KAILASA Library/பகவத்கீதை/சாமுராயின் நன்னடத்தைSign in
பகவத்கீதை

சாமுராயின் நன்னடத்தை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

2.31 ஒரு க்ஷத்ரியனாக உன் கடமையைச் செய்ய வேண்டும். நேர்மையான போரில் ஈடுபடுவதை விட ஒரு க்ஷத்ரியனுக்குச் சிறந்தது வேறொன்றுமில்லை. அதற்காக நீ தயங்கக் கூடாது.

2.32 ஓ பார்த்தா, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படிப்பட்ட போரில் கலந்து கொள்ளும் க்ஷத்ரியர்கள் உண்மையில் பாக்கியவான்கள். இது, சொர்க்கத்தின் வாசலை அவர்களுக்குத் திறக்கச் செய்கிறது

2.33 இந்தத் தர்மப்போரில் நீ போர் புரியாமல் இருப்பாயேயானால் கடமையைச் செய்ய தவறிய பாவம் உன்னை வந்தடையும். உன் புகழ் அழியும்.

2.34 உனக்கு ஏற்படும் மாறாத இந்த அவமானத்தை மக்கள் மறக்க மாட்டார்கள். புகழை உடையவனுக்கு அதை இழப்பது என்பது மரணத்தை விடக் கொடுமையானது.

2.35 நீ ஒரு கோழை என்பதால்தான் போரில் ஈடுபடவில்லை என்று மாவீரர்கள் நினைப்பார்கள். உன்னைப் பற்றியும், உன் வீரத்தைப் பற்றியும் கடந்தகாலத்தில் உயர்வாக மதித்தவர்கள் எதிர்காலத்தில் உன்னைத் தாழ்வாக மதிப்பார்கள்.

2.36 உன்னுடைய எதிரிகள் உன் திறமையைப் பழித்து, பேசக்கூடாத வார்த்தைகளால் பழித்து பேசி உன்னை அவமானப்படுத்துவார்கள். இதை விட வலியைத் தரக்கூடியது வேறு ஏதாவது இருக்க முடியுமா?

2.37 கொல்லப்பட்டால் நீ சொர்க்கத்தை அடைவாய், வெற்றியடைந்தால் இந்த உலகத்தை நீ அனுபவிப்பாய். ஓ குந்தியின் மகனே! போரிட எழுந்து நில்.

2.38 சுகம் வலி, லாபம் நஷ்டம், வெற்றி தோல்வி இவை எல்லாவற்றையும் சமமாக எடுத்துக் கொள். போரின் நியதியைக் காப்பதற்காகப் போரிடு. உனக்கு எந்தப் பாவங்களும் வராது.

Peacock feather

வெளியுலகில் அல்ல, உள்ளுலகிலும் தர்மத்தோடு நடப்பதே ‘க்ஷத்ரிய’த் தன்மை

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இரண்டு நிலைகளில் உபதேசிக்கிறார். ஒரு நிலையில், மிக உயர்ந்த உணர்வு தளத்திலிருந்து அவர் அர்ஜுனனிடம் இறுதி ஸத்யத்தைப் பற்றி விளக்குகிறார். உடல் இறந்து விடுவதால் வாழ்வு முற்றுப் பெறுவதில்லை என்றும், ஆத்மா என்றும் இறவாதது மற்றும் அழியாதது என்றும் அவர் விளக்குகிறார்.

உறவினர்களையும் பெரியவர்களையும் கொல்ல அர்ஜுனனுக்கு இருந்த பயத்தைக் குறித்தே அவர் இதை உபதேசிக்கிறார். எதை இறுதியான முடிவு என்று அர்ஜுனன் நினைக்கிறாரோ அது முடிவல்ல, வாழ்க்கை பயணத்தின் இன்னொரு படிதான் என்று அர்ஜுனனுக்குப் புரியவைக்கிறார்.

அதன் பிறகு கிருஷ்ணர், அர்ஜுனன் இருக்கும் நடைமுறை நிலைக்கு வருகிறார். சமூகத்தின் பார்வையில் இருந்து பார்க்கும்போது, அர்ஜுனன் போர்க்களத்திலிருந்து ஓடிவிடாமல் ஒரு போர்வீரரைப் போல் சண்டையிட வேண்டிய தேவை இருக்கிறது என்று அவர் அவருக்குச் சொல்கிறார். இங்கே கிருஷ்ணர், அர்ஜுனனை ஒரு க்ஷத்ரியனாக, போர்வீரனாக இருக்கும்படி அறிவுறுத்துகிறார்.