நீங்கள் அழிலவில்லாதவர்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

எவன் இந்த ஆத்மாவைக் கொல்பவனாக நினைக்கிறானோ மற்றும் எவன் இந்த ஆத்மாவால்க் கொல்லப்பட்டவனாக நினைக்கிறானோ அந்த இருவருமே அறியாதவர்கள். ஏனெனில் இந்த ஆத்மா உண்மையில் யாரையும் கொல்வதுமில்லை; யாராலும் கொல்லப்படுவதுமில்லை.
ஆத்மா பிறப்பதில்லை. அது இறப்பதும் இல்லை. ஒரு காலத்தில் இல்லாதிருந்து பிறகு பிறந்தது இல்லை. அது என்றும் இல்லாமல் போகப்போவதும் இல்லை. அது பிறவாதது. நிலையானது, மாறாதது மற்றும் புராதனமானது.
ஓ பார்த்தா, ஆத்மா அழிவில்லாதது, நித்யமானது, பிறப்பில்லாதது, மாறாதது என்பதை உணர்ந்து கொண்ட மனிதர் எப்படி மற்றவரைக் கொல்வார் அல்லது மற்றவர்களைக் கொல்லக் காரணமாக இருப்பார்?
மனிதன் எப்படி பழைய ஆடையைக் கழற்றி விட்டுப் புதிய ஆடையை உடுத்திக் கொள்கிறானோ, அதேபோல் ஆத்மாவானது பழைய உடலை விட்டுவிட்டு புதிய உடலை எடுத்துக் கொள்கிறது.
ஆத்மாவை ஆயுதங்களால் வெட்ட முடியாது; நெருப்பால் சுட முடியாது; தண்ணீரோல் நனைக்க முடியாது; காற்றால் உலர்த்த முடியாது.
ஆத்மாவை உடைக்க முடியாது; எரிக்க முடியாது; கரைக்க முடியாது; உலர்த்த முடியாது; அது நிலையானது. எங்கும் வியாபித்து இருக்கிறது; நிலையானது; அசைக்க முடியாது; புராதனமானது.
ஆத்மா உருவெடுக்காதது; நினைத்துப் பார்க்க முடியாது; மாற்ற முடியாதது என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு புரிந்து கொண்ட பிறகு நீ துக்கப்படுவது பொருத்தமுடையதாகாது.
பற்றுகளை விட்டுவிட்டால் பயமும் நம்மை விட்டுவிடும்
கிருஷ்ணர் நேரடியாக அர்ஜுனனின் முந்தைய சந்தேகங்களுக்கு இங்குப் பதில் சொல்கிறார். அர்ஜுனன், 'தான் தம் உறவினர்களையும் ஆச்சாரியார்களையும் அழிப்பதனால் தமக்கு இந்த உலகிலும் எதிர்காலப் பிறப்பிலும் சொல்ல முடியாத துக்கம் ஏற்படும் என்றும், தம்முடைய செயலால் எதிர்காலச் சந்ததிகளும் துன்பமடைவார்கள்' என்றும் சொல்லிக்கொள்கிறார்.

அதற்குக் கிருஷ்ணர், "அர்ஜுனா உன்னுடைய எல்லாப் பயங்களுக்கும் அர்த்தமே இல்லை, ஏனென்றால் உண்மையில், சக்திக்கு, ஆத்மாவுக்கு மரணம் என்பதே இல்லை. நாம் எதைச் கொல்கிறோம்? என்றாவது ஒருநாள் அழிந்தே ஆகவேண்டிய உடலைத்தான் கொல்கிறோம். அதனால் யாரும் யாரையும் கொல்லவும் முடியாது; யாராலும் கொல்லப்படவும் முடியாது. இரண்டுமே கற்பனைகள்தான்.
ஒரு கூண்டில் இருந்து
இன்னொரு கூண்டிற்
குச் செல்லும்
ஒரு பயணம்தான்
மரணம்.
இந்த உடலில் குடிகொள்ளும் ஆத்மாவானது என்றும் வாழ்கிறது. அது இந்த உடலில் தற்காலிகமாகத்தான் வாசம் செய்கிறது. ஆனால் அது நிலையானது. அழிவில்லாதது. மேலும் அதற்குப் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை. ஆத்மாவை மூடியிருக்கும் உடலுக்குத்தான் அழிவும் மறு பிறப்பும். ஆத்மா என்றும் வாழ்கிறது,” என்று விளக்குகிறார்.
