மரணம்-முடிவல்ல புதிய வாழ்க்கையின் துவக்கம்!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஏசுநாதர் சொன்ன வாக்கியம், "ஆபிரகாSandboxமிற்கு முன்பே நான் இருந்தேன்." ஆனால் இந்த வாசகத்திற்கு இன்றைய பைபிளில் அதிக முக்கியத்துவம் தர மறுக்கிறார்கள். இது துரதிர்ஷ்டமானது.
இதுவும் கிருஷ்ணர் கீதையில், "நான் சூரியனுக்குக் கற்றுக் கொடுத்தேன்," என்று சொல்வதைப் போன்றதுதான். ஆத்மா இந்த உடலைத்தாண்டி வாழ்கிறது; உடலளவில் மரணம் அடைவது நமக்கு இறுதியான முடிவு அல்ல என்பதைத்தான் ஏசுவும் குறிப்பிடுகிறார்.
பிறப்பு இறப்பு என்கிற இந்தச் சுழற்சி ஒரு புதிர், ஒரு அற்புதம். பலர் தங்கள் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பல விளக்கங்களைக் கொடுத்திருந்தாலும்கூட, நம் தர்க்க மனத்திற்குத் தெளிவைத் தரும் அறிவியல் விளக்கங்கள் எதுவும் இல்லை. கதிர் இயக்க ஆற்றலியல் (Quantum Physics) மற்றும் உயிரணுவியல் (Molecular Biology) போன்ற துறைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. அதனால் விரைவில் இதற்கான அறிவியல் ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
ஆத்மா தொடர்ந்து வாழ்கிறது என்ற ஸத்யத்தை ஏற்றுக்கொள்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், கொடுத்துவைத்தவர்கள்! இதை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள், அவ்வளவுதான்.
வாழ்க்கையோடும், மரணத்தோடும்
நம்மால் சண்டையிட முடியாது. அவை
இரண்டும் நம்மைத் தாண்டி இருக்கிறது.
நம் கட்டுப்பாட்டில் அவை இல்லை.
மரணத்தைப் பார்த்து அதிசயிக்கவும்
ஆனந்தப்படவும் சந்தோஷப்படவும் மட்டுமே
நம்மால் முடியும். இல்லாவிட்டால்,
தொடர்ந்து ஏற்றுக்கொள்ளாமல், கேள்விகளை
எழுப்பிக்கொண்டு, துக்கத்திலேயே இருக்க
முடியும். இந்த இரண்டுவித வாய்ப்புகள்தான்
இருக்கின்றன. இந்த இரண்டில் ஒன்றைத்
தேர்ந்தெடுக்கும் விருப்பம் உங்களைப்
பொறுத்ததே!
> பிறப்பு இறப்பு
> என்கிற சுழற்சி
> ஒரு புதிர்!,
> ஒரு அற்புதம்!
பாகவதத்திலிருந்து ஒரு சின்ன கதை
பாகவதத்தில்யயாதி என்ற புகழ்பெற்ற மன்னன் நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழ்ந்தார். அவருடைய ஆயுட்காலம் முடிந்தபிறகு, மரணக் கடவுளான யமதர்மன் சென்று யயாதியை அழைத்தபோது, யயாதி தம்மை இன்னும் சிறிது காலம் வாழ அனுமதிக்கும்படிகெஞ்சினார். தான் வாழ்க்கையை முழுமையாக வாழவில்லை என்றும், அதனால் இன்னும் கொஞ்ச நாள் வாழ வேண்டும் என்றும் கேட்டார். யமன் மனம் இறங்கினார். “யயாதியே நீ வாழ வேண்டும் என்றால் உன்னுடைய புதல்வர்களில் யாராவது ஒருவருடைய உயிரை நீ எனக்குத் தர வேண்டும்,” என்றும் நிபந்தனை விதித்தார்.
> மரணம் நம்மை
> ஒருபோதும்
> அச்சுறுத்துவதில்லை.
> நம்முடைய
> நிறைவேறாத
> ஆசைகளும்,
> முற்றுப் பெறாத
> வாழ்வும்தான்
> நம்மை
> பயமுறுத்துகின்றன.
அப்படியே ஒரு மகனுடைய வாழ்க்கையைப்
பலி கொடுத்து நீண்ட நாட்கள் யயாதி
வாழ்ந்தார். இறுதியில், தாம் எத்தனை
வருடங்கள் வாழ்ந்தாலும் சரி, உலகியல்
ரீதியான ஆசைகள் தீரப்போவதில்லை
என்பதைப் புரிந்து கொண்டார்.
