KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/விழிப்புணர்வின்மையே நிதானமின்மைSign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

விழிப்புணர்வின்மையே நிதானமின்மை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ கோபம், சீற்றம் என்பவை
நிதானமின்மை இருப்பதற்கான
வெளி அறிகுறிகள்.

❖ தடுமாற்ற உணர்வு நிதானமின்மை இருப்பதற்கான உள் அறிகுறி.

❖ கோபப்படும் போதும்...
சீற்றப்படும் போதும்...
தடுமாறும் போதும்...
முழு உணர்வோடு இருப்பதுதான்
விழிப்புணர்வோடு இருப்பது.

❖ நம் எல்லோருடைய கோபமும்
சிறு பிள்ளைத்தனமானது.
இது மறுக்க முடியாத உண்மை.

❖ கோபம் நம் வசம் இல்லை.
கோபத்தின் வசத்தில்தான் நாம்
இருக்கிறோம்.

❖ வெளியில் ஏற்படும் சிறு மாற்றங்கள், உறவுகளின் சில தவறான நடவடிக்கைகள், எதிர்பார்த்தது, எதிர்பார்த்தபடி இல்லாமல்போவது எனச் சிறு சிறு விஷயங்களுக்குத்தான் கோபப்படுகிறோம்.

❖ வெளியில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்கள்தான் நம்மைச் சீற்றமடைய வைக்கிறது! நிலைகுலைய வைக்கிறது! நிதானத்தையே கலைக்கிறது! நிதானமின்மையை உருவாக்குகிறது! எப்போதும், எந்தவொரு சூழ்நிலையிலும் நிதானமாக, முழுமையாக இருப்பதே ஞானம்.

Portrait and floral motif

❖ தடுமாற்றுவது உலகின் இயல்பு!
தடுமாறுவது மனதின் இயல்பு!
தடுமாறாமல் இருப்பது ஆத்மாவின் இயல்பு!

❖ எவ்வளவுக்கெவ்வளவு அவசரம்
இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு
கோபமும், சீற்றமும் இருக்கும்.

❖ கோபமும், சீற்றமும் இருக்கும் அளவைப்
பொறுத்து நிதானம் பாதிக்கப்பட்டு
நிதானமின்மை ஏற்படும்.

❖ நில நடுக்கத்தைப்போல் ஒவ்வொரு
கோபத்திலும் அக நடுக்கம் ஏற்படுகிறது!
நாடி நரம்புகள் உலுக்கப்படுகின்றன!
ஒவ்வொரு செல்லும் கொதிக்கிறது!
இதனால் யாருக்கென்ன பிரயோஜனம்?
கொஞ்சம் யோசியுங்கள்.

❖ உங்களுக்குள் ஒளிந்திருக்கும் உங்களைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள்.

❖ தடுமாற்றங்கள் எவ்வளவு?
கோபங்கள் எவ்வளவு?
எரிச்சல் எவ்வளவு?
என்று புரியவரும்.

❖ நம்முடைய நிதானம் எந்த அளவுக்குக்
களங்கப்பட்டு நிதானமின்மையாக
மாறியிருக்கிறது என்று தெரியவரும்.
தவறுகளைக் கண்டுபிடித்துவிட்டீர்களா?

❖ 'ஆம்' என்றால் நிதானத்திற்கான முதல் படியை நீங்கள் எடுத்து வைத்து விட்டீர்கள்.

❖ வெளி உலகில் வாழும் மனிதர்கள் தங்கள் உள் உலகத்திற்குள் செல்வதற்கான

'பாலத்தைக்' கண்டுபிடிப்பதுதான் - உள் உலக சாதனையின் முதல்படி.

❖ தன் தடுமாற்றங்களைக்
கண்டுபிடிப்பது பாலத்தைக்
கண்டுபிடிப்பதற்குச் சமம்.
தடுமாற்றத்தைத் தாண்டுங்கள்,
தடுமாற்றம் அற்ற நிதானம்
உங்களுக்காக உங்களுக்குள்ளேயே
காத்துக்கொண்டிருக்கிறது.

