KAILASA Library/பகவத்கீதை/ஆசை அச்சத்தால் செயல்படுமளவிற்கு நாம் தாழ்ந்தவரல்லSign in
பகவத்கீதை

ஆசை அச்சத்தால் செயல்படுமளவிற்கு நாம் தாழ்ந்தவரல்ல

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நாம் எதைச் செய்தாலும் ஒரு நோக்கத்துடனேயே செய்கிறோம். ஒரு குறிப்பிட்ட பலனை எதிர்பார்த்துச் செய்கிறோம். "இதைச் செய்வதால் எனக்கு என்ன பலன்?" என்ற கேள்வியோடுதான் செயலில் ஈடுபடுகிறோம். ஆசை அல்லது அச்சத்தின் காரணமாகவே ஒரு செயலில் ஈடுபடுகிறோம்.

நாம் ஒரு செயலைச் செய்வதற்கு ஒரு சக்தி வாய்ந்த உந்துதலாக ஆசையும் அச்சமும் இருக்கின்றன. கழுதையைச் செயலில் ஈடுபடுத்துவதற்கு, ஒன்று உணவைக் காட்ட வேண்டும் அல்லது சாட்டையைக் காட்ட வேண்டும். அதுபோல மனிதர்களை இயக்குவதற்கு ஆசையும் அச்சமும் நன்றாகவே பயன்படுகின்றன, உண்மையைச் சொல்லப்போனால் அதைவிட நன்றாகவே பயன்படுகின்றன.

கிருஷ்ணர், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கவலைப்படவில்லை, நீங்கள் யார் என்று மட்டும்தான் பார்க்கிறார். ஒரு பலனையும் எதிர்பார்க்காமல், நீங்கள் எந்தச் செயலை செய்தாலும் அது சரியான செயல்தான்.

நீங்கள் செய்யும் செயல், ஆசை அல்லது அச்சம், சுகம் அல்லது துக்கம், வெற்றி அல்லது தோல்வி போன்ற உணர்ச்சி களால் தூண்டப்பட்டதாக இருக்குமானால், உங்களால் எந்த நல்லதையும் செய்துவிட முடியாது. லாபத்திற்காக நாம் செய்யும் எந்தச் செயலும் பாவச் செயல்தான்.

உங்களுக்குப் பரிச்சயம் இல்லாத இடத்தில் மிகக் குறுகிய காலத்திற்கு மட்டும் நீங்கள் தங்கி இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த இடத்தில் நீங்கள் எதைச் செய்தாலும் அதனால் எந்த விளைவும் ஏற்படாது என்று

நாம் ஒரு செயலைச்
செய்வதற்கு
ஒரு சக்தி வாய்ந்த
உந்துதல்களாகவே
ஆசையும் அச்சமும்
இருக்கின்றன.

உங்களுக்குத் தெரிந்தால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருக்கிறீர்களோ, அது உங்களுக்கு எந்தவித தடையும் ஏற்படுத்தவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? அப்பொழுது உங்கள் செயல்கள் எப்படி இருக்கும்?

எதற்காவது நீங்கள் தயங்குவீர்களா? சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்திற்கும் பெயருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற பயம் உங்களை விட்டு போய்விட்டால் நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள்? அதே மனிதராக நீங்கள் இருப்பீர்களா?

உங்கள் எல்லாக் கனவுகளையும் நினைவாக்கும் அலாவுதீனின் அற்புதவிளக்கு உங்களிடம் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும் என்று உங்களுக்குத் தெரிந்தாலும்கூட, அந்த சந்தோஷம் எவ்வளவு நேரம் நிலைத்து இருக்கும்? உங்களுடைய பேராசை அப்பொழுதும் தொடருமா?

நம்மைப் பற்றி உறுதியாக நமக்கே எதுவும் தெரியாததாலும் நாம் யார் என்பதை உணராததாலும் நம்முள் நாம் நிலைபெற்று இல்லாததாலும்தான், ஆசையும் அச்சமும் நம்மை உந்தித்தள்ளும் விசைகளாகத் தொடர்ந்து செயல்படுகின்றன.

இங்கே கிருஷ்ணர் இந்தக் காரணிகளை உடைத்தெறியச் சொல்கிறார். ஆசை, அச்சம் இல்லாமல் இயங்குமாறு அர்ஜுனனைச் சொல்கிறார். விளைவுகளைப் பற்றி கவலைப்படாதே என்கிறார். இந்த உபதேசம் எல்லாச் சமுதாய மற்றும் மதக் கட்டுப்பாடுகளுக்கும் எதிரானது.

| ஆசை, அச்சம் இல்லாமல் இயங்கு; விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாதே! – கிருஷ்ணர். | அர்ஜுனன் போர்க்களத்திலிருந்து வெளியேறினால் நடைமுறை ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி பரப்ரஹ்ம நிலையில் உள்ள கிருஷ்ணர் கவலைப்படவில்லை. ஆனால் அப்படிச் செய்வதால், அர்ஜுனனுடைய உள் உலகில் ஏற்படும் மாற்றத்தைப்பற்றி மட்டும் கவலைப்படுகிறார். உண்மையில் அர்ஜுனன் அஹிம்ஸையில் இருந்திருந்தால், கிருஷ்ணர் அவரைப் போரிடும்படி தூண்டியிருக்க மாட்டார். |

தான் சண்டையிட மாட்டேன் என்று அர்ஜுனன் சொல்வதற்குக் காரணம் ஜீவகாருண்யத்தாலோ அல்லது அஹிம்ஸையாலோ அல்ல. தம்முடைய சுற்றத்தார்களுடன் தமக்கு இருந்த சமூக அடையாளத்தாலும் அவர்கள் மேல் அவருக்கு இருந்த உணர்ச்சி ரீதியான பற்றுதலாலும் அவர் போரிட மறுத்தார்.

இந்த ஸ்லோகங்களில், அர்ஜுனனைத் தெளிவாகப் பார்க்கவிடாமல் அவர் கண்களை மறைத்துக் கொண்டிருக்கும் மனக்குழப்பத்திலிருந்தும் மனச் சோர்விலிருந்தும், தடுமாற்றத்திலிருந்தும் அவரை வெளிக்கொண்டு வர கிருஷ்ணர் முயற்சி செய்கிறார். அர்ஜுனன், ஆசையாலும் அச்சத்தாலும் நிர்ணயிக்கப்பட்ட செயல்களைக் கடப்பதற்குக் கிருஷ்ணர் உதவுகிறார். அர்ஜுனனை செயலால் விளையும் பலனைப் பற்றிக் கவலைப்படாமல், கர்மங்களைச் செய்ய வைக்க கிருஷ்ணர் முயற்சி செய்கிறார்.

கிருஷ்ணரின் கைகள் புல்லாங்குழல் வாசிப்பது போன்ற படம்