KAILASA Library/பகவத்கீதை/விழிப்புணர்வோடு செய்யும் எல்லாச் செயலும் சரியே!Sign in
பகவத்கீதை

விழிப்புணர்வோடு செய்யும் எல்லாச் செயலும் சரியே!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சுகம் துக்கம், லாபம் நஷ்டம், வெற்றி தோல்வி அனைத்தையும் ஒன்றாக, சமமாகப் பாவித்துக்கொள் என்று கிருஷ்ணர் சொல்கிறார். போரின் முடிவு எப்படி இருக்கும் என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் போர் செய் என்கிறார். போரிடுவது உன்னுடைய கடமை. இதை, அந்தப் பரமாத்மாவே சொல்லும்போது, அர்ஜுனன் நல்லது கெட்டது பற்றியும் பாவ புண்ணியம் பற்றியும் கவலைப்பட வேண்டிய தேவை இல்லை.

போரிடுவது, போரில் மக்களைக் கொல்வது இவை தவறு இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். கிருஷ்ணர் ஏன் அர்ஜுனனைப் போர் புரியும்படி தூண்டினார்? உண்மையைச் சொல்லப்போனால், அவர் அர்ஜுனனை போர்ப் புரியத் தூண்டவில்லை, வற்புறுத்தினார் என்றே சொல்ல வேண்டும். இதில் என்ன நன்மை இருக்கிறது? என்று நீங்கள் கேட்கலாம்.

இங்கே எந்தவித தர்க்கமும் இல்லை. மனிதர்களுடைய தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது கிருஷ்ணருடைய தர்க்கம். நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அது முக்கியமில்லை. நீங்கள் யார் என்பதுதான் முக்கியம்.

ஒரு ஞானி கொலை செய்தால்கூட அதில் தவறு இல்லை. காரணம் அவர் கொலையே செய்தாலும் விழிப்புணர்வால் வழி நடத்தப்படுகிறார். தம்முடைய சுய லாபத்திற்காக அவர் எதையும் செய்வதில்லை. ஆனால் ஒரு சாதாரண மனிதர், நல்ல செயலையே செய்தாலும்கூட, அங்கே தவறு செய்துவிடும் வாய்ப்பு உள்ளது.

> மனிதர்களுடைய
> தர்க்கத்திற்கு
> அப்பாற்பட்டது
> கிருஷ்ணருடைய
> தர்க்கம்.

திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.
ஒரு சமூக விரோதியை மாறுவேடத்தில்
இருந்த ஒரு போலீஸ்காரர் கைது செய்து
கொண்டிருப்பார். எங்கிருந்தோ இன்னொரு
போலீஸ்காரர் வந்து மாறுவேடத்தில்
இருக்கும் போலீஸ்காரைத் துப்பாக்கியால்
மிரட்டுவார். இந்தக் குழப்பத்தில்
சமூகவிரோதி தப்பித்துக்கொள்வான்.
திரைப்படத்தில் இப்படிப்பட்ட நகைச்சுவைக்
காட்சிகள் இருக்கும்.

ஆனால் நம் நிஜ வாழ்வில், இது போன்ற நிகழ்ச்சிகள்தான் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன! ஏதோ ஒரு பெரிய நல்ல காரியம் செய்வதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். உங்கள் புலன்கள் தந்த தகவலின்படி நீங்கள் செய்வது ஒரு நல்ல காரியமாகவே உங்களுக்குத் தோன்றும். ஆனால் உண்மை வேறுவிதமாக இருக்கும்.