இங்கே கிருஷ்ணர் எதைச்
சொல்கிறாரோ அதற்கும் சாஸ்திரங்கள்
சொல்வதற்கும் வேற்றுமை இருக்கிறது.
கிருஷ்ணர், 'மரணம்' என்கிற கருத்தையே
மறுக்கிறார். 'மரணம் என்ற ஒரு நிகழ்வே
கிடையாது' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
நல்லபடியாக நடந்துகொள், நீ இறக்கிறபோது உன் நன்னடத்தையே உன்னைக் காப்பாற்றும், நீ கெட்டவனாக வாழ்ந்தால், துக்கப்படுவாய் என்றெல்லாம் அவர் சொல்லவில்லை. மரணம் என்ற ஒன்றே கிடையாது என்கிறார். அவ்வளவுதான்.
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் குழந்தையாக இருக்கும் போதே உங்களை மனிதர்களே இல்லாத தனித் தீவில் விட்டுவிட்டு சென்று விடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் வளர்ந்து பெரியவனான பிறகு, எது மரணம் அடையும், உண்மையில் உங்கள் உடல் இறந்த பிறகு என்ன நடக்கும் என்பது பற்றியெல்லாம் உங்களுக்கு ஏதாவது கருத்து இருக்குமா? இல்லை, உங்களுக்கு அவற்றைப் பற்றியெல்லாம் எதுவுமே தெரிந்திருக்காது.
சாக்ரடீஸ் என்ற கிரேக்க தத்துவஞானி, அவர் இறக்கும்போது கேட்கிறார், "நான் இல்லாமல் போய் விடுவேன் என்றாலும் சரி, இல்லை மீண்டும் பிறக்க மாட்டேன் என்றாலும் சரி, இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?"
பிறப்பு, மறு பிறப்பு போன்றவை எல்லாம் எந்த வித்தியாசத்தையும் தரப் போவதில்லை.
இங்கே கிருஷ்ணர் மரணத்தை ஏற்கெனவே பார்த்த ஒருவரிடத்தில் பேசுகிறார். அதனால்தான் அவர் மரணத்தைப் பற்றிச் சொல்லவேண்டியதிருக்கிறது. மரணம் என்ற ஒன்று கிடையவே கிடையாது, ஒரு கூண்டில் இருந்து இன்னொர கூண்டிற்குச் செல்லும் ஒரு பயணம்தான் மரணம்; ஒரு உடலில் இருந்து இன்னொர உடலிற்கு உயிர் செல்கிறது என்று விளக்கவேண்டியதிருக்கிறது.
உடலோடு நமக்கு இருக்கும் பற்றுதான் இந்த உடல் இறந்தால் நாமும் இறந்து விடுவோம் என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. உடலோடு நமக்கு இருக்கும் பற்றுதான் நமக்கு இருக்கும் பற்றுகளிலேயே மிக ஆழமானது.
நம் உடைமைகள் மற்றும் உறவுகள் மீதும் நாம் பற்றுகளை வளர்த்துக்கொள்கிறோம். அதனால்தான் உடைமைகளையும் உறவுகளையும் இழக்கும்போது ஏற்படுகிற பயம், நம் உடலை இழக்கும்போது ஏற்படுகிற பயத்தைப் போன்றே இருக்கும்.
ஒருவர், 'இந்தப் பற்றுகள் எல்லாம் தற்காலிகமானவை; தம்முடைய துக்கங்களுக்கெல்லாம் பற்றுகள்தான் காரணம்' என்று புரிந்துகொள்ளும்போது, அவர் ஸத்யத்தைப் புரிந்துகொள்கிறார். ஸத்யத்தைப் பற்றிய புரிந்துகொள்ளுதல் இந்த எல்லாப் பயங்களையும் போக்கிவிடுகிறது.

மரணம்-இன்னொரு புது வாழ்க்கைக்கான பயணம்
ஆத்மா தொடர்ந்து வாழும் என்ற உண்மையைப் புரிந்துகொள்ளாத கலாச்சாரங்கள், மரணத்தின்போது நமது அடையாளங்களை இழந்துவிடும் அபாயம் இருப்பதாகச் சொல்லி, மரணத்தைப் பற்றிய பயத்தை தனிமனித உணர்வில் ஆழமாக ஏற்படுத்தி விடுகின்றன.
