உள், வெளி வன்முறை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கேள்வி: மற்றவர்கள் மேல் பரிவும் அக்கறையும் இருக்கும் அதே நேரத்தில் அவர்கள் மேல் பற்றற்றும் இருக்க முடியுமா? ஆன்மீகப் பாதையில் பயணிக்கும்போது நம் இதயத்தை மலர்த்தி வைத்துக்கொள்வது சாத்தியமா?
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்: யார் தம்முடைய இதயத்தை மலர்த்தி வைத்திருக்கிறார்களோ, அவர்களால்தான் பற்றற்று இருக்க முடியும். அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் இருக்கும்போது நீங்கள் உத்சாகமில்லாமல் மட்டுமே இருப்பீர்கள், பற்றற்று இருக்க மாட்டீர்கள்.
தன்னை முழுமையாக அர்ப்பணிக்க முடிந்த ஒரு மனிதர்தான், முழுமையான பற்றற்ற நிலையில் இருக்க முடியும்.
மற்றவர்கள் மேல் அன்பைப் பொழிவதற்கு நீங்கள் அஞ்சுகிறீர்கள். ஏனென்றால் அதன்பிறகு அவர்கள் மேல் உள்ள பற்றை உங்களால் துறக்க முடியாமல் போய்விடுமோ என்று உங்களுக்குப் பயம்.
ஆனால் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் பற்றற்று இருத்தல் இந்த இரண்டிற்கும் காரணமான சக்தியும் ஒன்றுதான். உங்களால் முழுமையாகப் பகிர்ந்துகொள்ள முடியாவிட்டால், உங்களால் முழுமையாகப் பற்றற்றும் இருக்க முடியாது.
போராடிக் கொண்டிருக்கும் மனிதர் பாதி மனிதரே. அவரால் பற்றிலும் இருக்க முடிவதில்லை; பற்றற்றும் இருக்க முடிவதில்லை. முழுமையாகப் பற்றில் இருக்கும் ஒரு மனிதரால், முழுமையாகப் பற்றண்ணாமலும் இருக்க முடியும்; அவரால் முழுமையான பற்றற்ற தன்மையிலும் இருக்க முடியும்.
பெரும்பான்மையான நேரங்களில் மற்றவர்களிடம் இருந்து கவனத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால், தொடர்ந்து மற்றவர்களுக்கு உங்கள் அன்பையும் பரிவையும் கொடுப்பதற்கு உங்களால் முடிவதில்லை. உங்கள் இதய சக்கரமான அனாஹத சக்ரம் எப்பொழுதும் கவனத்தேவையால் அடைபட்டே இருக்கிறது.
மற்றவர்களிடமிருந்து கவனத்தை எதிர்பார்ப்பதன் மூலம் அவர்களுடைய சக்தியை உறிஞ்சுகிறீர்கள், புரிந்துகொள்ளுங்கள், கவனம்கூட சக்திதான்!
இதற்கு முக்கியக் காரணம், உங்களை இந்தச் சமுதாயம் வளர்த்த விதம்தான்.
sிறு வயதில் இருந்தே மற்றவர்களைத் திருப்திபடுத்துவதற்காகவே நீங்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளீர்கள். அதனால் மற்றவர்களின் அங்கீகாரம் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டு விடுகிறீர்கள்.
உங்களில் பலருக்கு இந்த அனுபவம் நிகழ்ந்திருக்கும். மற்றவர்கள் துக்கத்தில் இருக்கும்போது, நீங்கள் அவர்களை ஆறுதல் படுத்த முயன்று, கடைசியில் நீங்களே சோர்ந்து போய் விடுவீர்கள்.
இத்தனைக்கும் உடலால் நீங்கள் எதையும் செய்திருக்க மாட்டீர்கள். உணர்வாலும் நேரிடையாக எதையும் அனுபவித்திருக்க மாட்டீர்கள். மற்றவர்கள் அழுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அவ்வளவுதான். ஆனாலும் அது உங்களைப் பாதிக்கிறது. உங்களைப் பலவீனப்படுத்துகிறது.
இது உண்மை. காரணம் மற்றவர்கள் உங்கள் சக்தியை உறிஞ்சி விடுகிறார்கள்.
உங்கள் இதயத்தில் மையம் கொள்ளாமல், உங்கள் அநாஹத சக்ரம் மலராமல் இருந்தால், நீங்கள் சக்தியை இழந்ததாக உணர்வீர்கள். அதனால் உங்கள் உடலும் பாதிக்கப்படும்.
உங்கள் அநாஹத சக்ரத்தை மலரச் செய்வதனால், சக்தியடையச் செய்வதனால், நீங்கள் சக்தியின் ஊற்றாக நிலைத்து விடுவீர்கள். அப்பொழுது எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல், சோர்ந்துவிடாமல் மற்றவர்களுக்குத் தொடர்ந்து அன்பையும் கவனத்தையும் உங்களால் வழங்க முடியும்.
ஆனந்த ஸ்பூரண த்யான முகாமில் அநாஹத சக்ரத்தை மலரச் செய்தவற்கான ஒரு சிறிய த்யான நுட்பத்தைக் கற்றுத் தருகிறோம். அந்தத் த்யானத்தை செய்வதன் மூலம் உங்கள் அநாஹத சக்ரம் மலரும். அநாஹத சக்ரம் மலர்ந்தால், உங்களால் தன்னலம் இல்லாமல் மற்றவர்கள் மேல் அன்பைப் பொழிய முடியும். அது மட்டுமல்ல, அது உங்களுக்கு நீங்களே ஆரோக்கியத்தை ஏற்படுத்திக்கொள்ள உதவக்கூடிய ஒரு நுட்பமும் கூட!
