KAILASA Library/பகவத்கீதை/வெற்றியால் வரும் மன அழுத்தம் பற்றி ஜாக்கிரதையாக இருங்கள்Sign in
பகவத்கீதை

வெற்றியால் வரும் மன அழுத்தம் பற்றி ஜாக்கிரதையாக இருங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna

கேள்வி: ஸ்வாமிஜி வெற்றியடைவதால் வரும் மன அழுத்தத்தைப் பற்றி நீங்கள் சொல்கிறீர்கள். இளம் வயதில் ஒருவருக்கு அடிக்கடி மன அழுத்தம் வந்தால் என்ன செய்வது? அவரால் மன அழுத்தத்திலிருந்து வெளிவர முடியுமா?

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் எந்த வகையான மனஅழுத்தத்தை அனுபவித்திருந்தாலும் அது தோல்வியால் ஏற்பட்ட மனஅழுத்தம்தானே தவிர, வெற்றியால் வந்த மனஅழுத்தம் அல்ல. நீங்கள் சாதிக்க வேண்டுமென்று நினைத்த பொருள் ரீதியான இலக்குகளை அடைய முடியாமல் இன்னமும் போராடிக் கொண்டிருந்தீர்களானால், அதை அடைய முடியாமல் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்துக் கொண்டிருந்தீர்களானால், நீங்கள் இன்னும் வெற்றியால் வந்த மன அழுத்தத்தை அனுபவிக்கவில்லை என்று அர்த்தம்.

வாழ்வில் அதிகம் பக்குவப்பட்டவர்களுக்குத்தான், வெற்றியினால் விளையும் மனஅழுத்தம் நிகழும். அந்த வகை மனஅழுத்தம் கடவுள் நமக்குத் தரும் பரிசு. அது வாழ்வின் மிகச் சிறந்த சுகம், வாழ்க்கையில் அதைவிடச் சிறந்த, உயர்ந்த சுகம், சௌகரியம் கிடையாது. அதனால் அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

இந்தவகை மனஅழுத்தத்தை அனுபவிப்பதற்கு உங்களுக்கு இரண்டு விஷயங்கள் தேவை. முதலாவதாக, உங்களுடைய எல்லாப் புறவுலக ஆசைகளும் நிறைவேறியிருக்க வேண்டும். இரண்டாவதாக, உங்களுக்குப் புத்திசாலித்தனம் வேண்டும். இந்த இரண்டும் இருக்கும்போதுதான் அதாவது வெளியுலக சௌகரியங்கள் மற்றும் அனைத்தையும் கடந்து பார்க்கக்கூடிய புத்திசாலித்தனம் இவை இரண்டும் இருந்தால்தான், வெற்றியினால் வரும் மனஅழுத்தத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்.

தோல்வியினால் உங்களுக்கு மன அழுத்தம் வந்திருந்தால், அதை மன அழுத்தம் என்றே சொல்ல முடியாது. அது வெறும் தோல்வி, அவ்வளவுதான்.

என்னிடம் மக்கள், "நாங்கள் அமெரிக்காவிற்கு வந்தபோது போதுமான சொத்துகள் இல்லை. இன்று நாங்கள் கோடீஸ்வரர்களாக இருக்கிறோம்; எவையெல்லாம் வேண்டுமென்று ஆசைப்பட்டோமோ அவையெல்லாம் கிடைத்துவிட்டன. ஆனால் எதற்காக அவற்றை விரும்பினோமோ அந்தக் காரணம் மறந்துவிட்டது!" என்று சொல்கிறார்கள்.

ஏன் நீங்கள் செல்வந்தராக வேண்டுமென்று நினைத்தீர்கள்? என்று கேட்டால் இதற்கு மிக எளிதாக உங்களால் பதில் சொல்லிவிட முடியும். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்பதற்காகச் செல்வத்தை விரும்பினோம் என்று எளிதாகச் சொல்லிவிடலாம்.

மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீங்கள் எல்லாவற்றையும் அடைய விரும்பினீர்கள். நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமான சொத்து சுகங்கள் இன்று உங்களுக்கு வந்துவிட்டது. ஆனாலும் நீங்கள் அனுபவிக்க நினைத்த சந்தோஷம் மட்டும் எட்டாக் கனியாகவே உள்ளது. அதனால் உங்களுக்குள் ஒரு கேள்வி பிறக்கிறது, 'நான் எதற்காக இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டேன்?' மக்கள் தொடர்ந்து சம்பாதித்துக் குவித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்களுடைய சம்பாத்தியம் அவர்களுக்கு எந்தவித இன்பத்தையும் கொண்டுவருவதில்லை. அவர்களுடைய மனம் முழுவதும் சம்பாதிப்பதிலேயே இருப்பதால் அவர்களுடைய நேரத்தையும் சக்தியையும் அதுவே உறிஞ்சிக்கொள்கிறது. ஆகவே, அவர்களுக்குத் தாங்கள் சம்பாதித்த செல்வத்தை அனுபவிக்க நேரம் இருப்பதில்லை.

இதற்கிடையில் அவர்கள் தங்களிடம் இருப்பதை எல்லாம் மாற்றிக் கொண்டே இருப்பார்கள்; அவ்வாறு மாற்றுவதன் மூலமாவது அதாவது அந்தப் புதிய பொருளின் மூலமாவது தங்களுக்கு ஆனந்தம் கிடைக்கக்கூடும் என்று நம்பியே இந்தப் பரிசோதனையை மேற்கொள்கின்றனர்.

இன்றைய தலைமுறையினர் பலருக்கும்
இந்த மன நிலை இருக்கிறது. அவர்கள்,
ஒவ்வொரு வருடமும் தங்களுடைய காரை
மாற்றுகிறார்கள். மூன்று வருடங்களுக்கு
ஒருமுறை வீட்டை மாற்றுகிறார்கள்.
ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு
ஒருமுறை வாழ்க்கைத்துணையை
மாற்றுகிறார்கள். அந்தப் புதிய பொருட்கள்
முதலில் தங்களோடு சந்தோஷத்தைக்
கொண்டுவந்தாலும் துரதிர்ஷ்டவசமாக
அது நீடிப்பதில்லை, அதனால் அவர்களால்
திருப்தியை உணர முடிவதில்லை.

வேத பாரம்பரியத்தில் விவாகரத்து என்ற
கருத்தே இல்லை. ஸம்ஸ்க்ருதத்தில்
விவாகரத்து என்பதற்கான
வார்த்தையே இல்லை.

வேத பாரம்பர்யத்தில் விவாகரத்து என்ற கருத்தே இல்லை. ஸம்ஸ்க்ருதத்தில் விவாகரத்து என்பதற்கான வார்த்தையே இல்லை.

வேத கால குருமார்கள் ஒரு போலியான, இயற்கைக்கு முரணான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் அல்லது அவர்கள் திருமணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளே இல்லாத வாழ்வை வாழ்ந்தார்கள் என்று அர்த்தம் இல்லை. அவர்களுடைய வாழ்க்கைமுறை அடுத்தவர்களை மாற்றுவது கிடையாது, தங்களுடைய மனப்பான்மையை மாற்றிக்கொள்வதாகவே இருந்தது!

நீங்கள் உறவுகளையும் உடைமைகளையும் மாற்றிக் கொண்டேயிருக்கலாம். அதற்கு ஒரு முடிவு இருக்காது. அதே நேரத்தில் திருப்தியும் இருக்காது. ஒவ்வொரு மாற்றம் நடந்த பின்பும், அதிகமாக மாற்றங்களை உங்கள் மனம் கேட்கும்.

பிரஞ்சு தேசத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘மாற்றங்கள், அதிக மாற்றங்களுக்குத்தான் வழிவகுக்கும்’.

உங்களுடைய மனம் மாற்றம் அடையாமல் திருப்தியையோ அல்லது பூரணத்தையோ உங்களால் உணர முடியாது. வேத கலாச்சாரம், வேத கால வாழ்க்கை முறை இந்த மனமாற்றத்தைத்தான் வலியுறுத்துகிறது. அதற்காக உங்களைத் தயார்படுத்துகிறது.

