கோபத்தை அடக்காதீர்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ எவ்வளவு தேவையோ அதைவிடக் குறைந்த அளவே கோபப்படுங்கள்.
❖ கோபப்படுங்கள் என்று நான் உங்களிடம்
சொல்வது கண்டு ஆச்சரியப்படாதீர்கள்.
கோபம் ஒரு மன உணர்வு.
உலக வாழ்க்கையில் அதற்கு ஒரு அர்த்தமும்,
தேவையும் இருக்கிறது.
ஆனால், அளவுக்கு மீறினால் அதுதான்
உங்களுக்கு எமனாகவும் இருக்கும்.
❖ கோபத்தை அடக்கி வைக்கும்போது,
அது நம் மனதுக்குள் கிடந்து குமுறுகிறது.
வெளிவர முடியாத கோபம் நம் உடலுக்குள்
பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
❖ அடிக்கடி கோபப்பட்டு, அதை
வெளிக்காட்ட முடியாமல் மனசுக்குள்
போட்டு அழுத்தி விடுகிறவர்களுக்குதான்
ரத்த அழுத்தம் வருகிறது;
மாரடைப்பு வருகிறது;
நினைத்துப் பார்க்க முடியாத
விளைவுகள் எல்லாம் ஏற்படுகிறது.
அதேபோல், அளவுக்கு மீறி
கோபப்படும்போது பாதகமான விளைவுகளே
ஏற்படுகின்றன.
❖ கோபம் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள
குதிரையாக இருந்தால் நீங்கள் தாரளமாக
ஊர் போய்ச் சேரலாம். இல்லாவிட்டால்
கட்டுக் கடங்காத குதிரை உங்களைக்
கீழே தள்ளி விடும்.

❖ அளவுக்கு மீறிய கோபம்தான்
சாபமாக மாறும்.
சாபத்திலிருந்து தப்பித்துக்கொள்ள
அதிகக் கோபத்திலிருந்து தப்பித்துக்
கொள்ளுங்கள்.
❖ கோபத்தை நீங்கள்
தேவைப்படும்போது
பயன்படுத்துங்கள்.
சக்தியைச் சேமியுங்கள்.
முக்தி நோக்கி நகர ஆரம்பிப்பீர்கள்.
ஒப்பீடற்றவரே!
❖ வெறுமனே ஒப்பிடுவது வாழ்க்கைக்கு உப்பிடாது.
❖ மற்றவர்களோடு... தன்னை ஒப்பிட்டு நொந்துபோவது
- தாழ்வு மனப்பான்மை. ஒப்பிட்டுக் கர்வப்படுவது
- உயர்வு மனப்பான்மை.
❖ மற்றவர்களோடு தினம், தினம் தன்னை,
ஒப்பிட்டு, ஒப்பிட்டு... மனதைச்
சிறுமையின் உச்சத்திற்கு அழைத்துச்
சென்றால் அது பொறாமையாகவும்,
வெறுமையின் உச்சத்திற்கு அழைத்துச்
சென்றால் அது ஆதிக்க குணமாகவும்
மாறும்.

❖ ஒப்பீடற்றவரே! மற்றவர்களோடு ஒப்பிட்டு, ஒப்பிட்டு நொந்து போவதும்... ஒப்பிட்டு ஒப்பிட்டு ஊக்கப்படுத்துவதும்... உங்கள் கையில்!
❖ நாம் பிறந்ததற்கான நோக்கத்தைப்
புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும்
‘தவிப்புத்’ தான்...
ஒப்பிடுதல்!
பொறாமை!
போன்ற எதிர்மறை உணர்வுகளை
உருவாக்குகிறது.
❖ நாம் எப்படியிருந்தாலும் சரி, நாம் நாமாயிருத்தல் வேண்டும்.
❖ பிரபஞ்சம் என்னும்
பூங்காவின் தனித்துவம்
வாய்ந்த மலர் நீங்கள்.
உங்களுக்கு இணை நீங்களே!
❖ உங்களுக்குள் ஒளிந்திருக்கும்
தனித்துவத்தை வெளிக்கொண்டு
வர முயற்சியுங்கள்...
ஒப்பீடற்றவர்களாகுங்கள்!
❖ கோயில்களுக்குள் சென்று கொஞ்ச நேரம்
அமர்ந்து விட்டு திரும்பும்போது...
ஒருவித அமைதி நம்முள் பிறக்கிறதே
அது எதனால்?
இயற்கையான சூழலில் கொஞ்ச நேரம்
அமர்ந்திருந்து வீடு திரும்பும்போது...
ஒருவித அமைதி நம்முள்
இருக்கிறதே அது எதனால்?
காரணம் 'சக்தியூட்டம்' தான்.
❖ இயற்கைச் சூழலில் இயற்கையாகவே
இன்னும் களங்கப்படுத்தப்படாத சக்தி
எப்போதும் இருந்துக் கொண்டே இருக்கும்.
பேட்டரி சார்ஜ் செய்வதுபோல் நமது
உடலும், மனதும் இயற்கையால்
சக்தியூட்டப்படுவதால்தான் உடலுக்கு
புத்துணர்வும், மனதிற்கு அமைதியும் கிடைக்கிறது.
❖ கோயில்களுக்கு, சர்ச்சுகளுக்கு, மசூதிகளுக்கு ஒருவர் சென்று முழு பக்தி நிலையில்,
- வேண்டிக் கொள்ளும்போது அவரை அறியாமலேயே திறந்த மனதோடு தெய்வ சந்நிதி முன் நிற்கிறார். (முழு பக்தி = தியானம்)
❖ ஒவ்வொரு இறை சந்நிதியும் உலகின் சிறு, சிறு சக்தி நிலையங்கள். (Energy stations) மனம் திறந்திருந்தால், அதாவது திறந்த மனதோடு இருந்தால் இயற்கை விதிப்படி, சக்தி குறைவாக இருக்கும் நம்முள் தேவையான அளவு சக்தி வந்து நிரம்பி விடும். இதனால்தான் கோயிலுக்குச் செல்வது பலருக்கு மன நிறைவைத் தருகிறது.