> 'ஞான நிலை' என்பது பிறப்பு, இறப்பு ஆகிய இரண்டு கட்டுகளில் இருந்து விடுதலை அடைவதே.
எதையும் நீங்கள் எதிர்பார்க்காமல் இருக்கிறபோது, நீங்கள் பற்றற்று இருக்கிறீர்கள். பற்றற்று இருப்பது என்றால் மற்றவர்கள் மேல் அக்கறை இல்லாமல் இருப்பது என்று பொருள் கிடையாது; அதற்கு நேர்மாறாக மற்றவர்களின் மேல் அக்கறையுடன் இருப்பது என்பதே அதன் பொருள்.
பற்றற்று இருத்தல் என்பது வேறு, தொடர்பற்று இருத்தல் என்பது வேறு. மக்கள் இந்த இரண்டு வார்த்தைகளையும் குழப்பிக்கொள்கிறார்கள்; கிருஷ்ணர் 'பற்றற்று இருங்கள்' என்று சொல்லும்போது, அவர் மற்ற மனிதர்களுடன் நம்மைத் தொடர்பற்று இருக்கச் சொல்வதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அது அப்படி அல்ல. நம்மால் மற்றவர்களுடன் இயைந்தும், அவர்களுடன் தொடர்புகொண்டும் வாழ முடியும்; அதே சமயத்தில் அவர்கள் என்னுடையவர்கள் என்ற பற்றில்லாமலும் இருக்க முடியும்.
நீங்கள் பற்றற்று இருக்கும்போது,
நீங்கள் எல்லோருக்கும் உங்கள்
அன்பை வழங்குவீர்கள். இவர்கள் என்
குடும்பத்தவர்கள், என் நண்பர்கள்,
இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் அல்ல,
வேற்று மனிதர்கள் என்றெல்லாம் பிரித்துப்
பார்க்க மாட்டீர்கள். எல்லோருக்கும்
எந்த வித்தியாசமும் இல்லாமல் அன்பை
வழங்குவீர்கள். உங்கள் அன்பிற்கு எல்லை
இருக்காது, அளவும் இருக்காது.
உணர்ச்சிகளை
அடக்குவதால்
மட்டுமே தனிநபர்
சுதந்திரம்
உருவாகிவிடாது.
பற்று, அது உங்களைக் கடந்தகாலத்தோடும் எதிர்காலத்தோடும் பிணைத்துவிடும். பற்றற்ற தன்மை உங்களை நிகழ்காலத்தில் நிலை பெறச் செய்யும். நீங்கள் மற்றவர்கள் மேல் உண்மையான, நிபந்தனையற்ற அன்பைச் செலுத்தும்போது, மனிதர்கள் கடந்தகாலத்தில் செய்த செயல்களையும் அவர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதையும் யோசிக்க மாட்டீர்கள்.
எதிர்காலத்தில் அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்றெல்லாம் கவலைப்பட மாட்டீர்கள். இந்த நிமிடத்தில் நீங்கள் அன்பாக இருக்கிறீர்கள், அவ்வளவுதான்.
அதனால்தான் உண்மையான அன்பு நிகழ்காலத்தில் மட்டும் இருக்கிறது. அதனால்தான் அன்பிற்கு கண்கள் இல்லை - அதாவது அதற்கு எதிர்காலத்தையும் கடந்தகாலத்தையும் பார்க்கும் கண்கள் இல்லை.
அன்பு ஒரு குறிப்பிட்ட பொருள் மீது மட்டுமே செலுத்தப்பட்டால், அன்பிற்கு இலக்காக ஒரு பொருள் இருக்க வேண்டுமென்றால், அது உண்மையான அன்பு இல்லை. நீங்கள் பொருட்களைத் துறந்துவிடும்போது, நீங்கள் எல்லோரிடத்திலும் எப்படியிருந்தாலும் எல்லா இடங்களிலும் அன்பை வெளிப்படுத்தும்போது, அன்பு கருணையாக மலர்கிறது.
முற்றிலும் உயர்ந்த விழிப்புணர்வு நிலையில் வெளிப்படும் அன்பைத்தான் கருணை என்கிறோம்.
கேள்வி: சில குருமார்கள் ஆத்மாவைப் பூர்ணம் என்றும், சிலர் சூன்யம் என்றும் சொல்கிறார்கள். இரண்டிற்கும் அர்த்தம் வேறாக இருக்கிறது. இவை இரண்டும் எப்படி உண்மையாகும்?
புத்தர் ஆத்ம நிலையை ஒன்றுமில்லாத சூன்யம் என்று குறிப்பிடுகிறார். ஆதிசங்கரர் அதே நிலையை எல்லாம் நிறைந்த பூர்ணம் என்று குறிப்பிடுகிறார். இரண்டு குருமார்களும் ஒரே நிலையைப் பற்றித்தான் பேசுகிறார்கள்.
சங்கரர் 'தன்னை உணர்தல்', 'ஆத்மாவை உணர்தல்' என்று சொல்லும்போது, பிறப்பு இறப்பு என்ற பந்தத்திலிருந்து விடுதலை அடைவதைக் குறிப்பிடுகிறார்.
புத்தரும் எல்லாப் பந்தங்களில் இருந்து விடுதலை அடைவதைத்தான், 'நிர்வாண்' என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார், ஆனால் ஆத்மா என்று ஒன்றுமில்லை. அங்கு இருப்பது சூன்யம் மட்டுமே என்று சொல்கிறார்.
