நீங்கள் துக்கப்படுபவர்களாக இருந்தால், துக்கத்திலேயே ஆழ்ந்து விடுவீர்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கேள்வி: என்னுடைய கேள்வி, கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றியது. ஜோதிடம் சொல்பவர்கள், கைரேகை பார்ப்பவர்கள் நம் எதிர்காலத்தை கணிக்கிறார்கள். சிலர் சொல்வது சரியாக இருக்கிறது. சிலர் சொல்வது தவறாக இருக்கிறது; இவற்றை நம்பலாமா?
ஒரு உதாரணத்திற்கு நீங்கள் ஒரு பள்ளத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்றால் மேலே தூரத்தில் நடப்பதை உங்களால் தெளிவாகப் பார்க்க முடியுமா? உங்களால் முடியாது. அதேபோல்தான் உங்களுடைய ஒரு நொடிக்கான எண்ணங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது, உங்களால் எதையும் பார்க்க முடிவதில்லை.
நீங்கள் கொஞ்சம் மேடான பகுதிக்கு வந்துவிட்டால், கொஞ்சம் தெளிவாக, தூர்தர்ஷன் தொலைக்காட்சியைப் பார்ப்பதைப்போல பார்க்க முடியும்! எண்ணங்களின் எண்ணிக்கை இன்னும் குறைந்தால் இன்னும் கொஞ்சம் தெளிவாக, ஒரு தனியார் தொலைக்காட்சியைப் பார்ப்பதைப் போன்று பார்க்க முடியும்.
இன்னும் நிகழ்காலத்தை நெருங்கும்போது,
உங்கள் வீட்டு கம்ப்யூட்டர் திரையில்
பார்ப்பதைப்போல் மிகத்தெளிவாகப் பார்க்க
முடியும்.
குறைந்த எண்ண ஓட்டத்தில் இருக்கும் மனிதரால் எதிர்காலத்தைத் தெளிவாகப் பார்க்க முடியும். காலங்களைக் கடந்து பார்க்க முடியும். உங்கள் கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் தெளிவாகச் சொல்ல முடியும்.
ஜ்யோதிஷ அறிவியல் நமக்குக் கற்றுத்தரும் செய்தி என்னவென்றால், அந்தப் பிரபஞ்ச சக்தியின் இயக்கத்தில் நாமும் ஒரு அங்கம்தான் என்பதே!
ஒருவருடைய எண்ண ஓட்டம் அதிகமாக இருந்தால் அவரால் உங்கள் கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் சொல்ல முடியாது. காரணம் கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் அவருடைய மனம் ஓடிக்கொண்டிருக்கிறது. நித்ய ஆத்மா அல்லது நிலையான விழிப்புணர்வில் இருக்கும் ஒருவரால் உங்கள் எதிர்காலத்தைக் கணிக்க மட்டுமல்ல, மாற்றவே முடியும்!
படைப்புக் கடவுளான பிரம்மா, மிக்க சிரமமெடுத்து உங்கள் நெற்றியில் எழுதியிருக்கும் உங்களின் தலைவிதியை, நம் குருவானவர் தாம் சாதாரணமாக நடந்து போகும் போக்கிலேயே தம்முடைய இடது கால் பெருவிரலால் அழித்துவிட முடியும் என்று வேதம் சொல்கிறது. நித்யானந்த நிலையில் இருக்கும் ஒரு மனிதரால் எதிர்காலத்தையே மாற்றி அமைக்க முடியும்!
ஜ்யோதிஷ என்று ஸ்ம்ஸ்க்ரு தத்தில் குறிக்கப்படும் ஜோதிடமோ அல்லது கைரேகை, கிளி ஜோஷ்யம் போன்ற எதிர்காலத்தைக் கணித்துச் சொல்கிற எதுவாக இருந்தாலும் சரி, இன்றைய நிலையில், அந்த ஜோதிடரின் மன நிலையைப் பொறுத்துதான் சொல்லப்படுகிறதே தவிர, ஜோதிட அறிவியலின் அடிப்படையில் சொல்லப்படுவதில்லை.

ஆம், ஜோதிடம் உண்மையில் ஒரு அறிவியல்தான். அது இந்தப் பிரபஞ்ச சக்தியின் இயக்கக் களம், தனிமனிதர்களை எப்படிப் பாதிக்கிறது என்கிற மிக முக்கியமான, சிறந்த விதிமுறைகளின் அடிப்படையில் அமைந்திருக்கிறது.
வேத கலாச்சாரத்தில் ஜோதிடம் ஒருவர் இளமைப் பருவத்தைத் தாண்டும்வரை மட்டும்தான் பயன்படுத்தப்பட்டது. அதுகூட, அந்த நபரின் ஆர்வத்தின் போக்கைப் புரிந்துகொள்வதற்குத்தான் பயன்படுத்தப்பட்டது.
ஒரு குழந்தையின் ஆர்வப் போக்கையும் தனித்திறமையையும் நிர்ணயிப்பதற்காக வேத பள்ளியான குருகுலத்தில் குரு ஜோதிடத்தைப் பயன்படுத்துவார். இன்றைய காலகட்டத்தில், மாணவர்களின் தனி திறனை, இயல்பைப் புரிந்துகொள்ள நடத்தப்படும் பல தேர்வுகளை போன்றதுதான் அது.
ஜோதிடத்தை வைத்துக்கொண்டு, உங்கள் அன்றாட நடவடிக்கைகளை, எப்போது செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டுமென்று பார்த்துக் கொண்டிருப்பது, அந்த அறிவியலை முறை தவறி பயன்படுத்துவதற்குச் சமம்.
ஜ்யோதிஷ அறிவியல் நமக்குக் கற்றுத்தரும் செய்தி என்னவென்றால், அந்தப் பிரபஞ்ச சக்தியின் இயக்கத்தில் நாமும் ஒரு அங்கம்தான் என்பதே! நாம் இதைப் புரிந்துகொள்ளும்போது, அந்தச் சக்தியோடு இசைந்து செல்வதற்கும், எது நிகழ்கிறதோ அதை நிகழ அனுமதிப்பதற்கும் நமக்குப்புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது.
