குணத்தினால் வெவ்வேறு இனம், ஆத்மாவினால் எல்லோரும் ஓர் இனம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஒவ்வொரு சமூகத்திலும் அந்தச் சமூகத்தைக் காப்பதற்கென ஒரு குழு இருக்கும். அத்தகைய போர்வீரர்கள் தங்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் காக்க வேண்டும். அதேபோல் கல்வியைக் கற்றுக்கொடுப்பதற்கு ஆச்சாரியர்கள், வர்த்தகம் செய்வதற்கு வியாபாரிகள், உடலால் வேலை செய்வதற்கு வேலையாட்கள் என்று ஒவ்வொன்றிற்கும் பிரத்யேகக் குழுக்கள் இருக்கும்.
இன்றைய சமுதாயத்தில் இத்தகைய குழுக்கள் சமூக ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் இருக்கின்றன. தொழில் ரீதியாக அமையும் குழுக்கள், ஒருவர் வாழ்வதற்குத் தேவையான பொருளை ஈட்டுவதற்கும் அவர் பெற்றிருக்கும் கல்வி மற்றும் தனித்திறமையின் அடிப்படையிலும் அத்தொழிலைச் செய்வதற்கு அவருக்கு இருக்கும் ஆர்வத்தைப் பொறுத்தும் அமைகிறது.
ஆனால் நாளடைவில் அவை சமுதாயப்
பிரிவுகளாக மாறி விடுகின்றன; சமுதாயத்தில்
அந்தஸ்தையும், சொத்தையும் சேர்ப்பதற்கான
வழிகளாகவும் மாறி விடுகின்றன.
> குருமார்கள்
> ஒவ்வொரு
> குழந்தையின்
> தனித்திறன்,
> ஆர்வம் இவற்றை
> உணர்ந்து
> அதற்கு ஏற்றவாறு
> கல்வியை
> வழங்கினார்கள்.
இந்தக் காலத்தில்கூட ஒரு குறிப்பிட்ட தொழிலின் மூலம் சேர்க்கப்பட்ட சொத்தும் பெயரும் அடுத்த சந்ததியினர்களுக்குச் சென்றடைகிறது. அவர்களுக்கு அந்தச் சொத்தையும் பெயரையும் தானாகச் சம்பாதிக்கும் திறமை இருக்கிறதா அல்லது சம்பாதித்துக் கொடுக்கப்பட்ட அந்தப் பெயரையும் சொத்தையும் காப்பாற்றும் திறமை இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் யாரும் பொருட்படுத்துவதே இல்லை.
பண்டைய இந்தியாவில் குருகுல கல்வி இருந்தது. குருகுலத்தில் இளம் குழந்தைகள் குருவுடனேயே வாழ்ந்தார்கள்.
ஆன்மிகத்தையும் லௌகீக வாழ்க்கையையும் அவர்கள் குருவிடம் கற்றார்கள். குருகுல கல்வி குறைந்தபட்சம் மூன்று வயதிலிருந்து அதிகபட்சம் ஏழு வயதிற்குள் தொடங்கியது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் குருவின் பாதுகாப்பில் விட்டுச் சென்றார்கள்.

குருவானவர் ஒவ்வொரு குழந்தையின் தனித்திறன், ஆர்வம் இவற்றை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு கல்வியை வழங்கினார். குழந்தையின் பெற்றோர்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து குழந்தைக்குக் கல்வி வழங்கப்படவில்லை. குழந்தைக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறது என்பதை அதன் செயல்பாடுகளில் இருந்தும் அதன் ஜாதகத்தை வைத்தும் குரு கணித்தார்.
இத்தகைய குருகுல கல்வியின் அடிப்படையில்தான், இந்து சமுதாயம் பலகாலமாக அனுசரித்து வரும் வர்ணாசிரம முறை உருவானது. ஆனால் காலப்போக்கில் துரதிருஷ்டவசமாக பிறப்பின் அடிப்படையில் ஜாதி நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு போர்வீரரின் மகன் போர்வீரராகத்தான் இருக்க வேண்டும் என்று எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்தக் குழந்தைக்குப் போர்ப் பயிற்சியில் ஆர்வம் இருக்கிறதா, திறமை இருக்கிறதா என்றெல்லாம் பார்க்கப்படவில்லை.
அதனால் போதகர்களையும் ஆச்சாரியர்களையும் குறிக்கும் ப்ராஹ்மண வர்க்கம், அரசாளுபவர்களையும் போர்வீரர்களையும் குறிக்கும் க்ஷத்ரிய வர்க்கம், வர்த்தகர்களையும் தொழில்முனைவோர்களையும் குறிக்கும் வைசிய வர்க்கம் மற்றும் உடல் உழைப்பாளிகளைக் குறிக்கும் சூத்ரவர்க்கம் ஆகியவை பிறப்பின் அடிப்படையில் உருவாயின.
ஆதியில் அறிவியலின் அடிப்படையில் உருவான வர்ணாசிரம தர்மம் இப்படியாக நாளடைவில் சீர்கெட்டு பல சமுதாய ஏற்றத் தாழ்வுகளுக்கும் அநீதிகளுக்கும் காரணமாகியது. ஆச்சாரியராக, போதகராக உருவாவதற்குத் தேவையான விருப்பம், பயிற்சி இல்லையென்றால், ஒருவர் ஒரு ப்ராஹ்மண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னைப் ப்ராஹ்மணன் என்று சொல்லிக்கொள்ளும் உரிமை அவருக்கு கிடையாது.

நம்முடைய ஆசிரமங்களில் பல ஜாதி
மதப் பிரிவுகளில் இருந்து வந்திருக்கும்
இளம் ஆண்களுக்கும் பெண்களுக்கும்
ப்ராஹ்மணர்களுக்கு மட்டுமே உரித்தானது
என்று சொல்லப்படக்கூடிய
பல துறைகளிலும் பயிற்சிகள்
அளிக்கப்படுகின்றன.