சூன்யம் மற்றும் பூர்ணம் இவை இரண்டும் ஒரே நிலையின் இரு பக்கங்கள். இவை இரண்டும் ஒன்றிற்கொன்று வேறுபட்டது அல்ல. இவை இரண்டும் இரண்டு விதமாகப் பார்க்கப்படுகிறது. அவ்வளவுதான். சூன்யம் என்று சொல்லும்போது, இதுவல்ல, இதுவல்ல என்று எல்லாவற்றையும் ஒதுக்குகிறோம். பூர்ணம் என்று சொல்லும்போது எல்லாவற்றையும் உள்ளடக்குகிறோம். அவ்வளவுதான்!
வேதத்தில் உள்ள பூர்ணமத: பூர்ணமிதம் என்பதன் பொருள்: பூர்ணத்திலிருந்து பூர்ணம் தோன்றுகிறது என்பதுதான். பூர்ணத்திலிருந்து பூர்ணம் வெளிப்பட்ட பின்பும், பூர்ணம் பூர்ணமாகவே இருக்கிறது.
இந்த ஸ்லோகத்தில் உள்ள பூர்ணம் என்ற வார்த்தைக்குப் பதிலாக சூன்யம் என்ற வார்த்தையைப் போட்டாலும் பொருள் மாறாது.
ஒன்றுமில்லாததைத் தாண்டி எப்படி ஒன்றும்
இல்லையோ, அதேபோல் பூர்ணத்தைத்
தாண்டியும் ஒன்றும் இல்லை.
அளவிட முடியாத வெளியில் இருந்து
எதைக் கழித்தாலும் அல்லது சேர்த்தாலும்
பெருக்கினாலும் அல்லது வகுத்தாலும் சரி,
அது அளவிட முடியாததாகவே இருக்கும்.
கணக்கில் வேண்டுமானால் பூஜ்யத்தோடு
எதையாவது சேர்த்தால், அது ஒரு மதிப்பை
உருவாக்கும்.
சூன்யம் மற்றும் பூர்ணம்
இவை இரண்டும்
ஒரே நிலையின்
இரு பக்கங்கள்.
இவை இரண்டும்
ஒன்றிற்கு ஒன்று
வேறுபட்டது அல்ல.
ஆனால் ஒன்றுமில்லாத பிரபஞ்ச இருப்பில் எதைச் சேர்த்தாலும் அது எப்பொழுதும்போல் ஒன்றுமில்லாததாகவே இருக்கும். அது தமக்குள் அனைத்தையும் இழுத்துக்கொள்கிறது. விஞ்ஞானிகளால் குறிப்பிடப்படும் ஒரு கருந்துளையைப் (Black Hole) போல, உள்ளே எது போடப்பட்டாலும் அங்கே காண்பதற்கு ஒன்றும் இருக்காது.
பூர்ணத்தைப் பற்றி பேசிய ஆதிசங்கரர், எதையும் ஒதுக்கித் தள்ளுவதன் அவசியத்தை உபதேசித்தார். அவருடைய கோட்பாடே, நேதி நேதி, "இதுவல்ல, இதுவல்ல," என்பதுதான். அவருடைய 'மேற்கோள் வாசகமே' இதுதான். எட்டு வயது இருக்கும்போது, ஆதிசங்கரர் தம் குரு கோவிந்தபாதர் கேட்கும் கேள்விகளுக்குத் துங்கபத்ர நதிக்கரையில் வைத்து பதில் அளிக்கிறார்.
ஆறு ஸ்லோகங்கள் கொண்ட அந்த நூலின் பெயர் ஆத்ம ஷட்க, இதில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஸ்லோகத்தின் சாரமுமே 'நான் இதுவல்ல, நான் இதுவல்ல' என்பதுதான்.
அவர் சொல்கிறார், "நான் இந்தப் பஞ்ச பூதங்கள் இல்லை. நான் உணர்ச்சிகள் இல்லை. நான் அனுபவிப்பவன் இல்லை."
இறுதியில் அவர் சொல்கிறார், "நான் சி'வம். சூ'ன்யம் பூர்ணத்திற்கு எடுத்துச் செல்கிறது."
கேள்வி: கிருஷ்ணர் அர்ஜுனனைப் போர் செய்யத் தூண்டுகிறார். கிருஷ்ணர் வன்முறையைப் போதித்தார் என்று பல மேலை நாட்டவர்கள் சொல்கிறார்கள். இது சரியா?
மனத்தில் வன்முறையைச் சுமந்து கொண்டிருப்பவர்கள்தான் வெளியில் நடக்கும் வன்முறையைப் பார்த்துப் பயப்படுவதுபோல் பாசாங்கு செய்வார்கள்.
வெளியுலக வன்முறைக்கும் மனத்திற்குள் இருக்கும் வன்முறைக்கும் வித்தியாசம் இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இவற்றில் ஒன்றில்லாமல் இன்னொன்று உருவாகாது.
மனத்தில் வன்முறையைச் சுமந்து கொண்டிருப்பவர்கள்தான் வெளியில் நடக்கும் வன்முறையைப் பார்த்துப் பயப்படுவதுபோல் பாசாங்கு செய்வார்கள். பண்பாட்டில் வளர்ந்துள்ளதாகக் கருதப்படும் தேசங்களில், சட்டங்கள், மக்களை அவர்களுடைய மனரீதியான வன்முறைகளை வெளிப்படுத்துவதற்கு அனுமதிப்பதில்லை; அவர்கள் அடக்கப்பட்டவர்களாகவே வளர்க்கப்படுகிறார்கள். சிரிக்கிற மக்களைப் பார்ப்பதே அபூர்வமாக இருக்கும். அப்படியே அவர்கள் சிரித்தாலும் அவர்களுடைய சிரிப்பு உதட்டைத் தாண்டாது. அது செத்துவிட்ட சிரிப்பு.
உளவியல் சொல்கிறது, வன்முறை அடக்கப்படுவதனாலேயே, ஒருவர் வன்முறையற்ற மனிதராக மாறிவிட முடியாது. அது அவரை அமைதியை உணர விடுவதில்லை, அவரை ஒரு வெடிகுண்டாகவே மாற்றி விடுகிறது.
