மரணம் ஒரு பாதை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஓ சக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொண்டவனே, ஆத்மாவானது தொடர்ந்து பிறக்கிறது, தொடர்ந்து இறக்கிறது என்று நினைத்தாலும் அதற்காக நீ கவலைப்படத் தேவையில்லை.
உண்மையில், எது பிறந்ததோ அதற்கு இறப்பு நிச்சயம். எது இறந்ததோ அதற்குப் பிறப்பு நிச்சயம். அதனால் தவிர்க்க முடியாதவற்றிற்காக நீ துக்கப்படுவது பொருத்தமானதன்று.
ஓ பாரதா! உயிர்கள் தொடக்கத்தில் வடிவமற்று இருக்கின்றன. முடிவில் வடிவமற்று இருக்கின்றன. இதற்கு இடைப்பட்ட காலத்தில் வடிவம் பெற்று 'இருப்பதுபோல்' இருக்கிறது. இதில் நாம் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?
இதையும் அற்புதம் என்று ஒருவர் பார்க்கிறார், 'இது அற்புதம்' என்று இன்னொருவர் பேசுகிறார், 'எது அற்புதம்' என்று இன்னொருவர் கேட்கிறார். இதையெல்லாம் கேட்ட பிறகும்
கூட, ஒருவர் கூட இதைப் புரிந்துகொள்ளவே இல்லை.
2.30 ஓ பாரதா, உடலில் வாழும் இதை யாராலும் அழிக்க முடியாது. படைப்பில் எந்த உயிருக்காகவும் நீ கவலைப்படாதே!
கிருஷ்ணர் சொன்னது சாத்தியமே என்பதற்கான ஆதாரம்
இந்த ஸ்லோகங்களின் மூலம் கிருஷ்ணர் சொல்லும் ஸத்யத்தை ஆழ்ந்து உணர்ந்துவிட்டால், எந்த மாதிரியான மரண பயத்திலிருந்தும் நீங்கள் வெளிவந்து விடுவீர்கள். சொல்லப்போனால், மரணத்தை நீங்கள் கொண்டாடத் தொடங்கி விடுவீர்கள்.
சில வருடங்களுக்கு முன்னால் இந்தியாவில் ஒரு இடத்தில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தபோது, என்னுடைய தந்தை இறந்துவிட்டார் என்ற தகவல் எனக்கு வந்தது. ஆனாலும் நான் தொடர்ந்து அந்தச் சொற்பொழிவைப் பேசிமுடித்தேன். அன்றைய இரவு நானும் என்னுடைய பக்தர்கள் பலரும் தந்தையின் உடல் வைக்கப்பட்டிருந்த திருவண்ணாமலைக்குப் புறப்பட்டுப் போனோம்.
அன்றைக்கு நடந்தவற்றை வீடியோ எடுத்து வைத்திருக்கிறார்கள். அந்த வீடியோவில் என்னுடைய தாய் அழுவதை நீங்கள் ஒருமுறைகூடப் பார்க்க முடியாது. என்னுடைய தாய் கிராமத்தில் ஆசாரமான குடும்பத்தில் வளர்ந்தவர்கள். கிராமத்தில் எப்பொழுது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள்.
கிருஷ்ணர் சொல்லும் ஸத்யத்தை ஆழ்ந்து உணர்ந்துவிட்டால், எந்த மாதிரியான மரண பயத்திலிருந்தும் நீங்கள் வெளிவந்து விடுவீர்கள்.