கேள்வி: இறந்தவர்களுக்காக நாங்கள் எப்படித் துக்கப்படாமல் இருக்க முடியும்? கிருஷ்ணரைப்போல் அல்லது உங்களைப் போன்ற ஞானிகள் வேண்டுமானால் அப்படி இருக்க முடியும். எங்களால் அப்படி இருக்க முடியுமா?
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் இறந்தவர்களுக்காக மட்டும்
வருத்தப்படுவதில்லை; இருப்பவர்களுக்கும்
சேர்த்துத்தான் வருத்தப்படுகிறீர்கள்.
தொடர்ந்து நீங்கள் துக்கத்தில் இருக்கிறீர்கள்; துன்பப்படுகிறீர்கள்; குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறீர்கள். ஏனென்றால் நீங்கள் எதிர்பார்ப்பிலேயே இருக்கிறீர்கள்; பற்றுதலோடு இருக்கிறீர்கள்.
நீங்கள், யாரைக் கொடுமையானவர்கள் என்று கருதுகிறீர்களோ, அவர்களுக்காகக்
பிரம்மா
வேர்க்க விறுவிறுக்க
எழுதிய தலையெழுத்தை
குரு தம்முடைய
இடது கால் பெருவிரலால்
அழித்துவிட முடியும்
என்று வேதம சொல்கிறது.
கவலைப்பட்டது உண்டா? அவர்களுக்குத் துன்பம் வந்தால், கொண்டாடுகிறீர்கள், இல்லையா? உங்களோடு யார் நெருங்கி இருக்கிறார்களோ அவர்களுக்காகத்தான் வருத்தப்படுகிறீர்கள்.
உங்கள் உடைமை என்று யாரை நினைக்கிறீர்களோ அவர்களுக்காகத்தான் கவலைப்படுகிறீர்கள்.
உங்களுடைய 'நான்', 'எனது' என்பதோடு தொடர்புடைய பொருட்களுக்காகவும் நபர்களுக்காகவும் மட்டுமே நீங்கள் துக்கப்படுகிறீர்கள், இல்லையென்றால் அங்கே துக்கம் என்பதே இருப்பதில்லை. நீங்கள், மதிப்புமிக்க பொருள் என்று எத்தைக் கருதுகிறீர்களோ அதை இழக்கும்போதுதான் உங்களுக்கு வலி ஏற்படுகிறது. அது மரணமாக இருக்க வேண்டுமென்ற தேவைகூட இல்லை.
உங்களிடம் அது கட்டாயம் இருக்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கும் ஏதோ ஒன்றை இழந்து கொண்டிருப்பதாக நீங்கள் உணரும்போது உங்களுக்குத் துக்கம் உண்டாகிறது. அது பொருளாக இருக்கலாம், உறவுகளாக இருக்கலாம், பெயர் புகழாக இருக்கலாம், இன்னும் இது போன்ற உண்மையில் மதிப்பில்லாதவையாகவும் இருக்கலாம். ஆனால் இவற்றின் மேல் உங்களுக்கு இருக்கும் பற்றின் காரணமாகவே இவை எல்லாவற்றையும் அதிக மதிப்பு வாய்ந்ததாக, உயர்ந்ததாக நினைக்கிறீர்கள்.
உண்மையிலேயே உங்களுக்குக் கருணை இருந்து, மரணம் என்பது ஒரு தண்டனை என்று நீங்கள் நினைத்தால், எல்லோருடைய மரணத்திற்காகவும் நீங்கள் கவலைப்பட வேண்டும், இறந்தவர் கொள்ளைக்காரனாக இருந்தாலும் சரி அல்லது கொலைகாரனாக இருந்தாலும் சரி!
நீங்கள் எதற்கு மதிப்பைக் கொடுத்தீர்களோ அதை இழக்கும்போதுதான் உங்களுக்கு வலிக்கிறது.
ஆனால் உங்களுடைய துக்கம், தேர்ந்தெடுக்கப்பட்டவைக்காகவும் விருப்பு வெறுப்புகளுடன் தொடர்புடையதாகவும் இருக்கிறது. நீங்கள் எதிர்பார்ப்பதைப் போன்ற நிகழ்வுகள், உங்களுக்கோ உங்களின் நெருக்கமானவர்களுக்கோ நிகழாதபோதுதான் உங்களுக்குத் துக்கம் வருகிறது.
"சரி! இந்த அணுகுமுறையில் என்ன தவறு இருக்கிறது?" என்று நீங்கள் கேட்கலாம். அப்படியென்றால் அந்த அணுகுமுறை,
உங்களுக்கு துக்கங்களைக் கொடுப்பதில்கூட
என்ன தவறு இருக்க முடியும்! உங்களுடைய
சுபாவமான இயல்பான நித்யானந்த
நிலையில் நிலைபெறுவதற்குப்பதிலாக
நீங்கள் உங்களுக்கு அந்நியமான துக்கத்தில்
நிலைத்திருக்கிறீர்கள். அது, இந்தத் துக்க
நிலையை உங்களுக்குக்கொண்டு வருவதில்
என்ன தவறு இருக்கிறது?
துக்கமும்
கோபமும்
சுயநலத்தினால்தான்
விளைகின்றன.
ஒருவர் இறக்கும்போது உங்களுக்குள் எழுகிற துக்கம் உங்களுடைய சுயநலத்திலிருந்துதான் எழுகிறதே தவிர, வேறு ஒன்றும் இல்லை. இறந்த மனிதர் சென்றுவிட்டார். அதன் பிறகு அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அந்த நபர் செல்வது உங்களுக்குப் பிரச்சினையாக உள்ளது. அதனால்தான் நீங்கள் துக்கப்படுகிறீர்கள்.
