ஞானம் அடைவதற்கு முதல்படி...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ சிரிப்பு - உங்களுக்கு மருந்து மற்றவர்களுக்கு விருந்து.
❖ சிரிப்பில்லா முகத்திற்கும் செத்துப்போன முகத்திற்கும் வித்தியாசங்கள் மிகக் குறைவு.
❖ சிரிப்பு - உடல், மனம், உயிர் என்ற மூன்றும் சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறி.
❖ சிரிப்பது, சிரிக்க வைப்பது என்பது
எல்லோராலும் முடிந்துவிடக் கூடிய சாதாரண
விஷயம் அல்ல.
❖ சிரிக்கத் தெரியாத சிலர்,
அது ஒன்றும் சீரியஸான விஷயம்
இல்லை என்பார்கள் - இது தவறு.
❖ சிரிப்பை விட சீரியஸாக எடுத்து
அனுபவிக்கப்பட வேண்டிய விஷயம்
வேறு எதுவும் இல்லை.
❖ 'வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்
போகும்' - இது வெறும் பழமொழி அல்ல.
மருத்துவ குணம் கொண்ட 'தியான சூத்திரம்'.
தொடர்ந்து இருபது நிமிடங்கள் சிரிப்பதே
ஒரு தியான முறை.
❖ வாய்விட்டுச் சிரிப்பது நமது அகங்காரத்தை உடைக்கிறது. அகங்காரம் பிடித்தவர்கள் பொதுவாக இறுக்கமாக இருப்பார்கள். சிரிக்கிற போது அகங்காரம் கரைந்து வெறுமையாகி விடுகிற சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைக்கிறது. அந்த வெறுமைதான் ஞானத்தை அடைவதற்கு முதல்படி.
