட்டு வந்த அர்ஜுனனின் பட்டறிவையே குறிக்கிறது. அர்ஜுனனின் பட்டறிவு எவ்வளவு குறைபாடு உடையதாக இருக்கிறது என்பதையும் அதன் அர்த்தமற்ற தன்மையையும் அர்ஜுனனுக்குக் கிருஷ்ணர் விளக்குகிறார். இவை அனைத்தும் அடுத்தவரிடமிருந்து கடன்பெற்றதே தவிர, அவருடைய சுய அனுபவங்கள் அல்ல. இப்போது அவரை அனுபவ அறிவுக்குள் அழைத்துச் செல்ல கிருஷ்ணர் விரும்புகிறார்.

கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிப்பது