உளவியலாளர்கள் சொல்கிறார்கள், இறப்புக்காக வருந்துதல் என்னும் செயல்முறை, முதலில் துக்கம் மற்றும் கோபம் என்கிற நிலைகளைக் கடந்த பிறகே ‘ஏற்றுக்கொள்ளுதல்’ என்கிற நிலையை அடைகிறது. துக்கமும் கோபமும் சுயநலத்தினால்தான் விளைகின்றன.
தம் கணவனை இழந்த விதவை ஒருவர் துக்கத்தில் புலம்பிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ஒரே ஆச்சரியம். காரணம் கணவர் இருந்தபோது அவருடன் அந்தப் பெண்மணி தினமும் சண்டை போட்டுக் கொண்டேயிருப்பார். அவர் சாக வேண்டுமென்று திட்டிக் கொண்டிருப்பார்.
“நீ இப்பொழுது சுதந்திரமடைந்து விட்டாய். நீ நினைத்ததையெல்லாம் செய்யலாம். பின் ஏன் அழுகிறாய்?” என்று அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு அவர் ഇവர்களிடம் பதிலுக்கு ஒரு கேள்வி கேட்டார், “இனி மேல் நான் யாருடன் சண்டை போட முடியும்?” இப்படிக் கேட்டுக் கொண்டே இன்னும் சத்தமாக அழ ஆரம்பித்தார்.
அர்ஜுனனைப் பொறுத்தவரையில் அவருடைய கவலைக்குக் காரணம் தம் உற்றார் உறவினர்களின் மேல் அவருக்குப் பற்று இருந்ததாக அவர் நினைத்ததுதான். அதனால் அவர்களை இழந்து விடுவோமோ என்ற பயம் வந்துவிட்டது.
இறுதியில் இந்தப் பயம், தன்னையும் தம்
அடையாளத்தையும் இழந்துவிடுமோ
என்பவற்றுடன் தொடர்பு கொண்டதாகவே
இருக்கிறது. அர்ஜூனன் தம்முடைய
உடலையும் மனத்தையும் தாண்டி இருக்கிறார்
என்பதை அவருக்குப் புரிய வைப்பதன்
மூலம்‘தம்முடைய அடையாளங்களை
இழந்து விடுவோமோ’ என்று அர்ஜூனனுக்கு
இருந்த மிக அடிப்படையான பயத்திலிருந்து
கிருஷ்ணர் அவரை வெளியே எடுக்கிறார்.
நாம் எல்லோரும் அர்ஜூனனைப்போலவே உடலையும் மனத்தையும் கடந்தவர்கள். நாம், நம்முடைய உடல்-மன அமைப்பைக் காட்டிலும் மிக உயர்ந்த நிலையிலிருப்பவர்கள். மரணத்தின்போது உடலும் மனமும் அழிகிறபோது, நாம் அழிவதில்லை. நம்முடைய சக்தி தொடர்ந்து வாழ்கிறது. அது இன்னொரு உடலில் மீண்டும் வாசம் செய்வதன் மூலம் மீண்டும் பருப்பொருளாகத் தோன்றுகிறது. இந்தச் சின்ன உண்மையைப் புரிந்துகொண்டு விட்டால், கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது? நாம் எல்லோராலும் இந்த உண்மையைப் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முடியும்.
அர்ஜூனனால் முடிந்தது என்றால் உங்களாலும் முடியும். எனக்குச் சாத்தியப்பட்ட ஒன்று உங்களுக்கும் சாத்தியப்படக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கும். இதைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதனால் வேறு பலன் இருக்கிறதா?
நித்யானந்தத்தில் நிலைத்துவிட முடியும் என்கிறபோது நாம் ஏன் துக்கத்தில் மூழ்கி, வாழ்வை வீணடிக்க வேண்டும்?
கேள்வி: நீங்கள் கீதையை மீண்டும் சொல்கிறேன் என்று குறிப்பிட்டீர்கள். அப்படியானால் நீங்கள் கிருஷ்ணரா? தாங்கள்தான் கடவுள் என்று பலர் சொல்லிக்கொள்கிறார்கள். நீங்களும் அதைப் போன்றுதான் சொல்கிறீர்களா?
நல்ல கேள்வி!
“நான் கடவுள்” என்று சொல்வதற்காக நான் இங்கு வரவில்லை. “நீங்கள் கடவுள்” என்று சொல்வதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன்!
> நித்யானந்தத்தில்
> நிலைத்துவிட முடியும்
> என்கிறபோது,
> நாம் ஏன்
> துக்கத்தில் மூழ்கி,
> வாழ்வை
> வீணடிக்க வேண்டும்?
கிருஷ்ணர் தன்னைக் கடவுள் என்று சொல்லும்போது தம்முடைய தெய்வீகத்தை நிரூபிக்கும்போதும், நீங்கள் அவர் சொல்லும் செய்தியை உள்வாங்கிக்கொள்வதற்கும் நீங்களும்கூட தெய்வீகமானவர்தான் என்பதை உணர்ந்துகொள்வதற்கும் தேவையான சூழலை ஏற்படுத்துகிறார். அதனால்தான் கிருஷ்ணர் தம்முடைய தெய்வீகத்தை உணர்த்தவும் வெளிப்படுத்தவும் வேண்டியிருந்தது.
அதால் புரிந்துகொள்ளுங்கள். 'நான் கடவுள்' என்பதை உணர்த்த நான் வரவில்லை. 'நீங்கள் கடவுள்' என்பதை உணர்த்தவே நான் வந்திருக்கிறேன். நீங்கள் கடவுள் என்பதை உணர்ந்து கொண்டால், அதுபோதும், வேறு ஒன்றும் தேவையில்லை. 'நான் கடவுள்' என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது நம்ப வேண்டும் என்ற தேவையில்லை. என் தெய்வீகத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படவேண்டிய தேவையே இல்லை. நீங்கள் கடவுள் என்பதைப் புரிந்துகொண்டு உணர்ந்துகொள்ளுங்கள். அதுவேபோதும், வேறொன்றும் தேவையில்லை.
