KAILASA Library/பகவத்கீதை/வாழ்வின் ஒரே ஒரு சத்தியம் நிலையிலாத் தன்மையே!Sign in
பகவத்கீதை

வாழ்வின் ஒரே ஒரு சத்தியம் நிலையிலாத் தன்மையே!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna with flute

ஓ குந்தியின் மைந்தனே! ஐம்புலன்களின் தொடர்பால் வெப்பம் குளிர்ச்சி, இன்பம் துன்பம் தோன்றுகிறது. இவற்றிற்கு ஒரு தோற்றமும் முடிவும் இருக்கும். ஓ பாரதா, இவை நிலையானதல்ல. அதனால் அவற்றைத் தைரியமாக எதிர்கொள்.

வீரர்களில் சிறந்தவனே! தன்னுள் நிலைபெற்று இருக்கும் ஒருவரை இந்த அனுபவங்கள் பாதிக்காது. அப்படிப்பட்ட மனிதருக்குச் சுகமும் துக்கமும் ஒன்றுதான். அவர் ஞானத்திற்குத் தகுதி உடையவராகிறார்.

'இருப்பில்' இல்லாததற்கு என்றுமே இருப்பு என்பது இல்லை. 'இருப்பில்' இருப்பதற்கு என்றுமே இறப்பு இல்லை. இந்த இரண்டின் தன்மையை உணர்ந்தவர்கள், உண்மையை உணர்ந்தவர்கள் ஆகிறார்கள்.

இந்த உடலும் உலகமும் எதனால் வியாபிக்கப்பட்டுள்ளதோ

அதை அழிக்க முடியாது என்பதை அறிந்துகொள். எதனாலும் அதை அழிக்க முடியாது; அது நிலையானது; அது அழிவற்றது.

2.18 சக்தியின் ஸ்தூல வெளிப்பாடாக இருக்கும் இந்த உடல்கள் அழிந்துவிடும். ஆனால் சக்தி நிலையானது. அதை அழிக்க முடியாது. அதனால், ஓ பாரதா, நீ போர் செய்.

கசப்பும் இனிப்பாகும், வலியும் சுகமாகும் இயற்கையை ஏற்றுக்கொண்டால்...

ஐம்புலன்களால் நமக்குத் தரப்படும் எல்லா அனுபவங்களும், வெப்பம் குளிர், இனிப்பு கசப்பு, ஈரம் உலர்வு, வலி சுகம், விருப்பு வெறுப்பு போன்ற உணர்வுகளும் தற்காலிகமானவைதான் என்று கிருஷ்ணர் சொல்கிறார். ஞானமடைவதற்குத் தகுதியுடையவராக, தம் மையத்தில் நிலை கொண்டிருக்கும் ஒருவரை இந்த அனுபவங்கள் பாதிப்பதில்லை.

புத்தர், புலன்கள் வழியாகப் பெறும் அனுபவங்களை அநிச என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். அநிச என்றால் நிலையில்லாதது, உண்மையில்லாதது என்று பொருள்.

புலன்களின் தூண்டுதல் இருக்கும்வரைதான், இந்த அனுபவங்களும் இருக்கும். தவிர, அவை எல்லோருக்கும் பொதுவானதும்கூட கிடையாது. ஒருவரால் எது வெப்பமாக உணரப்படுகிறதோ அது மற்றொருவரால் வெப்பமாக உணரப்படுவதில்லை.

வெப்பம், ஒருவருக்கு இதமானதாக இருப்பதும், குளிர், இன்னொருவருக்கு இதமானதாக இருப்பதும்கூட தனி நபர்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் தொடர்புடையதாக இருக்கிறது. அவை, காலம், இடம் மற்றும் தனிநபரைப் பொறுத்து மாறுகின்றன.

இமயமலை

பல ஸாதுக்கள், மிகக் குறைந்தபட்ச உடையோடு மிக உயரமான இமயமலைச் சிகரங்களில் வாழ்கிறார்கள். மற்றவர்களுக்குத்தான் இமயமலை கடுங்குளிர் பிரதேசமாகத் தெரிகிறது. ஆனால் ஸாதுக்களால் உடம்பில்

குறைந்தபட்ச துணிமணிகளை மட்டும்
அணிந்துகொண்டு, கைலாச மலையையும்
மானசரோவர் ஏரியையும் பரிக்ரமமாகச் சுற்றி
வர முடிகிறது.