தோல்வியால் வந்த மன அழுத்தத்தை எளிதாக மாற்றிவிடலாம். நன்றாக உழையுங்கள், புத்திசாலித்தனத்தோடு வேலை செய்யுங்கள். அதுபோதும். செயலின் பலனைப் பற்றிச் சிந்திக்காமல் நிகழ்காலத்தில் உங்கள் கவனத்தை வையுங்கள்.

இதைத்தான் கிருஷ்ணர் சொல்கிறார். அது நல்ல பலனையும் தருகிறது. இதேபோல்தான் உறவுகளிடம் பற்றற்று இருத்தல் மற்றும் உடைமைகளிடம் பற்றற்று இருத்தலும்கூடப் பலனைத் தருகிறது. செயல்களை நீங்கள் பற்றுடன் செய்யும்போது, அது உங்களுக்குள் ஒருவிதப் பரபரப்பையும் இறுக்கமான சூழ்நிலையையும் உருவாக்குகிறது. ஆனால் அதே செயல்களைப் பற்றில்லாமல் செய்யும்போது, அது உங்களை அந்தப் பரபரப்பில் இருந்தும், இறுக்கமான சூழ்நிலையிலிருந்தும் விடுவித்து விடுகிறது. அதனால் பற்றற்று இருக்கும்போது உங்களால் திறம்பட வேலை செய்ய முடியும்.

காலத்திற்குப் பின்னாலும் குறிக்கோள்களின் பின்னாலும் ஓடுவதை விட்டுவிட்டு, இந்த நிமிடத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அதன் மேல் கவனத்தைச் செலுத்த முடிகிறது. அதைச் சிறப்பான முறையில் செய்து முடிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதில் மட்டுமே உங்கள் கவனத்தைச் செலுத்த முடிகிறது. இதனால் உங்களுடைய தோல்விப் பிரச்சினைகள் தீர்ந்து விடுகின்றன.

நீங்கள், இதுவரை சம்பாதித்துச் சேர்த்து வைத்துள்ள செல்வங்களின் மேல் உள்ள பற்றை விட்டு விட்டு, இந்த வினாடியில் என்ன இருக்கிறதோ அவற்றை அனுபவிக்க ஆரம்பித்தாலேபோதும், நீங்கள் வெற்றியினால் வரும் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டுவிட முடியும்.

கேள்வி: சில நாடுகளில் மரண தண்டனை என்பது மனிதத் தன்மையற்ற தண்டனை என்று கருதப்படுகிறது. சில நாடுகளில் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க இந்தத் தண்டனை அவசியம் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவற்றில் எது சரி?

பண்டைய கால சுமேரிய நாகரிகத்தில் ஹம்முரபி சட்டம் என்று ஒன்று இருந்தது. அது சொல்கிறது: கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்.

சில கலாச்சாரங்கள் இன்றும்கூட அந்தத் தர்க்கத்தை சரி என்று வைத்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொருவருமே அடுத்தவர் கண்ணை எடுப்பது என்று முயற்சி செய்தால், இந்த உலகத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு கண் மட்டுமே இருக்கும்!

இது பிரச்சினைகளைத் தீர்க்குமா? நிச்சயம் இல்லை.

மரண தண்டனையால், எந்த நாட்டிலாவது
நடக்கும் கொலைகளின் எண்ணிக்கை
குறைந்திருக்கிறதா? புள்ளி விபரங்கள்
இதற்கு நேர் எதிரான நிலைமையைத்தான்
காட்டுகின்றன.

உண்மையில் இன்று இருக்கும் கலாச்சாரங்களிலேயே அமைதியான கலாச்சாரம் என்பது ஆதிவாசிகளின் கலாச்சாரம்தான். இங்கு எல்லாப் பிரச்சினைகளையும் பேசித் தீர்த்துக்கொள்கிறார்கள். நீதிமன்றங்கள், சிறைச் சாலைகள் போன்ற நவீனக் கலாச்சார அமைப்புகளால் குற்றங்களின் எண்ணிக்கை குறையவில்லை. குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு இது உதவியதே இல்லை.

புத்தர் சொல்கிறார்,
"நான்
உங்களுக்குள் ஏற்றி
வைத்த
தீபத்தை வைத்து
நீங்கள்
மற்றவர்களுக்குள்
ஒளி ஏற்றுங்கள்."