ஐம்புலன்களினால் அனுபவிக்கும்
பொருட்களின் மூலம் ஒருநாளும்
தமக்கு ஆனந்தம் வரப் போவதில்லை
என்பதை உணர்ந்தார், யமனுடன் செல்லச்
சம்மதித்தார். மரணம் நம்மை ஒருபோதும்
அச்சுறுத்துவதில்லை. நம்முடைய
நிறைவேறாத ஆசைகளும், முற்றுப் பெறாத
வாழ்வும்தான் நம்மை பயமுறுத்துகின்றன.
பிரச்சினை என்னவென்றால் முழுமையான, திருப்தியான வாழ்வை வாழ்வது எப்படி என்று நமக்குத் தெரிவதில்லை. நம் வாழ்க்கையை நேர்மையான விதத்தில் அமைத்துக்கொள்வது எப்படி, அதன்மூலம் நம்

ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வது எப்படி என்பது நமக்குத் தெரிவதில்லை. நம்முடைய எல்லா ஆசைகளும் அரைகுறையாகத்தான் அனுபவிக்கப்படுகின்றன. காரணம் நாம் ஒரு ஆசையை அனுபவிப்பதற்கு முன் அடுத்த ஆசையை நோக்கி ஓடி விடுகிறோம். நாம் எதைச் செய்கிறோமோ, எதை அனுபவிக்கிறோமோ, அதற்கு முழுமையான கவனத்தையும் விழிப்புணர்வையும் நாம் தருவதில்லை.
ஒரு எளிமையான உண்மை
என்னவென்றால், ஆனந்தமாக இருப்பது
எப்படி என்பதே நமக்குத் தெரியவில்லை.
நாம் அழிவதில்லை, நம் ஆத்மா தொடர்ந்து வாழ்கிறது என்ற ஸத்யத்தைப் புரிந்து கொண்டால் உண்மையான மகிழ்ச்சியில், நித்யானந்தத்தில் நம்மால் நிலைத்து நிற்க முடியும்.
மரணமும் ஒரு முடிவு அல்ல. அது ஒரு பயணப்பாதைதான். வெறும் வெளியுலக இன்பங்களால் நம் ஆத்மா திருப்தியடைவதில்லை என்பதுதான் மிக முக்கியமான உண்மை. ஐம்புலன்களின் மூலம் நீங்கள் எவ்வளவுதான் இன்பங்களை அனுபவித்தாலும் உங்களால் திருப்தியை உணர முடியாது.
எந்த அளவிற்கு ஐம்புலன்களின் வழியாக இன்பங்களை அனுபவிக்கிறீர்களோ, அந்த அளவிற்கு இன்பங்களின் தேவை அதிகமாகும். அது என்றும் முடிவதில்லை. புலனின்பங்களைப் பற்றிய திருப்தியின்மை மட்டும்தான் நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிவாகும்.
வாழும் கலையை அறிந்தால்தான் சாகும் கலையையே அறிய முடியும்
ஏற்கெனவே ஆன்மீகத்தைப் பற்றி மக்கள் குழப்பம் அடைந்து இருக்கிறார்கள். ஆன்மிம் என்பது எளிதில் புரியாத ஒரு புதிரும் அல்ல; பிடிபடாத ஒரு விஷயமும் அல்ல.
வாழ்க்கையை முழுமையாகப் புரிந்துகொண்டு, அதனை முழுமையாக அனுபவிப்பதுதான் ஆன்மீகம். பொருள் ரீதியாக, உடல் ரீதியாக, உணர்ச்சி ரீதியாக, உறவுகள் ரீதியாக என்று எல்லா வகையிலும் திருப்தியாகவும் அதே சமயம் பொறுப்புணர்வுடன் வாழ்வை ஆனந்தமாக அனுபவிப்பதுதான் ஆன்மீகம். அந்த ஆனந்தமும் பொறுப்புணர்வும் விழிப்புணர்வால் மட்டுமே மலரும்.
நம் கவனத்தை நிகழ்காலத்திலேயே வைத்திருக்கும் நமது திறனைப் பொறுத்துதான் விழிப்புணர்வு தோன்றும். அப்பொழுதுதான் நம் மனம்
கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் தாவுவதை நிறுத்தும். கடந்தகாலக் குற்ற உணர்ச்சிகளுக்கும் எதிர்காலக் கற்பனைகளுக்கும் தாவுவதை நம் மனம் நிறுத்தும்.
நிகழ்காலத்தில் மட்டும்தான் நாம் உண்மையில் வாழ்வை உணர்கிறோம். அப்பொழுது மட்டுமே நாம் உண்மையாக விழித்திருக்கிறோம். மற்ற நேரங்களில் நம் கண்கள் திறந்திருந்தாலும் நாம் ஆழ்ந்த உறக்கத்தில்தான் இருக்கிறாம். உயிருடன் இறந்து இருக்கிறோம்! ஆனாலும் நடக்கும் பிணங்களான நாம் மரணத்தைக் கண்டு பயப்படுகிறோம்!