ஒருவருடைய கணவர் இறக்கும்போது இயற்கையாகவே துக்கம் வந்துவிடும். அதிலும் என்னுடைய தாயும் தந்தையும் மிக அந்நியோன்யமானவர்களாக இருந்தார்கள். அவருடைய இறப்பு என் தாய்க்கு மிகப் பெரிய இழப்பாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் நான் எந்த விளக்கத்தையும் கொடுக்காமலேயே, கிருஷ்ணர் இங்குச் சொன்ன ஸ்லோகங்களின் உட்பொருளை அவர் உணர்ந்திருந்தார். அம்மாவிடம், "அம்மா, அப்பா இப்பொழுது சக்தி வடிவத்தில் நித்யானந்தத்தில் இருக்கிறார்," என்று சொன்னபோது, அதை அவர்கள் முழுமையாக நம்பினார்கள். என்னுடன் சேர்ந்து மரணத்தைக் கொண்டாடத் தொடங்கினார்கள். நம்முடைய பக்தர்கள் பலர் இந்த வீடியோவைப் பார்த்திருக்கிறார்கள்.
கிருஷ்ணர் இங்கே சொல்வதை
விளக்குவதற்காகவே அந்த வீடியோ
எடுக்கப்பட்டது. கிருஷ்ணரின் சொற்கள்
எப்படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
என்பதை அதில் நீங்கள் பார்க்க முடியும்.
பார்த்தால், மரணத்தைப் பற்றிய எல்லாப்
பயங்களையும் நீங்கள் துறந்துவிட முடியும்.
மரணம் என்பதே
ஒரு
கொண்டாட்டம்தான்.
இந்த உண்மையை விளக்கும் இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. என்னுடைய தந்தை இறந்த பிறகு, ஒரு சீடருடைய தகப்பனார் இறந்தார். அவருடைய குடும்பத்தினர் உடலை பிடதி ஆச்'ரமத்தில் தகனம் செய்ய வேண்டுமென்றும், நான் அதற்குக் கடைசிக் கால ஈமச் சடங்குகளைச் செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்கள்.

அந்தச் சடங்குகள் எல்லாம் முடிந்தபிறகு, அந்தத் தாயின் முகத்தில் இருந்த அமைதியைப் பார்த்த பலரால் நம்ப முடியவில்லை. பொதுவாக இந்து கலாச்சாரத்தில் ஒரு விதவை எப்படி இருப்பார் என்பது அவர்களுக்குத் தெரியுமாதலால், அவர்கள் அவரிடம் "எப்படி உங்களால் ஆனந்தமாக இருக்க முடிகிறது?" என்றபொழுது, அந்தத் தாய் "உடலை விட்ட பிறகும் கூட அவருடைய ஆத்மா வாழ்கிறது. அந்த ஆத்மா சாந்தி அடைந்துள்ளது என்பதை நான் நம்புகிறேன்," என்று எளிமையாகப் பதிலளித்தார்.
இங்கு நாம் தத்துவஞானிகள் அல்லது துறவிகளைப் பற்றிப் பேசவில்லை. மரணத்தைப் பற்றிய பயமும், மரணத்தின்போது துக்கத்தை மட்டுமே உணரும் சாதாரணமான மனிதர்களைப் பற்றிப் பார்க்கிறோம். ஆனால் கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்பதை அவர்கள் மிக எளிமையாக உணர்ந்து கொண்டார்கள். மரணத்திற்குப் பிறகும் ஆத்மா வாழ்கிறது. அதனால் மரணம் என்பதே ஒரு கொண்டாட்டம்தான். துக்கத்திற்கு இடமில்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.
இனிமையோடு ஏற்றுக்கொள்பவருக்கு மரணமும் கொண்டாட்டமே!
கீதை என்ன சொல்கிறது என்பதைப் பற்றிப் புத்திப்பூர்வமாக மட்டுமே தெரிந்துவைத்திருக்கும் பண்டிதர்களுக்கு, கிருஷ்ணர் மேல் நம்பிக்கை இருக்காது. அதனால் அவர்கள் தொடர்ந்து மரணத்தைப் பார்த்துப் பயந்து கொண்டிருப்பார்கள். மரண பயத்திலிருந்து விடுபடுவது எப்படி என்பதைப் பற்றித் தத்துவ ரீதியாக மிக அருமையாகப் பேசுவார்கள், மரணம், அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வரை!
