புது உடை அணிவதைப்போல புது உடலை எடுக்கும் கொண்டாட்டமான நிகழ்வே மரணம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கிருஷ்ணர் தொடர்கிறார்: எப்படி ஒரு மனிதன் பழைய துணியைக் கழற்றிவிட்டு புதிய துணியை உடுத்திக்கொள்கிறாரோ, அதேபோல் ஆத்மாவானது பழைய உடலைக் கழற்றிவிட்டு புதிய உடலை உடுத்திக்கொள்கிறது.
ஆயுதங்களால் ஆத்மாவை வெட்ட முடியாது. நெருப்பால் சுட முடியாது. தண்ணீாரால் நனைக்க முடியாது. காற்றால் உலர்த்த முடியாது. அது நிலையானது, எங்கும் வியாபித்து இருக்கிறது, அசைக்க முடியாதது, புராதனமானது. கீதையின் இந்த வரிகள் பிரசித்திப் பெற்றவை. இந்தச் சில வார்த்தைகளைக்கொண்டு கிருஷ்ணர் வாழ்க்கை, மரணம், மனம், உடல், ஆத்மா போன்ற எல்லா விஷயங்களுக்கும் விளக்கமளிக்கிறார்.
மரணத்தைப் பார்த்துத் துன்பப்படுவதைவிட, எப்படி அதை நாம் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான விளக்கத்தை அளிக்கிறார்.
இந்த உயர்ந்த ஸத்யத்தைச் சிறு குழந்தைகூடப் புரிந்துகொள்ளும் வகையில் மிகவும் எளிமையாக அவர் எடுத்துரைக்கிறார்.
கீதையில் சொல்லப்பட்டிருக்கும் ஸத்யங்களைப் புரிந்துகொள்ள வேத நூல்களைப் படித்திருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் வேதங்களை நன்கு கற்றறிந்த ஒருவர் அவசியம் கீதையைப் படித்தே ஆக வேண்டும். அது அவரது கடமையுங்கூட! கீதையைப் படிக்கவில்லையென்றால், அவர்கள் கீதை உணர்த்தும் ஸத்யம், எளிமை, கள்ளமில்லாத நடை இவற்றை தவறவிட்டுவிடுவார்கள்.
ஆத்மாவானது, பழைய உடலைக் கழற்றி விட்டு புதிய உடலை எடுத்துக்கொள்கிறது..
பிற நூல்களில் இருந்து கீதை எதனால் வேறுபடுகிறது? ஏன் வேதங்களுக்கும் உபநிஷதங்களுக்கும் கொடுக்கப்படும் அதே மரியாதை கீதைக்கும் தரப்படுகிறது என்று பார்த்தால், பூரண அவதாரமான, ஜகத்குருவான கிருஷ்ணருக்கு இருந்த உறுதியும் தெளிவும்தான் கீதைக்கு மேலான இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.
அவர் மிக எளிமையாகச் சொல்கிறார்,
"நீங்கள் எப்படி உங்கள் அழுக்கான பழைய
சட்டையைக் கழற்றிவிட்டு, புதிய சட்டையை
அணிந்துகொள்கிறீர்களோ அதேபோல்
ஆத்மாவானது பழைய உடலைக் கழற்றி விட்டு
புதிய உடலை எடுத்துக்கொள்கிறது."
நமக்குப் புது உடை இருக்கும்போது, உபயோகமற்றுப் போன பழைய, அழுக்கான உடையைக் கழற்றி எறிவதற்கு நாம் தயங்குவோமா? "நான் இந்தச் சட்டை மீது என் உயிரையே வைத்திருக்கிறேன். என்னால் அதைக் கழற்ற முடியாது. இதையே நான் உடுத்திக்கொண்டு இருக்கப் போகிறேன். இந்தச் சட்டையைக் கழற்றி விட்டால் நான் மனமுடைந்து போவேன்," என்று சொல்லிக்கொண்டு அதற்காகக் கவலைப்பட்டுக்கொண்டிருப்போமா?
