KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/சக்திமையங்கள்Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

சக்திமையங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ நீங்கள் நினைக்கிறபடி...
நீங்கள் உடல் அல்ல.
நீங்கள் மனமும் அல்ல.
பின் நீங்கள் யார்?
இந்த கேள்வி தரும் ஆராய்ச்சி உணர்வோடு
தொடருங்கள்.

❖ 1. உச்சந்தலை

  1. புருவ மத்தி
  1. தொண்டைக் குழி
  1. மார்பு மத்தி
  1. நாபிக்கு மேல்
  1. நாபிக்கு கீழ்
  1. முதுகெலும்பு நுனி இந்த ஏழுமே ஆத்மாவை அடைய உதவும் நுழைவாயில்கள்.

❖ இந்த ஏழு இடங்களைச்
சம்பந்தப்படுத்திதான் எல்லாத் தியான
முறைகளும், வேதங்களும்,
சடங்குகளும் உருவாக்கப்படுகின்றன.
இந்த இடங்கள், சக்கரங்கள் அல்லது
சக்தி மையங்கள் என்று
அழைக்கப்படுகின்றன.

❖ இந்த சக்தி மையங்களில்தான் உடல், மனம், உயிர் ஆகிய மூன்றும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதபடி கலந்திருக்கின்றன.

❖ பார்க்க முடிந்த ஆத்மா உடல். பார்க்க முடியாத உடல் ஆத்மா.

Illustration
Sri Aurobindo / Mother illustration

காரணம், உடலும் ஆத்மாவும் தனித்தனியானவை அல்ல.

❖ மனம் என்ற இடைச்செருகலே உடலை, ஆத்மாவை பிரித்துக் காட்டுகிறது.

❖ ஆத்மாவைப் போர்த்தி இருக்கும் மனம் விலக... உடலும் ஆத்மாவும் சங்கமித்துக்கொள்ளும்.

கடவுள்தான் எல்லாம்

❖ கடவுளுக்கு உருவம் உண்டு.

❖ கடவுளுக்கு உருவம் இல்லை.

❖ உருவம், அருவம் இரண்டுமே கடவுள்தான்.

❖ உருவம், அருவம் இரண்டிற்கும் அப்பாற்பட்டது கடவுள்.

❖ கடவுள் என்பது மனிதன் உருவாக்கியக் கருத்து.

❖ கடவுள் என்ற ஒன்று பிரபஞ்சத்தில் இல்லவே இல்லை.

❖ கடவுள் தவிர வேறு எதுவும் பிரபஞ்சத்தில் இல்லை.

❖ 'கடவுள் தான் எல்லாம்' என்ற ஒரு உண்மையின் பல முகங்கள்தான் மேற்கூறிய 7+1 கூற்றுகள்.

❖ இந்த 8 கூற்றுகளில் ஏதாவது ஒன்றைப் பிடித்துக் கொண்டு தொங்குவது, அதைப் பற்றிக் கற்பனை செய்து விவாதித்துக் கொண்டே இருப்பதுதான் மனதின் இயல்பு. மனித சுவாபம்.

❖ கடவுளைப் பற்றி விவாதிப்பதைவிட, உங்கள் மனதை கடந்து உங்கள் உள்ளேயிருப்பதை (கடவுளை) அடைவது மாத்திரமே பயனைத் தரும். விவாதிப்பதால் நேரம் வீணாகும். பலன் இல்லை.

❖ கடவுள் என்பது கடந்து உள் இருந்து
அனுபவிக்க வேண்டிய ஆனந்த ரசம்! ஆனந்த
நிலை!! ஆனந்தம்!!!

❖ கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்க நாம் முயற்சி செய்தால்! ஒருவேளை நிரூபித்து விட்டால்!!!

❖ அந்த விஷயம் கடவுளை விடப் பெரிதாகி விடும். கடவுள் நிரூபிக்கப்படும் அளவுக்கு தாழ்ந்த ஒன்றல்ல. சாதாரண விஷயமல்ல.

❖ பகுத்தறிவினால் நிரூபிக்கப்பட முடியாமல்
இருப்பதுதான், 'சாதாரண மனிதனின் அறிவிற்கு
அப்பாற்பட்ட ஒன்று கடவுள்' என்பதற்கான
நிரூபணம்.

Mother sitting