KAILASA Library/பகவத்கீதை/நிகழ்காலத்தை மட்டும் எண்ணுங்கள்Sign in
பகவத்கீதை

நிகழ்காலத்தை மட்டும் எண்ணுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கேள்வி: ஸ்வாமிஜி தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள் (பரமஹம்ஸர் குறுக்கிட்டுச் சொல்கிறார்: “ஒ! முதலில் நமக்கு விதிமுறைகளைச் சொல்கிறார்). கிருஷ்ணரும் கிறிஸ்துவும் ஒன்றா? இருவரும் கிட்டத்தட்ட கொட்டகை போன்ற இடத்தில்தான் பிறந்தார்கள். கிருஷ்ணர், மதுரா என்ற ஊரில் பிறந்தார். கிறிஸ்து, மதிரியா என்ற இடத்தில் பிறந்தார். இரண்டு பேருமே மேய்ப்பர்களாக இருந்தார்கள். இப்படி இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. தயவு செய்து விளக்குங்கள்.

இது ஒரு வரலாற்றுக் குழப்பம்! எனக்கு வரலாற்றைப் பற்றித் தெரியாது. காரணம் நான் வரலாற்று அறிஞன் கிடையாது. ஆனால் ஆன்மிகத்தின் அடிப்படையில் அவர்கள் இருவரும் ஒன்று என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். வரலாற்றுச் சான்றுகள் எனக்குத் தெரியாது. ஆன்மிக அறிவியலின் அடிப்படையில் இது ஸத்யமே. வரலாறு தெரியாததால் அதைப் பற்றி வேறு எதுவும் நான் சொல்வதற்கு இல்லை. உணர்வு ரீதியாக அவர்கள் இருவரும் ஒரே நிலையில்தான் வாழ்ந்தார்கள்.

இயேசு கிறிஸ்துவும் கிருஷ்ணரும்

கிறிஸ்துவின் வாழ்க்கை பற்றிய
உருவகம் கிருஷ்ணருடைய
வாழ்க்கையைச் சொல்லும்
பாகவதத்திலிருந்து எடுக்கப்பட்டது
என்று சிலர் சொல்கிறார்கள். இந்தக்
கதைகளுக்குப் பின் இருக்கும்
உண்மை நமக்குத் தெரியாது.

‘டாவின்சி கோட்’ (The Da vinci code) என்ற ஒரு அருமையான புத்தகத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தப் புத்தகத்தைப் படித்திருந்தால், உங்களுக்குத் தெரியும். அந்தப் புத்தகத்தில் சொல்லப்படும் பல கருத்துகள் சர்ச்சைகளைக் கிளப்பக்கூடியது.

ஆனால் அந்த புத்தகத்தில் அசைக்க முடியாத சான்றுகள் உள்ளன. எதைச் சொல்ல வருகிறோம் என்பதில் அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் மிகத் தெளிவாக இருக்கிறார்.

அவர் சொல்வதை முற்றிலுமாக நம்மால் மறுக்க முடியாது. நானும் அந்தப் புத்தகத்தைப் படித்தேன். உண்மையாகச் சொல்கிறேன், அந்தப் புத்தகத் தின் தகவல்களை என்னால் மறுக்க முடியவில்லை. அவர் சொல்லும் பல விஷயங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

கிறிஸ்துவின் வாழ்வு மற்றும் அவர் உயிர்த்தெழுந்தது பற்றி ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு, பல புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் 13 வயதிலிருந்து 29 வயதுவரை உள்ள கிறிஸ்துவின் வாழ்வைச் சித்தரித்திருப்பார்கள்.

கிறிஸ்துவின் வாழ்க்கை
பற்றிய உருவகம்
கிருஷ்ணருடைய
வாழ்க்கையைச்
சொல்லும்
பாகவதத்திலிருந்து
எடுக்கப்பட்டது என்று
சிலர் சொல்கிறார்கள்.

இந்தப் புத்தகத்தில் படித்த இரண்டு சுவாரஸ்யமான விஷயங்கள்:

அந்தப் புத்தகத்தின் கருத்துப்படி ஏசு
கிறிஸ்து பூரியில் இருந்த ஒரு புத்த
மடாலயத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டார்.
The sermon on Mount என்ற புகழ்பெற்ற
கிறிஸ்துவின் உரை, புத்த மடாலயங்களில்
நாள்தோறும் பிரார்த்திக்கப்படும் பாலி

ஸூத்ரத்தை அப்படியே ஒத்துள்ளது.
இதைப் போன்ற பல ஆய்வுகள்
வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் உணர்வு
நிலையில் இருந்து பார்க்கிறபோது இரண்டும்
ஒன்றுதான் என்று சொல்ல முடிகிறது.

