KAILASA Library/பகவத்கீதை/முதலில் குதியுங்கள், பிறகு யோசியுங்கள்Sign in
பகவத்கீதை

முதலில் குதியுங்கள், பிறகு யோசியுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna with flute

கேள்வி: ஆன்மீகத்தில் வளர வளர ஒருவர்தான் பேசுவதைக் குறைத்து மௌனத்தில் அதிக நேரம் இருக்க விரும்புவது சரி தானா?

ஒரு ஜென் சொல் வழக்கு இருக்கிறது, “நான் த்யானம் செய்யாமல் இருந்த போது ஒரு மரம் மரமாக இருந்தது. ஒரு மலை மலையாக இருந்தது. நான் த்யானம் செய்ய தொடங்கியவுடன், அவை இரண்டும் அவற்றைப் போல் இல்லை. நான் த்யானம் செய்து முடித்து ஞானம் அடைந்தவுடன், மரம் மீண்டும் மரமாக இருந்தது, மலை மலையாக இருந்தது.”

ஆன்மீக ஸாதனைகளில் ஈடுபடும் முன் நீங்கள் அதிகம் பேசுவீர்கள். ஞானம் அடைந்த பிறகும் நீங்கள் அதிகம் பேசலாம். ஆனால் முழுமையான விழிப்புணர்வில் இருந்து பேசுவீர்கள். ஆனால் ஸாதனைகளில் இருக்கும்போது பொதுவாக ஸாதகர்கள் அதிகம் மௌனத்திலேயே இருப்பார்கள்.

இரண்டு பெண்கள் வாக்குவாதம் செய்யும் படம்

ஞானமடைவதற்கு முன், உங்களுக்கு
எல்லாவற்றைப் பற்றியும் ஒரு கருத்து
இருந்தது. அதை வெளிப்படுத்த
வேண்டிய தேவை இருந்தது. உங்கள்
கருத்தை வெளிப்படுத்தவில்லை என்றால்
உங்களுக்குத் திருப்தியிருப்பதில்லை.

உங்கள் கருத்தை உரத்த குரலில், பெரிய பெரிய வார்த்தைகளால் வெளிப்படுத்தாவிட்டால், மற்றவர்கள் உங்களை மதிக்கமாட்டார்கள் என்று நினைத்தீர்கள். வாதம் செய்வதன் மூலம், அவர்களை தாழ்ந்தவர்களாகக் கருத வைத்து, அவர்களை அந்த வாதத்திலிருந்து விலக வைக்கும் நோக்கமும் இருந்தது.

உங்களுடைய ஆன்மீக விழிப்புணர்வு அதிகரிக்க அதிகரிக்க, நான் சொல்லப்போகும் இரண்டில் ஏதாவது ஒன்று நடக்கும் வாய்ப்பிருக்கிறது.

முதலாவதாக, ஆன்மிகப் பயிற்சிகளின் மூலம் உங்கள் சக்தி நிலை அதிகரிக்க அதிகரிக்க, உங்களால் அதிக நேரம் உங்களுக்குள் நிலைபெற முடியும். அதனால் இனிமேலும் ‘நீங்கள் யார்’ என்று மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பதில்லை.

வார்த்தைகள் அதிகத் துக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதையும் உடல் ரீதியாகத் தாக்குவதைவிட, அவை மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்துகொள்வீர்கள்; அதனால் நீங்கள் உங்களுக்குள் தங்கி விடுவீர்கள்; அமைதியாக இருப்பீர்கள்.

ஆன்மிகப்
பயிற்சிகளின் மூலம்
உங்கள்
சக்தி நிலை
அதிகரிக்கும் போது
அதிக நேரம்
உங்களுக்குள்
நீங்கள்
நிலைபெற முடிகிறது.

இரண்டாவதாக, பேசுவதைவிட அமைதியாக
இருப்பதன் மூலமே உங்களால் அதிகமான
தகவல்களை, இன்னும் சிறப்பாகவே
பரிமாறிக்கொள்ள முடியும் என்பதை
நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அதனால்
இப்போது பேசுவதற்கான தேவையே
குறைந்து விடுகிறது. இந்த இரண்டில் எது
காரணமாக இருந்தாலும் சரி, மௌனம் தலை
சிறந்ததுதான்.

கேள்வி: கிருஷ்ணர் அர்ஜுனனைத் தொடர்ந்து க்ஷத்ரியன் என்று அழைக்கிறார். அவரைப் போர்

புரியும்படி தூண்டுகிறார். இப்பொழுதும் கிருஷ்ணர் வன்முறையாளர் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

இதைப் பற்றிக் கொஞ்சம் ஏற்கனவே பேசியிருக்கிறேன். இப்பொழுது இன்னும் தெளிவாக நான் இதை விளக்குகிறேன்.