ஆனால் தங்களுடைய நெருங்கிய
சொந்தத்திற்கோ அல்லது தங்களுக்கோ
மரணம் வருகிறது என்ற நிலை ஏற்பட்டால்,
அவர்களுடைய தர்க்க ரீதியான கருத்துகள்
எல்லாம் ஒரு நொடியில் உடைந்துவிடும்.
கிருஷ்ணருடைய வார்த்தைகள் தர்க்கத்தைப் பற்றியது அல்ல, குருவின் மேல் இருக்கும் ஆழமான நம்பிக்கையைப் பற்றியது.
கிரேக்கத் தத்துவஞானி சாக்ரடீஸிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏனென்றால் அவருடைய கருத்துகளை அந்தச் சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. எதையும் கேள்வி கேட்கும் அவருடைய போக்கு மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஒன்று, அவர் தம் கொள்கைகளை கைவிட்டுவிட வேண்டும் அல்லது விஷத்தைக் குடித்து உயிர்விட வேண்டுமென்று சொன்னார்கள். சாக்ரடீஸ் மரணத்தைத் தேர்ந்தெடுத்தார்!
மரணத்தை அமைதியாக எதிர்நோக்கியிருந்த அவரிடம், அவருடைய சீடர்கள், "குருவே உங்களுக்கு இறந்து விடுவோம் என்று பயம் இல்லையா?" என்று கேட்டார்கள்.
சாஃக்ரடீஸ் சொன்னார், "மரணத்தில் இரண்டு
விதமான சாத்தியங்கள்தான் இருக்கின்றன.
ஒன்று, மரணத்திற்குப் பிறகும் வாழ்க்கை
இருக்கும். அப்படியென்றால், நான்
தொடர்ந்து இருப்பேன்.
அடுத்த சாத்தியம், மரணத்திற்குப் பிறகு
வாழ்க்கை இருக்காது. அப்படியென்றால்
மரணத்திற்குப் பிறகு என்ன நடந்தாலும்
அது எனக்குத் தெரியப் போவதில்லை.
அதனால் இந்த இரண்டில் எது நடந்தாலும்
அதைப்பற்றிக் கவலைப்பட என்ன
இருக்கிறது?"
மரணம் என்பது தவிர்க்க முடியாதது. மரணத்திற்குப் பிறகும் ஆத்மா தொடர்ந்து வாழுமா அல்லது இன்னொரு உடலை எடுத்துக்கொள்ளுமா என்பது இன்னமும் சிலருக்கு ஒரு விவாதத்திற்குரிய கருத்தாகவே இருக்கலாம். ஆனால்
மரணத்தைப் பற்றிக் கவலைப்படுவதற்கு இதை காரணமாக நாம் வைத்துக் கொள்ளவேண்டியதில்லை என்கிறார் கிருஷ்ணர். சாஃக்ரடீஸைப்போல், இரண்டில் எது நடந்தாலும் மரணம் என்பது ஒரு பயணம்தான் என்று அதை ஏற்றுக்கொள்ள முடியும்.
மரணத்திற்குப் பிறகு அழிவற்ற ஆத்மா, ஆத்மாவாகவே இருக்குமா அல்லது மறுபிறப்பு எடுக்குமா என்பதும், மரணத்திற்குப் பிறகு சொர்க்கம் அல்லது நரகம் என்ற இடத்திற்கு உயிர் செல்கிறதா இல்லையா என்பதும் விவாதத்திற்குரிய ஒரு கருத்தாகவே இருக்கிறது. எதை நம்ப வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதை நம்பலாம்.
மேற்கத்திய மதங்கள் பிறப்பு இறப்பு சுழற்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. மரணம் நிரந்தரமானது என்று அவர்கள் நம்புவதாகச் சொல்லலாம். அப்படி இருந்தால்கூட, கவலைப்படுவதற்கு அதில் என்ன உள்ளது?

அதிசயத்திலும் அதிசயம் உங்களுக்குள் புதைந்திருக்கும் ஞானத்திற்கு உயிரூட்டுவதே!