உங்களுக்குள் மற்றவர்கள் வராமல் பார்த்துக்கொள்வது, அது மன அழுத்தத்திற்கு நீங்கள் கொடுக்கும் அழைப்பு
வன்முறை உணர்வுகள் அடக்கப்பட்ட மனிதன் ஒரு வெடிகுண்டாக மாறி விடுகிறான்.
மக்கள் இதைத் தனிமனித சுதந்திரம் என்று நினைக்கிறார்கள். உணர்ச்சிகளை அடக்குவதால் தனிநபர் சுதந்திரம் உருவாகாது. அது, வெடிப்பதற்குத் தயாராக இருக்கும் மோசமான அழிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு அணுகுண்டாக மட்டுமே இருக்க முடியும்.
உங்களுக்குள் மற்றவர்கள் வராமல் பார்த்துக்கொள்வது தனிநபர் சுதந்திரமோ உரிமையோ கிடையாது. அது, மன அழுத்தத்திற்கு நீங்கள் கொடுக்கும் அழைப்பு . உங்களை நீங்கள் தனிமைப்படுத்திக்கொள்வதால், உங்களுக்குச் சுதந்திரம் வந்து விடுவதில்லை.
இது, ஒரு துறவி இல்லறத்தை விட்டு வெளியேறி விடுவதாலேயே, தாம் எல்லாவற்றையும் துறந்துவிட்டதாகவும் எல்லா ஆசைகளில் இருந்தும் விடுதலை அடைந்துவிட்டதாகவும் நினைத்துக்கொள்வதைப் போன்றதுதான்.
ஆசைகள், மனத்திலிருந்து எழுகின்றன. மனத்திற்குள் பக்குவம் வளராமல் காட்டிற்குள் இருந்தாலும் கனவு கற்பனைகள் அவர் மனத்தைச் சூழ்ந்துகொண்டுதான் இருக்கும்.
உங்கள் குடும்பத்திலிருந்து விலகி ஓடி, நீங்கள் ஒரு துறவியாக வேண்டிய தேவை இல்லை. உங்கள் குடும்பத்துடன் இருந்து கொண்டே துறவியாக வாழலாம். துறவைப் பற்றிய தெளிவான புரிதலையும் விழிப்புணர்வையும் வளர்த்துக்கொள்வதால் மட்டுமே ஒருவர் உண்மையான துறவியாக முடியும்.
விழிப்புணர்வை வளர்த்துக்கொள்வதற்கு நீங்கள் காடுகளுக்கும் மலைகளுக்கும் செல்லவேண்டியத் தேவை இல்லை. நீங்கள் எங்கிருந்தாலும் விழிப்புணர்வுடன் இருக்க முடியும்.
உங்கள் குரு, உங்களுக்குள் ஒரு ஆழமான உலுக்கலை, தாக்குதலை ஏற்படுத்தி, உங்கள் உணர்வை விழிக்கச் செய்ய முடியும். இரமண மஹரிஷி "குரு என்பவர் ஒரு ஸிம்ஹ ஸ்வப்னம்; கனவில் வரும் சிங்கத்தைப் போன்றவர்," என்று சொல்கிறார். ஸத்யமில்லாததிலிருந்து ஸத்யத்திற்குள் உங்களை விழித்துக்கொள்ள வைக்கும் ஸிம்ஹ ஸ்வப்னம் அவர்.
அர்ஜுனனின் மனதில் இருக்கும் கனவு
கற்பனைகளைக்கிருஷ்ணர் விளக்குகிறார். 'எது
நல்லது? எது கெட்டது?' என்று அர்ஜுனனும்
மனித குலமும் உருவாக்கியிருக்கும்
பாசாங்கு வலைப்பின்னல்களைக் கிருஷ்ணர்
கலைக்கிறார்.
ஸத்யம் என்பது நன்மை தீமை இரண்டையும் கடந்தது. எது நல்லது? எது கெட்டது? என்று சமுதாயம் வைத்திருக்கும் கருத்துகளில் இருந்து வெகு தொலைவில் தர்மம் என்னும் பிரபஞ்ச பொது நீதி இருக்கிறது.
நாம் வளரும் போதே 'எது நல்லது, எது கெட்டது' என்பதற்கான முன்னுதாரணங்களும், முன் மாதிரிகளும் வழங்கப்பட்டு விடுகின்றன.
அவை அந்தந்தச் சமுதாயத்தின் கட்டுறு மனப்பான்மையின் அடிப்படையில் அமைகின்றன. சமுதாயம் சிக்கல் இல்லாமல் இயங்குவதற்குத் தேவையான வழிகாட்டிகளாகவும் சட்டங்களாகவும் இம்மனப்பாங்கு அமைகிறது.
சமுதாயச் சட்டங்களைத் தாண்டிப் பார்க்கும் அளவிற்கு விழிப்புணர்வும் புத்திசாலித்தனமும் நமக்குள் வளராத நிலையில், சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டதன் சரியான காரணங்கள் நமக்குப்ப் புரியாவிட்டாலும்கூட, அவற்றை உடைக்க வேண்டும் என்ற தூண்டுதல் நமக்குள் எழுந்து கொண்டேதான் இருக்கும். ஆனாலும் அதை உடைப்பதற்குப் பயந்து கொண்டிருப்போம்.
பெற்றோர்கள் எதைச் செய்யக் கூடாது என்று சொல்கிறார்களோ, அதையே செய்து பார்க்க ஆசைப்படும் குழந்தைகள் இருக்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம்.