முதலில் அஹிம்ஸை என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். ‘நான்’, ‘எனது’ என்று நீங்கள் சொன்னவுடனேயே, அங்கு வன்முறை தோன்றி விடுகிறது. நீங்கள் வன்முறையாளர் ஆகி விடுகிறீர்கள். முதலில் நாம் எப்படிப்பட்ட மனிதர்களாக இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வோம். நாம் பட்டறிவானவர்களாக, இதயப்பூர்வமானவர்களாக அல்லது இருப்பு நிலையில் மையம் கொண்ட மனிதர்களாக இருக்க முடியும்.

‘நான்’, ‘எனது’
என்று நீங்கள்
சொன்னவுடனேயே
அங்கு
வன்முறை தோன்றி
விடுகிறது.

நம் வாழ்வில் இந்த மூன்று குணாதிசயங்களைப்
பல நிலைகளில் அனுபவித்திருப்போம்.
நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை
எப்படித் தெரிந்துகொள்வது? இந்தக்
கேள்வியை நீங்கள் கேட்கிறபொழுதே
தெரிந்துகொள்ளலாம் நீங்கள்
பட்டறிவானவர் என்று. இதயப்பூர்வமான
மனிதர்களுக்கு இந்தக் கேள்வி வருவதே
இல்லை. இருப்பு நிலையில் மையம் கொண்ட
மனிதர்களுக்கு, இது ஒரு சந்தேகமாகக்கூட
இருக்காது.

திருமணம் செய்துகொள்வதற்கு முன்னால் நீங்கள் பட்டறிவானவராக இருக்கலாம். இன்று இந்தியாவில் இருக்கும் இளம் தலைமுறையினரை, உதாரணத்திற்கு ஒரு கல்லூரி மாணவரை எடுத்துக்கொள்வோம். இந்த இளைஞர் யாருக்கும் தலை வணங்குவதில்லை, காலில் விழுந்து நமஸ்கரிப்பதில்லை.

சமுதாயப் பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள் எல்லாமே பயனற்றது என்று அவர் நினைக்கிறார். அவருடைய பெற்றோர்கள் காலில் விழுந்து வணங்கும்போது, அவர் வெறுமனே நின்றுகொண்டு வேடிக்கைப் பார்க்கிறார். உண்மையில் நான், மற்றவர்கள் என் காலில் விழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. காரணம் ஒருவர் காலில் விழுவதால் அவருக்குள் பெரிதாக எதுவும் நடந்துவிடும் வாய்ப்பில்லை.

ஆனால் அந்த இளைஞரைப் பார்த்து
நான் மனத்திற்குள் சொல்லிக்கொள்வேன்:
"அப்பா! உனக்குக் கல்யாணம் ஆகட்டும்.
அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்று
பார்ப்போம்,"

இரண்டு வருடங்களுக்குப் பிறகு,
திருமணத்திற்குப் பிறகு, அதே இளைஞர்தான்
காலில் சாஸ்டாங்கமாக விழுகிறார்! இரண்டே
வருடங்களில் அவர் மிகவும் வளர்ந்து
விடுகிறார். இப்பொழுது அவர் கீழ் படிதல்
உள்ளவராகவும் பண்பாளராகவும் மாறி
விடுகிறார்!

அர்ஜுனன்
போர்க்களத்திலிருந்து
ஓடிவிட நினைப்பதற்கான
காரணம் அவருடைய
அஹிம்ஸை எண்ணம்
அல்ல,

அதனால் திருமணத்திற்கு முன்பு நீங்கள் புத்திப்பூர்வமாக இருக்கிறீர்கள். அதற்குப் பிறகு உங்களுடைய உணர்ச்சி பாகத்தையும் வளர்த்துக்கொள்கிறீர்கள்.

அர்ஜுனன் இதயப்பூர்வமாகப் பேசுகிறார் என்று கிருஷ்ணருக்கு நன்றாகத் தெரியும். ஆசையும் அச்சமும் அவரைக் கவ்விக்கொள்கிறது. எதிரில் இருப்பவர்கள் தமக்குப் பிரியமான உறவினர்கள் என்பதால் அவர்களோடு போர்புரிவதனால் ஏற்படப்போகும் விளைவுகளை நினைத்து அவர் பயப்படுகிறார்.

அர்ஜுனன் போர்க்களத்திலிருந்து ஓடிவிட நினைப்பதற்கான காரணம் அவருடைய அஹிம்ஸை எண்ணம் அல்ல, தம்முடைய அடையாளங்களாக இருக்கும் உறவினர்கள் மற்றும் பெரியவர்களைக் கொல்ல வேண்டியிருக்குமே என்ற பயம்தான் காரணம்.

