உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
குரு - சிஷ்யன்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ வா!
அருகில் வா!
என் அருகில் வா!
என்னோடு கலந்துவிட வா!
- என்ற நிலையில் உங்களுக்குள் இருக்கும் ஆத்மா காத்துக்கொண்டே இருக்கிறது. அழைப்பை ஏற்பதும், உதாசீனப்படுத்துவதும் உங்கள் கையில்.
❖ உங்களுக்குக் காத்துக் கொண்டிருக்கும் ஆத்மாவை நீங்கள் திருப்பிப் பார்க்க, நீங்கள் ஆத்மாவில் கலக்க உதவுவதுதான் ஒரு குருவின் பணி.
❖ குருவின் பணியை முழுமையாக அனுபவிப்பன் சிஷ்யன்.
❖ ஒரு குருவின் நோக்கம் தனிமனிதனுக்குள் ஆனந்தத்தை மலர வைப்பதே.


❖ உண்மையான குருவிற்கு எந்தவொரு காலத்திலும் பஞ்சம் இருந்ததே இல்லை. ஆனால், உண்மையான சீடர்களுக்குத்தான் எல்லாக் காலங்களிலும் பஞ்சம் இருந்துக் கொண்டே இருக்கிறது.