மோசஸ் அனுபவித்த உணர்வு நிலையில் இருந்து உருவானவைதான் பத்துக் கட்டளைகள். அவருடைய அனுபூதியின் வெளிப்பாடுகள் அவை. ஆனால் அவரைப் பின்பற்றுபவர்களுக்கு இந்தப் பத்துக் கட்டளைகள் என்பது பயத்தாலும் ஆசையாலும் திணிக்கப்படவேண்டிய கருத்துகளாக மட்டுமே அமைகிறது.
அப்பொழுது, ஒரு ஞானியின் ஆழ்ந்த ஆன்மிக அனுபவம், பாவத்திற்கும் புண்ணியத்திற்கும் அல்லது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் அழைத்துச் செல்லும் பாதைகளாக, வழிகாட்டிகளாக மாறி, தம்முடைய மேலான உயர்வை இழந்து விடுகின்றன.
> உங்கள் குரு,
> உங்களுக்குள்
> ஒரு ஆழமான
> உலுக்கலை,
> தாக்குதலை ஏற்படுத்தி,
> உங்கள் உணர்வை
> விழிக்கச் செய்ய
> முடியும்.
பல கீழை நாட்டவர்களும் கிருஷ்ணரைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.
Kிருஷ்ணர் உருவகமாகச் சிலவற்றைச் சொல்லியிருக்கிறார் என்று சொல்லி அவருடைய செய்திகளிலிருந்து, வார்த்தைகளிலிருந்து தப்பித்துக்கொள்கிறார்கள் அல்லது வன்முறையைத் தூண்டுகிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
கிருஷ்ணர் வன்முறையைப் பரிந்துரைக்க வில்லை. அவர் விழிப்புணர்வைப் பரிந்துரைக்கிறார். நாம் வாழ்வாகவும் இறப்பாகவும் கருதிக்கொண்டிருக்கிற இவையாவும்மே ஒரு கனவுதான் என்கிறார். நாம் நல்லது கெட்டது, சரி தவறு என்று கருதிக் கொண்டிருப்பவை யாவுமே ஒப்புநோக்கத் தக்கவைதான். அவை சமுதாயத்தால் திணிக்கப்பட்டவை. ஒருவருக்கு ஒருவர் மாறக்கூடியவை, நிலையற்றவை, உண்மையற்றவை.
நல்லது கெட்டது என்று பிரித்துப் பார்க்கும் மனம் நம் அறியாமையாலும்
கட்டுறு மனப்பான்மையாலும் உருவாகிறது.
உண்மையில், பிரபஞ்சத்தில் பிரிவினைக்கு
இடம் இல்லை. இது சரி, இது தவறு என்றும்,
இது நல்லது இது கெட்டது என்றும் எதுவும்
கிடையாது.
இந்தப் பிரிவினை மனப்பாங்குதான் மக்களை
அடிக்கடி கடவுள் ஏன் கருணையில்லாமல்
நடந்துகொள்கிறார் என்று கேட்க வைக்கிறது.
ஒரு குழந்தை இறந்துவிட நேர்கிறபோது
அல்லது ஒரு இயற்கை சீரழிவு ஏற்பட்டு
ஆயிரக்கணக்கானவர்கள் இறந்துவிடும்போது
மக்கள் இதுபோன்ற கேள்விகளைக்
கேட்கிறார்கள்.
இந்தக் கேள்விகளுக்கு எந்தத் தர்க்க ரீதியாகவும் பதில் சொல்ல முடியாது. இயற்கையின் சுபாவம் அது என்று மட்டும்தான் சொல்ல முடியும். இயற்கையின் செயல்கள் நிலையில்லாதவை, புரிந்துகொள்ள முடியாதவை, முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியாதவை, ஊகிக்க முடியாதவை.
நம்முடைய கட்டுறுமனப்பான்மையைக் கிருஷ்ணர் ஒரு பெரிய சம்ட்டியால் உடைக்கிறார். அவர் அர்ஜுனனைப் பார்த்து, "போர்செய்," என்கிறார். இதைக் கேள்விப்படும் பெரும்பான்மையான மக்கள் அதிர்ச்சி அடைவார்கள் என்று அவருக்குத் தெரியும். மக்கள் அதிர்ச்சியடைவதற்கான காரணம், அவர்கள் மனத்தில் வைத்திருக்கிற, ஆனால் வெளிப்படுத்த பயப்படுகிற வன்முறைதான்.
தொடர்ந்து வன்முறை அடக்கப்படும்போது அது மன அழுத்தமாக வெடிக்கிறது. அவர்களைநோக்கிய வன்முறையாக அது வெடிக்கிறது. சிலர் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்கிறார்கள். சிலர் தங்களை மட்டுமல்லாது, அடுத்தவர்களையும் சேர்த்து அழிப்பதற்கான வழிமுறைகளில் ஈடுபடுகிறார்கள்.
உங்களுக்குள் இருக்கும் வன்முறையை ஏற்றுக்கொள்ளவது நல்லது. வன்முறை எங்கிருந்து தோன்றுகிறது என்பதை ஆராய்ந்து பார்ப்பதற்கு அது உதவும்.
சரியான புரிதல் ஏற்படும்போது, வன்முறை மறைந்துவிடும். உடல்-மன அமைப்பின் நிலையில்லாத் தன்மையையும் ஆத்மாவின் நிலைப்புத் தன்மையையும் புரிந்து கொண்ட ஒரு மனிதருக்கு, போரிடவும் மற்றவர்களைக் கொல்லவும்வேண்டிய தேவை இருக்கிறதா? இல்லையா? என்பதை முடிவு செய்யும் தெளிவு இருக்கும்.
அதனால்தான், "புத்தர் கொலையே செய்தாலும் அது பாவமில்லை," என்று சொல்கிறார்கள். 'எது நடக்க வேண்டுமோ, அது நடக்க வேண்டுமென்பதற்காக, விழிப்புணர்வு நிலையில் இருந்து செய்யப்பட்ட ஒரு செயல்' என்று அது எடுத்துக்கொள்ளப்படும்.