> உடலோடு
> நமக்கு இருக்கும்
> பற்றுதான்
> இந்த உடல் இறந்தால்
> நாமும் இறந்து
> விடுவோம் என்ற
> குழப்பத்தை
> ஏற்படுத்துகிறது.
இத்தகைய கலாச்சாரங்களில், ‘மரணத்தோடு நம் வாழ்வு முடிந்து விடுகிறது, அது நிரந்தரமானதொரு முடிவு' என்ற நம்பிக்கை ஊட்டப்படுகிறது. இந்த நம்பிக்கை ஒருவரைப் பரபரப்புமிக்கவராகச் செய்கிறது. ஏனெனில் அனுபவிப்பதற்கு எதிர்காலம் என்ற ஒன்றே இல்லை என்று கருதி, பரபரப்பாக, அவசர அவசரமாக இன்பத்தை நாடிச் செல்கிறார்கள்.
'இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் சொர்க்கமும் நரகமும் சித்தரிக்கப்படுகின்றன. எல்லாக் கலாச்சாரங்களும் சொர்க்கம், நரகம் என்ற கற்பனைகளை உருவாக்கி மக்களை ஆசையாலும் அச்சத்தாலும் கட்டுப்படுத்தி வந்திருக்கின்றன.
பிறப்பைப்போல் இறப்பும் ஒரு பயணம்தான் என்பதையும் வாழ்விற்கு முடிவில்லை என்பதையும் உணர்ந்த மனிதருக்குத் தனது அடையாளங்களை இழந்து விடுவோம் என்கிற பயம் இருப்பதில்லை. அவர் ஆனந்தமாக வாழ்கிறார். அவரை எதுவும் பயமுறுத்துவதில்லை. 'பாவம், நரகம்' போன்ற கருத்துகளால் அவர் பயப்படுவதில்லை, பாதிப்படைவதுமில்லை.
அதனால்தான் மரணத்திற்குப் பிறகும் வாழ்வு தொடர்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் இந்து மதம், புத்த மதம் போன்ற மதங்கள் சகிப்புத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட கலாச்சாரங்களை உருவாக்குகின்றன.
அங்கு, வாழ்வதற்கான அவசரமோ அல்லது
இந்த ஒரு வாழ்வில் இருந்து எவ்வளவு
உறிஞ்ச முடியுமோ அவ்வளவையும்
ஒரே மூச்சில் உறிஞ்சிவிடவேண்டுமென்ற
வேகமோ இல்லை.
கீழைநாட்டு மதங்கள், “நாம் எல்லோரும் ஒரே சக்தியில் இருந்துதான் பிறந்தோம். மீண்டும் அதே சக்திக்குத் திரும்பி விடுவோம். இந்தச் சுழற்சி என்றென்றும் தொடரும்” என்று சொல்கின்றன.
> ‘நாம் எல்லோரும்
> ஒரே சக்தியில்
> இருந்து பிறந்தோம்.
> மீண்டும்
> அதே சக்திக்குத்
> திரும்பி விடுவோம்.
> இந்தச் சுழற்சி
> என்றும் தொடர்கிறது.
இந்த உண்மையை உணர்ந்தவர்கள், ஏற்றுக்கொள்ளும் தன்மையையும் சகிப்புத் தன்மையையும் அரவணைப்பையும் கருணையையும் மக்களுக்குப் போதிக்கிறார்கள். மற்றவர்களை தங்கள் மதங்களுக்கு மாற்றும் எந்தவித முயற்சியிலும் இவை ஈடுபடுவதில்லை.
கிருஷ்ணர் சொல்வதைச் சிலர், மிக எளிதாகத் தவறான பொருளில் எடுத்துக்கொள்ளலாம். "யாரும் கொல்வதும் இல்லை; கொல்லப்படுவதும் இல்லை என்றால், கண்மூடித்தனமாகக் கொலைகளைச் செய்யலாமே," என்று கேட்கலாம். ஆனால் கிருஷ்ணர் உணர்த்த வரும் ஸத்யம் இதுவல்ல 'மரணம் என்பது வாழ்வின் முடிவு இல்லை; அது ஒரு மைல்கல்தான்' என்பதைப் புரிந்து கொண்ட மனிதன், மரணம் இயற்கையாக நடக்கும் போதோ அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்தினால் நடக்கும் போதோ பயப்படுவதில்லை.