திபெத்திய லாமாக்கள், கடுங்குளிர் பிரதேசங்களில் அமைந்திருக்கும் தங்களுடைய ஆச்ரமங்களில் எந்தவித கஷ்டமும் இல்லாமல் எப்படி வாழ்கிறார்கள் என்பதை புகழ்பெற்ற விஞ்ஞான கழகமான ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள்.

இயற்கையை
ஏற்றுக்கொள்ளும்போது
வெப்பம்,
குளிர்,
மழை,
இருள்
என எதுவும் நம்மைப்
பாதிக்காது.

இயற்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளும்போது வெப்பம் குளிர், மழை வறட்சி என எதுவுமே நம் உடல் மற்றும் மனஅமைப்பைப் பாதிப்பதில்லை. காலணிகள் இல்லாமல் நடக்கும்போது, நாம் நடக்கும் பூமி நமக்கு நண்பனாகி விடுகிறது.

இந்தப் பூமியில் இருந்து நம்மைக் காத்துக்கொள்வதற்காக நாம் காலணிகளை அணிந்துகொள்ளும்வரையில், இயற்கையை எதிரியாக நடத்துகிறோம். இந்த அணுகுமுறை நம்முள் இருக்கும்வரை இயற்கையோடு ஒன்றி நம்மால் இணக்கமாக வாழ முடியாது.

யார் ஒருவர் தமக்குள்தாமே ஸ்திரமாக ஒன்றியிருக்கிறாரோ, அவரால்தான் இயற்கையோடும் ஒன்றி இருக்க முடியும். அப்படிப்பட்ட ஒருவருக்கு இயற்கையில் ஏற்படும் வெளிமாற்றங்களான குளிர் வெப்பம், மழை வெயில் போன்றவை எந்த ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை.

இந்த மாற்றங்கள் அவருக்கு இன்பத்தையும் தருவதில்லை; துன்பத்தையும் தருவதில்லை. அவர் எல்லாவற்றையுமே இயல்பாகவும், ஒரே வித மனப்பான்மையுடனும், எந்த ஒரு வேறுபாட்டையும் காட்டாமல் ஏற்றுக்கொள்கிறார்.

இத்தகைய மனிதர்கள் ஞானம் அடைவதற்குத் தகுதியுடையவர்களாகவும் தயாரானவர்களாகவும் மாறுகிறார்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார் இவர்கள் புலன்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள்கொண்டு வந்து விடுகிறார்கள். அதன் மூலம் தங்களுடைய மனத்தையும் கட்டுப்பாட்டிற்குள்கொண்டு வந்து விடுகிறார்கள். இங்கே கிருஷ்ணர் என்ன சொல்லியிருக்கிறாரோ, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கீழை நாட்டு ஞானிகள் என்ன சொன்னார்களோ, அவற்றின் ஸத்யத்தை இப்போதுதான் அறிவியல் அறிஞர்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு தினமும் உங்களுக்குப் புதுயுகம்

நம்முடைய உடலும் மனமும் நிலையில்லாதது என்று சொல்லும்போது, அவை அழியக்கூடியவை, மரணத்தின்போது மறைந்து விடக்கூடியவை என்பதையே அது குறிக்கிறது. எல்லா மனிதர்களுக்கும் இன்னும் ஆழமாகச் சொல்ல வேண்டுமானால், எல்லாப் பருப்பொருட்களுக்கும் இந்த உலகத்தில் வாழும் எல்லாவித உயிர்களுக்கும் இந்த விதி பொதுவானது. எந்த உயிரும் இதற்கு விதி விலக்கானது அல்ல.

ஸ்தூல வடிவில் இருக்கும் எல்லாப் பொருட்களும், உருவங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மறைந்துவிடும். அதனால் அவை நிரந்தரமானவையும் அல்ல; ஸத்யத்தை அடிப்படையாகக் கொண்டவையும் அல்ல.

இந்த உடல், தன் இறுதி மரணத்திற்கு முன் பலமுறை அழிந்து அழிந்து மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது என்று விஞ்ஞானப்பூர்வமாகவே நிரூபித்து இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான செல்கள் இறக்கின்றன, பிறக்கின்றன. சில வருடங்களுக்குள்ளாக, உடலின் ஒவ்வொரு செல்லுமே அழிக்கப்பட்டு, புதுப்பிக்கப்படுகிறது.

நாம் மரணம் அடைந்த பிறகும் நம் ஆன்மா வாழ்கிறது.

இன்று இருக்கும் இந்த உடல், இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன் இருந்த உடல் கிடையாது. இன்று இருக்கும் இந்த உடலே இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குப் பிறகு இருக்கப்போவதில்லை.