ஒருவேளை எதிரில் இருப்பவர்கள் யார் என்று தெரியாமல் இருந்திருந்தால் அவர் தயக்கமில்லாமல் போரிட்டிருப்பார். ஏனென்றால் அவர்களுடன் அர்ஜுனனுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்தத் தவறான அடையாளங்களால்தான் அவர் போர்க்களத்திலிருந்து ஓடிவிட விரும்புகிறார். அதுவே வன்முறைக்கு காரணமாகிறது.

அஹிம்ஸையால் போரிட வேண்டாம் என்று அர்ஜுனன் முடிவு செய்திருந்தால், கிருஷ்ணர் அவரைத் தடுத்திருக்க மாட்டார். கிருஷ்ணர் அர்ஜுனனின் நம்பிக்கையில் இருக்கும் போலித் தன்மையைச் சுட்டிக்காட்டுகிறார். அவர் உறவினர்கள் மேல் கொண்டிருக்கும் பற்றாலும்

தம் சொந்த அடையாளங்களின் மேல் கொண்டிருக்கும் பற்றாலும்தான், அவர் போரிலிருந்து தப்பிக்க நினைக்கிறார் என்ற உண்மையை எடுத்துச் சொல்லி, அஹிம்சையால்தான், தாம் போரிட விரும்பவில்லை என்று நம்பிக் கொண்டிருக்கும் அர்ஜுனனின் பொய்யான நம்பிக்கையை உடைக்கிறார்.

இரண்டாவதாக, இன்று ஜாதி முறை என்று இழிவாகப் பேசப்படும் வர்ண முறை, வேத காலத்தில் எப்படித் தோன்றியது என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

கிருஷ்ணர், அர்ஜுனனை க்ஷத்ரிய என்று அழைக்கும்போது அவர் அவருடைய குணாதிசயத்தை, மன அமைப்பை, கட்டுறு மனப்பான்மையைக் கருதி அப்படி அழைக்கிறார். க்ஷத்ரியர் என்பவர் பயமற்றவர். சக்தி, துணிச்சல் இரண்டின் மறுஉருவமாக திகழ்பவர் க்ஷத்ரியர். சிந்திக்கும் முன்பே செயல்படுபவர்தான் க்ஷத்ரியர். ஆனால் இங்கு அர்ஜுனன் ஒரு க்ஷத்ரியரைப் போல் நடந்துகொள்ளவில்லை. ஒரு ப்ராஹ்மணர் போல் நடந்துகொள்கிறார்.

ப்ராஹ்மணர் பட்டறிவுப்பூர்வமானவர்; அறிவை, உள் ஸத்யத்தை நோக்கி வாழ்பவர். வேத நூல்கள்தான் அவருடைய வழிகாட்டி. அவருடைய நடத்தை அமைதியை, ஸாத்வீகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஒரு போர்வீரராக இருக்க வேண்டிய அர்ஜுனன் வேத நூல்களை மேற்கோள் காட்டி ஒரு புனிதரைப் போல் நடந்துகொள்ள முயல்கிறார். கிருஷ்ணர் அர்ஜுனனை அவருடைய சொந்த நிலைக்கு எடுத்து வருகிறார்.

ஒரு க்ஷத்ரியருக்கு ஏற்படும் மிகப்பெரிய இழிவு பயத்தை உணர்வதும், அதை வெளிப்படுத்துவதும்தான். இப்படிப்பட்ட நடத்தை அர்ஜுனனுக்கு இந்தப் பிறப்பில் மட்டுமல்ல, இனி வரும் பிறப்புகளிலும்கூடக் கறையாக ஆகிவிடும் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

வேத காலத்தில், நான்கு வர்ணங்கள் உருவாக்கப்பட்டன. சாஸ்த்ர அறிவைக் கற்று, அவற்றைக் காத்து, உள் தன்மையில் மையம் கொண்டிருப்பவர்களை ப்ராஹ்மணர்கள் என்கிறோம். ப்ராஹ்மணர்களையும், பிற சமுதாய உறுப்பினர்களையும், தம் மக்களையும் பாது காத்து அரசாளுபவர்கள் க்ஷத்ரியர்கள்.

நான்கு
வர்ணங்களுள் ஒரு பிரிவு
இன்னொரு பிரிவை
உயர்த்தியோ,
தாழ்த்தியோ
ஒப்பிடும் பழக்கம்
என்றும்
இருந்ததில்லை.

இதில் ப்ராஹ்மணர்கள் அமைதியே வடிவான ஸத்வ குணத்திலிருந்தும், க்ஷத்ரியர்கள் போராடும் ரஜோ குணத்திலிருந்தும் இயங்கினார்கள். ஒரு பிரிவினர் வார்த்தைகளால் இயங்கினார்கள். அடுத்த பிரிவினர் வாளால் இயங்கினார்கள்.

