KAILASA Library/பகவத்கீதை/மரணபயத்திலிருந்து வெளிவருவதற்கான யுக்திSign in
பகவத்கீதை

மரணபயத்திலிருந்து வெளிவருவதற்கான யுக்தி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

முண்டகோபநிஷத்தில் இரண்டு பறவைகளைப் பற்றிய ஒரு கதை இருக்கிறது.

பல கிளைகளையும் பழங்களையும் கொண்ட ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் உட்கார்ந்திருக்கின்றன. அந்த மரத்தின் ஒவ்வொரு கிளையிலும் பழங்கள் பழுத்துத் தொங்குகின்றன. அவற்றில் ஒரு பறவைக்கு அழகான பொன்னிற மேனியும் அழகான இறகுகளும் இருக்கின்றன. அது என்றும் பேரமைதியில் இருக்கிறது.

அந்தப் பறவை சில பழங்கள் மட்டுமே கொண்ட கிளையின் மேல் அமைதியாக அமர்ந்திருக்கிறது. கிளைகளில் இருக்கும் பழங்களின் மேல் அது ஆர்வம்கொள்ளவில்லை.

இரண்டாவது பறவை சிறியது. அது எப்பொழுதும் பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தது. அது உண்பதற்கான பழங்களைத் தேடி ஒரு கிளையில் இருந்து இன்னொரு கிளைக்குத் தாவித் தாவிக்குதித்துக் கொண்டிருந்தது. எப்பொழுதெல்லாம் அது இனிப்பான பழங்களைச் சுவைத்ததோ அப்பொழுதெல்லாம் மகிழ்ச்சியால் 'க்ரீச், க்ரீச்' என்று ஒலியெழுப்பிப் பாட ஆரம்பித்தது. புளிப்பான அல்லது கசப்பான பழங்கள் கிடைத்தால் அது சோகமாக மாறி எரிச்சல் அடைய ஆரம்பித்தது.

நம்முடைய உடலும் நம்முடைய அடையாளங்களும் அழிந்து போகும்போதும் நாம் உயிருடன் இருக்கிறோம்.

அதற்கு அடிக்கடி கசப்பான பழங்கள்தான் கிடைத்தன. கசப்பும் புளிப்பும் எந்த அளவிற்கு அதிகமாக இருந்ததோ அந்த அளவிற்கு அது சோகத்தால் கோபமாகக் கத்த ஆரம்பித்தது. அப்பொழுதெல்லாம் அது தனக்குள்ளேயே “பழங்களில் எந்த இன்பமும் இல்லை. இப்படி வாழ்வதில் எந்த ஆனந்தமும் இல்லை,” என்று சொல்லிக்கொள்ளும்.

ஒருமுறை மரத்தின் மேல் சாந்தமாக, ஆனந்தமாக, தளர்வாக அமர்ந்திருக்கும் பறவையை அது பார்த்தது. பொன்னிற பறவை சாந்தமாகவும் அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருந்தது. அந்தப் பறவையை அருகில் சென்று பார்ப்பதற்காக மேலே பறந்தது.

செல்கிற வழியில் சில சுவையான, பழங்களை அது பார்த்தது. உடனே மேலே பறந்து செல்லாமல் அவற்றை உண்டு மகிழ்வதற்காக நின்றது. பழங்கள் சுவையாக இருந்ததால் அது அந்தப் பழங்களின் சுவையால் ஈர்க்கப்பட்டு அது அங்கேயே தங்கி விடுகிறது. ஆனால் மீண்டும் சில சுவையற்ற பழங்களை உண்டதால் அதற்குத் துக்கம் வந்துவிடுகிறது. மேலே பார்த்தால் எப்பொழுதும்போல் பொன்னிற பறவை அமைதியாக, சந்தோஷமாக, ஆனந்தமாக இருந்தது. அதனைக் கண்ட அந்தச் சிறிய பறவை மேல் நோக்கி பறக்க ஆரம்பிக்கிறது.

birds in a tree

இதுபோல அது மேலும் கீழும், இடமும் வலமுமாக பறந்து கொண்டிருந்தது. ஒவ்வொருமுறையும் பொன்னிற பறவையைப் பார்க்கும்போதும் அதன் அருகில் செல்வதற்கு அது முயல்கிறது. அப்படிச் செல்லும் போதெல்லாம், முன்பு சுவை தந்தது போன்ற பழங்களைப் பார்த்தால், அவற்றை உண்பதற்கு மீண்டும் அங்கேயே தங்கிவிடும், கசப்பான பழங்களைச் சுவைக்க நேர்ந்தால், பிறகு அது மேல் நோக்கிப் பறக்க ஆரம்பிக்கும்.