இன்று உங்கள் உடல் மன அமைப்பில் இருக்கும் ஒவ்வொரு ‘செல்’லுமே என்று சொல்லும்போது, ஒவ்வொரு எலும்பு, தசை, இரத்த நாளங்கள், மூளை என உறுப்புகள் ஒவ்வொன்றுமே புதியவைதான். அவை மூன்று வருடங்கள் முன்பு இருந்த அதே உறுப்புகள் கிடையாது.

தொடர்ந்து உடல்-மன அமைப்பு மாறிக்
கொண்டே இருக்கிறது. அதனால் அவை
நிலையானவை அல்ல. அவற்றிற்கு
உண்மையான இருப்பு கிடையாது. இந்த
உடல்-மன அமைப்பிற்குச் சம்பந்தம்
இல்லாத நிலையில் இருக்கும் நம் ஆத்மா
என்றும் வாழ்கிறது.

நித்யம், மித்யம்- இவை
இரண்டிற்கும்
உள்ள வேறுபாடு
என்ன?
என்று ஒருவர்
உணர்ந்துவிட்டால்,
அவர் ஸாக்ஷியாக,
ஆகி விடுகிறார்.

நம் உடல்-மனத்தில் எவ்வளவு மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தாலும் நம் ஆத்மா எந்தவித மாறுதலுக்கும் உட்படாமல், வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கிறது. நாம் மரணம் அடைந்த பிறகும் நம் ஆத்மா வாழ்கிறது. அது, நம் உடல் அழியும்போது, உடலோடு சேர்ந்து அழிந்து விடுவதில்லை; அது தொடர்ந்து வாழ்கிறது; அது நிலையானது, உண்மையானது.

விழித்துக்கொள்ளுங்கள் கனவுலகிலிருந்தல்ல, நிஜ உலகிலிருந்து!

எது நித்யமானது, நிலையானது? எது மித்யமானது, நிலையற்றது? இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன? என்று ஒருவர் உணர்ந்துவிட்டால், அவர் ஸாக்ஷியாக, பார்வையாளராக ஆகி விடுகிறார். அவர் ஸத்யத்தை உணர்ந்தவராகிறார்.

நித்ய என்றால் உண்மை; மித்ய என்றால் பொய் என்று அர்த்தம் கிடையாது. மாயை என்றால் பொய் என்றும் அர்த்தம் கிடையாது.

மாயையும் மித்யையும்கூட உண்மையே! அவையும்கூட நம் புலன்களால் உணரப்படுகின்றன. ஆனால் அவை உண்மை அல்லாத, நிரந்தரமற்ற, ஸத்யமாக இல்லாத பொருட்களாக இருக்கின்றன. எவை எல்லாம் உண்மை இல்லையோ, எவை எல்லாம் நீண்ட நாள் இருப்பது இல்லையோ, எவை எல்லாம் ஸத்யம் இல்லையோ, எவை எல்லாம் அஸத்யமோ, இவற்றையே மாயை என்ற சொல் குறிக்கிறது.

அவை பொருள் ரீதியாக உண்மையே! ஆனால் அவை ஸத்யத்தின் ரீதியாக உண்மையல்ல. எது ஸத்யமோ அது எப்பொழுதுமே ஸத்யம்தான். அதனால் உண்மை நிலைக்கு எந்தவித தடையும் ஏற்படுத்த முடியாது. இங்கே ஸத்யம் என்ற வார்த்தை, நிலையான தன்மையையும் அழிவற்ற தன்மையையும் குறிக்கிறது.

வாழும் ஞானிகள், நீங்கள் நினைப்பதுபோல் இப்போது மட்டுமே இருப்பது இல்லை. இறந்த ஞானிகள் நீங்கள் நினைப்பதுபோல் மறைவது இல்லை. இறந்த ஞானியினுடைய ஸாந்நித்யம், இருப்புத் தன்மை உண்மையானது, நிலையானது.

வாழும் ஞானியின் உருவம் மட்டுமே அவருடைய ஸாந்நித்யத்தைக் குறிப்பிதில்லை. அவருடைய ஸாந்நித்யம், அவர் உடலில் இல்லாதபோதும்கூட இருக்கிறது.

நம் புலன்கள் வழியாக நாம் உணரும் பொருட்கள் அனைத்தும் உண்மையாக இருக்கலாம். ஆனால் அவை ஸத்யமானவையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் உண்மை என்று பார்ப்பது, உணர்வது இவை எல்லாமே ஸத்யமாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. கனவுலகில் இருக்கும்போது நாம் காண்கிற கனவுகூட உண்மையாகத் தெரிகிறது.