நான் ஏற்கனவே குரு-சிஷ்ய உறவைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன்.
குரு என்பவர் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையில் இருக்கும் பாலம். இவை இரண்டிற்கும் இடையே உள்ள குறுக்குப் பாதையாக இந்தப் பாலம் இருக்கிறது. நீங்கள் இந்தப் பாலத்தைதான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பல ஞானிகள் எந்த வெளித் துணையும் இல்லாமலேயே தங்கள் சுயத்தை உணர்ந்திருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன்.
புரிந்துகொள்ளுங்கள், இது தொழில் அல்ல.
வியாபாரம் என்றால் கொடுக்கல் வாங்கல்
என்று இரண்டு செயல்கள் இருக்க வேண்டும்.
முன்பே சொன்னதுபோல், எந்த வியாபாரமும்
ஒருவருக்கு லாபத்தையும் இன்னொருவருக்கு
நஷ்டத்தையும் ஏற்படுத்துகிறது. ஒருவர்
தோல்வியடைந்தால்தான் இன்னொருவர்
வெற்றியடைய முடியும். ஆனால் குரு-சிஷ்ய
உறவு இருசாராருக்கும் லாபத்தைத் தருகிறது.
இருவரும் எதையும் இழப்பதில்லை.
> வியாபாரத்தில்
> ஒருவர்
> தோல்வியடைந்தால்தான்
> இன்னொருவர்
> வெற்றியடைய முடியும்.
> குரு-சிஷ்ய உறவு
> இருசாராருக்கும்
> லாபத்தைத்
> தருகிறது.
ஒரு குரு தம்முடைய சங்கத்தை ஒரு வியாபாரமாக நடத்தினால், அது இருதரப்பினருக்குமே நஷ்டத்தை மட்டுமே ஏற்படுத்தும் ஒரு போர் நடவடிக்கை போன்றதாகத்தான் இருக்கும். கடைசியில் குருவும் எதையும் சம்பாதித்துவிட முடியாது. உளவியல் ரீதியாக அவர் பெரிய துன்பத்தைத்தான் வரவழைத்துக்கொள்வார். தவறான பாதைக்கு எடுத்துச் செல்லப்பட்டதால் சீடருக்கும் துன்பம்தான்.
நாம் சரியான குருவிடம்தான் இருக்கிறோமோ என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? அதைவிட முக்கியமாக, அவர் எவ்வளவு நல்ல குருவாக இருந்தாலும் சரி, அவர் நமக்கு ஏற்றவரா என்று எப்படித் தெரிந்துகொள்வது?
ஆன்மிகம்
என்றும்
ஒரு
தொழிலாக
மாற முடியாது.
இதற்கான பதிலை என்னுடைய சீடர்களிடம் கேட்டுப்பாருங்கள். அவர்கள் சொல்வார்கள். நான் என்ன சொன்னாலும் உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் நீங்கள் சந்தேகத்திலிருந்துகொண்டு கேள்வி கேட்கிறீர்கள்.
என் அருகில் வந்தவுடன் அவர்களுடைய எல்லாச் சந்தேகங்களும் சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்து விடுகிறது என்று சிலர் சொல்கிறார்கள்.
ஆரம்ப காலங்களில் பலர் என்னிடம் என்னை அவர்கள் மறக்காமல் இருக்க என்ன செய்யவேண்டுமெனக் கேட்பார்கள். அவர்களிடம் எப்பொழுதும் சொல்வேன், "நீங்கள் உங்களுடைய உண்மையான குருவாக என்னை நினைத்தால், என்னை மறக்காமலிருப்பது எப்படி என்பது உங்கள் பிரச்சினையாக இருக்காது; என்னை மறப்பது எப்படி என்பதுதான் பிரச்சினையாக இருக்கும்."
இன்னும் சிலர் தாங்கள் முதன் முதலில் தங்கள் சொந்த இருப்பிற்கு, சொந்த வீட்டிற்கு வந்து சேர்ந்ததைப்போல் உணர்ந்ததாகச் சொல்வார்கள். எதைத் தேடுகிறோம் என்பது தெரியாமலேயே அவர்கள் பல காலம் தேடிக் கொண்டிருந்திருப்பார்கள். அவர்களின் குருவைப் பார்த்ததுமே அவர்களுடைய அந்தத் தேடுதல் நின்றுவிட்டது. அது பூரண திருப்தியை உணர்ந்த நிலை. கடைசியில் தங்கள் சொந்த வீட்டிற்கே வந்துவிட்ட உணர்வு. ஆன்மிகம் என்றும் ஒரு தொழிலாக மாற முடியாது. அது ஒரு ஸங்கம். கருணையின் ஸங்கம். குரு தருவது, எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராத் தன்மையைக் கொண்டதாகவும் நிபந்தனைக்குட்படாததாகவும் இருக்கும்.
'நான் கடவுள்' என்று சொல்ல வருவதாக நீங்கள் சொல்கிறீர்கள். நான் இந்தப் பிரபஞ்ச சக்தியோடு கலந்து இருக்கிறேன். நீங்களும் அப்படித்தான்.
வித்தியாசம் என்னவென்றால், இதை நான் உணர்ந்திருக்கிறேன். உங்களுக்கு இன்னும் உணரவேண்டிய தேவை இருக்கிறது.
நீங்கள் அதை உணர்ந்த பிறகு, உங்களுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
உங்களைப் பொறுத்தவரை கடவுள் என்பது ஒரு வார்த்தை மட்டுமே, சாரமில்லாத நம்பிக்கை மட்டுமே, உங்களுடைய குறிக்கோள் எல்லாம் உங்கள் பெயர், உங்கள் அந்தஸ்து, உங்கள் குடும்பம், அவ்வளவுதான். இவை எதுவும் இல்லாவிட்டால், நீங்கள் ஒன்றும் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள், உங்களை மற்றவர்களுக்கு வேறு எந்தவிதத்திலும் அறிமுகப்படுத்திக்கொள்ள முடியாது.