birds looking at each other

இறுதியில் அது பொன்னிற பறவை அமர்ந்திருக்கும் அதே கிளைக்கு வந்துவிட்டது. அந்தப் பொன்னிற பறவையை ஆழ்ந்து பார்த்தது. அப்பொழுது அதற்குப் பெரிய அதிர்ச்சி, காரணம் அந்தப் பொன்னிற பறவை வேறு யாரும் கிடையாது, அதுதானேதான், தன் உணர்வேதான் என்பதை உணர்ந்தது. அதன் அருகில் செல்லச் செல்ல அதற்கு ஆனந்தமும் நிம்மதியும் அதிகரித்தது. சிறிய பறவைக்குப் பொன்னிற பறவையின் மேல் ஆழமான இணைப்பு ஏற்பட்டது; அது அன்பு வயப்பட்டது. அது அன்பில் விழவில்லை; அன்பில் உயிர்த்தெழுந்தது! விரைவில் தம்முடைய அடையாளங்களை இழந்து அது பொன்னிற பறவையோடு ஒன்றிவிட்டது.

birds illustration

அந்த தங்கப்பறவைப்போலவே நாமும் நமது உள்ளுலகத் தெய்வீகத்தோடு ஒன்றியவர்கள்தான் என்பதை நாம் உணரும்பொழுது நமது மரணபயம் முழுவதும் நீங்கி விடுகிறது. அதற்குப் பிறகு நமக்குள் நாம் யாரென்பதை பற்றிய எந்தக் கேள்வியுமே இருப்பதில்லை.

birds illustration

நமக்கே தெரியும் அதை எந்த ஆயுதங்களாலும்
வெட்ட முடியாது. உலகத்தலைவர்கள்
என்று சொல்லிக்கொள்பவர்கள், கிருஷ்ணர்
என்ன சொல்கிறார் என்பதை மட்டும்
புரிந்துகொண்டு விட்டால் ஐக்கிய நாடுகள்,
அமைதி தினங்கள், தோழமை தினங்கள்
என்பதற்கெல்லாம் எந்த அவசியமும்
இருக்காது. ஒவ்வொரு நாளும் அமைதியான
நாளாகத்தான் இருக்கும்.

கவலைகளைக் காணாமல் போகச்செய்யும் சத்தியங்கள்

மனிதர்களைக் கொல்வதின் மூலம், அவர்களின் அடையாளத்தையே முற்றிலும் அழிப்பதாலும் நாம் எதை சாதித்துவிட முயலுகிறோம்? நம்மை நம்பாதவர்களையும் நம்மையே கேள்வி கேட்பவர்களையும் நம்மைப் பார்த்து சிரிக்கத் தைரியம் கொண்டவர்களையும் எந்த அடையாளமுமில்லாமல் அழித்துவிடத்தான் முயலுகிறோம்.

நாம் நம்மேல் அன்பு செலுத்துபவர்களையும், நம்மைப் பார்த்து பயப்படுபவர்களையும், பயத்தின் காரணமாக மதிப்பளிப்பதுபோல் நடிப்பவர்களையும், நம்மை விரும்புவதுபோல் நடிப்வர்களையும் மட்டுமே நம்மைச் சுற்றி வைத்துக்கொள்ள விரும்புகிறோம். இத்தகைய மனநிலையுடைய தலைவர்கள், தங்களைத் தாக்கியதற்காகப் பிறரைக் கொல்வதில்லை. அவர்களைப் பார்த்தால் இவர்களுக்குப் பயமாக இருந்தது, அதனால் அவர்களைக் கொன்றார்கள். சர்வாதிகாரிகள்கூட தங்களைக் காத்துக்கொள்வதற்காகவே, தங்களுக்கிருந்த பயத்தினால்தான் மற்றவர்களைக் கொன்றார்கள். வெளியுலகத்திற்குத் தங்களை ஒரு மாவீரராகக் காட்டிக்கொண்டாலும் உண்மையில் அவர்கள் கோழைகள்தான்.

சர்வாதிகாரிகள் வெளியே பெரிய வீராதி வீரர்களைப்போல் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள்ளே அவர்கள் பெரிய கோழைகள்தான் இந்தப் பெரிய சர்வாதிகாரிகள் தாங்கள் உணவை உண்ணும் முன்பு மற்றவர்கள் அதை ருசி பார்த்து விஷம் கலக்கப்பட்டுள்ளதுா என்று சோதித்த பிறகுதான் அதை உண்பார்கள்.எதிரிகளைக் குழப்புவதற்காக தங்களைப் போன்ற ஒத்த உருவம் உடையவர்களுடன்தான் பயணம் செய்தார்கள். தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆழமான பயத்திலேயே வாழ்ந்தார்கள்.

