KAILASA Library/பகவத்கீதை/உங்களின் அடுத்த பிறவியை நீங்களே தேர்ந்தெடுத்திடலாம்Sign in
பகவத்கீதை

உங்களின் அடுத்த பிறவியை நீங்களே தேர்ந்தெடுத்திடலாம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மரணத்தின்போது உயிர் ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்குச் செல்கிறது. மரணம் அடைந்த மூன்று க்ஷணத்திற்குள் (ஒரு க்ஷணம் என்பது இரண்டு எண்ணங்கள் தோன்றுவதற்கு இடையில் ஏற்படும் கால இடைவெளி) புது உடலை எடுத்து விடுகிறது.

ஒருவருக்கு அதிக எண்ண ஓட்டங்கள் இருந்தால் ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்குள் செல்வதற்கு எடுக்கும் கால அவகாசம் மிகக் குறைந்ததாக இருக்கும். யாருக்கு எண்ண ஓட்டங்களே இல்லையோ, அவர்களுக்கு அளவிடமுடியாத கால அவகாசம் இருக்கும். ஏனென்றால் எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம் அளவிட முடியாததாக இருக்கிறது.

diagram showing circles inside a rectangle

அவருடைய ஆத்மா முழுச் சுதந்திரத்தில் இருக்கும். எப்பொழுது இன்னொரு உடலை எடுக்கலாம் என்று அவர் முடிவு செய்கிறாரோ அதுவரை பிறவி எடுக்காமல் சுதந்திரமாக இருக்கலாம். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், எப்பொழுது ப்ரபஞ்ச சக்தி முடிவு எடுக்கிறதோ அப்பொழுது, அவர் புது உடல் எடுப்பார்.

ஒரு வெள்ளைப் பலகையில் பல வட்டங்கள் வரையப்பட்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். இதில் வெள்ளைப் பலகைதான் ப்ரபஞ்ச சக்தி. அதில் வரையப்பட்டுள்ள வட்டங்கள்தான் தனிப்பட்ட உடலும் மனமும்; அந்த வட்டத்திற்குள் இருக்கும் வெள்ளைப் பரப்புதான் ஆத்மா. வட்டத்திற்குள் இருக்கும் ஆத்மாவும் வெளியில் இருக்கும் ஆத்மாவும் ஒரே சக்திதான். உள்ளே இருக்கும் வெள்ளைப் பரப்பு தனி ஆத்மா, வெளியிலிருக்கும் வெள்ளைப் பரப்பு ப்ரம்மன்.

ஒரு தனிப்பட்ட மனிதரின் உடலும் மனமும் இறக்கும்போது, இந்த வட்டம் அழிக்கப்படுகிறது, அவ்வளவுதான். உள்ளே இருக்கும் வெள்ளைப்பரப்பு, வட்டத்திற்கு வெளியில் இருக்கும் வெள்ளைப்பரப்போடு கலந்துவிடுகிறது. அதாவது உள்ளே இருக்கும் வெளி, வெளியிலிருக்கும் வெளியோடு கலந்துவிடுகிறது; சக்தி சக்தியோடு கலந்துவிடுகிறது.

ஆத்மா, இன்னொரு உடல்-மன அமைப்பிற்குள் செல்லத் தயாராகும்போது, அது அடுத்த வட்டத்திற்குள் நுழைகிறது. இது தொடர்ந்து நடக்கும் இயற்கைக்கு உட்பட்ட நிகழ்வு. இந்த நிகழ்வுகளைப் புரிந்துகொண்டு, அதை ஏற்றுக்கொள்ளும் ஒருவர் முழுமையான மனிதராகிறார். மையத்தில் நிலைத்து விழிப்புணர்வோடு, உறுதியாக இருப்பவரை தீீர. தீரன் என்று கிருஷ்ணர் அழைக்கிறார்.

Illustration of hands playing a flute