❖ தட்டுத் தடுமாறினாலும்,
பரவாயில்லை என்று தடுமாற்றத்திற்குள்
தைரியமாக விழிப்புணர்வோடு
நுழைந்து வெளியே வருவதுதான்
தடுமாற்றத்தைத் தாண்டுவதற்கான
எளிய வழி.

❖ விழிப்புணர்வு ஓர் சக்தி.
தடுமாற்றத்தை தாண்டும்
வல்லமையை
அது நமக்குத் தரும்.

❖ நிதானமின்மைக்குள்
புகுந்து
நிதானம் நோக்கிய
பயணத்தை இந்த நிமிடம்
முதல் ஆரம்பியுங்கள்.

Illustration
side illustration

நிதானம் ஓர் தானம்

❖ நீங்கள் உங்களுக்குள் பெற்றிருக்கும்
நிலையான சமாதான உணர்வே
-நிதானம்.

❖ நிதானம் - நீங்கள் ஆரோக்கியமானவர் என்ற
செய்தியை வெளியிடும் கொள்கைப் பரப்புச்
செயலாளர்.

❖ நிதானம்

  • ஆன்மீகவாதியின் அடையாளச் சின்னம்.

❖ நிதானம் - இருந்தால் உங்கள் இல்லத்தின் பிரதமர் நீங்கள்தான்.

❖ கோபத்தை நாம் பயன்படுத்தினால்

  • அது நிதானம்.

❖ கோபம் நம்மைப் பயன்படுத்தினால்

  • அது நிதானமின்மை.

❖ கோபத்தை வெறும் சக்தியாகத்
தேவைப்படும் நேரத்தில் மட்டுமே
பயன்படுத்துவதுதான் நிதானத்தின்
முதல்படி.

❖ நிதானம்தான் நீ செய்யும்
தானங்களிலேயே சிறந்த தானம்.
நிதானம் எல்லாச் சூழ்நிலைகளையும்
முழுமையாகக் கொண்டாட
உதவச் செய்யும்.

❖ நம்முடைய நிதானத்தால் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு கிடைக்கும் நிம்மதி! திருப்தி!

Illustration

சந்தோஷம்!
ஆகியவை பல நூறு தானங்கள் செய்தாலும்
அவர்களுக்குக் கிடைக்காது.

❖ முதலில், எவ்வளவு சலனப்படுகிறீர்கள்
என்பதையும், எவ்வளவு மனத்தடுமாற்றம்
உங்களுக்குள் இருக்கிறது என்பதையும்
கண்டுபிடியுங்கள்.
பாதிப்பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

❖ இரண்டாவது, சலனப்படும் போதெல்லாம்
விழிப்புணர்வோடு இருங்கள்.
எவ்வளவு சலனப்படுகிறீர்கள்?
எப்படிச் சலனப்படுகிறீர்கள்?
எதற்காகச் சலனப்படுகிறீர்கள்?

  • என்று தெரிந்து கொண்டு முழு உணர்வோடு இருங்கள்.

❖ இப்படியே தொடர்ந்து
விழிப்புணர்வோடிருக்கும்போது
உங்களுக்குள்
ஒரு மாற்றம் நிகழும்

  • அதற்குப் பெயர்தான் நிதானம்.

❖ எண்ணங்களை உறிஞ்சி உறிஞ்சி
உயிர் வாழும் மனம்
தொடர்ந்து நிறம் மாறிக் கொண்டேயிருக்கும்.

❖ ஒரு பெண்ணையோ, ஆணையோ
தொடர்ந்து நான்கைந்து பேர்
‘நீ அழகு’ என்று சொல்லிவிட்டால்போதும்,
தான் அழகென்ற எண்ணம்
அவருக்குள் கர்வமாக மாறிவிடும்.

❖ அதே பெண்ணையோ இல்லை
ஆணையோ ‘நீ மோசம்’ என்று
தொடர்ந்து நான்கைந்து பேர் சொல்லி
விட்டால் போதும், தான் மோசமென்ற
எண்ணம் வருத்தமாக மாறிவிடும்.