நீங்கள் கனவு காணும்போதுகூட கோபத்தை, காமத்தை, பயத்தை, உற்சாகத்தை உண்மையாக உணரலாம். கனவில் தோன்றும் உணர்ச்சிகளுக்கேற்ப உங்கள் உடல்கூட பதில் செயல் செய்யலாம். உங்களுடைய புலன்களும்கூட கனவில் எதை உணர்ந்தீர்களோ அதற்கேற்ப இயங்கலாம். ஆனால் கனவை நீங்கள் ஒரு ஸாக்ஷியாக இருந்து பார்க்க ஆரம்பித்த அந்த வினாடியே விழித்துக்கொள்கிறீர்கள்.

வாழும் ஞானிகள் நீங்கள் நினைப்பதுபோல் இருப்பதும் இல்லை. இறந்த ஞானிகள் நீங்கள் நினைப்பதுபோல் மறைவதும் இல்லை.

நீங்கள் விழிப்புணர்வுள்ளவராகும்போது, உங்களால் கனவு காண முடியாது. கனவு உண்மைபோல் தோன்றினாலும் ஸத்யம் அல்ல. நீங்கள் விழித்துக் கொண்டே பகற்கனவு காணும் சமயங்களில்கூட இதுதான் நிகழ்கிறது. பெரும்பாலான நேரங்களில் நீங்கள் பகற்கனவுதான் கண்டு கொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் விழித்துக் கொண்டிருக்கிறீர்கள், ஆனாலும் கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்! கற்பனை உலகில் இருக்கும்போது, அதுவும்கூட உண்மையாகவே தோன்றுகிறது.

அவை உங்கள் மனத்தில் இருந்தாலும் உங்கள்
புலன்களால் அவற்றை அனுபவப்பூர்வமாக
உணர்ந்தாலும் அவை உண்மை
கிடையாது. உங்கள் கற்பனைகளும்
பகற்கனவுகளும் நிலையானவை அல்ல.
உங்களால் அவற்றைக்கொண்டு எதையும்
உறுதியாகவோ, தெளிவாகவோ செய்ய
முடியாது.

நீங்கள், 'நாம் முழுமையாக விழித்துக்கொண்டுதான் இருக்கிறோம்' என்று நினைக்கும்போதுகூட, உங்கள் புலன்கள் வழியாக நீங்கள் உணர்வதற்கும் அவற்றுக்கு நீங்கள் எடுத்துக்கொள்ளும் அர்த்தத்திற்கும் பொருத்தம் இல்லாமலும் இருக்கலாம். உங்கள் மனம், உங்கள் புலன்கள் வழியாக வரும் தகவல்களை அஹங்காரம் என்னும் வடிகட்டியால் வடிகட்டி விடுகிறது.

உங்களுக்குள் இருக்கும் கட்டுறு நினைவுப்பதிவுகளை வைத்தே எதையும் அனுமானிக்கிறீர்கள். கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும் எல்லா விஷயங்களிலும் முன்னதாகவே நீங்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்து விடுகிறீர்கள். அதன்பிறகு உங்கள் தீர்மானத்தைச் சரி என்று நிரூபிப்பதற்குத் தேவையானவற்றை மட்டும் செய்கிறீர்கள், அவ்வளவுதான்.

அதனால்தான் தங்கள் சீடர்களை விழித்துக்கொள்ளும்படி குருமார்கள் சொல்கிறார்கள். ஜாக்ரத் என்ற வார்த்தை அதைத்தான் குறிக்கிறது. ஜாக்ரத், இது தூக்கத்திலிருந்து நம்மை எழுப்புவது அல்ல; விழிப்புணர்வற்ற நிலையிலிருந்து எழுப்பி விழிப்புணர்வு நிலைக்கு அழைத்துச் செல்வது! உங்கள் நினைவு உலகத்தில் இருந்தே விழித்துக்கொள்வதற்குப் பெயர்தான் ஜாக்ரத், விழிப்பு நிலை.

நிகழ்காலத்தில் வாழ்பவர் ஞானத்திலேயே வாழ்கிறார்

சீடர்கள், ஒருநிலையான இருப்பு இல்லாத வெறுமையான கருத்துகளின் உண்மை நிலையைப் புரிந்துகொண்டு, அதிலிருந்து விடுபட்டு, உண்மையான இருப்பு உள்ள ஆத்ம அனுபூதியின் ஸத்யத்தை உணர வேண்டுமென்பதற்காகத்தான், குருமார்கள் தங்கள் சீடர்களை 'விழித்துக்கொள்' என்ற வார்த்தையால் வேகப்படுத்தி உற்சாகப் படுத்துகிறார்கள்.