சமீபத்தில் பிபிசி தொலைக் காட்சியில் ஒரு குறும்படம் காட்டப்பட்டது. அதில் ஏசுநாதர் சிலுவையில் இடப்பட்ட பிறகு அவரைக் காஷ்மீருக்குக்கொண்டு சென்றதாகவும் அங்கு அவர் எண்பது வயதுவரை வாழ்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது. எந்த இடத்தில் அவர் புதைக்கப்பட்டார் என்றுகூட அந்தப் படத்தில் காட்டினார்கள். பல ஆய்வுகளின் அடிப்படையில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

கிறிஸ்து இறந்த சில நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கை மற்றும் மரணம் பற்றிய பதிவுகள் வெளி வரத் தொடங்கின. வரலாற்றுச் சான்றுகள் இருந்தாலும் அவற்றுள் எவற்றை வெளியிட வேண்டும், எவற்றை வெளியிடக் கூடாது என்பதை கிறிஸ்துவ தேவாலயங்கள்தான் முடிவு செய்தன என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால் நான் சொல்வது, எல்லா ஞானிகளின் சக்தியும் ஒன்றுதான். அவர்களுடைய விழிப்புணர்வு நிலை ஒத்தே இருக்கிறது.

கேள்வி: ஸத்யம், அது முதலிலும் இறுதியிலும் வடிவமற்று இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் உருவம் பெறுகிறது என்று கிருஷ்ணர் சொல்கிறார். அவர் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைக் குறித்து பேசுகிறார் என்று வைத்துக் கொண்டால், நமக்குக் கடந்தகாலம் நன்றாகத் தெரிகிறது. ஆனால் தொடக்கம் மட்டும் தெரிவதில்லை. ஏன்?

நாம் சக்தியில் இருந்து தோன்றுகிறோம்; சக்தியில் மறைந்து போகிறோம்; இடைப்பட்ட காலத்தில் சக்தியாக இருந்தாலும் பொருளாக வாழ்கிறோம்.

நாம் நம் ஐம்புலன்களையும் வெளியுலகத்தை நோக்கியே செலுத்திக் கொண்டிருக்கும்வரை அவற்றிற்குப் பொருட்கள் மட்டுமே தெரியும்; அவற்றால் பொருட்களை மட்டுமே பார்க்க முடிகிறது; பொருட்களுடன் மட்டுமே தொடர்புகொள்ள முடிகிறது; பொருட்கள் மூலம் கிடைக்கப்பெறும் இன்பங்களை மட்டும் அனுபவிக்க முடிகிறது. நம்

மனம் அப்படித்தான் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. நம் புலன்களால் எதை உணர முடிகிறதோ, அதை மட்டுமே பொருள் என்று சொல்கிறோம்.

நாம் நமக்குள் செல்லும் போதுதான் நமக்குள் இருக்கும் சக்தியை உணர முடியும். வெளியுலகத்தில் நமக்கு இருக்கும் அடையாளங்களை விட்டுவிட்டு, பிரபஞ்ச சக்திக்கு நம்மைத் திறந்து வைக்கும் போது, நாமும் சக்திதான் என்பதை நம்மால் உணர முடியும்.

இப்பொழுது நாம் யாராக இருக்கிறோம், கடந்தகாலத்தில் எப்படி இருந்தோம், எதிர்காலத்தில் எப்படி இருக்கப் போகிறோம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். தியானத்தால் உங்களுக்குள் இந்தப் புரிதலை ஏற்படுத்த முடியும். தியானம், உங்களை விழிப்புணர்வே வடிவான உள்ளுலகப் பயணத்திற்கு எடுத்துச் சென்று, இறந்தகாலத்திலும் எதிர்காலத்திலும் இருக்கும் ஸத்யத்தைக்கூட உணர்த்தும்.

என் கடந்தகாலத்தை நான் அறிவேன் என்று நீங்கள் சொன்னாலும் உங்கள் சொந்த வாழ்வின் கடந்தகாலம் என்று நீங்கள் எதை நினைவுப்படுத்திக்கொள்கிறீர்களோ, அது தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிகழ்ச்சிகளின் தொகுப்பாகவே இருக்கிறது.

உங்கள் புலன்கள் தரும் தகவல்களில் 5 அல்லது 10% மட்டும்தான் மேல்மனத்தில் பதிகின்றன. மீதமுள்ள தகவல்கள் உங்கள் ஆழ்மனத்தில் பதிகின்றன. சுகம் அல்லது வேதனையைத் தாங்கிய ஆழமான அனுபவங்கள்கூட மேல் மனத்தில் பதிவதில்லை. அவை எல்லாம் மிக ஆழமாக உள் மனத்தில் பதிகின்றன.

