KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/ஞானிகளை நம்பாதே!Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

ஞானிகளை நம்பாதே!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ நம்பினால் 100% முழுமையாக
நம்புங்கள், நம்ப முடியாவிட்டால்
ஞானிகளின் கூற்றுக்களை 100%
முழுமையாக நம்பாதீர்கள்.

❖ ஞானம் பற்றிய ஞானக் கூற்றுக்கள்
அனைத்தும் முக்காலத்திலும் மாறாத
சத்தியங்கள்.

❖ ஒரு ஞானியின் கூற்றுக்களில் நீங்கள் சிலவற்றை மாத்திரம் நம்பும்போது...

1. நீங்கள் உங்களுக்கு (அகங்காரத்திற்கு)
பிடித்த விஷயங்களை மட்டும் ஒரு ஞானியிடம்
இருந்து எடுத்துக்கொள்ளும்போது உங்கள்
அகங்காரத்திற்குத் தீனியிடுகிறீர்கள்.

❖

Illustration
illustration

❖ 2. காரணம், ஒரு ஞானி என்னதான்
சத்தியத்தைக் கூறினாலும் அதை நீங்கள்
உங்களின் மனத்தன்மையைப் பொறுத்தும்,
மன கண்ணோட்டத்தைப் பொறுத்தும்
அதை மனக்கருத்தாகத்தான் புரிந்து
கொள்வீர்கள்.

❖ 3. அரைகுறையாக ஒரு ஞானியின்
கருத்தை நம்பும்போது உங்கள்
மனக்குறைகள் உங்களுக்கு நிறைபோல
தெரிய ஆரம்பிக்கும்.
அகங்காரம் உயிர் பெறும்.

❖ 4. ஞானியின் கூற்றை முழுமையாக
நம்பினால் மாத்திரமே, சத்தியம் சத்தியமாக
உங்களை வந்து சேரும். இல்லையென்றால்
சத்தியம் சாதாரண மனக்கருத்தாகவே
உங்களுக்குள் நுழையும்.

❖ 5. உங்களுக்குப் பிடித்தக் கருத்துக்களை
மட்டும் பெற்று அகங்காரத்தை வளர்க்க
ஞானிகள் தேவையில்லை.
வீதியில் விற்கப்படும் சில தரம் கெட்ட
புத்தகங்களே போதுமானது.
தரம் குறைந்து பேசும் சில மேடைப்
பேச்சாளர்களின் பேச்சுக்களே போதுமானது.

❖ 6. சத்தியத்தை முழுமையாக நம்பினால்
மாத்திரமே அது உங்களுக்குள் நல்ல
மாற்றங்களை ஏற்படுத்த முடியும்
நம்புங்கள்! நம்புங்கள்!! நம்புங்கள்!!!
நம்பிக்கைதான் வாழ்க்கை!
நம்பிக்கைதான் எல்லாம்!

❖ இல்லையெனில், நம்பாதீர்கள்!
அரைகுறையாக நம்பி, அரைகுறையாகப்
புரிந்து கொண்டு, 'அந்த ஞானி இப்படித்தான்

சொன்னார்... அவர் சொன்ன
கருத்துக்களிலேயே இதுதான் சரி.
எனக்கு பிடித்தது. அவர் ஞானிதான்...
அதுக்காக அவர் சொல்வதையெல்லாம்
ஏற்றுக்கொள்ள முடியுமா? அந்த ஞானி
அதன் மூலம் என்ன சொல்லவரார்னா?'
என்று வெட்டி வேதாந்தம் பேசி, உங்கள்
ஞானியால்தான் இவர் இப்படி லூசு மாதிரி
பேச ஆரம்பித்து விட்டார் என்று
நினைத்து, ஒரு ஞானியை மற்றவர்கள்
இழக்க நாம் காரணமாக இருந்துவிடக்கூடாது.

❖ ஞானத்தையும், ஞானிகளையும்
தொடக்கத்தில் ஆராய்ச்சி செய்வதுதான்.
மகாதவறு. அதனால் பிரயோஜனம் ஏதுமில்லை.

❖ நம்பினால் 100% நம்புங்கள்.
வெட்டியாக பேச மாட்டீர்கள்.
வெற்றியை நோக்கி நடக்க
ஆரம்பித்துவிடுவீர்கள்...

Illustration

உங்களை மகானாக்கும் பட்டியல்

❖ குணமுதிர்ச்சியைப் பெறுவது சாதாரண
மனிதன் ஞானமடைவதற்கான மிக
முக்கியமான படிகளில் ஒன்று.

❖ கோபம் -
பாசம் -
பயம் -

  • என்றழைக்கப்படும் உணர்ச்சிகளைச் சுயக்கட்டுப்பாட்டில் வைத்திருந்து, தானும் மற்றவரும் பாதிக்கப்படாதவாறு உணர்ச்சிகளைக் கையாளும் திறன்தான் குணமுதிர்ச்சி.

❖ உணர்ச்சிகளைத் தாண்டி, தானும்
மற்றவர்களும் பரவசமடையுமாறு வாழச்
செய்யும் குணமுதிர்ச்சியே ஞானம்.

  • உடலைத் தாண்டிய மனதையும், உணர்வையும் பிழைக்க வைக்க, தழைக்க வைக்க குணமுதிர்ச்சி பெற வேண்டும். அதற்காகத் தனியாய் உழைக்க வேண்டும்.
  • குணக் கோளாறுகளைத் தாண்டிய குணமுதிர்ச்சியைப் பெற ஒருவர் செய்ய வேண்டிய முதல் செயல், தானும் மற்றவர்களும் குணக்கோளாறால் எவ்வளவு பாதிக்கப் பட்டிருக்கிறோம் என்பதைப் பட்டியலிடுவதுதான்.
  • 'பட்டியலிடுவதே' குணக்கோளாறுகளை மறையச் செய்து குணமுதிர்ச்சியை வளர்க்கும்.
  • உணர்வோடு பட்டியலிட்டுப் பாருங்கள். உங்களுக்கேப் புரியும்.
Illustration with photo and star decoration
Illustration

❖ கிட்டத்தட்ட எல்லா மனிதர்களுமே சமுதாயத்தின் சில அம்சங்களில் வெறியாக இருப்பது, வேறு சிலவற்றை வெறுப்பது என்பது பரவலாகிப் போன பரிதாபம்.

❖ பாசமும், பகையும்...சில நேரங்களில் வெறியாகவும், சில நேரங்களில் வெறுப்பாகவும், வெறுப்பாகவும் வெளிப்படுகிறது.

❖ அது மதம் மீதான வெறியாகவோ,
காமம் மீதான வெறியாகவோ,
போர், புகழ் போன்றவற்றின் மீதான
வெறியாகவோ, வெறுப்பாகவோ இப்படி
மனித மனம் வெறி அல்லது வெறுப்பைப் பற்றிக்
கொண்டு மனிதனை படாதபாடுபட வைக்கிறது.

  • நீதி நெறிகளை தங்களுக்கு சாதகமாக்கி சிலவற்றை வெறுப்பதும் நீதி நெறிகளை தங்கள் மனவெறிக்காக மீறுவதும்- இரண்டுமே மனிதனை துன்பத்தில் மூழ்க வைத்து விடும்.
Illustration
illustration with portrait and flowers