பெரும்பாலான நேரங்களில் நாம் நம் கடந்தகாலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ இருக்கிறோம். கடந்தகாலத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளப்போகிறேன் என்று கடந்தகால அனுபவங்களில் சிக்கிக்கொண்டு, அவற்றை மீண்டும் மீண்டும் வாழ்ந்து பார்க்கிறோம். ஆனால் அதிலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்வதில்லை. மாறாக, குற்ற உணர்ச்சி, கவலை அல்லது கடந்தகால அனுபவங்கள் தரும் சந்தோஷங்கள் என்கிற ஏதோ ஒரு வலையில் அல்லது இந்த எல்லா வலைகளிலுமே நாம் சிக்கிக்கொள்கிறோம்.

கடந்தகால நினைவுகள், அனுபவங்கள் எதுவாக இருந்தாலும் அதற்கு எந்தவிதமான பலமும் இல்லை. அதைக்கொண்டு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. நம் வாழ்வைப் பிடித்துள்ள பேய்கள்தான் கடந்தகால நினைவுகள். கடந்தகாலம் - இறந்தகாலம், அது போயே போய் விட்டது. எழுதும் கைவிரல்கள் எழுதிவிட்டு நகர்ந்து விட்டன. எழுதப்பட்ட ஒரு எழுத்தைக்கூட அது மீண்டும் அழிக்காது.

நிகழ்காலத்தில் இருக்கும்போது மட்டும்தான் நம்மால் நம் புத்திசாலித்தனத்தையும் படைப்புத்திறனையும் ஆனந்தத்தையும் பயன்படுத்த முடியும். கடந்தகாலத்தைப் பரிசீலனை செய்வதால் எந்தப் பலனும் இல்லை.

நாம் செய்யும் இன்னொரு தவறு, எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்று யூகித்துக் கொண்டிருப்பது. கடந்தகாலத்தைப் போன்று

> நிகழ்காலத்தில்
> இருக்கும்போது
> மட்டும்தான்
> நம்மால் நம்
> புத்திசாலித்தனத்தையும்
> படைப்புத்திறனையும்
> ஆனந்தத்தையும்
> பயன்படுத்த முடியும்.

நம் எதிர்காலமும் உண்மையற்றது.
கடந்தகாலத்தைவிட எதிர்காலம்
உண்மையற்றது. காரணம், எதிர்காலம்
இன்னும் நடக்கக்கூட இல்லை.

ஆனாலும் நாம் எதிர்காலத்தைப் பற்றிய
மனக்கோட்டைகளைக் கட்டுகிறோம்,
பகற்கனவு காண்கிறோம், திட்டங்களைத்
தீட்டுகிறோம், அவற்றில் ஒன்றைக்கூட
செயல்படுத்தும் திறமை இல்லாமலேயே!
அடுத்த மூச்சைச் சுவாசிப்பதற்கு நாம்
இருப்போமா என்று நமக்குத் தெரியாது.
அதுகூட நம் கட்டுப்பாட்டில் இல்லை.

அடுத்த மூச்சே நம் கட்டுப்பாட்டில் இல்லை
என்றிருக்கும்போது, எதிர்கால நிகழ்ச்சிகளை
நாம் எப்படிப் கட்டுப்படுத்த முடியும்?

இறந்தகாலம்,
அது போயே போய் விட்டது.
எழுதும் கைவிரல்கள்
எழுதிவிட்டு
நகர்ந்து விட்டன.
எழுதப்பட்ட
ஒரு எழுத்தைக்கூட
அது மீண்டும் அழிக்காது.

எந்த ஒரு பயனுமே இல்லாமல்
எதிர்காலத்திற்கும் கடந்தகாலத்திற்கும்
நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். இதுதான்
விந்தையிலும் விந்தை! கடந்தகாலமும்,
எதிர்காலமும் உண்மைதான் என்கிற
நம்முடைய நம்பிக்கைதான், நம்முடைய
எண்ண ஓட்டங்களுக்குத் தீனியாக
இருக்கிறது. நம்முடைய எல்லாத்
துக்கங்களுக்கும் இதுவே மூலம்!