என்னைப் பொறுத்தவரை கடவுள் என்பது நிதர்சன உண்மை. என்னுடைய எல்லா இயக்கங்களும் பிரபஞ்ச சக்தியின் அனுமதியுடன்கான் நடக்கிறது. நான் இந்தப் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றாக கலந்து, அதன் முக்கியப் பகுதியாகவே இருக்கிறேன்.
பிரபஞ்ச சக்தியின் அங்கமாக, அதனோடு இணைந்து இருக்கிறேன் என்கிற இந்த உண்மையை, நான் ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறேன். இந்த உடம்பு எனக்கு ஒரு பொருட்டே அல்ல. என்னுடைய பெயர்கூட கடன் வாங்கப்பட்டதுதான். என்னுடைய தோல், இந்த உடைகளைப்போல், எந்த மதிப்பும் இல்லாதது.
இந்தப் பூமியில் இருக்கும் ஒவ்வொரு வீடும் என்னுடைய வீடுதான். அந்த விழிப்புணர்விற்கு உயரும்போது, 'நீங்கள் தெய்வம் என்பதை உணர்வீர்கள், எந்தவிதத்திலும் அதைவிடக் குறைந்தவர் இல்லை என்பதையும் நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்.
> இந்தப் பூமியில்
> இருக்கும்
> ஒவ்வொரு வீடும்
> என்னுடைய வீடுதான்.
> அந்த விழிப்புணர்விற்கு
> உயரும்போது, நீங்கள்
> தெய்வம் என்பதை
> உணர்வீர்கள்.
இதை உங்களுக்கு உணர்த்துவதுதான் என்னுடைய ஸங்கம். தனி மனிதர்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்தி, தாங்களும் தெய்வங்கள்தான் என்பதை அவர்களையும் உணர வைப்பதுதான் என்னுடைய ஸங்கத்தின் நோக்கம்.
கேள்வி: நீங்கள் எண்ணங்களற்ற நிலையைப் பற்றிச் சொன்னீர்கள். அந்த எண்ணங்களற்ற நிலைதான் மரணமா? அப்படியென்றால் மரணம் என்பது நிகழ்காலத்தில் இருப்பதைத்தான் குறிக்கிறதா? மரணம் மட்டும்தான் ஒரே நிகழ்காலமா?
எண்ணங்களற்ற, மனமற்ற நிலை என்பது மரணத்திற்கும் அப்பாற்பட்டது. வாழ்கிற வாழ்க்கைக்கும் அப்பாற்பட்டது. மரணம் என்பது பயணத்தின் ஒரு பகுதிதான். ஒரு வாழ்க்கையிலிருந்து இன்னொரு வாழ்க்கைக்கு மாறும்போது இடையில் ஏற்படும் ஒரு அனுபவம், அவ்வளவுதான்.
நான் ஏற்கனவே சொன்னதுபோல், ஒரு உயிர் இன்னொரு உடலை எடுப்பதற்கு மூன்று க்ஷணங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அந்த இடைப்பட்ட வேளையில் உடலும் மனமும் இல்லாமல் உயிர் இருக்கிறது. அப்பொழுது அதற்கு எண்ணங்கள் இல்லை. உடலும் மனமும் இணைந்த அமைப்புதான் எண்ணங்கள் தோன்றுவதற்குக் காரணம்.
மரணம், அதை நீங்கள் எதிர்ப்பில்லாமல் ஏற்றுக்கொள்ளும்போது, அதுவே நம்மை முக்திக்கு எடுத்துச் செல்லும் ஒரு பாதையாகவும் ஒரு கொண்டாட்டமாகவும் மாறிவிட முடியும். உங்கள் எல்லா ஆசைகளையும் எல்லாப் பற்றுக்களையும் அடையாளங்களையும் உங்களால் விட்டுவிட முடிந்தால், உங்கள் உள்வெளித்தளம் தூய்மை அடைகிறது. அப்போது
தனி மனிதர்களுக்குள்
மாற்றங்களை ஏற்படுத்தி,
தாங்களும்
தெய்வங்கள்தான்
என்பதை
அவர்களையும்
உணர வைப்பதுதான்
என்னுடைய
ஸங்கத்தின் நோக்கம்.
அது எந்தவித முயற்சியும் இல்லாமல்,
சிரமமும் இல்லாமல் வெளியில் இருக்கும்
பிரபஞ்ச சக்தியோடு ஒன்றாகக் கலந்துவிடும்.
நான் ஏற்கனவே விவரித்ததுபோல், வெள்ளைப் பலகையின் வெள்ளைப் பரப்புதான் ப்ரம்மன் அல்லது ப்ரபஞ்ச சக்தி. வட்டத்திற்குள் இருக்கும் வெள்ளைப் பரப்புதான் ஆத்மா. ஆத்மா தூய்மையாக இருந்தால் வட்டத்தின் உள் இருக்கும் வெண்மை வெளியில் இருக்கும் வெண்மையோடு மிக இயல்பாகவும் சுலபமாகவும் கலந்துவிடும். இரண்டிற்கும் எந்த வேறுபாடும் இருக்காது.
உடல்-மனம் என்னும் வெளிக்கோடு மறைந்துவிடும்போது, வட்டத்தின் உள் இருந்த வெண்மையின் மேல் எந்த சாயமும் இருக்காது. அப்பொழுது உடலில் இருந்து வெளியேறிய உயிருக்கு இன்னொரு உடலைத் தேர்ந்தெடுக்கவேண்டிய தேவை இருக்காது. எண்ணங்கள் அற்ற உயர்ந்த உணர்வு நிலையில் அது நிலை பெற்றுவிடும்.
எண்ணங்கள், ஞாபகங்கள் மற்றும் ஆசைகள் எல்லாம் ஸ்தூலத்தால் உருவாக்கப்பட்டவை. உடல்-மன அமைப்பிற்குச் சொந்தமானவை. உடல் புதைக்கப்பட்ட பிறகும் ஞாபகங்களைச் சேர்த்து வைக்கும் சக்தி உடலுக்கு உண்டு. அதனால்தான் இடுகாட்டில் ஆவிகளைப் பார்க்க முடிகிறது.