அமைதியைப் போதிப்பவர்கள் வேதம் சொல்லும் அஹிம்ஸா என்ற கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். வேதங்களின் கருத்துப்படி அஹிம்ஸா என்பது வெளியுலக வன்முறையைத் தாண்டியுள்ளது. தமக்குள் பிரிவினை இல்லாத மனிதரின் பூரணமான வெளிப்பாட்டை அஹிம்ஸா என்று சொல்லலாம்.
நம் எண்ணங்களில், வார்த்தைகளில் வன்முறை இல்லாதபோது, நம்மிடமிருந்து எழும் செயல்களில்கூட வன்முறை இருப்பதில்லை.
அப்படிப்பட்ட அஹிம்ஸா, முழுமையான விழிப்பு நிலையில் இருக்கும்போதுதான் நிகழ முடியும். உயிருள்ள, உயிரற்ற அனைத்துமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையே; அவை அனைத்துமே பிரபஞ்சத்தின் இணைபிரியாத பாகம்தான் என்னும் விழிப்பு ஏற்படும்போது மட்டுமே அஹிம்ஸை உணர்வு ஏற்படுகிறது. எல்லையில்லாத உணர்வு நிலையில் இருந்துதான் அத்தகைய அஹிம்ஸை உணர்வு பிறக்கும்.
அத்தகைய விழிப்புணர்வில் இருந்து அழிவு ஏற்படும்போது, அது ஆக்கத்தின் ஒரு பகுதிதானே தவிர அழிவு அல்ல, அத்தகைய அழிவு இல்லாமல் ஆக்கம் இருக்காது.
படிப்பதினாலும் கேட்பத்தினாலும்
உருவான சாதாரண தர்க்கத்தை வைத்து
கிருஷ்ணரின் செயலைப் புரிந்துகொள்ள
முடியாது. அனுபவத்தினால்தான் அதைப்
புரிந்துகொள்ள முடியும். "தர்க்கத்தை
வைத்து எது நல்லது, எது கெட்டது என்று
முடிவு செய்து, அதன் பிறகு கெட்டதை
எதிர்த்துச் செயல் புரி," என்று கிருஷ்ணர்
சொல்லவில்லை.
உங்களுக்குள் இருக்கும்
வன்முறையை
ஏற்றுக்கொள்வது நல்லது.
வன்முறை
எங்கிருந்து
தோன்றுகிறது
என்பதை
ஆராய்ந்து பார்ப்பதற்கு
அது உதவும்.
கிருஷ்ணருக்கு அர்ஜுனனின் தர்க்க அறிவின் மேல் நம்பிக்கை இல்லை. அதனால் அவர் அர்ஜுனனைத் தர்க்க அறிவைப் பயன்படுத்து என்று சொல்லவில்லை. கிருஷ்ணர், எந்தத் தர்க்கத்தையும் நம்பவில்லை.
நல்லது கெட்டது, சரி தவறு, நன்மை தீமை என்று நீங்கள் முடிவு செய்யும் எதிரெதிர்த் தன்மைகள் கொண்ட இரட்டைகள் எல்லாமே உங்கள் கற்பனையில் தோன்றிய கனவுகள்தான் என்கிறார்.
பிரபஞ்சத்தில் எந்தப் பிரிவினையும் இல்லை, எந்த வித்தியாசமும் இல்லை. வித்தியாசம் உங்கள் விழிப்புணர்வில்தான் இருக்கிறது.
உங்கள் விழிப்புணர்வை இத்தகைய இருமைத் தன்மையிலிருந்து விலக்கிவிடும்போது, நீங்கள் முழுமையில், ஒருமைத் தன்மையில் நிலைபெறுகிறீர்கள். அந்த ஒருமையில் வன்முறை இருக்காது.
கேள்வி: உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையோரின் மதமாக இருக்கும் இஸ்லாமும், கிறிஸ்துவமும் மறுபிறப்பு இல்லை என்று சொல்கின்றன. மறுபிறப்பு உண்மையாக இருந்தால், ஏன் இந்த மதங்கள் அதை மறுக்கின்றன?
சமுதாய ரீதியாகச் சரியான பதிலைச் சொல்ல வேண்டுமானால், “இந்த மாதிரியான பிரச்சினைகளுக்குள் சிக்கிக்கொள்ளாதீர்கள். உங்களுக்கென்று இருக்கும் உங்களது சொந்த நம்பிக்கைகளையே பின்பற்றுங்கள்!” என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்.
கிறிஸ்துவத்தையும் இஸ்லாமியத்தையும் ஈன்றெடுத்த ஜூடாயிஸம் (யூத மதம்) மறுபிறப்பை மறுக்கவில்லை. ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு ஆத்மா பயணிக்கிறது என்றுதான் இந்த மதங்களும் சொல்கிறது. இந்தக் கருத்தை ‘கில்குலிம்’ (Gilgulim) என்கிறோம். இன்றுள்ள யூதர்களில் சிலர் இதை மறுத்தாலும் ஆச்சாரமான யூதர்கள் மறுபிறப்பை இன்றும் ஏற்றுக்கொள்ளுகிறார்கள்.
கிறிஸ்துவர்களில் ஒரு பிரிவினராகிய
உலோகாயதவாதிகளும், (Agnostics)
இஸ்லாமிய மதத்தின் ஒரு பிரிவினராகிய
‘ஸூஃபி’ மதத்தவர்களும் மறுபிறப்பின் மேல்
அவர்களுக்கு உள்ள நம்பிக்கையை மீண்டும்
மீண்டும் எடுத்துச் சொல்கிறார்கள்.