உலகைக் காக்க
இறைவனே நிகழ்த்திடும் ஓர் யுத்தம்
அர்ஜுனன், பதஞ்சலி யோக முனிவர் வகுத்த அஷ்டாங்க யோகத்தை நன்கு கற்றவர். அதில் முதல்படி யம என்பதாகும். யமவில் விதிக்கப்பட்டிருக்கும் ஸத்ய (சத்தியம்), அஹிம்ஸா (கொல்லாமை, வன்முறையற்ற தன்மை) அபரிகிரஹம் (எளிமை, பிறர் பொருட்களின் மேல் ஆசைகொள்ளாமை), அஸ்தேய (திருடாமை) ப்ரம்மசர்ய (கற்பனைகள் இல்லாமல் வாழ்தல்)ஆகிய வாழ்வியல் நெறிகளை நன்கு கற்றவர் அர்ஜுனன். மேலும் அவர் க்ஷத்ரியன் என்ற முறையில் போரில் எதிரிகளைக் கொல்வது அவருடைய தார்மீகக் கடமையாகும் என்பதையும் அறிவார்.
இங்கே கிருஷ்ணர், ஸத்யங்களின் நுட்பமான நிலைகளை, அர்ஜுனன் அதுவரை உணர்ந்திராத பகுதிகளை விளக்குகிறார். "கொல்ல மாட்டேன்," என்று அர்ஜுனன் சொல்வது அஹிம்ஸையின் மேல் அவருக்கு இருக்கும் நம்பிக்கையினால் அல்ல; அவர் கொல்லவேண்டிய உறவினர்களுடன், அவர் ஏற்படுத்திக்கொண்ட அடையாளத்தினால்தான்! தம்முடைய அடையாளங்களாக விளங்கும் அவர்களைக் கொல்வதன் மூலம் தம் அடையாளத்தை இழக்க வேண்டியிருக்குமே என்ற பயத்தின் காரணமாகத்தான், அவருக்குப் போரிட தயக்கம் ஏற்பட்டதே தவிர, கருணையினால் அல்ல. அறியாமையாலும் பற்றுதலாலும் கற்பனைகளாலும்தான் அவருக்கு இந்தத் தயக்கம் தோன்றுகிறது.
‘தர்மத்தைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவர், அதை எந்த வகையிலாவது காப்பாற்றியே தீர வேண்டும்’ என்று கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொல்லும் அறிவுரை, இன்றைய சூழ்நிலையில் ஒரு ராணுவ வீரருக்கோ, காவல்துறை அதிகாரிக்கோ பொருந்துவதாக இருக்கிறது. ஏனெனில் சட்ட ஒழுங்கைச் சரியான முறையில் பராமரிக்கவேண்டிய பொறுப்பு, இன்று அவர்கள் கையில்தான் உள்ளது. எப்படியிருந்தாலும் அவர்கள், ஒன்றுமறியாத அப்பாவி மக்கள் பல பேரைக் கொல்லும்படி தாங்கள் கட்டாயப்படுத்தப்படும்பொழுது, எதைப்பற்றியும் சிந்திக்காமல் வெறுமனே அந்தக் கட்டளைகளைக் குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்வதாக இருக்கக்கூடாது;
மரணம் என்பது
வாழ்வின்
முடிவு இல்லை.
அது ஒரு
மைல்கல்தான்.
அப்போது அவர்கள் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்பவர்களாக இருக்கக்கூடாது.
நாம் செய்யும் செயல் ஆசையாலோ, அச்சத்தாலோ தூண்டப்பட்ட செயலாகவும் இருக்கக் கூடாது. அது எதையோ அடைவதற்காகவோ அல்லது நாம் அவர்களைக் கொல்லாவிட்டால் அவர்களால் நாம் கொல்லப்பட்டு விடுவோம் என்ற பயத்தின் காரணமாகவோ இருக்கக் கூடாது.