ஹிந்து கலாச்சாரத்தில் இறந்தவரின் உடலை எரித்து விடுவதற்குக் காரணம் இதுதான். உடலை எரித்துவிட்டால் அந்த உடலின் நினைவுகளும் அழிந்துவிடும். ஆனால் ஞானிகளின் உடலை மட்டும் புதைக்கிறார்கள்.
காரணம், ஞானிகளின் உடலில் தூய்மையான சக்தி மட்டும்தான் இருக்கிறது. பல ஹிந்து கோயில்கள் ஞானிகளின் ஜீவ ஸமாதியின் மேல்தான் கட்டப்படுகின்றன. அத்தகைய கோயில்களில் இன்றும் தொடர்ந்து சக்தி வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
மனம் கடந்த நிலையை நாம் உயிருடன் இருக்கும்போதே அடையலாம்.
அந்த மனம்கடந்த நிலையை நாம் உயிருடன் இருக்கும் போதே அடையலாம். நிகழ்காலத்தை அனுபவிப்பதற்கு மரணம் ஏற்படும்வரை காத்திருக்கவேண்டிய தேவை இல்லை. நிகழ்காலத்தை அடைவதற்கான சாவி த்யானம் மட்டுமே! த்யானம் உங்களை நிகழ்காலத்திற்கு எடுத்து வந்துவிடும். அதனால்தான் த்யானத்தை மரணத்தோடு ஒப்பிடுகிறார்கள்.
த்யானத்தின் மூலம் நீங்கள் உங்களது உள் இருப்பைத் தொடுகிறீர்கள். அப்பொழுது நீங்கள் அழியக்கூடிய உடலோ மனதோ அல்ல. ஆனால் என்றும் அழியாத ஆத்மா என்பதை உணர்கிறீர்கள்.
இந்த அனுபவம் நடைபெற்றுவிட்டால் அது நீங்கள் மறு பிறப்பு எடுத்ததற்குச் சமம். அஞ்ஞான கர்ப்பத்திலிருந்து நீங்கள் புதிதாகப் பிறக்கிறீர்கள். இதற்கு முன் நீங்கள் அனுபவித்து உணர்ந்தது பூ கர்ப்பம் மட்டுமே, அதாவது தாயின் கருப்பை மட்டுமே.
மரணம் என்பது நாம் பயணிக்கும் ஒரு
பாதைதான். குழந்தைப் பருவம், இளமைப்
பருவம், நடுத்தர வயது, முதிர்வு என்று
எப்படி இந்த உடல் பயணிக்கிறதோ,
அதேபோல் மரணம் என்ற பாதையில்
பயணித்து, மீண்டும் இன்னொரு உடலை
எடுக்கிறது என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
'As you like it' என்ற தம் நாடகத்தில் 'உலகமே ஒரு நாடக மேடை' என்று இந்தப் பயணத்தை சேக்ஷ்பியர் மிக அழகாக வர்ணிக்கிறார். மனித வாழ்வை அவர் ஏழு பாகங்களாகப் பிரிக்கிறார். பள்ளிக்குச் செல்ல விரும்பாமல் அடம்பிடித்து அழும் குழந்தை முதல் வயதானவர் வரை நம் வாழ்க்கை என்னும் நாட கத்தில் ஏழு பாகங்கள் இருக்கின்றன என்று அவர் சொல்கிறார்.
சேக்ஷ்பியர் ஒரு சிறந்த அறிஞர். அவர் மிகச் சரியாக வாழ்க்கையை ஒரு நாடகத்தோடு ஒப்பிடுகிறார். வாழ்வில் வரும் ஒவ்வொரு பருவத்தையும் நாடகத்தின் ஒரு பகுதியாகப் பாவிக்கச் சொல்கிறார்.
பஜ கோவிந்தத்தில் ஆதி சங்கரர் மிக அழகா
கச் சொல்கிறார்: தலைமுடி நரையாகிப்
போனபிறகும் பற்கள் விழுந்த பிறகும்
நிற்பதற்கே ஒரு ஊன்றுகோல் தேவை என்று
ஆன பிறகும்கூட மனிதர்கள் ஆசைகளை
மட்டும் விடுவதே இல்லை. அவர்கள் மனம்
முழுவதும் ஆசைகளால் நிரம்பியுள்ளது!
நமக்கு வயதாகிறது என்பதை
ஏற்றுக்கொண்டு உடலை விடுவதற்கு
நம்மால் முடிவதில்லை, இதுதான்
நம்முடைய பெரிய பிரச்சினை.
குழந்தைகளாக இருக்கும்பொழுது நாம்
வளர்ந்து பெரியவன் ஆக வேண்டுமென்று
ஆசைப்படுகிறோம். அதற்குப் பிறகு நடுத்தர
வயதைத் தாண்டாமலேயே இருந்துவிட வேண்டுமென்று நினைக்கிறோம்.
வாழ்க்கை முறை அப்படி நடப்பதில்லை. உடலும் மனமும் ஒவ்வொரு நொடியும் இறக்கிறது. ஒவ்வொரு நொடியும் பிறக்கிறது.
கோடிக்கணக்கான செல்களால் உருவானதுதான் நம் உடல். அதில் லட்சக்கணக்கான செல்கள் ஒவ்வொரு நொடியிலும் அழிகின்றன. நமக்கு வயதாக ஆக இறந்த செல்களுக்குப் பதிலாகப் புதிய செல்கள் உருவாவதில்லை. இது உயிரியல் சொல்லும் உண்மை.