இன்றைக்கு நாம் படிக்கும் பைபிள்
நான்காம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட
பைபிள். அப்படித் தொகுக்கப்பட்டபொழுது
ரோமானியர்களுக்கு ஒத்துவராத பல
பகுதிகள் ஒதுக்கப்பட்டாவிட்டன. இது ஒரு
வரலாற்று உண்மை.
அதேபோல் குரானிலும் மரணத்திற்கு முன்பும் பின்பும் இருக்கக்கூடிய வாழ்வைக் குறிக்கும் வாசகங்கள் இருக்கின்றன. ஆனால் வேதங்களில் சொல்லியிருப்பதுபோல், மறுபிறப்பைப் பற்றிய கருத்துகள் இந்த மதங்களின் அடிப்படைக் கருத்தாக இல்லை என்பது உண்மைதான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
மறுபிறப்பைப் பற்றி மதங்கள் என்ன சொல்கின்றன என்று பார்க்காமல், அனுபவத்தின் அடிப்படையிலும் அறிவியலின் அடிப்படையிலும் மறுபிறப்பைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். கடந்த ஜென்மத்தைப் பற்றிய நினைவுகளைச் சொல்பவர்களைப் பிதற்றுகிறார்கள் என்று சொல்லி ஒதுக்கிவிடாமல், திறந்த மனதோடு அவற்றை ஆராய வேண்டும்.
இன்றைய விஞ்ஞானம், பொருளும் சக்தியும் ஒன்றை மற்றொன்றாக மாற்றத்தக்க தன்மை கொண்டவையாகவே இருக்கின்றன என்பதையும் அதே சமயம் பொருளை அழிக்க முடியும்; ஆனால் சக்தியை அழிக்க முடியாது என்பதையும் நிரூபித்திருக்கிறது. மனித உடல் சக்தியால் இயக்கப்படுகிறது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. அப்படியெனில் இறப்பிற்குப் பிறகு சக்தி என்னவாகிறது? அது வேறு ஒரு இடத்திற்குச் சென்றாக வேண்டும்.
சக்தி, ஒரு உடலில் - இருந்து இன்னொரு உடலுக்குச் செல்லாது என்றால்கூட, அது மொத்தச் சக்தி தொகுப்போடு கலந்துவிடும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதைத்தான் ப்ரஹ்மம் என்று வேதங்கள் சொல்கின்றன. புதிதாய் பிறக்கிற உடல், தம்முடைய சக்தியை சக்தி மையத்திலிருந்து, ப்ரஹ்மத்திடமிருந்துதான் பெற வேண்டும்.
எப்படி நாம் தர்க்கம் செய்தாலும் சக்தி தொடர்ந்து வாழ்கிறது. ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு நேரடியாக மாறிச் செல்லாவிட்டாலும்கூட,
சக்தி தொகுப்பின் மூலமாகத்தான் அது
மாறுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள
வேண்டியிருக்கிறது.
இந்தக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளுதல் என்கிற நிலையிலிருந்து மறுபிறப்பை ஏற்றுக்கொள்ளுதல் என்ற நிலைக்கு வருவதற்கு, நீங்கள் நம்பிக்கை என்ற மிகப்பெரிய அடியை எடுத்துவைத்தாக வேண்டும், உண்மையில், உங்களுக்குள் அனுபவம் என்கிற மிகப்பெரிய 'தாவல்' நடந்தாக வேண்டும். தம்மை உணர்ந்த ஒவ்வொரு ஞானியுமே தாம் அந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன், ப்ரஹ்மத்துடன் ஒன்றியிருப்பதாகவே அறிவித்திருக்கிறார்கள். இதிலிருந்துதான் ஆத்மா என்னும் தனி மனித சக்தி வந்தது. ப்ரஹ்ம சக்திக்கும் ஆத்மாவுக்கும் வேறுபாடு கிடையாது. ஆத்ம சக்தி என்பது தனி மனிதனுக்குள் தங்கியிருக்கும் ப்ரஹ்ம சக்திதான்.
கிருஷ்ணர் சொல்கிறார், ஒரு மனிதன் பழைய ஆடைகளைக் களைந்துவிட்டு, புதிய ஆடையை உடுத்திக்கொள்வதைப்போல் ஆத்மாவுக்கு ஒரு உடலை விட்டு இன்னொரு உடலை எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது அல்லது ப்ரஹ்மத்தில் கலந்து புக்தியடையும் வாய்ப்பும் இருக்கிறது.
தனிமனிதனுக்குள் இருக்கும் ஆத்மா, தன்னுடைய ஆசைகளை முழுவதுமாக அனுபவித்து முடித்த பிறகு ப்ரஹ்மத்தில் கலந்து விடுகிறது. மாறாக நிறைவேறாத ஆசைகள் இருக்கும்போது, அந்த ஆத்மா இன்னொரு உடலை எடுத்துக்கொள்கிறது.
கேள்வி: மறுபிறப்பைப் பற்றிப் பேசும்போது, மனிதன் விலங்காகவோ அல்லது பூச்சியாகவோகூடப் பிறக்க வாய்ப்பு உள்ளது என்று சொல்லப்படுகிறது. இது மறுபிறப்பு என்னும் கருத்தை மேலும் சிக்கலாக்குகிறதே! இதைப் புரிந்துகொள்வதற்குச் சிரமமாக இருக்கிறதே?
ஆம், இவற்றைப் புரிந்துகொள்வது கடினம்தான்.