நாம் ஒரு புதிய உடையை பார்க்கிறபோது நமக்குள் தாமாகவே சந்தோஷம் பொங்குகிறது. பழையதைக் கழற்றிவிட்டுப் புதியதை எடுத்துக்கொள்கிறோம். ஆனால் இதேபோல் நம் "ஆத்மா, இந்த உடல் பழையதாகிச் சிதைந்து விட்டது; இது நோய்வாய்ப்பட்டும், வெறுக்கத்தக் கதாகவும் இருக்கிறது. என்னை இந்த உடலைவிட்டுப் போக விடு; நான் இந்தப் பழைய உடலை விட்டுவிட்டு, புதிய உடலை எடுத்துக்கொள்ளப் போகிறேன்," என்று சொல்லும்போது மட்டும், நாம் ஏன் தயங்க வேண்டும், ஏன் பயப்பட வேண்டும்?
எப்படிப் பழைய சட்டையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டுமோ, அதேபோல் நம் உடலுக்கு வயதாகிவிட்ட பிறகு, அந்த உடலை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஒரு புரிதல் நமக்குள் மலர்ந்துவிட்டால், அதன் பிறகு நமக்கு எந்தப் பந்தமும், கவலையும் இருக்காது.
இந்த எளிய தத்துவத்தின் சாரம் மிகப்பெரியது. அதனால்தான் உலகின் மிக உயர்ந்த ஞானியால் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
"கவலைப்படாதே. இந்த உடலை விட்ட பிறகு, உனக்கு கிடைக்கப் போகும் உடல், இதைவிட அழகான, சிறப்பான, மற்றவர்களைக் கவரக்கூடியவகையில் புதிய நவநாகரிக உருவமாகவும் இருக்கும்! உன் பயங்களை விட்டுவிடு. உன் பற்றை விட்டுவிடு. என்ன நடக்கவிருக்கிறதோ அதை ஆனந்தத்தோடும், கொண்டாட்டத்தோடும் எதிர்கொள். மரணத்தைக் கொண்டாடு. துக்கப்படாதே," என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
உங்களை மரணமில்லாப் பெருவாழ்விற்கு அழைத்துச் செல்லும் சத்தியங்கள்
மேலும் அவர் தொடர்கிறார்: ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு ஆத்மா சென்று கொண்டேயிருந்தாலும் எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் அந்த ஆத்மாவின்சுபாவம் என்ன? எப்படி அது என்றும் நிலைத்து நிற்கிறது? என்ற கேள்விகளுக்கெல்லாம் தெளிவான விளக்கத்தைத் தருகிறார்.
கிருஷ்ணர் சொல்கிறார், "அர்ஜூனா, தயவு செய்து புரிந்துகொள். நீ நினைப்பதைப்போல் இந்த ஆத்மா அழிவதில்லை. அதை அழிக்க முடியாது. எந்த ஆயுதமும் அதை அழிக்க முடியாது. எந்தவித அஸ்த்ரமும், ப்ரஹ்மாஸ்த்ரமும், எந்த அணு ஆயுதமும்கூட உடலிற்குள் இருக்கும் சக்தியை அழிக்க முடியாது; நெருப்பால் எரிக்க முடியாது; தண்ணீரால் ஈரமாக்க முடியாது; காற்றால் உலர்த்த முடியாது.
அது, பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டதல்ல, அதனால் அதைப் பஞ்ச பூதங்களால் அழிக்க முடியாது. பஞ்சபூதங்கள் மறைந்துவிட்டாலும் ஆத்மாவுக்கு அழிவில்லை. அது பஞ்சபூதங்களுக்கும் அப்பாற்பட்டது. அதுவே, பஞ்ச பூதங்களுக்குப் பின்னால் இருக்கும் சக்தியாக இருக்கிறது. பஞ்சபூதங்களையே உருவாக்கும் சக்திதான் ஆத்மா. அதனால் அதை எப்படி அழிக்க முடியும்?
பஞ்சபூதங்களை
உருவாக்கும்
சக்திதான்
ஆத்மா.
அதை
எப்படி அழிக்க முடியும்?
பஞ்சபூதங்களால் ஆன பொருட்களைச்
செய்வதைப்போல், ஆத்மாவை
உடைத்தோ, கரைத்தோ, எரித்தோ,
உலர்த்தியோ சிதைக்க முடியாது. அது
நிலையானது; பஞ்சபூதங்களையும்
கடந்து நிற்பது; பிரபஞ்சம் முழுவதும்
வியாபித்திருப்பது; என்றும் இருப்பது;
அது ஒருபோதும் உருவாக்கப்பட்டதில்லை;
அதனால் அதனை ஒருபோதும் அழிக்கவும்
முடியாது.