மாறாக, அத்தகைய அழிவு உலக நன்மைக்காகச் செய்யப்பட்டே ஆக வேண்டும் என்பதற்காகவும், அது, புதியதொரு படைப்பிற்கே வழி வகுக்கும் என்ற புரிதலின் அடிப்படையில் செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.

இயற்கையின் அழிவு செயல் இந்த
நோக்கத்தை அடிப்படையாகக்
கொண்டதுதான். அது அழிப்பதே
படைப்பதற்காகத்தான். சிவன்
புதுப்பிப்பவர். நாம் நினைப்பதுபோல்
அழிப்பவர் அல்ல. இதைத்தான்
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு
உபதேசிக்கிறார்.
அக நடுக்கத்தின் புற பிரதிபலிப்பே வன்முறை
உடனே நீங்கள், "எதுவும் அழிக்கப்படுவதில்லை; எதையும் நம்மால் அழிக்கவும் முடியாது என்றால், கொலை செய்தால் பாவம் கிடையாதா? ஹிட்லர், பின்லேடன் போன்றவர்களுக்குப் பாவம் கிடையாதா? அவர்களும் என்றும் அழியக்கூடிய உடல்களைத்தானே கொல்கிறார்கள்? மக்கள் கூண்டோடு அழிவதைப் பற்றிக் கிருஷ்ணருக்குக் கவலை இல்லையா, அக்கறையில்லையா?" என்று கேட்கலாம்.
இல்லை. நிச்சயம் கிடையாது. கிருஷ்ணர் ஞான நிலையில் இருந்து, பிரபஞ்சத்தின் பார்வையில் உடல் அழிந்தாலும் ஆத்மா அழிவதில்லை. அதனால் மரணம் இல்லை என்று சொல்கிறார்.
வன்முறையும் கொலையும் வெறும் வெளியுலகச் செயல்கள் மட்டுமல்ல. அவை உளவியல் ரீதியாக ஒருவரை ஆட்டுவிக்கும் தூண்டுதல்கள். ஒருவர் ஹிட்லருக்கு உரிய மனஅமைப்பைப் பெற்று, ஆனால் ஹிட்லருக்கு இருந்த அதிகாரம் இல்லாமல் இருந்தாலும் அவர் அதே செயலைச் செய்வார்; ஆனால் சிறிய அளவில் செய்வார்!
ஹிரோஷிமாவில் குண்டு போடுவதற்கான விசையை அழுத்திய விமானிக்கு இருந்த வன்முறையைவிட அதற்கு ஆணை பிறப்பித்த அதிகாரிகளுக்கு இருந்த வன்முறையே அதிகமானது. அரியணைக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்தாலும் போருக்கு ஆணை பிறப்பித்த அரசனே வன்முறையாளன்.
மனத்திற்குள் இருக்கும் வன்முறை வாசனையாக, ஆசையாக ஒவ்வொரு பிறப்பிற்கும் தொடர்ந்து செல்கிறது. அந்தப் பயங்கரம் மரணத்தோடு நின்று விடுவதில்லை. வன்முறை மனப்பான்மையால் உயிர், தவற்றுக்கு ஆளாகிறது,அதன் தன்மையில் குறைகிறது, சீரழிகிறது.
வன்முறையாளன் எப்பொழுதும் ஒரு
கோழைதான். ஸத்யத்தை எதிர்கொள்வதற்கான
தைரியம் அவனிடம் இருப்பதில்லை. பிறர்
தன்னை எப்படி நடத்த வேண்டுமென்று
நினைக்கிறானோ, அதேபோல்தான் அவனும்
மற்றவர்களை நடத்த வேண்டும் என்ற
உணர்வு அவனுக்கு இல்லை.
தன்னைக் காத்துக்கொள்ள வேண்டுமென்றால் தான் மற்றவர்களை, முதலில் அழித்தாக வேண்டும் என்ற பொய்களால் ஆன ஒரு கூண்டைக்கட்டிக்கொண்டு தன்னைத்தானே அவன் தனிமைப்படுத்திக்கொள்கிறான்.
இன்று வன்முறை அதிகரித்து விட்டது. காரணம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைவிட, தொழில்நுட்பத்தின் உதவியால் கொல்வதுதான் எளிதாக இருக்கிறது.