ஒரு செல் உயிரினத்திலிருந்து தோன்றியவன்தான் மனிதன் என்று சொல்லும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

ஆனால் மறுபிறப்பை ஏற்றுக்கொள்பவர்களால்கூட மனிதன் மீண்டும் கீழ் நிலை பிறப்பை எடுக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நம் அடையாளத்தை இழந்து விடுவோமோ என்ற பயம் இருக்கிறது. "நான் எப்படி ஒரு பறவையாகவோ, மீனாகவோ அல்லது வேறு ஏதோவொரு தாழ் நிலை பிறப்பாகவோ பிறக்க முடியும்?" என்று கேட்கிறார்கள்.
ஆத்மா எந்த உடலைத் தேர்ந்தெடுக்கிறது என்பது போன ஜென்மத்தில் அவருக்கு இருந்த மன அமைப்பையும் எப்படிப்பட்ட வாழ்க்கையை ஒருவர் வாழ்ந்தார் என்பதையும் இறக்கும்போது எந்த நிறைவேறாத ஆசைகளோடு உடலை விட்டார் என்பதையும் பொறுத்ததாக இருக்கிறது.
இதைக நகைச்சுவைக்காக நான் சொல்வதுண்டு. ஒரு மனிதர், தூக்கத்தில் விருப்பம் கொண்டவராக இருந்தால், அவர் அடுத்த பிறப்பு எடுக்கும்போது எருமை மாடாகத்தான் பிறப்பார். சாப்பிடுவதுதான் பெரிய சுகம் என்று nினைத்தால், அவர் பன்றியாகப் பிறப்பார். இப்படிச் சொல்வதில் கொஞ்சம் உண்மையும் இருக்கிறது.
மனிதர்கள், பிற உயிரினங்களை ஒப்பிடும்போது தனிச் சிறப்பு வாய்ந்தவர்கள் என்று நினைக்காதீர்கள். அவர்கள், 'மனிதனுக்கு மட்டும்தான் உடல்-மனத்தைத் தாண்டி ஆத்மாவை உணர்வதற்குத் தேவையான விழிப்பு உணர்வு நிலை இருக்கிறது' என்பதை எந்த அளவுக்கு உணர்ந்துகொள்கிறார்களோ, அந்த அளவிற்கு மட்டுமே அவர்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.
விலங்குகள் மனித உடலை அடைந்த பிறகுதான் முக்தி அடைய முடியும். அவை முக்தி அடைவதற்கு மனித உடலை எடுத்தாக வேண்டியுள்ளது. விலங்குகள் கொண்டிருக்கிற அதே சக்தியைத்தான் நாமும் கொண்டிருக்கிறோம். அவை வடிவத்தில்தான் வித்தியாசப்படுகின்றன. விலங்குகளுக்கு இருக்கும் உயர்ந்த சக்தி நிலையான மூலாதாரம்தான், நம்முடைய கீழ் நிலை சக்தியாக இருக்கிறது.
ஒரு விலங்கு மனிதனாகப் பிறக்கும்போதுதான் மேல்நிலை சக்தி மையங்கள் உருவாகின்றன. ஒரு மனிதன் தம் வாழ்வு முழுவதும் மூலாதார சக்தியான காமத்திலும் பேராசையிலும் இயங்கிக்கொண்டிருந்தால், அவர்
மீண்டும் விலங்காகப் பிறப்பதற்கு எல்லாச்
சாத்தியங்களும் உண்டு. மரணத்தின்போது
ஆத்மாவானது கீழ்நிலை சக்தி மையங்களை
நோக்கியும் செல்லக்கூடும்.
பிரபஞ்சம் என்பது
இந்தப் பூமியை மட்டும்
குறிக்கவில்லை;
அதையும் தாண்டி
பரந்து விரிந்து இருக்கிற
ஒன்றைக் குறிக்கிறது.
இதைவிட புரிந்துகொள்வதற்குக் கடினமான கருத்து என்னவென்றால், விலங்குகள் எப்படி மனித நிலைக்கு உயர்கின்றன என்பதுதான். மனிதர்களால் மட்டுமே உணர்ந்துகொள்வதற்குச் சாத்தியமான சக்தி நிலை விலங்குகளுக்கு இல்லாதபோதும், இருப்புத் தன்மையில் அமைந்துள்ள உயர் நிலை சக்திமையங்களை அனுபவிப்பதன் மூலம் அவை அடுத்த நிலை பிறப்பிற்கு உயர முடியும். இப்படித்தான் பரிணாமம் இயங்குகிறது.
பலர் கேட்பதுண்டு, "சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகையின் எண்ணிக்கை இன்று இருக்கும் மக்கள் தொகையைவிட சிறியதாகத்தான் இருந்தது. அன்று வாழ்ந்த விலங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்தால்கூட மொத்தமே அறுநூறு கோடி ஜீவராசிகள்தான் இருந்திருக்கும்.
ஆனால் இன்று மனிதர்களின் எண்ணிக்கை மட்டுமே அறுநூறு கோடிகளாகி விட்டது. தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது எப்படிச் சாத்தியம்? புதிய பிறப்புகள் பழைய பிறப்புகளை அடிப்படையாகக்கொண்டு உருவாகிறது என்றால், எப்படி இவ்வளவு புதிய உடல்கள், ஆத்மாக்கள் தோன்றின?"
ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். எல்லா உயிரினங்களும் சக்திதான். பிரபஞ்சம் என்பது இந்தப் பூமியை மட்டும் குறிக்கவில்லை; அதையும் தாண்டிப் பரந்து விரிந்து இருக்கிற ஒன்றைக் குறிக்கிறது. பிரபஞ்ச வெளி முழுவதுமே சக்திதான் நிரம்பி உள்ளது. அதனால் பூமியில் ஜீவராசி களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதற்கு மட்டுமல்ல, பல கோள்களில் ஜீவராசிகளை உருவாக்குவதற்குத் தேவையான சக்தியும் அதனிடம் இருக்கிறது!