KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/போலித் திருப்தி தன்மை என்றால் என்ன?Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

போலித் திருப்தி தன்மை என்றால் என்ன?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ திருப்தி இரண்டு வகை.
ஒன்று - போலித் திருப்தி.
இரண்டு - ஆழ்ந்த திருப்தி.

❖ உணவு, உறக்கம், காமம், கிளர்ச்சி அல்லது
விளையாட்டு என்ற இந்த நான்கு
விஷயங்களிலேயே ஐந்தறிவு ஜீவிகள் திருப்தி
காண முயற்சிக்கும். இதைத் தாண்டி ஒரு படி
கூட எடுத்து வைக்க முடியாது.

❖ காரணம் முழுமையாக யோசிக்கும் மனித மனம் அவற்றிடம் இல்லை. மனம் இருந்தும் மனிதன் உணவு, உறக்கம், காமம், அந்தஸ்து தேடுவதில் சுகம் கண்டு "நான் திருப்தியாகத் தான் இருக்கிறேன்" என்று சொன்னால் அதுதான் போலித் திருப்தி.

❖ அன்பு, நிம்மதி, ஆனந்தம் இவற்றை அடைய
முயற்சி செய்து அடைந்த பின் கிடைப்பதுதான்
ஆழ்ந்தத் திருப்தி.

❖ போலித் திருப்தி அதிருப்தியைவிட மிக மோசமானது!

❖ “நான் நிம்மதியாக இருக்கிறேன்” என்ற
கற்பனை எண்ணமும், “நான் திருப்தியாக
இல்லை” என்ற உணர்வும் கலந்து
வெளிப்படும்போது அது போலித்
திருப்தியாக மாறி விடுகிறது.

❖ உலக விஷயங்களில் திருப்தியே இல்லாமல் அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று செய்துகொண்டே இருப்பது நம்மிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியைக் கூடக் கெடுத்துவிடும்.

side illustration with person

வாழ்வில் திருப்தியே அடையாதவர்கள் பைத்தியமாகக்கூட அலைய நேரிடலாம்.

❖ உண்மையை உணர்வதில்

  • திருப்தி! பெருந்தன்மையாக நடந்து கொள்வதில்
  • திருப்தி! கருணைக் காட்டுவதில்
  • திருப்தி மற்றவர்களுக்குக் கற்றுத் தருவதில்
  • திருப்தி!
  • என திருப்தி வாழ்க்கைத் திடலில் கொட்டிக்கிடக்கிறது.

❖ ஆழ்ந்த திருப்தி உங்களுக்குள் மலரும்வரை 'போதும்' என்ற உணர்வு மலராது.

❖

❖ போலித் திருப்தி உங்களைத் தொற்றிக்
கொண்டிருக்கும் வரை ‘இதுக்கு மேலே என்ன
இருக்கும்?’ என்ற மந்த எண்ணம் எழுந்து
கொண்டே இருக்கும்.

❖ போலித் திருப்தியை ஒழிக்க மிகச் சரியான
வழி வாழ்வின் ஒவ்வொரு - நிகழ்விலும்
திருப்தியைக் காண்பதுதான்.

❖ ஆழ்ந்த திருப்தியைப் பெறுவதற்குத்
தொடர்ந்து உங்கள் புத்திசாலித்தனத்தை
உபயோகப்படுத்திக் கொண்டே இருங்கள்.

❖ போலித் திருப்தியிலிருந்து உதறி எழுந்து
திருப்தியை நோக்கிப் பயணம் செய்ய
ஆரம்பியுங்கள்.

Illustration

❖ 'அவர் சொன்னார், இவர் சொன்னார்' என்று
பலவிதமான விஷயங்களை நாம் நம் மனதில்
போட்டு அடைத்து வைத்திருக்கிறோம்.

❖ மதங்களின் பெயரால், இயக்கங்களின்
பெயரால் பொழுதுபோக்கு அம்சங்கள்
வழியாக நீங்கள் தெரிந்து வைத்திருக்கிற
விஷயங்களைத் தவிர்த்து வேறெதுவும்
நீங்கள் பேச முடியாது.

❖ இவற்றைப் பொறுத்துதான் உங்கள் Inner chattering' (மன உளறல்) அமையும்.

❖ வெட்டிப் பேச்சு -
வெட்டி எண்ணங்கள்
உங்கள் மனதை வெட்டிக்

கொண்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரம்.

❖ தனிமையில் நீங்கள் யாருடனும் பேசாத
வேளையில் உங்களுக்கு நீங்களே
பேச ஆரம்பிக்கிறீர்கள்.

❖ தூங்கிய பிறகு கனவில் பேச ஆரம்பிக்கிறீர்கள்.

❖ இப்படி இருபத்து நான்கு மணி நேரமும்
நீங்கள் பேசிக்கொண்டே இருப்பதால்தான்
உங்களால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை.

❖ ஓட்டமாய் ஓடும் மனக்குதிரையையும்,
ஓயாமல் நடக்கும் மனத்தின் பட்டி
மன்றத்தையும், ஒருவழிக்கு கொண்டு வராத
வரை, 'நிம்மதி', 'ஆனந்தம்', 'நோயற்ற
வாழ்வு' என்ற பேச்சுக்கே இடமில்லை.