எல்லாக் கொடூரத்தனங்களுக்கும்,
கொலைகளுக்கும் பின்னால் பேராசை,
அச்சமும் காரணமாக இருப்பதைக்க
காணலாம். இந்தப் போதனைகளை மிக
ஆழமாக யோசித்துப் பார்த்தோமானால்,
அம்மாதிரியான கவலைகள் எல்லாம்
கரைந்துபோகும். நாம் நம்மோடும்
மற்றவர்களோடும் அமைதியாக அழகாக
வாழலாம்.

இந்த வாழ்வில்
பலதரப்பட்ட
கருத்துகளுக்குமே
போதிய வாய்ப்புகளும்,
இடமும் இருக்கின்றன

நீங்கள் மட்டும் தைரியசாலியாக இருந்தால் நீங்கள் யாரையும் எதிர்கொள்வீர்கள்; உங்கள் பிரச்சினையையும், கருத்தினையும் துணிச்சலாகச் சொல்வீர்கள். மற்றவர்கள் உங்கள் கருத்தோடு ஒத்துப் போகவில்லையென்றால் நீங்கள் அந்தச் சூழ்நிலையை உள்ளவாறே ஏற்றுக்கொண்டு அவ்விடத்தை விட்டு வெளியேறி விடுவீர்கள். இந்த உலகில் இந்த வாழ்வில் பலதரப்பட்ட கருத்துகளுக்குமே போதிய வாய்ப்புகளும், இடமும் இருக்கின்றன. நாம் ஏற்கனவே சில கருத்துகளை உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்கும்போதும், மூட நம்பிக்கைகளைக் கொண்டிருக்கும்போதும் நாம் பயப்பட ஆரம்பித்து விடுகிறோம்.

நாம், நமது நம்பிக்கையையும், நமது அடையாளத்தையும் இழந்து விடுவோமா என்றுதான்அச்சப்படுகிறோம். அந்தப் பாதுகாப்பற்ற நிலையும் நம்முடைய அடையாளத்தை இழந்து விடுவோமா என்ற அச்சத்தும்தான் மரண பயத்தைவிட அதிகமாயிருக்கின்றன. உண்மையில் அதுவும்கூட மரண பயம்தான். ஏனெனில் மரணம்தான் நமது கடைசி அடையாளத்தையும் அழித்து விடக்கூடியது. அதனாலேயே நாம் அதை மூர்க்கமாக எதிர்க்கிறோம். நாம் கொல்லப்படுவதைத் தடுக்கத்தான் நாம் பிறரைக்கொல்கிறோம்.

மரணம் என்பது ஒரு கிழிந்த சட்டையை மாற்றிக்கொள்வதைப்போல் என்று கிருஷ்ணர் சொல்லியிருப்பதை உணர்ந்து கொண்டோமானால் நமது பயங்களெல்லாமே மறைந்துவிடும். நாம் உண்மையிலேயே அறிவுள்ளவர்களாக இருந்தோமானால் இந்தச் சட்டைதான் நமக்கெதற்கு? இந்தச் சட்டை இல்லாமலிருந்தால், நாம் சுதந்திரத்தை அனுபவிப்போம், முழுவதுமாக விடுபட்டு விட்டதாக உணருவோம். பிறகு அந்த மாற்றத்தைப் பற்றிக்கூட கவலைப்பட அவசியமே இல்லை.

உண்மையில் இந்தச் சட்டையை மாற்ற வேண்டிய அவசியம்கூட இல்லை என்பதைப் புரிந்துகொள்வதுதான், இந்த ஸத்யத்தை ஆழமாகப் புரிந்துகொள்வதாகும். நமக்கு இந்தமாதிரி ஒரு ஆடை இருக்கும்பொழுதுதான் அது அழுக்காயிருக்கிறதா, கிழிந்திருக்கிறதா, அதை எப்படி மாற்றுவது என்றெல்லாம் பல கவலைகள் இருக்கும். இப்படிப்பட்ட ஒரு ஆடை இல்லாமலே இருந்தால், பிறகு எந்தக் கவலைகளுமே இருக்காது. இந்த ஆடைக்கு அப்பால் கடந்த போவதுதான் இந்த உடல் மனதைத் தாண்டிச் செல்வதாகும் இந்தப் பிறவியிலேயே இறுதியான சுதந்திரத்திற்கு செல்வதாகும். இதுவே இறுதியான ஓய்வாகும்!

ஆதிசங்கரர், பஜகோவிந்தத்தில் மிக அழகாகச் சொல்கிறார், "ஒருவர் திரும்பத் திரும்பப் பிறக்கிறார்; ஒருவர் திரும்பத் திரும்ப இறக்கிறார்; ஒருவர் மறுபடியும் தாயின் கருவறைக்குள் செல்கிறார் ஓ! கடவுளே, இந்த வாழ்க்கைப் படகை செலுத்துபவரே, இந்த வாழ்வு சாவு என்னும் சாகரத்தைக் கடப்பதற்கு எனக்கு உதவுங்கள்!."

Krishna's hands playing the flute