செல்வத்தை ஈட்டி அவற்றைக் காப்பவர்கள், வியாபாரிகள், தொழில்முனைவோர்கள் இவர்கள் வைச்யர்கள் என்றழைக்கப்பட்டனர். சேவை மனப்பான்மையோடு பல துறைகளில் வேலை செய்பவர்கள் சூத்ரர்கள்.

இவற்றில் ஒரு பிரிவு இன்னொரு பிரிவை உயர்த்தியோ, தாழ்த்தியோ ஒப்பிடும் பழக்கம் என்றும் இருந்ததில்லை. ஒருவருக்கு இயல்பாக இருக்கும் குணாதிசயங்களைப் பொறுத்து இந்தப் பிரிவுகள் உருவாக்கப்பட்டன.

ஒரு மனிதரை அவருக்கு ஏற்ற துறையில் சிறப்பாகப் பயிற்றுவிக்கும் மிக உயர்ந்த பயிற்சி முறைதான் வர்ண முறை. அது பிறப்பின் அடிப்படையில் அமையவில்லை. ஒரு ப்ராஹ்மணருக்குப் பிறந்த குழந்தை, அவருடைய குணாதிசயத்தைப் பொறுத்து சூத்ரராகவும் இருக்கலாம்.

குருகுல கல்வித் திட்டத்தின் படி, ஒரு குழந்தைக்கு ஏழு வயது ஆகும் முன், அது குருவிடம் ஒப்படைக்கப்படும். குரு அந்தக் குழந்தையின் குணாதிசயத்தை ஆராய்ந்து அதனை வர்ண முறைப்படி பிரிப்பார். இந்த முடிவு முற்றிலும் விஞ்ஞானப்பூர்வமாக எடுக்கப்படும். வேறு எந்தக் காரணமும் இருக்காது.

பிறப்பின் அடிப்படையில் வர்ண முறை உருவாக்கப்படவில்லை என்றாலும் ஒரு ப்ராஹ்மணப் பெற்றோருக்குப் பிறந்த குழந்தைக்கு, அவன் பிறந்த

ஒரு மனிதரை
அவருக்கு ஏற்ற
துறையில்
சிறப்பாகப்
பயிற்றுவிக்கும்
மிக உயர்ந்த
பயிற்சி முறைதான்
வர்ண முறை.

சூழலின் கட்டுறு மனப்பான்மையாலேயே
அவனுக்கு ப்ராஹ்மண தன்மை உருவாகும்
வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. அப்படி
இருந்தும், அதன் மூலம் சமுதாயத்தில்
எந்தவிதமான ஏற்றத்தாழ்வும் ஏற்படவில்லை.

காரணம் ஒவ்வொரு பிரிவினரும் தங்களை
உயர்வாகவோ தாழ்வாகவோ கருதவில்லை.
தங்களுக்கு உள்ள தனிப் பொறுப்பையும்
தனித் தன்மையையும் அவர்கள்
உணர்ந்திருந்தார்கள். ஆனால் நாளடைவில்
வர்ண முறையில் பல சீரழிவுகள் ஏற்பட்டன.

முக்கியமாக இந்தியாவிற்குப் படையெடுத்து
வந்த அந்நியர்கள் தங்களுடைய
கலாச்சாரத்தை இங்கே பரப்பிய போது,
இந்தச் சமுதாயச் சீர்கேடுகள் அதிகரித்தன.
தங்களைக் காத்துக்கொள்வதற்காக, வர்ண
முறையை பிறப்பின் அடிப்படையில்
மாற்றினார்கள்.

இந்தியாவை அடிமைப்படுத்துவதற்காக
ஆங்கிலேயர்கள் குருகுல கல்வி முறையை
அழித்தபோது, நிலைமை இன்னும்
மோசமானது. இந்தியாவை முழுமையாகக்
கைப்பற்ற வேண்டுமானால் அதன்
கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என்று
அவர்கள் நன்கு புரிந்து கொண்டார்கள்.

> இன்றைய சமூகத்தில்
> ஒருவரை,
> அவரிடம் உள்ள
> பணத்தை வைத்தே
> மதிப்பிடுகிறார்கள்.