ஒருவர் கடவுளை நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, தமக்குள் இருக்கும் தெய்வீகத்தை ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி அவர், மரணத்திற்குப் பிறகான வாழ்வைப் பற்றி எப்படிப் புரிந்துகொள்கிறார் என்பதுதான் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
கடவுளை நம்புவதை விட்டுவிட்டு,
அறிவியலை நம்பினாலும் நாம் பிறக்கும்
முன்பு நம் முகம் எப்படி இருந்தது, இறந்த
பிறகு நாம் எப்படி இருக்கப் போகிறோம்
போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை.
பிறப்பதற்கு முன்பு, இறந்த பின்பு
என்ற இரண்டு நிலைகளைப் பற்றியும்
நமக்கு எந்த விடைகளும் இல்லை.
ஆத்மாவின் வடிவத்தில், சக்தி நிலையில்
வாழ்க்கையைப்
பற்றிய
முழுமையான
புரிதலும் வாழ்வை
முழுமையாக
அனுபவிப்பதும்தான்
ஆன்மிகம்.
நாம் தொடர்ந்து வாழ்கிறோம் என்ற புரிதல் மூலம்தான் இந்தக் கேள்வியை நாம் புரிந்துகொள்ள முடியும்.
மனத்திரை விலகிட, உள்ளுக்குள் நிகழ்ந்திடும் பிரபஞ்சத்தின் இயக்கத்தையே காணலாம்
ஒரு ஜென் ஞானியிடம் கேட்டார்கள், "இப்பொழுது நீங்கள் ஞானம் அடைந்துவிட்டீர்கள். இப்பொழுது உங்களைச் சுற்றியுள்ளவற்றை பார்க்கும்போது என்ன நினைக்கிறீர்கள்? முன்பு பார்த்ததற்கும் இப்பொழுது பார்ப்பதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?"
ஞானி அழகாகச் சொன்னார், “ஞானம் அடைவதற்கு முன்னால், மலையை மலையாகப் பார்த்தேன். நதியை நதியாகப் பார்த்தேன். ஞானம் அடைவதற்கான ஸாதனைகளில் ஈடுபட்டிருந்தபோது மலை மலையாகவே இல்லை. நதி நதியாக இல்லை. இப்பொழுது ஞானம் அடைந்த பிறகு, மீண்டும் நான் மலையை மலையாகவே பார்க்கிறேன். நதியை நதியாகவே பார்க்கிறேன்."
ஞானி என்ன சொல்ல வருகிறார்? ஆன்மிகப் பயிற்சிகளில் ஈடுபடும் முன் மலை, நதி போன்றவற்றின் உருவத்தை மட்டுமே பார்த்தேன். ஸாதனை காலத்தின்போது மலை, நதி இவற்றை இயக்கும் சக்தியை உணர்ந்தேன். அப்பொழுது எல்லாவற்றையுமே சக்தியின் வடிவங்களாகப் பார்த்தேன். ஞானம் அடைந்த பிறகு, எல்லாப் பொருட்களின் உண்மையான தன்மையே சக்திதான் என்பதைப் பார்க்கிறேன் என்கிறார்.
கிருஷ்ணர் சொல்கிறார், “எது நிலையானதோ
எது உண்மையோ அது வடிவம் எடுப்பதற்கு
முன்பு வடிவமற்றதாகவே இருந்தது. மீண்டும்
அது வடிவமற்றதாகவே போகப்போகிறது;
எல்லாமே எப்பொழுதும் அடுத்த நிலை
மாற்றத்திற்குள்ளாகும் நிலையில்தான்
இருந்து கொண்டிருக்கிறது.”
ஒவ்வொரு நிமிடமும் நாம் இறக்கிறோம். ஒவ்வொரு நிமிடமும் நாம் பிறக்கிறோம். நம் உடல்-மன அமைப்பில் இருக்கும் பல லட்சக்கணக்கான செல்கள் ஒவ்வொரு நாளும் இறக்கின்றன. புதிய செல்கள் பிறக்கின்றன.
இந்த எல்லா மாற்றங்களுக்கு நடுவிலும் மாறாமல் ஒன்று இருக்கிறது. என்றும் மாறாத அந்த ஒன்றை நம்மால் பார்க்க முடியாது, தொட முடியாது, உணரவும் முடியாது நம் உடல்-மன அமைப்பு, நமக்குள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களையும் எல்லா இயக்கங்களுக்குள்ளும் பொதுவானதாக இருக்கும் அந்த சக்தியையும் நமக்குத் தெரியாமல் மறைத்து விடுகிறது.