A group of people sitting outdoors during a gathering

ஆனால் தியானத்தால் குற்றங்கள்
குறைவதை நிரூபித்திருக்கிறார்கள்.
மஹரிஷி மகேஷ் யோகி
அவர்களுடைய இயக்கம் இந்தத்
துறையில், மிகச் சிறப்பான முறையில்
பரிசோதனைகளை மேற்கொண்டு
இதனை நிரூபித்திருக்கிறது.

ஒரு இடத்தில் உள்ள மக்கள் தொகையில், ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் மட்டுமே த்யானம் செய்தாலும்கூடப்போதும், அது அந்தப் பகுதி மக்களின் மனத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, அங்கு நிலவும் குற்றங்களின் சதவீதத்தை குறைப்பதை அவர்கள் நிரூபித்துள்ளார்கள். வாஷிங்டன் நகரத்தில் இந்தச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

ஒரு பத்தாயிரம் பேர் சேர்ந்து கூட்டு த்யானத்தில் ஈடுபடும்போது அது மக்களின் மன நிலையிலும் சுற்றுப்புறச் சூழ்நிலையிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஆனால் த்யானத்தால் நன்மைகள் விளையும் என்பதை, நம்முடைய கட்டுறு மனப்பாங்கு அவ்வளவு எளிதாக நம்பி விடுவதில்லை.

மனிதருக்குள்ளிருக்கும் அஹங்காரம் ஸ்வபாவத்தாலேயே தன்னுள் வன்முறையைக் கொண்டதாக இருக்கிறது. அதனால் நாம் கண்ணுக்குக் கண், உடலுக்கு உடல் என்றேதான் கேட்போம். நம்முள் இருக்கும் இந்த வன்முறைதான் குற்றங்களை அதிகரிக்கச் செய்கிறது. சட்டங்களால், நீதிமன்றங்களால், சிறைகளால் இதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. வன்முறையால் வன்முறையை அழிக்க முடியாது.

மனமாற்றம், அது நமக்குள்தான் ஏற்பட்டாக வேண்டும். யாரும் யாரையும் மாற்ற முடியாது. குறிப்பாக பலாத்காரத்தால் மாற்ற முடியாது. ஆனால் உங்கள் நன்னடத்தை மூலம் மற்றவர்களை மாற்ற முடியும். அதைத்தான் புத்தரும் தம் சீடர்களிடம் வலியுறுத்தினார். "நான் உங்களுக்குள் ஏற்றி வைத்த தீபத்தை வைத்து, நீங்கள் மற்றவர்களுக்குள் ஒளி ஏற்றுங்கள்," என்று சொன்னார்.

த்யானபீடத்தின் மூலம், சிறைச்சாலைகளிலும் த்யானங்களைக் கற்றுத் தருகிறோம்.

தியானத்தின் மூலம்
நமக்குள் இருக்கும்
எதிர்மறை
குணங்களும்
வன்முறையும்
அழிக்கப்படும்.
உண்மையான
மாற்றம் நிகழும்.

மற்ற அமைப்புகளும் இதைச்
செய்கின்றன. த்யான முகாம்களால்
நல்ல பலன் கிடைப்பதை நாங்கள்
கண்டறிந்துள்ளோம். த்யானத்தின் மூலம்
நமக்குள்இருக்கும் எதிர்மறை குணங்களையும்
வன்முறை எண்ணங்களையும் அழிக்க
முடியும்; உண்மையான மாற்றத்தை நிகழ்த்த
முடியும்.

மனத்திற்குள் வன்முறை ஏன் உருவாகிறது, அதை எப்படி அழிக்க முடியும், இதற்கு நிரந்தரமான தீர்வு எது என்பவற்றைக் கண்டறிவதற்குப் பதிலாக, மரண தண்டனையை வலியில்லாமல் சட்டப்பூர்வமாக நிறைவேற்றுவது எப்படி என்பதைப்பற்றிய விவாதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்! 'ஆத்மா தொடர்ந்து வாழ்கிறது; அதனால் அரசாங்கங்கள் நீதியை நிலைநாட்டுகிறோம் என்ற பெயரில் மக்களைக் கொல்லலாம்!' என்று நாம் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் எது தர்மம், எது அதர்மம் என்று சரியாக முடிவெடுக்கக்கூடிய நிலையில் ஞான நிலையில் நாம் இல்லை; கிருஷ்ணருடைய ஞான நிலையில் நாம் இல்லை.