கல்வி முறையையும் அறிவு பரிமாறப்படும் முறையையும் அழித்தால் கலாச்சாரத்தை அழிக்க முடியும் என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்புகூட லட்சக்கணக்கான குருகுலங்கள் இருந்தன. ஆனால் இன்று, குருகுலங்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணுமளவிற்கு குறைந்துவிட்டன. இதுவே இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

மேலும் அந்நியர்கள் வர்ண முறையைத் தவறானதாகச் சித்திரித்தார்கள். வர்ண அமைப்பை ஒத்திருக்கும் கில்ட் முறை (Guild system) மூலம்தான் அவர்கள் தங்கள் நாட்டை வளப்படுத்தியிருந்தார்கள். அதுவே அந்த நாட்டை பணக்கார நாடாக மாற்ற பெரிதும் உதவியது. அதேபோல் இங்கும் பிரிவினையை ஏற்படுத்தி இந்தியாவைக் கைப்பற்றினார்கள். வர்ண பிரிவினர்களுக்கு இடையில் பிரிவினைகளை ஏற்படுத்தி, அவர்களுக்கிடையில் பகைமையைத் தூண்டினார்கள்.

பிரிட்டிஷ்காரர்களின் செயல்களின் விளைவுகள் இந்தியாவில் இன்றும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. வர்ணாசிரம பிரிவினர்களுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட பகைமையால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் எதிர்மறையான நாத்திகம் தோன்றியிருக்கிறது. எந்த வேத கலாச்சாரம் இந்திய சமுதாயத்தை இத்தனை ஆயிரம் ஆண்டுகளாகக் காத்து வந்ததோ அந்தக் கலாச்சாரமே அவமரியாதை செய்யப்படுகிறது.

இன்றைய சமுதாயத்தில் ஒருவரை அவரிடம் உள்ள பணத்தை வைத்தே மதிப்பிடுகிறார்கள். இது வைச்'யர்களுக்கு மட்டுமே ஏற்றது. அதேபோல் போர் குணம் கொண்ட வீரர்களால் எந்த நாடும் ஆளப்படவில்லை.

வணிக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் புகழ்பெற்ற வைச்'ய வகுப்பைச் சேர்ந்தவர்களே அரசாட்சி செய்கிறார்கள். இன்று இருப்பது போன்ற உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு, வேத காலங்களில் எந்த வகுப்பினருக்கும் இடையிலும் இருந்ததில்லை.

ஒரு குலத்தில் பிறந்த ஒருவர் மற்ற குலத்தவரின் தொழிலில் பரிணமிக்க முடியாது என்பது இல்லை. ப்ராஹ்மணரான துரோணர் க்ஷத்ரியர்களே பயப்படக்கூடிய ஒரு போர்வீரர். புத்தரும் மஹாவீரரும் க்ஷத்ரிய குலத்தில்

> ஒரு குலத்தில் பிறந்த ஒருவர் மற்ற குலத்தவரின் தொழிலில் பரிணமிக்க முடியாது என்பது இல்லை.

பிறந்தாலும் ஞானமடைந்த ஞானிகள்.
ஆனால் இங்கு அர்ஜுனனை அவரது க்ஷத்ரிய
பாகைக்குத் திருப்ப முயற்சி செய்கிறார்
கிருஷ்ணர். இதற்கு நிச்சயம் ஒரு காரணம்
இருக்கும்.

உடலில் இருந்து பிரியும் ஒரு ஆத்மா அதன் ஆசைகளோடு, ப்ராsub>ரப்த கர்மாவுடன் (இந்தப் பிறவியில் நிறைவேற்றவேண்டிய ஆசைகள்) புதுஉடலில் புகுகிறது. இந்த ப்ராsub>ரப்தம் அவர் பிறந்திருக்கும் சூழ் நிலைக்கு மாறுபட்டதாகக்கூட இருக்கலாம். இது தான் புத்தர், துரோணர் போன்றவர்களுக்கு ஏற்பட்ட நிகழ்வுகள். இது வாழ்வின் இளமைக் காலத்திலேயே, சூழ் நிலைகளின் மூலம் கட்டுறு மனப்பான்மையை வளர்க்கும் முன்பே ஆளுமை பெற்றுவிடும்.

ஆனால் அர்ஜுனனுக்கு இது நிகழவில்லை. அர்ஜுனன் ஒரு இளவரசர். அவர் க்ஷத்ரியராக மேலோங்கி இருந்தார். அவர் சிறந்த வில் வித்தை வீரராகவும் பயமற்ற போர்வீரராகவும் திகழ்ந்தார். அவருடைய சுபாவமும், ப்ராsub>ரப்தமும் அவரை க்ஷத்ரியராகவே இருக்க வைத்தது.

இதனாலேயே கிருஷ்ணர் அவரை அவரது இயல்பு நிலைக்கு இழுக்கிறார். அதனாலேயே போர்க்களத்தை விட்டு ஓடுவது இழிவு என்றும், எழுந்து நின்று போராட வேண்டும் என்றும் சொல்கிறார்.

கிருஷ்ணர் வன்முறையாளரா?