இதில் கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது? வெண்ணெய் கெட்டுப்போய் விட்டால் அதைத் தூக்கிப் போட்டு விடுகிறீர்கள். நீங்கள் புத்திசாலியாக இருந்தால், உங்களுக்கு எவ்வளவுதான் பிடித்திருந்தாலும் அந்தக் கெட்டுப்போன வெண்ணெயைப் படத்தில் மாட்டி அழகு பார்க்க மாட்டீர்கள். அதனைத் தூக்கி எறிந்துவிட்டுப் போய்க் கொண்டே இருப்பீர்கள்.
அதேபோல் உங்கள் உடலையும் நடத்துங்கள். உடல் உங்களுக்குச் சொந்தமானது அல்ல. அதனால் உடலோடு உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
இந்த உடலில் கொஞ்ச நாள் நீங்கள் வாடகைக்கு இருக்கிறீர்கள். அவ்வளவுதான். உங்கள் ஆத்மாதான் சொந்தக்காரர். அதனால் உங்களை, உங்கள் ஆத்மாவோடு அடையாளப்படுத்திக்கொள்ளுங்கள். உடலை மறந்து விடுங்கள்.

உடலுக்குப் பிரச்சினை வரும்பொழுது, கிளம்பவேண்டிய நேரம் வந்துவிடும்பொழுது, உங்கள் பெட்டிகளையும் மூட்டைமுடிச்சுகளையும் உங்களோடு எடுத்துச் செல்ல வேண்டுமென்று முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் செல்கிற இடத்திற்கு நீங்கள் எதுவுமே எடுத்துச் செல்லவேண்டியதில்லை. அங்கே உங்களுக்குத் தேவையான அனைத்துமே கொடுக்கப்படும்!
ஒருநாள் யோகி பாபா தம்முடைய தோட்டத்தில் விதை விதைத்துக் கொண்டிருந்தார். அதை அவருடைய மனைவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது யோகி பாபா வேக வேகமாக மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருப்பதைக் கவனித்த மனைவி கேட்டார், "ஐயா, ஏன் இவ்வளவு வேகம். கொஞ்சம் பொறுமையாக, நிதானமாக, கவனமாக நடலாமே," என்றார். அதற்கு யோகி பாபா, "ஐயையோ, அதெல்லாம் முடியாது. என்னிடம் ஏராளமான விதைகள் இருக்கின்றன. விதைகள் காலியாவதற்குள் நான் விதைத்து முடிக்க வேண்டும்," என்றார்.
நாமெல்லாம் அந்த யோகியைப் போன்றுதான் வாழ்கிறோம். விதைகள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளும். நீங்கள் வேகமாக விதைத்தாலும் மெதுவாக விதைத்தாலும் பைக்குள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் விதைகள் இருக்கின்றன. இந்தப் பை காலியாகிவிட்டால், இன்னொரு பை விதைகளுடன் வந்துவிடும். அவ்வளவுதான். இதில் வேகத்திற்கு என்ன தேவை இருக்கிறது?
மரணம் மட்டும்தான் ஒரே நிகழ்காலம் அல்ல; வாழ்வின் ஒவ்வொரு நொடியுமே, நாம் அரிய பொக்கிஷமாக மதித்து, அனுபவித்து மகிழவேண்டிய நிகழ்காலத் தருணங்களே! நாம் நிகழ்காலத்தில் வாழாததால்தான் எதையும் விடுவதற்குத் தயங்குகிறோம். அதனால்தான் மரணத்தைப் பார்த்துப் பயப்படுகிறோம்.
கேள்வி: நமக்கு ஏன் கடந்தகாலத்தைப் பற்றிய நினைவுகள் வருவதில்லை? கடந்தகாலத்தில் நாம் என்ன தவறுகள் செய்தோம் என்பதைத் தெரிந்து கொண்டால், இந்த ஜென்மத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சுலபமாகத் தெரிந்துகொள்ளலாமே.

தயவுசெய்து நான் சொல்வதை நம்புங்கள்,
கடந்தகாலத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்
என்பது உங்களுக்குத் தெரியாமல்
இருப்பதுதான் நல்லது. இந்தப் பிறப்பில்
உங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள்,
நினைவுகளேபோதும், உங்களைப்
பைத்தியமாக்க! இதற்கு முந்தைய பிறவிகளில்
எந்தெந்த உடல்களில் இருந்து என்னென்ன
செய்தீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள
வேண்டுமென்று ஏன் நினைக்கிறீர்கள்?
இயற்கை உங்கள் மேல் அளவில்லாத கருணை வைத்திருப்பதால்தான்,
கடந்தகாலத்தில் நீங்கள் செய்தவற்றை உங்களுக்கு ஞாபகம் இல்லாமல் செய்து விடுகிறது.
மரணம் அடையும்போது உயிரானது நம்முடைய ஸ்தூல உடல் உட்பட ஏழு உடல்கள் அல்லது சக்தி அடுக்குகள் (Energy layers) வழியாக வெளியேறுகிறது. அப்படிப் பயணிக்கும்போது, கடந்து போகும்போது, அந்தந்தச் சக்தி அடுக்குிற்குச் சொந்தமான நினைவுகள், உணர்ச்சிகளை அது அனுபவிக்கிறது.
எல்லா ஆசைகளையும் முழுமையாக அனுபவித்து முடித்தவர்கள் கடைசி சரீரமான நிர்வாண சரீரத்தை அடைகிறார்கள்.
நான்காவது உடலான ஸூக்ஷ்ம சரீரத்தைக் கடந்து செல்லும்போது உயிரானது அந்த வாழ்வில் ஏற்பட்ட எல்லாவித துக்கங்களையும் அனுபவிக்கிறது. அதன் பிறகு, உயிரானது ஐந்தாவது அடுக்கான காரண சரீரத்தை அடைகிறது.
அப்பொழுது அது கோமா நிலையை அடைகிறது. இந்த சரீரம் ஒரு இருள் சரீரம். சாவின் விளிம்பிற்கே சென்று திரும்பியவர்கள் அனைவருமே அந்த இருளை உணர்ந்திருக்கிறார்கள். அந்த இருளின் முடிவில் ஒரு ஒளி இருப்பதையும் அவர்கள் காண்கிறார்கள். அது ஆறாவது சரீரமான ஆனந்த சரீரம். இது ஒளி வடிவானது.