தப்பின் கதை

❖ 'தப்பு' என்பது சுட்டிக் காட்டுவது...

❖ ஒருவன் தன்னை மனதளவிலோ, உடலளவிலோ புண்படுத்திக் கொள்வதிலிருந்து தவிர்க்க, சமுதாயத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வார்த்தை, அவ்வளவே.

❖ 'தவறு' என்பது...

❖ ஒரு மனிதன் தன்னைக் கட்டுக்கடங்கா புலன் ஈர்ப்பிலிருந்து காத்துக் கொள்ள பெரியவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு உணர்வு.

❖ ஒரு பாதுகாப்பம்சம் மட்டுமே.

❖ ஆனால் இன்று... 'தப்பு' துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.

‘தப்பு’ என்ற சொல்லை, தங்கள் தவறுகளை
மறைப்பதற்காக, மற்றவர்களின் கண்களை
மூட வைக்கும் மிளகாய் தூள்போல் பலர்
அவ்வப்போது பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

❖ ‘தவறு’ செய்யும்போது
அல்லது
‘தவறு செய்கிறோம் என்ற
உணர்வு வரும்போது,
தவறுக்குப் பயப்படுவதைவிட,
மற்றவர்கள் தவறாகப் பேசிவிடுவார்களே!’
என்று பயப்படும் கூட்டம்தான் அதிகம்.

The Mother seated outdoors, surrounded by floral decoration

நாம் தவறு என்று சொல்வது
நம்மை பொறுத்தவரையில் மட்டுமே சரி.
மற்றவருக்கு அதே தவறு 100% சரியாக
இருக்கலாம்.

❖ ஏனென்றால்...
ஒவ்வொரு இடத்திற்கும்,
ஒவ்வொரு மனிதர்க்கும்,
ஒவ்வொரு மதத்திற்கும்,
ஒவ்வொரு ஜாதிக்கும்,
‘தவறு’ என்பது வேறுபடுகிறது.

❖ நாம் மற்றவர்களிடம் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதே, கிட்டத்தட்ட தவறுதான்.

❖ விஷயம் இப்படியிருக்க... உறவினர்களும் இன்றைய சமுதாயமும்

எதைத் தவறு என்று சுட்டிக் காட்டுகிறதோ,
அதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு,
அதை அச்சாணியாகக் கொண்டு
செயல்படுவது மிகப் பெரிய தவறு.

Illustration with photograph and flowers

மனதைக் குத்திக் கிழிக்காதீர்கள்...

❖ இது தப்பு,
அது தப்பு,
என்று சுட்டிக்காட்டி
மற்றவர்களிடம், 'தவறு செய்கிறோம்'
என்ற உணர்வை உருவாக்க உதவும்.
'தப்பு' என்ற வார்த்தை
ஒரு வீச்சரிவாளுக்குச் சமம்.
வீச்சரிவாளை பயன்படுத்த அதை...
எப்போது?
எங்கே?
எதை?
வெட்டுவதற்காகப் பயன்படுத்த வேண்டும்?
என்ற தெளிவு வேண்டும்.

❖ புத்தி தெளிவில்லாத பட்சத்தில்...
தன் சுய விருப்பு, வெறுப்புகளுக்காகவும்
தடுமாறும் எரிச்சல் மனத்திற்காகவும்
பல தலைகள் உருளும்.

❖ மற்றவரின் தப்புத்தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கு, வாழ்க்கை பற்றிய அனுபவ ரகசியங்களும் மனித மன, குண உணர்ச்சிக் கொந்தளிப்புகள் பற்றிய உண்மை நிலவரமும் தெரிந்திருக்க வேண்டும்.

❖ இவற்றைத் தெரிந்து கொள்ளாமல் நம்மிடம் பல தவறுகளை வைத்துக்கொண்டு மற்றவரின் தவறைத் திருத்த முயற்சித்தால்... கூரிய வீச்சரிவாளால் குத்திக் குத்தி ரணகளமாக்கப்பட்ட ஒரு புண்பட்ட மனத்தைத் தான் நம்மால் மற்றவர்களிடம் ஏற்படுத்த முடியும்.

Illustration
illustration

❖ தேவையில்லாத
மன, குணப் பிரச்சினைகளை நீக்கி
ஒரு பண்பட்ட மனத்தை உருவாக்க முடியாது.
புண்பட்ட மனத்தைதான் உருவாக்குவோம்.

❖ மற்றவர்களின் மனத்தைக் குத்திக் குத்தி
ரணகளப்படுத்தும் நிகழ்ச்சி தொடர்ந்து
நடந்துகொண்டுதான் இருக்கிறது.

❖ ஈருடல் ஓருயிராக இருந்து மனம்
ஒருமித்து வாழ வேண்டிய கணவன்,
மனைவி...

❖ வாழ்க்கைத் துணையின் தவறுகளைத்
தொடர்ந்து சுட்டிக் காண்பிப்பது
அல்லது அவரின் தப்புத் தவறுகளை
நினைத்து, நினைத்து தன்னைத்தானே
புண்படுத்திக்கொள்வது...

  • என்ற இந்த இரண்டு காரியங்களை மட்டும்தான் வாழ்நாள் முழுவதும் பல தம்பதியினர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இது மிகவும் வருந்தத்தக்க விஷயம்தான்.