ஒரே ஸத்யம், ஒரே உண்மை நிலை என்னவென்றால் இந்த நிகழ்கால தருணத்தின் யதார்த்த நிலையே! இந்த வினாடியின் இருப்பு மட்டுமே ஸத்யம் என்பதுதான் ஒரே ஸத்யம், ஒரே நிதர்சன உண்மை! நாம் நிகழ்காலத்தில் இருக்கும்வரை மட்டுமே, நாம் உண்மையான விழிப்பு நிலையில் இருக்கிறோம், நம்முள் நிலைத்து இருக்கிறோம் என்று அர்த்தம். நிகழ்காலம் என்றும் அழியப்போவதில்லை.

உண்மையில் இருப்பதெல்லாம் நிகழ்காலம் மட்டும்தான். நிகழ்காலம் மட்டும்தான் ஸத், ஸத்யம்; மற்றதெல்லாமே அஸத், அஸத்யம்தான். யார் இதைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு செயல்படுகிறாரோ, அவரை ஞானி என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

மன அமைப்பை மாற்றினால் உடல் அமைப்பையே மாற்றலாம்

நாம் எல்லோரும் உடல், மனம் மற்றும் ஆத்மாவால் ஆனவர்கள். இதில் உடல் ஸ்தூலமானது, தொட்டு உணரக்கூடியது. அதன் எல்லைகளை நாம் உணர முடியும். நம் உடலின் ஏதாவதொரு பகுதி பாதிக்கப்பட்டாலும் நம்மால் அஸௌகரியத்தை உணர முடிகிறது. இந்த உடல் சரியாக இயங்கிக் கொண்டிருக்கும்வரை நாம் ஆரோக்கியத்தில் இருப்பதாக நினைக்கிறோம்.

அடுத்து நம்முடைய மனம், இது ஸூக்ஷ்மமானது. நாம் நம் உடலை உணரும் அதே முறையில் நம் மனத்தை உணர முடிவதில்லை. அதன் எல்லைகளை நம்மால் உணர முடிவதில்லை. ஆனாலும் மனத்தினால் விளையக்கூடிய பாதிப்புகளான எண்ணங்கள், ஆசைகள், உணர்ச்சிகள் போன்றவற்றை உணர்கிறோம்.

நாம் மனம் என்று எதைச் சொல்கிறோமோ அது நம் உடல் முழுவதும் பரவி இருக்கிறது என்று சமீபகால அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மனமும், மனத்தின் புத்திசாலித்தனமும் நம் ஒவ்வொரு செல்லிற்குள்ளும் வியாபித்து இருக்கிறது.

நம் அனுபவங்களின் அடிப்படையில் நாம் உருவாக்கிக்கொள்ளும் நம்பிக்கைகள்தான் நம் மனத்தின் வளர்ச்சியை, முன்னேற்றத்தை நிர்ணயிக்கிறது.

Mind and intelligence inside every cell

நம் மனத்தின் முன்னேற்றம்தான் நம் செல்களின் அமைப்பை நிர்ணயிக்கிறது என்பதை சமீபகால அறிவியல் ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன. மரபு செல்கள்தான் நம் செல்களின் அமைப்பை உருவாக்குகிறது என்றும், அதைப் பொறுத்துதான் நம் செயல்பாடுகள் அமைகின்றன என்றும் முன்பு நம்பிக் கொண்டிருந்தார்கள்.

செல்களின் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம், நம் குணாதிசயங்களை மாற்றிவிட முடியும் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இப்பொழுது, நம்முடைய செயல்கள்தான் நம்முள் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்றும், இந்த நம்பிக்கைதான் நம் செல்களை மாற்றியமைக்கிறது என்றும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பிரபஞ்சத்தின் ஒரு சிறு விளையாட்டு நம் வாழ்க்கை

மனத்தைவிட அதி ஸூக்ஷ்மமானது ஆத்மா. பலர் ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா என்றே கேட்பார்கள். ஆத்மா என்றால் என்ன? எங்களால் பார்க்க முடியவில்லையே! தொட முடியவில்லையே! என்று கேட்பார்கள். அதி ஸூக்ஷ்மமான ஆத்மாவை உணர்வதைத்தான் 'ஞானமடைதல்' என்று சொல்கிறோம். இங்கே சொல்லப்பட்ட ஸ்லோகங்களில், கிருஷ்ணர், ஆத்மாவானது உடல் முழுவதிலும் வியாபித்து இருக்கிறது என்று சொல்கிறார். அவர் உடல் என்று சொல்லும்போது, உடல்-மன அமைப்பைத்தான் சொல்கிறார்.

இரண்டாவதாக, இந்த உடலும் மனமும் மரணம் வரும்போது அழிந்துவிடும் என்று சொல்கிறார். மூன்றாவதாக, மரணத்தின்போது ஆத்மா அழிவதில்லை என்கிறார். நான்காவதாக, ஆத்மா நம் மனத்தால் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது என்கிறார்.