ஐந்தாவது சரீரமான காரண சரீரத்தைக் கடக்கிறபோது உயிர் உடலை விட்டுவிடுகிறது. உயிருக்கு, இந்த சரீரத்தைக் கடக்கும்வரை உடலுக்குள் மீண்டும் திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் பல ஆண்டுகளாகக் கோமா நிலையில் இருந்தவர்கள்கூட மீண்டும் உணர்வு பெற்று எழுகிறார்கள்.
அதுவரை அவர்கள் ஐந்தாவது சரீரமான காரண சரீரத்தில் தங்கி இருப்பார்கள். காரண சரீரத்தைக் கடந்துவிட்டால், உயிருக்கு மீண்டும் உடலுக்குள் வரும் வாய்ப்பு கிடையாது. அதற்குப் பிறகு அது அடுத்தடுத்த சரீரங்களைத் தாண்டிச் சென்றுவிட வேண்டும்.
வாழ்க்கையைத் திருப்தியாக வாழ்ந்து எல்லா ஆசைகளையும் முழுமையாக அனுபவித்து முடித்தவர்கள் கடைசி சரீரமான நிர்வாண சரீரத்தை அடைகிறார்கள். ஆனால் எந்த ஆசைகளுக்காக உடலை எடுக்கிறோமோ, அந்த ஆசைகளை நிறைவேற்றாமல் உடலை விட்டால் நாம் மீண்டும் இன்னொரு உடலை எடுத்து விடுகிறோம்.
அப்படி உடலை எடுக்கும்போது நம் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான சூழ்நிலை, கலாச்சாரம், பெற்றோர்கள் என எல்லாவற்றையும் கணக்கில் கொண்டே உடலை எடுக்கிறோம்.
உயிர் ஸூக்ஷ்ம சரீரத்தையும் காரண சரீரத்தையும் கடந்து செல்லும்போது, அதாவது வலி மற்றும் இருளை அனுபவித்துக் கடந்து செல்லும்போது, கடந்தகால நினைவுகள் எல்லாம் மறந்து விடுகின்றன.
ஐந்தாவது சரீரமான காரண சரீரத்தில் உள்ள இருள் என்பது தாயின் கருப்பையை ஒத்தது. ஒரு உயிர் புதிய உடலை இந்த ஐந்தாவது சரீரத்தின் வழியாக எடுக்கிறது. இதனால்தான் உங்கள் கடந்தகாலத்தைப் பற்றிய எந்த நினைவுகளும் உங்களுக்கு வருவதில்லை.
ஆனால் நம்மில் பலருக்கு அவ்வப்போது
எப்போதாவது தீர்க்க தரிசனம் என்று
சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டு நம்முடைய
கடந்தகாலத்தின் சில நினைவுகள் வருவதற்கு
வாய்ப்பு இருக்கிறது. உங்களுடைய எண்ண
ஓட்டங்கள் திடீரென குறையும்போது, அந்தத்
தீர்க்க தரிசன நிலையை உணர்கிறீர்கள்.
டாக்டர் ப்ரியன் வைஸ் (Dr.Brian Weiss) மற்றும் சில உளவியலாளர்கள் சில மனோத்துவ முறைகளைப் பயன்படுத்தி, மக்களைப் பின்னோக்கிய நினைவுகளுக்குள் ஆழ்த்தி, அவர்களுடைய முந்தைய பிறவிகளில் நடந்தவற்றைப் பற்றிச் சொல்ல வைக்கும் ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சிகள் மூலம், எண்ணங்களற்ற நிலையில், நம்மால் முற்பிறவிகளில் நடந்தவற்றை நம் நினைவுக்குகொண்டு வர முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
ஆனால் இது போன்ற உளவியல் விளையாட்டுகள் விபரீதத்தில் முடிய வாய்ப்புகள் அதிகம். அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை எப்படிக் கையாள்வது என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் ஆன்மிகத்தில் தேர்ச்சிபெற்ற ஒருவர் மட்டுமே இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, கடந்தகால அனுபவங்களை நினைவுக்கு எடுத்து வராமலேயே நோயாளியைக் குணப்படுத்த முடியும்.
"முன் ஜென்மத்தில் நான் என்ன தவறு செய்தேன் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கர்மா என்ற பெயரில் அதனுடைய பலனை மட்டும், நான் அனுபவிக்க வேண்டுமென்று இயற்கை என்னை நிர்பந்திக்கிறது. இது என்ன நியாயம்?" என்று கேட்கிற மக்களும் இருக்கிறார்கள்.
நான் சொல்ல விரும்புவதெல்லாம், நாம் நினைக்கிறபடி நியாய தர்மங்கள் பிரபஞ்சத்திற்குத் தெரியாது. பிரபஞ்சம் தானாக, சுயமாக இருக்கிறது. அது நம் செயல்களை வைத்து நம்மை எடை போடுவதில்லை. உங்களுக்கு என்ன நடக் வேண்டும் என்பதை நீங்களேதான் தீர்மானிக்கிறீர்கள்.
பிரபஞ்சத்தில் நடக்கும் எதுவுமே ஒரு விபத்து அல்ல. எல்லாமே நிகழ்வுகள்தான். ஒரு நிகழ்வு இன்னொரு நிகழ்வு நடப்பதற்குக் காரணமாக இருக்கிறது, அவ்வளவுதான்.
உங்களுடைய கடந்தகால நினைவுகளை மறக்கச் செய்வதன் மூலம், உங்களை இயற்கை பாதுகாக்கிறது. ஒரு வேளை உங்களுக்குக் கடந்தகால நிகழ்வுகள் எல்லாம் நினைவுக்கு வந்துவிட்டால், நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதையும் பைத்தியக்கார விடுதியில்தான் கழிக்கவேண்டியதிருக்கும்!