மனமாற்றம்,
அது நமக்குள்தான்
ஏற்பட்டாக வேண்டும்.
யாரும் யாரையும்
மாற்ற முடியாது.

கேள்வி: ஸ்வாமிஜி, ஆசைகளைப் பற்றிச் சொல்லுங்கள். பல குருமார்கள் ஆசைகளை அடக்கச் சொல்கிறார்கள். அதை எப்படிச் செய்வது?

ஆசைகளைப் பற்றி நான் சொல்ல முடியும். ஆனால் ஆசைகளை அடக்குங்கள் என்று சொல்லும் குருமார்களைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை! என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன், இதற்கு நேர்மையான முறையில் பதில் சொல்லவேண்டுமானால், "ஆசைகளை அடக்க முடியாது." அடக்குவதால் அது விபரீத வழிகளில் வெளிப்பட்டு, பல தொல்லைகளுக்கு வழி வகுக்கிறது. 'உள் உணர்வு மாற்றம்தான் இதற்கு ஒரே தீர்வு. உணர்ச்சிகளை அடக்க பயிற்சி செய்ய முடியாது.

அது, புலன்கள் சம்மந்தப்பட்ட ஆசையாக இருந்தாலும் சரி, பேர், புகழ் சம்பந்தப்பட்ட ஆசையாக இருந்தாலும் சரி, எந்த அளவிற்கு நீங்கள் அதை அடக்குகிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுடைய உடல் மன அமைப்பை நாசப்படுத்திக்கொள்கிறீர்கள். உங்கள் ஆசைகளை உயர்ந்த உணர்வாக வேண்டுமானால் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். அதை மட்டும்தான் நீங்கள் செய்ய முடியும்.

உணர்வுமாற்றம் நிகழ வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், த்யானத்திற்குள் நுழையுங்கள். உங்கள் சக்தி உயர்ந்த உணர்வு நிலைக்கு மாற அனுமதியுங்கள். ஆசைகளில் இருந்து தப்பிப்பதற்கு உணர்வு மாற்றத்தைத் தவிர வேறு வழி இல்லை. சக்தி ஓட்டத்தைத் திசை மாற்றுங்கள், அதைத் தூயதாக்குங்கள். இந்த மாற்றம் நிகழும்போது எந்தப் பொருளை நோக்கியும் செலுத்தப்படாத, தூய ஆசை மட்டுமே உங்களிடமிருந்து வெளிப்படும்.

பொருளின் மேல் வைக்கப்படாத ஆசையை சஃக்தி என்கிறோம். உங்களுடைய சஃக்தி, ஏதாவது ஒரு குறிப்பிட்ட பொருளோடு பற்றுடன் தொடர்புகொள்ளும்போது, அது ஆசையாகிறது. பொருளின் மேல் இருக்கும் பற்று அற்றுவிடும்போது அந்த ஆசை சஃக்தியாக மாறி விடுகிறது. அதனால்தான் வேத பாரம்பரியத்தில் ஆசையை இச்சா சஃக்தி என்று அழைக்கிறோம்.

உங்கள் ஆசை எந்தப் பொருளைக் குறித்தும் இல்லாதபோது, அது ஆனந்தத்தைக் கொடுக்கிறது. மாறாக ஏதாவது ஒரு பொருளைக் குறித்து இருக்கும்போது, அது பந்தத்தை ஏற்படுத்துகிறது. த்யானத்தின் மூலமாக ஆசையை உயர்ந்த உணர்வாக உருமாற்றம் செய்துகொள்ள முடியும். ஆசைகளை அடக்க முயற்சிக்காதீர்கள். அடக்குவதால் புதிய பிரச்சினைகள் தோன்றும். உருமாற்றத்திற்கு முயற்சி செய்யுங்கள், ஆசையை அடக்குவதற்கு அல்ல!