மரணம் ஏற்படும்போது உடல் இயக்கங்கள் நின்றுவிடும். மனத்தால் இயக்கப்படும் புலன்களின் இயக்கம் நின்றுவிடும். எண்ணங்களை ஏற்படுத்திக்கொடுக்கும் மூளை தம் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும். பிறகு மொத்த உடல்-மன அமைப்பும் தன்னைத்தானே இவற்றிலிருந்து விடுபடுத்திக்கொள்கிறது. பிறகு அவை சிதைந்து விடுகின்றன. மரணத்தை நேரில் பார்த்தவர்களுக்கு இந்த நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால் 'மரணத்திற்குப் பிறகும் உன்னுள் இருக்கும் ஏதோ ஒன்று அழிவதில்லை' என்று கிருஷ்ணர் சொல்வதுதான் நமக்குப்ப புரியாததாகவும் தெரியாததாகவும் இருக்கிறது. அந்தச் சந்தேகத்தை கிருஷ்ணர் இங்கே தெளிவாக்குகிறார். அந்த 'ஏதோ' ஒன்றுதான், ஸ்வரூபம், அழியாத ஆத்மன் என்று சொல்கிறார்.

அதி ஸூக்ஷ்மமான
ஆத்மாவை
உணர்வதைத்தான்
'ஞானமடைதல்' என்று
சொல்கிறோம்.

இத்தகைய ஆத்மாநம் இதயத்தில் வசிப்பதாகவும் அணுவிற்கும் அணுவாக, மிகவும் நுண்ணியதாக, அதிஸூக்ஷ்மமாக இருப்பதாகவும் உபநிஷதங்கள் சொல்கின்றன.

மரணம் என்றால் என்ன? மரணம், ஆத்மா உடலை விட்டு வெளியேறுவதால் நடக்கிறதா? அல்லது மரணம், ஆத்மாவை உடலை விட்டு வெளியேற்றுகிறதா? என்று பலர் கேட்கிறார்கள். ஆனால் உடலும் மனமும் அழியக்கூடியது என்பதையும் இவை ஒரு குறிப்பிட்ட காலம்வரை மட்டுமே இயங்கும் என்பதையும் உணரும்பொழுது, இந்த வாக்குவாதம் தேவை இல்லை என்றாகிறது. உடல், மரணத் தேதியையும் குறித்துக்கொண்டுதான் வருகிறது. அது வெளியேறும் நாள் எந்த நாளாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இந்தக் காலக்கெடுவையும் தாண்டி ஏதோ ஒன்று இயங்குகிறது, அது நம் ஆத்மாவே!

இந்த ஆத்மா, சக்தி வடிவானது. வாழ்க்கையின் சக்தி இதுதான். ஏற்கனவே நான் சொன்னதுபோல், இந்த சக்திதான் தற்காலிகமாகப் பிடித்திருந்த உடலில் இருந்து, உடலிற்கு வெளியில் இருக்கும், உடலைச் சுற்றியிருக்கும் பிரபஞ்ச சக்திக்கு நகர்கிறது.

Feather Icon

உங்கள் ஆத்மாவிற்கு மரணமே கிடையாது

கிருஷ்ணர் அர்ஜுனனிடம், "எது உண்மை என்று நீ நம்புகிறாயோ, அது உண்மை இல்லை; எது நிலையானது என்று நீ நினைக்கிறாயோ அது நிலையில்லாதது; எதை அழித்து விடுவோம் என்று நீ பயப்படுகிறாயோ அதை உன்னால் ஒரு காலமும் அழிக்க முடியாது. இந்த ஸத்யங்களை தெளிவாகப் புரிந்துகொண்டு போர் புரி" என்று சொல்கிறார்.

thம் உறவினர்களைக் கொல்ல வேண்டுமென்று நினைத்துப் பார்க்கிறபோது அர்ஜுனனுக்குத் துக்கம், குற்ற உணர்ச்சி, இரக்கம், பயம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் தோன்றி விடுகின்றன. உறவினர்களைக் கொல்வதால் அவர்களை இல்லாமல் செய்துவிடுவோம் என்று அர்ஜுனன் நம்புகிறார். ஏனென்றால் அதுவே அவர்களுடைய வாழ்வின் முடிவு என்று அவர் நினைக்கிறார்.

> 'மரணத்திற்குப் பிறகும்
> உன்னுள் இருக்கும்
> ஏதோ ஒன்று
> அழிவதில்லை'
> என்று கிருஷ்ணர்
> சொல்வதுதான்
> நமக்குப்
> புரியாததாகவும்
> தெரியாததாகவும்
> இருக்கிறது.