❖ மனித மனது உறுதியாக இல்லாததால்தான்,
மற்றவர்கள் புகுத்தும் எண்ணங்கள்
மனிதனை குரங்காட்டம் ஆட வைக்கிறது.
ரிலாக்ஸே இல்லாதவர்களாக மனிதர்களை
மாற்றி விட்டது.
உறுதித்தன்மையும், தெளிவும் மனதின்
முதுகெலும்புகள்.

❖ ஒரு முறை யோசியுங்கள்...
ஏன் வெளியே இருப்பவர்கள்தான் நம்
மனதின் எலும்புகளான எண்ணங்களை
நிர்ணயிக்க வேண்டுமா?
நாமே நிர்ணயிக்கக் கூடாதா?
பதில் - நிர்ணயிக்க முடியும் என்பதே!

❖ முதலில் உங்களை நீங்களே

illustration

ரிலாக்ஸாக அனுமதியுங்கள்.
களங்கப்பட்ட எண்ணங்களைக்
கண்டுபிடியுங்கள்.

❖ தவறான எண்ணங்களைத் தூக்கியெறிந்துவிட்டு
நல்ல எண்ணங்களை முழுவிழிப்புணர்வோடு
உங்கள் மனத்திற்குள் நுழையச் செய்யுங்கள்.

❖ புது மனதை
நீங்களே வடிவமைுங்கள்.
புது எண்ணங்களால்!
இது சாத்தியமானதே.

❖ நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு இளவரசன்!
நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு இளவரசிதான்!
என்பதை அனுபவபூர்வமாய் உணர்வீர்கள்.

உங்கள் வாழ்க்கைச் சக்கரத்தின் விட்டம் என்ன?

❖ அதிகபட்சமாக நமக்கெல்லாம்
என்ன தெரியும்?
சில மனிதர்கள்...
சில விஷயங்கள்...
சில இடங்கள்...
யார், யார் நமக்குத் தெரிந்தவர்கள்?
ஒரு பட்டியலிடலாம்.

❖ உங்களின் பெயர்
மற்றும் உங்களை ஒருமுறை பார்த்து
தெரிந்து வைத்திருப்பவர்கள்
இரண்டாயிரம் பேர்;
உங்களின் பெயர், விலாசம்,
பெற்றோர் வரை தெரிந்து
வைத்திருக்கும் நண்பர்கள்,

Illustration
illustration with portrait and flowers

உறவினர்கள் ஆயிரம் பேர்;
உங்களின் குணம், நடவடிக்கைகள்
பற்றி முழுமையாகத் தெரிந்து
வைத்திருப்பவர்கள் பத்து பேர்;

❖ மொத்தமாக உங்களோடு நேரடியாக
சம்பந்தப்பட்டவர்கள் 300-லிருந்து
350-க்குள் இருப்பதே பெரிய விஷயம்!
எடுத்துப் பட்டியலிட்டுப் பார்த்தால்
உண்மை புரியும்.

❖ இத்தனை கோடி மக்கள் இருந்தும்,
அதில் நமக்குத் தெரிந்திருப்பது சில
மனிதர்கள் மட்டுமே.

❖ அந்தச் சிலரில் நம்மை உண்மையாகப்
புரிந்து கொண்டவர்கள் யார்? யார்?
என்று எண்ண ஆரம்பித்தால் ஐந்து

விரல்களைத் தாண்டுவது
பலருக்குக் கடினம்.
நம் கதி இப்படியிருக்க - மற்றவர்களின்
கதி எப்படி இருக்கும்?
ஒரு சிறு ஆய்வு செய்யலாமே!
எவ்வளவு விஷயங்கள் நமக்குத் தெரியும்?

❖ ஒவ்வொரு துறையிலும் ஆயிரக்கணக்கில்
புத்தகங்கள் இருக்க,
பனிரெண்டாவதுவரை வருடத்திற்கு
ஐந்தாறு புத்தகங்கள் படித்ததை தாண்டி,
கல்லூரியில் ஒவ்வொரு வருடத்திற்கும்
படித்த ஒரு சில புத்தகங்கள் மற்றும்
அவ்வப்போது படித்த பத்திரிக்கைகள்,
கதைகள், டி.வி.யில் பார்த்த சில
சம்பவங்கள் போன்ற செய்திகளைத் தாண்டி
உண்மையில் நமக்கு என்ன தெரியும்?

illustration