மரணம் தவிர்க்க முடியாதது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
அதைப் பற்றிய ஒரு சின்ன கதை:
மிகுந்த துயரத்தோடு ஒரு பெண் புத்தரைச் சந்தித்தார். அவர் தம் கையில், தம் மகனின் சடலத்தை ஏந்தியிருந்தார். "குருவே, இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தி இந்த உலகத்தில் உங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று சொல்கிறார்கள். என்னுடைய மகனுக்கு உயிர் கொடுங்கள்," என்று வேண்டினார்.
தாம் என்ன சொன்னாலும் அதை
ஏற்றுக்கொள்ளும் நிலையில் அந்தத் தாய்
இல்லை என்பதைப் புத்தர் உணர்ந்தார்.
அதனால் "பெண்ணே எந்த வீட்டில் மரணம்
நிகழவில்லையோ அந்த வீட்டில் இருந்து
ஒரு கைப்பிடி கடுகைக் கொண்டுவா. நான்
உன் மகனுக்கு உயிரைக் கொடுக்கிறேன்,"
என்றார்.
ஒரு கைப்பிடி கடுகிற்காக அந்தப் பெண் வீடுவீடாகச் சென்றார். எல்லோரும் அவர் கேட்பதைக் கொடுப்பதற்குத் தயாராக இருந்தார்கள். ஆனால் எல்லோரும் தங்களுடைய வீட்டிலும் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்றும், அதனால் தாங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்றும் சொன்னார்கள். எங்கும் அதே பதில்தான் கிடைத்தது. பக்கத்து கிராமங்களுக்கெல்லாம்கூட அவர் சென்றார் ஆனால் அங்கும் அதே பதில்தான் அவருக்குக் கிடைத்தது.
அவர் புத்தரிடம் திரும்பிவந்து, "குருவே மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை நான் உணர்ந்து கொண்டேன். இந்த உயர்ந்த ஸத்யத்தை எனக்கு உணர்த்தியதற்காகத் தங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எஞ்சிய என் வாழ்நாள்களை உங்கள் காலடிலேயே கழிக்க என்னை அனுமதியுங்கள். என்னை உங்களுடைய சிஷ்யையாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்றார். இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் கொடுப்பது என்பது அதிசயம் கிடையாது. சில சூழ்நிலைகளில் அப்படிச் செய்ய முடியும். ஆனால் மனிதர்களுக்குள் உயர்ந்த உணர்வு மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களுக்குள் ஸத்யங்களை நிலைக்கச் செய்வதுதான் மிகப் பெரிய அதிசயம். அதை ஒரு உண்மையான குருவால்தான் செய்ய முடியும்.
பிறப்பிற்கு முன்பே இருந்தவர்கள் நீங்கள்
நம்மில் பலர், 'வாழ்க்கை ஓர் அதிசயம்' என்றே நம்புகிறோம். அது உண்மைதான். வாழ்க்கை அழகானது, அற்புதமானது! நமக்கு வாழ்க்கை எப்படி உருவானது என்பது தெரியாது. உயிரியல் ரீதியாக உடல் எப்படி உருவாகிறது என்று வேண்டுமானால் அறிவியலால் விளக்க முடியும்.
ஆனால் இன்றுவரை உலகம் இப்படித்தான் தோன்றியது என்று நிரூபிப்பதற்கு எந்தத் தடயங்களும் இல்லை. பிக் பேங்க் தியரி (Big Bang Theory) போன்ற யூகங்களை அடிப்படையாகக்கொண்ட பல தத்துவங்கள் இருக்கின்றன. 'பிங்-பேங்க்'கிற்கு முன், என்ன இருந்தது என்பது பற்றி யாருக்கும் தெரியாது.
புத்தர் அழகாகச் சொல்கிறார், "இந்தப் பிரபஞ்சத்தை பிரபஞ்சமே உருவாக்கியது. அது என்றும் இருந்தது; என்றும் இருக்கும்" இந்தப் பிரபஞ்சத்தில் முதல் உயிர் எப்படித் தோன்றியது என்று யாருக்கும் தெரியாது. மீண்டும், பல யூகக் கருத்துகள் மட்டுமே இதற்கு விடைகளாக இருக்கின்றன.