கிருஷ்ணர் அர்ஜுனனின் கண்களைத் திறக்கச்
சொல்கிறார். மேலும் அவர், "நீ எதைக்
கொன்று அழிக்கப்போகிறாயோ, அது
என்றாவது ஒரு நாள் அழியக்கூடியதுதான்.
ஆனால் நீயே விரும்பினாலும் என்றும்
அழியாத ஆத்மாவை உன்னால் அழிக்க
முடியாது,"' என்று அர்ஜுனனிடம்
சொல்கிறார்.

தம்முடைய உறவினர்கள் இறந்து
விடுவார்களே என்று அர்ஜுனனுக்கு வரும்
பயம், உண்மையில்தான்இறந்து விடுவோமோ
என்று பயப்படுகிற அர்ஜுனனுடைய

பாதுகாப்பற்ற தன்மையிலிருந்து எழுகிற
பயமே தவிர, வேறு ஒன்றும் இல்லை.
அவர் தம்முடைய அழியாத தன்மையை
உணராததனால்தான் தம்முடைய மரணத்தைக்
கண்டு பயப்படுகிறார். அந்த மரண பயம்தான்
மற்றவர்களின் மரணத்தைப் பற்றிய
பயமாகவும் வெளிப்படுகிறது; அதுவும்
தாமே அவர்களைக் கொல்ல வேண்டுமென்று
நினைக்கும்பொழுது, அவர் பயம் இன்னும்
அதிகமாகிறது.

கிருஷ்ணர், "மரணம் என்ற ஒன்றே
இல்லை. மரணம் என்பது பொய்,"
என்கிறார்.

வாழ்க்கை முழுவதும் நம்மைச் சுற்றி இருக்கும் பலர் இறப்பதை நாம் பார்க்கிறோம். யாருமே என்றென்றும் வாழப்போவதில்லை என்பது நமக்குத் தெரியும். 'நிலையில்லாத உலகில் மரணம் மட்டும்தான் நிலையாக நிகழக்கூடிய ஒரே நிகழ்வு' என்பதும் நமக்குத் தெரியும். பிச்சைக்காரரோ அல்லது பேரரசரோ எல்லோருமே ஒருநாள் இறந்தாக வேண்டும்.

Illustration of a person sleeping and dreaming

நாம் தூக்கத்திலிருந்து விழித்த பிறகு, கனவில் தோன்றிய நம் வாழ்க்கை அழிந்துவிடுகிறது நாம் வருந்த மாட்டோம். கனவின்போது உண்மை போன்றே தோன்றிய அந்த வாழ்க்கை அழிந்துவிட்டதற்காக நாம் வருந்த மாட்டோம். இல்லையா? அதேபோல் ஓர் உயர்ந்தஉணர்வு நிலையில் நாம் விழித்துக் கொள்ளும்போது, இந்த நினைவு வாழ்க்கையும், ஒரு கனவுதான் என்பதை உணர்வோம். துக்கத்திற்கு அப்பொழுது இடம் இல்லை.

Illustration of a person meditating

அதற்குப் பிறகு உலகில் தோன்றிய அத்தனை ஞானிகளும் கிருஷ்ணர் சொன்னது ஸத்யம்தான் என்பதை, தங்கள் அனுபவத்தின் மூலமாக உறுதி செய்திருக்கிறார்கள்.

உங்கள் ஆத்மா குடியிருக்கும் ஒரு வீடுதான் இந்த உடல். இந்த உடல் அழிந்துவிடும்போதும் நீங்கள் அழிவதில்லை. ஏனென்றால் நீங்கள் நிலையானவர்கள், ஆனந்தமயமானவர்கள்.

இந்த ஸத்யத்தைக் கிருஷ்ணர் நேரடியாகச் சொல்கிறார். அவர் மிக உறுதியாக, ‘மரணம் என்ற ஒன்று கிடையாது’ என்று சொல்கிறார். எது இறக்கிறதோ அல்லது அழிகிறதோ அது ஒரு பொய்த்தோற்றம்தான், அதற்கு ஒருநிலையான இருப்பு என்றுமே இருந்ததில்லை.

எதற்கு நிலையான வாழ்வு அல்லது இருப்பு இருக்கிறதோ, எது உண்மையிலேயே ஸத்யமோ அது முன்பும் இருந்தது; இப்பொழுதும் இருக்கிறது; என்றும் இருக்கும்!

Hands playing a flute