கேள்வி: ஆத்மா அழியாதது, சேதப்படுத்த முடியாதது என்றால், அதைத் துன்புறுத்தவும் முடியாதே. பிறகு ஏன் நமக்கு வலிக்கிறது? ஏன் நம் உடல் காயப்படுகிறது?

என்னுடைய ஆன்மீகத் தேடுதலின்போது, என்னுள்ளும் தோன்றிய கேள்வி இது! எனக்கு ஒரு பத்து வயது இருக்கும்போது, சொந்த ஊரான திருவண்ணாமலையில் வாழ்ந்த ஞானியான அண்ணாமலை சுவாமிகளின் உரையைக் கேட்கச் சென்றிருந்தேன். உயர்ந்த வேதாந்த ஸத்யங்களைப் பற்றி ஒரு உரை நிகழ்த்தினார். அப்போது "நாம் சாகாவரம் பெற்றவர்கள்; நமக்கு வலி என்பதெல்லாம் கிடையாது," என்று அவர் சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது! "எனக்கு வலி இருக்கிறது. யாராவது என்னைச் சத்தம் போட்டாலோ அல்லது அடித்தாலோ நான் வலியை உணர்கிறேன். ஆனால் இவர் நமக்கு வலி கிடையாது என்று சொல்கிறாரே, அது எப்படிச் சாத்தியமாகும்?" என்று தோன்றியது.

ஸத்யத்தைத் தேடுவதில் ஆர்வமும், அதை அனுபவமாக உணர்வதற்குச் செய்யவேண்டிய பரிசோதனைகளைச் செய்து பார்க்கக்கூடிய துணிவும் எனக்குள் ஏற்கனவே இருந்த காரணத்தினால், வீட்டிற்குச் சென்று ஒரு கத்தியால் தொடையைக் கிழித்து வலி இருக்கிறதா என்று பார்த்தேன்! கடுமையான வலி இருந்தது. திட்டுதான் கிடைத்தது. என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று கட்டுப்போட்டார்கள். கிட்டத்தட்ட பதின்மூன்று தையல்கள் போட்டார்கள். அந்தத் தழும்புன்றும் இருக்கிறது.

நான் அண்ணாமலை சுவாமிகளிடம் சென்று, "நீங்கள் ஏன் உடலுக்கு வலிக்காது என்று சொன்னீர்கள்," என்று கேட்டேன். அவர் சிரித்துவிட்டு, அன்போடு சொன்னார், "கவலைப்படாதே குழந்தை. சொல்லப்பட்ட ஸத்யத்தைச் சோதித்துத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று உனக்கு இருக்கும் இந்தத் துணிச்சல் ஒன்றே, உன்னை அந்த ஸத்ய அனுபவத்திற்கு அழைத்துச் செல்லும்." அதற்குப்பிறகு ஒரு எளிய, ஆனால் ச்'க்திவாய்ந்த த்யான நுட்பத்தைக் கற்றுத் தந்தார். அந்த த்யானத்தின் மூலம் எனக்குள் முதல் ஆன்மீக அனுபவம் ஏற்பட்டது.

உடல் என்பது ஆத்மாவின் ஸ்தூல தன்மையே! உடல் என்பது பொருள்; ஆத்மா என்பது ச்'க்தி. உடல் என்பது ச்'க்தி, ஆத்மாகுடி கொண்டிருக்கும் இடம். உடலும் பொருளும் அழியும். ஆனால் ஆத்மா அழியாது. இந்த உடல்-மன அமைப்பு எண்ணங்களால், ஆசைகளால், உணர்ச்சிகளால், அனுபவங்களால் ஆனது. பொதுவாக அது புலன்களால் இயக்கப்படுகிறது.

வலியின் மேல்
நீங்கள்
செலுத்தும் கவனமே
நீங்கள்
இந்த உடல் அல்ல
என்பதை உங்களுக்கு
உணர்த்திவிடும்.

