வேதனை தரும் தூண்டல்... சாதனை!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ சாதனை தனி வேதனை தனி
❖ வேதனைக்கு மருந்து சாதனையல்ல. வேதனைக்கு மருந்து சந்தோஷம்.
❖ சந்தோஷத்திற்கு வழி வாழ்க்கையைப்
பூரணமாக அனுபவித்து வாழ்தல்.
சந்தோஷ வாழ்வு வேதனைகளை
மறையச் செய்யும்.
❖ வேதனைக்கு,
சந்தோஷமென்னும் மருந்திட்டு
குணப்படுத்துவது - சாதனை என்னும்
தீப்புகையை மூட்டி விட்டு வேதனையை
மறைப்பதைவிட சிறந்தது.

❖ வேதனையை மறைப்பதைவிட,
குணப்படுத்துவதே ஆரோக்கியமானது.
அதன் பிறகு சாதனைக்குக் காலடி
எடுத்து வையுங்கள்! சாதியுங்கள்!
❖ மீண்டும் சொல்கிறேன்,
சாதனை தனி
வேதனை தனி.
உங்களின் சாதனை ஆசை வேதனையிலிருந்து
உதித்த ஒன்றா என ஆராயுங்கள்.
❖ சோதனையிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். வேதனைக்கு முதலில் மருந்திடுங்கள்!
❖ விழிப்புணர்வோடு அணுகினால் ‘மத்தியில்
வாழ்வது’ அதாவது ஆனந்தமாய் வாழ்வது எப்படி
என்பது புரிந்துவிடும்.
❖ உங்களின் ஆனந்தம் நோக்கிய பயணம் இனிதே தொடரும்.