உயிரில்லாத பொருட்களில் இருந்து உயிர்
தோன்றியது என்று சிலர் சொல்கிறார்கள்.
ஆனால் அதற்கு விஞ்ஞானப்பூர்வமான
ஆதாரங்கள் இல்லை. முதல் உயிர் எப்படியோ
தோன்றியது. ஒரு நாள் காலையிலோ,
மாலையிலோ அல்லது இரவிலோ
உயிர்களுக்கு அடிப்படை தேவையான
அமினோ என்ற அமிலம் எங்கிருந்தோ
தோன்றியது.
நமக்குத் தெரிந்ததெல்லாம், இப்போது வாழ்க்கை இருக்கிறது என்பது மட்டும்தான். நமக்கு முன் இருக்கும் இந்த
> இந்தப் பிரபஞ்சத்தில்
> முதல் உயிர்
> எப்படித் தோன்றியது
> என்று யாருக்கும்
> தெரியாது.
> பல யூகக் கருத்துகள்
> மட்டுமே
> இதற்கு விடைகளாக
> இருக்கின்றன.
வாழ்க்கையைப் பார்த்துப், படைப்பைப்
பார்த்துப் பரவசப்படத்தான் நம்மால்
முடியும்.
தோற்றத்திற்கு முன்பு என்ன நடந்தது,
மறைவிற்குப் பிறகு என்ன நடக்கும்
என்பதெல்லாம் கேள்விகளாலும்
புதிர்களாலும் மூடி மறைந்துள்ளது. நாம்
எதை நம்புகிறோமோ அதை நம்ப மட்டுமே
முடியும். ஆனால் அதைப் பற்றி நமக்கு
ஒன்றும் தெரியாது. ஏனென்றால் அதை நாம்
அனுபவப்பூர்வமாக உணர்ந்ததில்லை.
நினைவுக்கெட்டாக் காலந்தொட்டே மனிதனுக்குள் இந்தக் கேள்விகள் இருந்து கொண்டே இருக்கின்றன. இந்த வாழ்க்கைக்குப் பின் என்ன நடக்கிறது, இன்னும் சரியாகச் சொல்லப் போனால், மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது? பிறப்பதற்கு முன்பு நாம் எப்படி இருந்தோம்?
ஜென் ஸூத்ரம் ஒன்று, “உங்கள் பெற்றோர்கள் பிறப்பதற்கு முன்பு இருந்த உங்கள் முகம் எப்படி இருந்தது?” என்று கேட்கிறது.
அது என்ன? இந்தக் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டால், பிறப்பு இறப்பைப் பற்றிய புதிரை நீங்களே அவிழ்த்து விடுவீர்கள். அப்படித்தானே?
பிறப்பிற்கு முன்னால் நாம் எப்படி இருந்தோம் என்று வெறுமனே கற்பனை செய்து பார்த்தால்கூட, அந்த முயற்சியே நமக்குப் புதிய கதவுகளைத் திறந்துவிடும். அந்த வாய்ப்பைத்தான் இந்த ‘ஜென் கோன்’ (Zen Koan) நமக்குத் தருகிறது.
பிறப்பிற்கு முன் இருந்த நம் முகத்தைப் பார்க்க வேண்டுமென்றுகூட அவசியம் இல்லை. பிறப்பிற்கு முன்னும் நாம் இருந்தோம், இப்பொழுதும் இருக்கிறோம், மரணத்திற்குப் பிறகும் நாம் இருப்போம் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டாலே, அதன் பின் உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழும் விதமே மாறிவிடும். அதற்குப்பிறகு மரணத்தைப் பார்த்து நீங்கள் பயப்படமாட்டீர்கள். ஏனென்றால் பிறப்பிற்கு முன்பே நீங்கள் இருந்தீர்கள்!