பொருள் மற்றும் ச்'க்தி உடல்-மன அமைப்பு மற்றும் ஆத்மா இவற்றிற்கு வித்தியாசம் இருக்கிறது என்று நாம் உணரும்வரை நாம் வலியை உணர்வோம். பொருளும், ச்'க்தியும் ஒன்றுதான், உடல்-மன அமைப்பை ஆத்மாதான்ாக்குகிறது என்ற புரிதல் நமக்குள் ஏற்பட்ட அந்தக் கணமே எல்லா வேற்றுமைகளும் மறைந்துவிடும். அப்பொழுதும் உடலில் வலியை உணர நேராலாம், ஆனால் உங்களுக்குத் துன்பம் இருக்காது.

ரமண மஹரிஷி, இராமகிருஷ்ண பரமஹம்ஸர் போன்ற மிகப் பெரிய ஞானிகளுக்குக் கேன்சர் வந்தபோதும், அவர்கள் ஆனந்தமாகவே இருந்தார்கள். அவர்களுக்கு வேதனை இருந்ததில்லை. பகவான் ரமண மஹரிஷி, "இந்த உடல் யாருடையது?" என்று கேட்பார். உடலைக் கடந்த உணர்வு நிலை நிகழும்போது, ஞானம் அடைந்த நிலையில், உடம்பில் வலி ஏற்படும்போதே, இந்த உடல் ஒரு பொருள்தான், அது எப்படியும் அழியப்போகிறது; இந்தப் பொருளைத் தாண்டி ஒன்று இருக்கிறது என்ற புரிதலும் நமக்குள் நிகழும். அதன்பிறகு அங்கு வலி இருக்காது.

அடுத்த முறை உங்களுக்கு வலி ஏற்படும்போது, அந்த வலியின் மேல் ஆழ்ந்து கவனம் செலுத்துங்கள். பொதுவாக மக்கள் வலி ஏற்பட்டால் வலியில் இருந்து கவனத்தை வேறு எங்காவது திருப்புங்கள் என்றுதான் அறிவுறுத்துவார்கள். அப்படிச் செய்தால் தீர்வு கிடைக்காது. மனம் மீண்டும் திரும்பிவிட்டால், வலி மீண்டும் வந்துவிடும். அதற்குப் பதிலாக, வலி எங்கு இருக்கிறதோ அங்குக் கவனத்தை எடுத்து வாருங்கள்.

நம் தலையெழுத்தும் விதியும் நம் கையில்தான் உள்ளது.

ஆரம்பத்தில் அந்தப்பகுதி முழுவதும் வலியை உணர்வீர்கள். நீங்கள் கவனம் செலுத்தத் தொடங்கியவுடன் வலி ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இருப்பதை உணர்வீர்கள். தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தால், வலி ஒரு சிறிய புள்ளியில் மட்டும் இருக்கும். இன்னும் கவனித்துக் கொண்டிருந்தால் வலி போய்விடும். உங்கள் உடலின் மேல் நீங்கள் செலுத்துகிற அந்தக் கவனமே, வலியைப் போக்கிவிடும் சக்தியையும் கொடுத்து விடுகிறது.

இது ஒரு அருமையான தியான நுட்பம். வலியின் மேல் நீங்கள் செலுத்தும் கவனமே நீங்கள் ‘இந்த உடல் அல்ல’ என்பதை உங்களுக்கு உணர்த்திவிடும். உங்கள் சக்தி மையத்தை நீங்கள் உணர்வீர்கள். இந்த உடலையும் மனத்தையும் கடந்தவர்கள் நீங்கள் என்பதையும் உணர்வீர்கள்.

அப்பொழுது கிருஷ்ணர் சொல்லும் ஆனந்தமான, நித்யானந்தத்தை, நிலையான ஆனந்தத்தை உணர்வீர்கள்.

கேள்வி: நாம் எந்த உடலைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது நம் கடந்தகாலத்தைப் பொறுத்தது என்பது உண்மையானால் ஹிட்லர் போன்ற கொடிய மனிதர்கள் தொடர்ந்து கொடியவர்களாகவே பிறந்து கொண்டிருப்பார்களா? அப்படிப்பட்ட மனிதர்கள் திருந்தி வாழ்வதற்கு வழியே கிடையாதா? ஒன்று மட்டும் உறுதி: மிக மிக 'நல்லவர்களுக்கும்' மிக மிக 'கெட்டவர்களுக்கும்' அடுத்த பொருத்தமான உடல் கிடைப்பது சிரமமாகவே இருக்கும். சராசரியான மக்களுக்கு உடனே உடல் கிடைத்துவிடும். இதனால் அவர்கள் தொடர்ந்து அதே குணத்தோடு இருப்பார்கள் என்று அர்த்தம் கிடையாது.