கிருஷ்ணர் வன்முறையாளரும் இல்லை, அவர் அர்ஜுனனை வன்முறைக்குத் தூண்டவுமில்லை. ஞானிகளுக்கெல்லாம் ஞானியான கிருஷ்ணர், 'அர்ஜுனன் தனது திறமையை உணர வேண்டும்' என்ற ஒரே குறிக்கோளுடன் இருக்கிறார். நாம் ஒவ்வொருவருமே தனித்துவம் வாய்ந்தவர்கள்தான். புத்தர், ஒரு அர்ஜுனனாக முடியாது. அர்ஜுனன், ஒரு மஹாவீரராக முடியாது.

ஒரு குரு தனது சீடர்கள் ஒவ்வொருவரின் உள்திறனையும் முழுமையாக உணர்ந்திருப்பார். தமது சீடர் எங்கு, எப்படிச் செல்ல வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். சீடரை அந்தப் பாதையிலேயே வழி நடத்துவார், அது இறுதியாக அந்தச் சீடரை ஞானத்தை நோக்கி அழைத்துச் செல்லும்.

இதையேதான் கிருஷ்ணர் போர்க்களத்தில்
செய்கிறார். அர்ஜுனன் உண்மையிலேயே
போர்க்களத்திலிருந்து ஓடிவிட
நினைக்கிறார் என, ஒரு வினாடி கிருஷ்ணர்
நினைத்திருந்தால்கூட, அவரைப்
போரிடத்தூண்டி இருக்கமாட்டார். அர்ஜுனன்
கொலை செய்ய விரும்பாத கோழை இல்லை.

அவர் யார் மீது பற்றுகொண்டுள்ளாரோ அவர்களைக் கொல்லவே தயங்குகிறார். இது அஹிம்சையும் அல்ல. இது, அவரது உடைமைகள் மற்றும் சுற்றத்தை இழந்து விடுவோமோ என்ற பயத்தால் ஏற்படும் தயக்கமே. அதன் மூலம் தம்முடைய அடையாளத்தையே இழந்து விடுவோமோ என்ற பயமே தவிர, வேறு ஒன்றும் இல்லை.

அர்ஜுனனின் இந்தச் செயல், தம்முடைய அடையாளத்தை இழந்து விடுவோமோ என்கிற அவருடைய பயம் மற்றும் அவருடைய அஹங்காரம் இவற்றையே அடிப்படையாகக்கொண்டுள்ளது. இது அஹிம்சை அல்ல. மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்கும் அவரது உள் வன்முறையின் ஒரு வெளிப்பாடே! அர்ஜுனனது தயக்கம், 'வேண்டியவர்கள், வேண்டாதவர்கள்' என்ற பாகுபாட்டிலிருந்து எழுந்ததுதான்.

இந்தப் பயத்தை வன்முறை என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம் என நீங்கள் என்னிடம் கேட்கலாம். நம்முடைய அடையாளத்தையே இழந்து விடுவோமோ என்கிற பயஉணர்வுதான் வன்முறைக்கு வித்திடுகிறது.

தீவிரவாதிகள் தைரியசாலிகளே இல்லை. அவர்களது வாழ்க்கை முறையையும், அவர்களது முக்கியத்துவத்தையும் நியாயப்படுத்தும் சிலசெயல்கள் மற்றும் தத்துவங்களை இறுகப்பிடித்துக்கொண்டு, அதிலேயே தொங்கிக் கொண்டிருக்கும் கோழைகள். அவர்களது பயமே வன்முறையாக வெடிக்கிறது. மூலையில் மாட்டிக் கொண்ட எலி தனது உயிர் போகும் பயத்தில் பல்லைக் காட்டி பயமுறுத்துவது போல, ஒருவருக்குள் இருக்கும் பயமும், ‘தான் வாழவேண்டும்’ என்ற உந்துதலுமே வன்முறைக்கு வித்திடுகிறது.

போராட்டம் அல்லது ஓட்டம் (Fight or Flight) எனும் கோட்பாட்டைக்கொண்டும் இதனை விஞ்ஞானபூர்வமாகவும் விளக்கலாம். அட்ரினலின் வேதிப்பொருளே இந்த இரு செயல்களுக்கும் காரணம். ஒரு ஆபத்தான சூழ்நிலை அல்லது உச்சக்கட்ட பயம் ஏற்படும்போது, அது நமது மூளையின் ஒரு பகுதியான ஹைப்போதலமஸை (Hypothalamus) இயங்கச் செய்கிறது. உடனே இந்த ஹைப்போதலமஸ், அட்ரினலினைச் சுரந்து இரத்த ஓட்டத்தில் கலக்கச் செய்யும் தலைமை சுரப்பியான பிட்யூட்டரி எனும் நாளமில்லா சுரப்பியைத் தூண்டி விடுகிறது.