பல நேரங்களில் நாம் யாரைக் கொல்ல வேண்டுமென்று நினைக்கிறோமோ அவர்களை நேருக்கு நேர் பார்க்க வேண்டும் என்ற தேவைகூட இல்லை. தொலைவிலிருந்தே துப்பாக்கியால் சுடலாம் அல்லது குண்டுகளைப் போடலாம்.
ஒரு நாட்டையே அழிக்க வேண்டுமென்று
நினைக்கும்போது, அப்படி அழிக்க
நினைப்பவர் அரசராக இருந்துவிட்டால்,
அவர் ஒரு பொத்தானை அமுக்கிவிடலாம்
அல்லது அந்த நாட்டில் வன்முறையைக்
கட்டவிழ்ப்பதன் மூலம் அந்நாட்டையே
அழிக்க முடியும் என்று சொல்லி, அங்கே
வன்முறையைத் தூண்டி விடுவதற்கு வேறு
ஒரு நாட்டை ஒத்துக்கொள்ள வைக்கலாம்.
நாம் நம்மை
இறை சக்தியாக
உணர்ந்த பிறகு
எல்லா
உயிர்களும்,
உயிரற்றவைகள்
உட்பட,
கடவுளின் அம்சங்கள்
என்பதை
உணர முடியும்.
இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு "நாங்கள் பதில் சொல்லவேண்டிய தேவை இல்லை. அதைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது" என்று சொல்லியும் தப்பித்துக்கொள்ளலாம்; "கடவுளின் பெயரால், தர்மத்தைக் காப்பதற்காகத்தான் நான் கொன்றேன்" என்றுகூட சொல்லிக்கொள்ளலாம்.
அன்பு - எதிரிகளின் இதயத்தையும் ஈரமாக்கிவிடும்
நாம் விழிப்புடன் இருக்கும்பொழுது, நமக்கு அருகில் இருக்கும் மனிதர் கடவுள் சக்தியின் வெளிப்பாடுதான் என்பதை உணரும்போது நம்மால் எப்படி வன்முறையோடு செயல்பட முடியும்? பக்கத்தில் இருப்பவர் நம் குடும்பத்தினரா, உறவுக்காரரா, நம் சமுதாயத்தைச் சேர்ந்தவரா, நம் மதத்தைச் சேர்ந்தவரா, நம் நாட்டைச் சேர்ந்தவரா என்ற கேள்விகளே அங்கு எழாது.
அவருக்கும் நமக்கும் இருக்கும் வரலாறு, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் ஒன்றாக இருக்கிறதா என்றும் யோசிக்கமாட்டோம். நாம் எதை நம்புகிறோமோ, அவை எல்லாவற்றின் மேலும் அடுத்தவருக்கு அவநம்பிக்கை இருக்கலாம். இருந்தாலும் நாம் எந்த அளவிற்கு இந்தப் பிரபஞ்சத்தின் பாகமோ, அவரும் அதேபோன்று ஒரு பாகம்தான்.
அதனால்தான் கிருஷ்ணர் கேட்கிறார், "தான் அழிவற்றவன், நித்யமானவன், பிறப்பற்றவன், மாறுதல்களுக்கு உட்படாதவன் என்று புரிந்துகொண்ட பிறகு, ஒருவர் எப்படி மற்றவர்களைக் கொல்ல முடியும்? அல்லது எப்படி மற்றவர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருக்க முடியும்?" நாம் நம்மை இறை சக்தியாக உணரும்போது, இந்த உணர்வு நம்மைத் தாமாகவே மற்ற எல்லா உயிரினங்களும்கூட கடவுளின் அம்சங்கள் என்ற உணர்வு நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும். அப்பொழுது நம்மால் வன்முறையை உருவாக்க முடியுமா?
கிருஷ்ணர் சொல்லும் இந்த ஸத்யத்தை ஆழமாகப் புரிந்துகொண்டால், இந்த உலகத்தில் வன்முறை இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. கொலைகள் நடப்பதற்கும் வாய்ப்பு இல்லை. ஒரு பூச்சியைக்கூட நீங்கள் கொல்ல மாட்டீர்கள். சுயபாதுகாப்பிற்காகக்கூட நீங்கள் மற்றவர்களைக் கொல்லவேண்டிய தேவை இருக்காது. காரணம் நீங்கள் விழிப்புணர்வில் இருக்கும்போது, உங்கள் விழிப்புணர்வு மற்ற உயிரினங்களுக்கும் சென்று சேரும். அதனால் அந்த உயிரினங்களும்கூட உங்களைத் தாக்க முயற்சி செய்வதில்லை.