நாம் கடந்தகாலம்
என்கிற கண்ணாடியின்
வழியாகவே
எதிர்காலத்தைப்
பார்க்கிறோம்.
அதனால் எதிர்காலமும்
நமக்குத்
தெளிவாகத்
தெரிவதில்லை.

நம் ஆழ்மனம், இவற்றை
வெளிப்படுத்துவதற்கு எதைச் சரியான
நேரம் என்று நினைக்கிறதோ அந்த
நேரத்தில் இந்த நினைவுப் பதிவுகளை
வெளிப்படுத்துவதால், அவை நம் அனுமதி
இல்லாமலேயே வெளிவருகின்றன.
அதனால்தான், எளிதில் நம்மை விட்டு
விலகாத அடிமைப்பழக்கங்களாலும்
காரணமற்ற பயங்களாலும் (Phobia) நாம்
அலைக்கழிக்கப்படுகிறோம்.

பெரும்பாலான நேரங்களில் நாம் கடந்தகாலம் என்கிற கண்ணாடியின்

வழியாகவே
எதிர்காலத்தைப்
பார்க்கிறோம். அதனால் எதிர்காலமும்
நமக்குத் தெளிவாகத் தெரிவதில்லை.

இது, பின்னால் வரும் வாகனங்களைக் காட்டும் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே காரை ஓட்டுவது போன்றது. இப்படி ஓட்டினால் கார் எங்குச் செல்லும் என்பது உங்களுக்கே தெரியும். இருந்தாலும் நாம் நம் வாழ்க்கையை அப்படித்தான் செலுத்துகிறோம்.

நிகழ்காலம் என்பதுதான் ஒரே சாச்வதமான தருணம். இந்த உடல்-மன அமைப்பு நிகழ்காலத்தில் இருப்பதனால் மட்டும், நான் இதைச் சொல்லவில்லை. நிகழ்காலத்தில் நீங்கள் இருக்கும்போது மட்டும்தான் உங்களால் உங்கள் சக்தி மையத்தில் நிலை பெற முடியும்.

நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும் போதுதான், உங்கள் உடல்-மன அமைப்பு, உங்கள் உள்ளிருக்கும் சக்தி அமைப்பில் தம் கவனத்தைச் செலுத்த முடியும். நிகழ்காலத்தில் மட்டும்தான் உங்கள் உள் உரையாடல் நிற்கும்.

உங்கள் எண்ணங்கள் வேறொன்றும் கிடையாது, கடந்தகாலத்திலிருந்து எதிர்காலத்திற்கும் பின்பு எதிர்காலத்திலிருந்து கடந்தகாலத்திற்கும் உங்கள் மனம் ஓடும் ஓட்டம்தான் 'எண்ணங்கள்'. தொடர்ந்து ஊசலாடிக் கொண்டிருக்கும் மனத்தைத்தான் 'எண்ணங்கள்' என்று நீங்கள் சொல்கிறீர்கள். அதை நான் உள் உளறல் (Inner Chatter) என்று சொல்கிறேன்.

நீங்கள் நிகழ்காலத்தை அடைந்தவுடன் உங்கள் எண்ணங்கள் நின்று விடுகின்றன, உள் உளறல் நின்று விடுகிறது. அதன் பிறகு நீங்கள், உங்கள் சக்தியோடு இணைந்து இருப்பீர்கள். இந்த நிலைக்கு உங்களை எடுத்து வருவதற்கு உதவும் சாவிதான் த்யானம்.

கேள்வி: மறுபிறவி என்றாலே அது துக்கம்தான் என்று நான் எங்கோ படித்திருக்கிறேன். மனிதன் அனுபவிக்கும் துன்பத்தின் தொடர்ச்சிதான் மறுபிறவி. மறுபிறப்பின் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் அனைவரும் மறுபிறப்பில் இருந்து தப்பிக்கத் தீவிரமாக முயற்சி செய்கிறார்கள். இதனால் மறுபிறவியை நம்ப வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது?

மறுபிறவி எதிர்மறையானதும் கிடையாது, நேர்மறையானதும் கிடையாது. அது பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு வியத்தகு நிகழ்வாக இருக்கிறது. உடல்-மனம் பொருளாக இருந்து அழிகிறது. ஆத்மா சக்தியாக இருந்தது தொடர்ந்து வாழ்கிறது. மரணத்தைப் பொறுத்தவரையில் நம்மால் எப்படி எதுவும் செய்ய முடியாதோ, அதேபோல் மறுபிறப்பைப் பற்றியும் யாரும் எதுவும் செய்வதற்கில்லை. மரணம் நிகழ்கிறது. அதேபோல் மறுபிறப்பும் நிகழ்கிறது.