கிருஷ்ணரின் இந்த உபதேசத்தைப் பற்றிய புரிந்துகொள்ளதல்தான், நம்மை மரணமில்லாப் பெருவாழ்விற்கு எடுத்துச் செல்லும் சாவியாக இருக்கிறது. பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து நம்மை நாம் விடுப்படுத்திக்கொள்வதற்கான சாவி இந்த உபதேசம். இது, ஞானமடைதல் என்கிற நம் சொந்த வீட்டிற்கான வாயிற்கதவாக இருக்கிறது.
> ஆத்மா மாறாதது, குணங்களற்றது, எங்கும் வியாபித்து இருப்பது. ஞானம் அடைந்த ஒவ்வொரு ஞானியின் அனுபவமும், கிருஷ்ணர் சொல்லும் இந்த ஸத்யத்தை உறுதிபடுத்துகிறது.
“உன்னுடைய மரணத்தையோ அல்லது மற்றவர்களுடைய மரணத்தையோ கண்டு பயப்படாதே. அது ஒரு பயணம்தான். ஸ்தூல சரீரம் அழிகிறது. அவ்வளவுதான். ஆனாலும் நீ இந்த சரீரத்தையும் கடந்து இருக்கிறாய். இந்த உடல் அழிந்தாலும் நீ அழிவதில்லை. அதனால் நீ கவலைப்படவோ, பயப்படவோ தேவையில்லை,” என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
மரணத்திற்குப் பிறகும் அழியாதிருக்கும் அந்தப் புனிதமான ஆத்மாவை எப்போதும் அழிக்க முடியாது. அது ஒரு பொருள் கிடையாது. அது ஒரு தூய சக்தி. சக்தியை எப்படி அழிக்க முடியும்? “சக்தி ஒரு வடிவில் இருந்து இன்னொரு வடிவிற்கு மாறத்தான் முடியுமே தவிர, அதனை அழிக்க முடியாது,” என்று அறிவியல் சொல்கிறது. நான் முன்பே சொன்னதுபோல், சக்தி இன்னொரு உருவமாகத் தோன்றும் அல்லது சக்தியாகவே இருந்துவிடும்.
இது, பஞ்ச பூதங்களுக்குப் பின்புலமாக இருக்கிறது, பஞ்ச பூதங்களை உருவாக்குகிறது. இந்தச் சக்தி இதற்குமுன்பும் இருந்தது, இனியும் இருக்கப்போகிறது. அது உருவாக்கப்பட்டதல்ல, அதனை அழிக்கவும் முடியாது.
ஆத்மா மாறாதது, குணங்களற்றது, நிலையானது, எங்கும் வியாபித்து இருப்பது. ஞானம் அடைந்த ஒவ்வொரு ஞானியின் அனுபவமும், கிருஷ்ணர் சொல்லும் இந்த ஸத்யத்தை உறுதிபடுத்துகிறது.
“அப்படிப்பட்ட சக்தியாக நீ இருக்கும்போது, எதற்காக நீ துயரப்பட வேண்டும்? நீயே தெய்வீகமாக இருக்கும்போது எது உன்னைப் பயப்படச் செய்ய முடியும்? நீ எதை விரும்ப முடியும்? வேறு எதை நீ கேட்க முடியும்?” என்று கேட்கிறார். இந்த ஸத்யம் நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும். நாம் தெய்வீகமயமானவர்கள். நாம்தான் இந்தப் பிரபஞ்சம். நாம் அழிவதில்லை. நம்முடைய உடலும், நம்முடைய அடையாளங்களும் அழிந்து போகும்போதுகூட, நாம் உயிருடன்தான் இருக்கிறோம். ஒருமுறை இந்த ஸத்யத்தை நாம் உணர்ந்துவிட்டால், பிறகு எதுவுமே நம்மை கவலை அடையச் செய்ய முடியாது. துக்கத்திற்குள் ஆழ்த்த முடியாது. நாம் எப்பொழுதும் ஆனந்தத்திலேயே இருக்க முடியும்.