அட்ரினலின் சுரந்த உடனே கால், கைகளை அதிகச் சுறுசுறுப்பாக்குகிறது. நிலைமைக்குத் தகுந்தாற்போல் நீங்கள் கையையோ அல்லது காலையோ அல்லது இரண்டையுமே உபயோகிப்பீர்கள்!

நீங்கள் பயத்தில் நடுங்குவீர்கள் அல்லது பயத்துடன் போராடுவீர்கள்!

அர்ஜுனன் பயத்தில் போரிடுவதைக் கிருஷ்ணர் விரும்பவில்லை. அர்ஜுனனுள் நிறைந்திருக்கும் அவரது பயத்தைக் கரைக்கிறார்.

நம்முடைய
அடையாளத்தையே
இழந்து விடுவோமோ
என்கிற
பயஉணர்வுதான்
வன்முறைக்கு
வித்திடுகிறது.

அர்ஜுனனை விழிப்புணர்வற்ற வழிமுறைகள் மற்றும் பயத்திலிருந்து நீக்கி, விழிப்புடனும் உணர்வுப்பூர்வமாகவும் செயல்படும் வகையில் உருமாற்றம் செய்கிறார். அர்ஜுனனைக் கவ்வியிருக்கும் உணர்வற்ற பயத்திலிருந்து வெளியேற்றுவதே கிருஷ்ணரின் விருப்பம். இதற்கு ஒரே வழி அவரை அவரது இயல்பான நிலையான க்ஷத்ரியர் நிலைக்கு மீட்பதே.

கேள்வி: நமக்கு மூன்று உடல்கள் இருப்பதாக படித்திருக்கிறேன். தாங்கள் ஏழு சக்தி அடுக்கு களைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். இவை இரண்டும் ஒன்றா?

நம் முதல் நிலையிலான ஆனந்த ஸ்புரண த்யான முகாமில் (LBP-1) நம் உடலில் உள்ள ஏழு சக்தி மையங்களைப் பற்றிப் பார்க்கிறோம். இந்த சக்ரங்கள்தான் நமது உணர்ச்சிகளை வழிநடத்துகிறது. அதன் மூலம் நமது பழக்கவழக்கங்களையும் முடிவுசெய்கிறது. அவையே நமது உணர்ச்சிகளையும் உடல்வளத்தையும் கண்காணிக்கிறது. இந்த சக்ரங்கள் அடைபடும்போது நோய்வாய்ப்படுகிறோம். இந்த சக்ரங்கள் சக்தியூட்டப்பட்ட பிறகுதான் நாம் சுகமாகி நடமாடுகிறோம்.

இரண்டாவது நிலை முகாமான நித்யானந்த ஸ்புரண த்யான முகாமில், மரண சமயத்தில் உயிர் பயணிக்கும் ஏழு சக்தி அடுக்குகளில் ஏற்படும் நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன. இந்த மூன்று உடல்களும் இந்த அடுக்குகளின் பகுதியே.

ஏழு அடுக்குகள் வரைபடம்

ஸ்தூல சரீரம், ஸூக்ஷ்ம சரீரம் மற்றும் காரண சரீரம் இந்த மூன்று உடல்களும் முறையே முதலாவது என்கிற நான்காவது, ஐந்தாவது சக்தி அடுக்குகளைச் சார்ந்தவை. இவை விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ்உறக்க நிலையோடு சம்பந்தப்பட்டவையும்கூட! நம் உடல் - மன அமைப்பானது முதல் இரு நிலைகளில் மட்டுமே செயல்படக்கூடியது. ஸ்தூல சரீரம் உடல், பொருள் சார்ந்தது. ஸூக்ஷ்ம சரீரம், எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் தொகுப்பு. ஸ்தூல உடம்பைத் தொட்டு உணரலாம். இது ரத்தத்தாலும் சதைகளாலும் ஆனது. அதே நேரத்தில் ஸூக்ஷ்ம சரீரம் அணுவRemained ஆனது, ஐம்புலன்களால் அறியமுடியாதது.

ஸூக்ஷ்ம சரீரம் முற்பிறவியிலிருந்து வருவது, அது முற்பிறவிகளில் சேர்த்துவைத்த ஆசைகளின் தொகுப்பாக, ப்ராரப்த கர்மாவாக இப்பிறவி உள்ளது. இது ஸ்தூல சரீரம் கருப்பையில் இருக்கும்போதே அதற்குள் நுழைந்து விடுகிறது. ஸூக்ஷ்ம சரீரம் தம் இயல்புக்கு ஏற்ப தன்னைத் தாங்கிச் செல்லும் ஊடகத்தைத் தேடும். அது கிடைத்தவுடன் அந்த ஸ்தூல சரீரம் இருக்கும் கருவிகலேயே நுழைகிறது.