தீராத ஆசைகளால்தான் மறுபிறப்பு ஏற்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டாலாவது, ஆசைகளை அனுபவித்துத் தீர்ப்பதற்கோ அல்லது அவற்றைக் கடப்பதற்கோ நாம் முயற்சி செய்ய முடியும். அதன் மூலம் வேதம் சொல்லும் ஸம்ஸார ஸாகரத்திலிருந்து - அதாவது வாழ்க்கைக் கடலில்

நீங்கள்
நம்பவில்லை
என்பதற்காக
உண்மை
மாறிவிடப் போவதில்லை.

இருந்து, பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து நாம் விடுதலை அடைய முடியும்.

நீங்கள் எழுப்பிய கேள்வியின் ஒரு பகுதி சரியானதுதான். புத்தியுள்ளவர்கள் பிறப்பு, இறப்பு சுழற்சியில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்கள். அதன் மூலம் சக்தி வடிவில் இருக்கும் முக்தி நிலையை அவர்களால் அடைய முடியும். இந்த முயற்சியின் அடிப்படையில்தான் ‘தன்னை அறிதல்’ அல்லது ‘ஞானமடைதல்’ என்ற ஒரு கருத்தே உருவானது.

புத்தர் இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். துன்பத்திற்குக் காரணம் ஆசைகள் என்கிறார். ஆசைகளைத் தாண்டுவது எப்படி மற்றும் பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து வெளியேறுவது எப்படி என்று அவர் கற்றுத் தருகிறார். இந்தப் பிறப்பில் நாம் நம் கட்டுறு மனப்பாங்கால் உருவாக்கிக்கொள்ளும் ஆசைகளை அதாவது ஸம்ஸ்காரங்களைத்தான் புத்தர் ஆசைகள் என்று குறிப்பிடுகிறார். ஸம்ஸ்காரங்களைக் கரைத்துவிடும்போது நாம் ஸம்ஸாரத்தின் பிடியில் இருந்து விடுபட்டு விடுவோம். ’

இது நம்புவதையோ நம்பாததையோ பொறுத்தது அல்ல. நீங்கள் நம்பவில்லை என்பதற்காக உண்மை மாறிவிடப்போவதில்லை. ஐரோப்பியர்கள் ஒரு காலத்தில் உலகம் தட்டை என்றும் சூரியன் பூமியை சுற்றி வருகிறது என்றும் நம்பினார்கள். அதே போல் மறுபிறவி என்பதே கிடையாது, இந்தப் பிறவிதான் இறுதியானது என்று நம்புவதற்கு உங்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது.

நீங்கள் அப்படி நம்புவதால், நீங்கள் உன்னதமான மனிதராக மாறி விடுவீர்களா? அந்த நம்பிக்கை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமா?

உண்மையில் இந்த நம்பிக்கை உங்களின் தவிப்பை அதிகப்படுத்தும். நீங்கள் எதையெல்லாம் சேர்க்க வேண்டும், அனுபவிக்க வேண்டும், நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவற்றை எல்லாம் இந்த ஒரே பிறவியில் நீங்கள் சாதித்தே ஆக வேண்டும். எனும் இந்த வேட்கை, உங்கள் பேராசையையும் பயத்தையும் அதிகப்படுத்தும்.

உங்கள் உடல்-மனம் இறந்த பிறகும்கூட உங்கள் ஆத்மா வாழ்கிறது என்ற புரிதல் உங்களுக்கு மிகப்பெரிய சுதந்திரத்தைத் தந்துவிடும்.

நீங்கள் என்றும் வாழப்போகிறீர்கள்,
ஒரே ஒருமுறை பிறந்து, ஒரே ஒருமுறை
மட்டும் வாழ்ந்து இறக்கப்போவதில்லை
என்று உணரும்போது நீங்கள்
அவசரப்படவேண்டியதில்லை. அவசரப்பட்டு
நீங்கள் எடுத்த முடிவுகளுக்காகப் பின்னால்
வருத்தப்பட வேண்டிய அவசியமும்
இல்லை.

இதுதான் நாம் பிடிக்க வேண்டிய
கடைசி ரயில் என்று எதுவும் இல்லை.
எதையும் தேர்ந்தெடுக்காமலேயே
உங்களால் வாழ முடியும், காரணம்
நீங்கள் எப்பொழுதும் வாழ்ந்துகொண்டுதான்
இருக்கப் போகிறீர்கள்.

உங்கள்
உடல்-மனம்
இறந்த பிறகும்கூட
உங்கள் ஆத்மா
வாழ்கிறது என்ற
புரிதல் உங்களுக்கு
மிகப்பெரிய
சுதந்திரத்தைத்
தந்துவிடும்.

இந்தச் சுதந்திரத்தைத்தான் நம் வேத கால ரிஷிகள் உணர்ந்திருந்தார்கள். அவர்கள் அனுபவித்த அதே ஆனந்தத்தை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத் தாங்கள் உணர்ந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

hands playing flute
Lord Krishna