ஒருமுறை, ஓம்காரீஸ்வரர் என்ற மலைப்பகுதியில் நான் தியானம் செய்து கொண்டிருந்தேன். தியானத்தை முடித்துவிட்டு கண் விழிக்கும்போது என்முன் ஒரு பெரிய கரடி நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். அந்தக் கரடி என் பக்கத்தில்தான் இருந்தது. ஆனால் எனக்குள் எந்தப் பயமும் வரவில்லை. நானும் அந்தக் கரடியைப் பார்த்தேன். அந்தக் கரடியும் என்னைப் பார்த்தது, அதன் பிறகு ஒன்று செய்யாமல், அதன்வழியில் சென்றுவிட்டது.
அதேபோல் பல வேளைகளில், நான் என் அருகில் கொடுமையான விஷம் கொண்ட நாகப்பாம்புகளைப் பார்த்திருக்கிறேன். அவை வெறுமனே பார்த்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடும்.
> உங்களுக்குள் பயம்
> உருவாகாதபோது
> மற்றவர்கள்
> உங்கள் மேல்
> பகைமை
> பாராட்டுவதில்லை.
எனக்குள் பயம் உருவாகவில்லையென்றால், மற்றவர்கள் மேல் பகைமையும் தோன்றப் போவதில்லை. எனக்குள் பயமும், பகைமையும் இல்லாதபோது அவற்றுக்குள்ளும் அவை தோன்றுவதில்லை. ஆகவே அவை நம்மைப் புரிந்துகொள்கின்றன, நம்மை ஏற்றுக்கொள்கின்றன. தற்காப்புக்காக அடுத்தவரை அழித்தோம் என்று சொல்வது பச்சைப்பொய்.
இந்த உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் தங்களைக் காத்துக்கொள்ளவே ‘தயார் நிலை’யில் தங்கள் படைகளை
வைத்திருப்பதாகச் சொல்லிக்கொள்கின்றன.
இவ்வாறு தம்மைக் காத்துக்கொள்ளும்
உரிமையை, 'ஒரு புனிதச் செயலாகவே'
கருதும் மனப்பான்மை, எல்லாச்
சுயமரியாதையுள்ள நாடுகளிலும் நிலவுகிறது.
உலகில் இருக்கும் எல்லோரும் தற்காத்துக்
கொண்டுதான் இருக்கிறோம் என்றால்,
யார் முதலில் சண்டையைத் துவக்கியது?
இதையெல்லாம் நாம் யோசிக்க வேண்டும்.
நமக்குள் இருக்கும் பயத்தை உணர்ந்த பிறகுதான், வீட்டு நாய்கள்கூட நம்மை எதிர்க்கின்றன. நம் பயத்திலிருந்துதான் எல்லா வன்முறைகளும் உருவாகின்றன. இந்த உண்மை நாய்களுக்குக்கூட தெரிந்திருக்கிறது.
ஏனென்றால் நம்மைப் போன்ற மனிதர்களைப்போலல்லாமல், நாய்கள் புத்திசாலித்தனமானவை, உண்மையில் அவை இயற்கையிலேயே புத்திசாலித்தனமானவை. மனிதர்களுக்கு மட்டும்தான் இயற்கையை உதாசீனப்படுத்திவிட்டு, முட்டாள்தனமாக நடந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்டீர்களென்றால், நீங்கள் உங்களுக்காகவோ, மற்றவர்களுக்காகவோ என்றும் பயப்பட மாட்டீர்கள். நீங்கள் அழிவற்றவர்களே; உங்களைச் சார்ந்தவர்களும் அழிவற்றவர்களே! உங்களுக்குள் இருக்கும் பயத்தையும் வன்முறையையும் விட்டுவிடுங்கள். மற்றவர்கள் மேல் ஏற்படும் அன்பால் உங்கள் இதயத்தை நிறையச் செய்யுங்கள்.