இறக்கும்போதும், மீண்டும் பிறக்கும்போதும், இந்த ஸூக்ஷ்ம சரீரமே பயணிக்கிறது. ஆத்மா பயணிப்பது இல்லை. மாறி மாறிப் பயணித்துக் கொண்டே இருக்கும் இந்த ஸூக்ஷ்ம சரீரத்திற்கும் காரண சரீரத்திற்கும் ஆத்மா சக்தியூட்டுகிறது. இது மின்சாரத்தில் இயங்கும் ரயில் போன்றது. மின்சார ரயிலை இயக்கும் மின்சாரமே ஆத்மா; ரயில் பெட்டிகளாகவும் உள்ளே இருப்பவையாகவும் ஸ்தூல, ஸூக்ஷ்ம அடுக்குகள் இருக்கின்றன.

இறக்கும்போது ஸ்தூல அடுக்கும் ஸூக்ஷ்ம அடுக்கும் அழிந்து விடுகிறது. ஆத்மா இதன் இரண்டிலிருந்தும் பிரிக்கப்படுகிறது. ஆத்மாவுக்கும் ப்ரஹ்மனுக்கும், தனிநபரின் சக்திக்கும் பிரபஞ்ச சக்திக்கும் இடையில் உருவாக்கப்பட்டிருந்த உடல் ரீதியான, உணர்ச்சி ரீதியான எல்லைகள் மறைந்து விடுகின்றன.

ஆத்மாவுக்கும் ப்ரஹ்மனுக்கும் இதற்கு முன் தொடர்பு இல்லாமல் இருந்ததில்லை. ஆனால் உடல் மன - அமைப்பும், அஹங்காரமும், நம்முடைய அடையாளமும் அவற்றிற்கு இடையே அறியாமை எனும் தடையை ஏற்படுத்தி ‘நாம் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்தவர்கள்தான்’ என்பதையே உணரவிடாமல் செய்கிறது.

ஸூக்ஷ்ம அடுக்கு இல்லாமல் ஸ்தூல உடலால் உயிர் வாழ முடியாது. ஞானம் பெறுவதையே நோக்கமாகக் கொண்ட ஆன்மிக முயற்சிகள் எல்லாமே ஸூக்ஷ்ம அடுக்கை அழிக்க உருவானதுதான். ஸூக்ஷ்ம அடுக்கை அழித்த அந்தக் கணமே! ஸூக்ஷ்ம சரீரம் உருவாகக் காரணமாக இருந்த உணர்ச்சிகள், எதிர்பார்ப்புகள், நிறைவேறாத ஆசைகள், எண்ணங்கள் மற்றும் ஸம்ஸ்காரங்களும் அழிக்கப்பட்ட அந்த நொடியே, நமக்கும் பிரபஞ்ச சக்திக்கும் இடையே இருந்த எல்லை மறைகிறது. நாம் தெய்வீகத்துடன் ஒன்றாகிறோம். நாம் இயல்பான நிலைக்கு வருகிறோம்.

காரண சரீரம், இப்பிறவிக்கும் மறுபிறவிக்கும் ‘இடையே இருக்கும்’ நிலை மாறும் இடமாக’ இருக்கிறது. இதுவே மரணத்தின் வழி. ஆத்மா இந்த அடுக்கைத் தாண்டிவிட்டால், முன்பிருந்த ஸ்தூல, ஸூக்ஷ்ம உடலைத் திரும்ப அடைய முடியாது. இப்படி ஒருநிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறும்போது ‘கோமா’ நிலையை அடைந்த ஒருவர், மீண்டும் கோமா நிலையில் இருந்து மீண்டு வர இயலும்.

காரண சரீரத்தின் இந்த அனுபவம், மரணமடைந்தவர்கள் அனுபவிக்கும் மரண அனுபவத்தைப் போன்றதுதான். ஆனால் அவர் இறந்துவிடவில்லை, காரண சரீரத்தைத் தாண்டிச் சென்றுவிடவில்லை.

ஒவ்வொரு இரவும் ஆழ்ந்த உறக்க நிலையில் உடல்-மன அமைப்பு இந்த காரண சரீர நிலைக்குச் சென்றுவிட்டுத்தான் திரும்புகிறது. இது நமக்கு உற்சாகத்தையும் புத்துணர்வையும் கொடுக்கிற நிலை. இது இல்லாமல் நம்மால் வாழ முடியாது.

த்யானத்தின் மூலம் மூன்று நிலைகளில் இருந்து நான்காவது நிலைக்கு, அதாவது விழிப்புணர்வுடன்கூடிய, ஆனால் மனமோ, எண்ணங்களோ அற்ற நிலையை அடையலாம். இதுவே ஆத்மாவின் நிலை, தம்மை அறிந்துகொள்ளும் நிலை!

Hands playing a flute
Lord Krishna