நல்ல அல்லது கொடிய மன அமைப்பைத் தாண்ட முடியாது என்று அர்த்தம் கிடையாது. நல்ல நிலையிலிருந்து உயர்வது அல்லது கெட்ட நிலைகளை நோக்கித் தாழ்வது என்ற ஒரே செயல்முறைதான் தொடர்ந்து நிகழும் என்ற சொல்லிவிட முடியாது. ஒருநிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாற்றம் நடப்பதற்கான சாத்தியமிருக்கிறது.

புராணங்களில், தெய்வீக குணங்களை
உடைய பலர் தங்களுடைய தீய மன
அமைப்பால் கொடிய அரக்கர்களாகப்
பிறந்து, பின் தங்கள் வாசனைகளை அழித்து
மீண்டும் தெய்வீக நிலையை அடைந்தார்கள்
என்று பல கதைகள் இருக்கின்றன.

இராமாயணத்தை எழுதிய வால்மீகி
ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரர். ஈவு
இரக்கமில்லாமல் கொலை செய்பவர்.
இராம நாமத்தை த்யானம் செய்ததால் அவர்
ஞானமடைந்தார்.

புத்த சம்பிரதாயத்தில் அங்குலிமால் என்ற கொள்ளைக்காரனைப் பற்றிய கதை இருக்கிறது. ஆயிரம் பேரைக் கொல்வேன் என்று சபதம் செய்த அங்குலிமால் புத்தரைப் பார்த்த பின் மனம் மாறி, துறவியாகி விடுகிறார். புத்தரின் சீடராகி விடுகிறார்.

தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், மன அமைப்பு என்பது விதியால் நமக்கு வருவதல்ல. அது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று அல்ல. நம் மன அமைப்பை உருவாக்கும் வாய்ப்பு நம்மிடம்தான் உள்ளது. தெரிந்ததோ, தெரியாமலோ அந்த வாய்ப்பை நாம் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம்.

பிரச்சினை என்னவென்றால், நம்மில் பெரும்பாலானோர் விழிப்புணர்வு இல்லாமலேயே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நம்மை இயக்கும் பொறுப்பையும் இந்த மன அமைப்பை உருவாக்கும் பொறுப்பையும் நாம் மனத்திடமே விட்டுவிட்டோம். நாம் கார் டிரைவர்களாக இருந்தாலும் கார்தான் நம்மை ஓட்டுகிறது.

ஆனால் நமக்கு வாய்ப்பு இருக்கிறது. மனத்தின் எஜமானனாக நம்மால் மாற முடியும். ஆரம்பத்தில் அது கடினமான காரியமாக இருக்கும். மாற்றம் கடினமானதாகத் தெரிய வேண்டுமென்றுதான் நம் மனமும் விரும்புகிறது.

கட்டுப்பாட்டை எடுத்து வரும்போது, உங்களுக்கு உதவி புரியும் சிறந்த வேலைக்காரனாக மனம் மாறிவிடும். உங்கள் உடலுக்கும் மனத்திற்கும் உள்ள எல்லையில்லாத சக்தியை நீங்கள் உணர்வீர்கள்.

அதனால்நான் ஆன்மீகத்தைப் பொறுத்தவரை அதனதன் இயல்பிலேயே நல்லது அல்லது கெட்டது என்று எதுவுமே கிடையாது. ஒரு குறிப்பிட்ட இடம், குறிப்பிட்ட காலம் குறிப்பிட்ட சூழ்நிலை இவற்றைப் பொறுத்துத்தான் ஒன்று நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்கும்.

எல்லோரும் எல்லா நேரங்களிலும் தொடர்ந்து நல்லவர்களாகவோ, கெட்டவர்களாகவோ இருப்பதில்லை. நம் விதியை நாம் மாற்றி எழுத முடியும். நம் விதி நம் கையில்தான் உள்ளது.

Illustration of hands playing a flute