KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/இளமைSign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

இளமை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ இளமையில் இளமையை ஆக்கப் பூர்வமாக
பயன்படுத்தாமல் இருப்பவன், ‘இளைஞன்’
என்ற போர்வைக்குள் இருக்கும் ‘கிழவன்’.

❖ வாழ்க்கையில் சுவை மிகுந்த பகுதி - இளமை! படிப்பு, வேலை எதிர்கால வாழ்க்கை பற்றிய பயம் இவற்றால் இன்றைய உலகில் வாழ்க்கையின் சுமை மிகுந்த பகுதி - இளமை! என்றாகி விட்டது.

❖ இன்று அதிகபட்ச சுவையும், அதிக பட்ச
சுமையும் நிறைந்த வாழ்க்கைப் பகுதி
இளமை!

❖ பொதுவாக நாம் பின்னால் பெறுகிற
வெற்றியின் விதைகள் இளமையிலேயே
ஊன்றப்படுகின்றன.

❖ இளமை என்பது வாழ்வின் சாரம்.
இதைப் பிழிந்து அர்ப்பணிக்காவிட்டால்
உயர்ந்த நிலைகளை அடைய முடியாது.

❖ இளமையை எதற்கு
அர்ப்பணிக்கிறீர்களோ அதன்படி
உங்கள் வாழ்க்கை நிர்ணயமாகிறது.

❖ இளமையில் உருவாகிற இந்த
அர்ப்பணிப்புதான் பின்னாளில்
ஞானமாகவோ, பணமாகவோ,
பதவியாகவோ வந்தமைகிறது.

Illustration
illustration

அனுபவிக்கத் துடிப்பவனுக்கு...

❖ சாதாரண வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை
என்ற இரண்டு வகைப்பட்ட வாழ்வு
முறைகள் இல்லை.

❖ மனிதன் தான் ‘ஆனந்தமாக இல்லை’ என்று உணர ஆரம்பித்தபின், சுயபட்சாதாபத்தால் சப்பைகட்டுக் கட்ட உருவாக்கப்பட்ட title தான் சாதாரண வாழ்க்கை. எல்லோரும் ஆனந்தத்தின் உச்சிக்குச் செல்லவே ஆசைப்படுகிறோம். ஆனால் காதல், பேர்,புகழ், பணம், பதவி என்று அதை நமக்குப் பிடித்த வழியில் வேகமாக அனுபவிக்க, காளைபோல உழைக்க ஆரம்பிக்கிறோம். ஆனால் நாம் தேடும் ஆனந்தத்தை வெளியில் பெற முடியாது என்று புத்தன் முதல் ரமண மகரிஷி வரை வெவ்வேறு மொழிகளில் புலன் இன்பத்தின் உச்சத்தை அடைந்து தாண்டியவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

  • ஐந்து புலன்களின் மூலமாக இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் புலன் இன்பத்தில் கூடத் தவறே இல்லை.
  • ஆனால் அனுபவிக்கத் தேவையான சக்தியும் புத்தியும், தேவையான அளவு இல்லாமல் சுகத்தையும், திருப்தியையும் தேடி அலைய ஆரம்பிக்கும்போதுதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.
  • வாழ்க்கையை அனுபவிக்க தேவைப்படும் 'சக்தியை' தியானம் எளிதில் உருவாக்கித் தரும். உலகையும், மனிதர்களையும் புரிந்து கொண்டு நிம்மதியாக இருக்க உதவும்.
  • தன்னைப் போன்ற எல்லாவிதமான உடல், மன தடுமாற்றங்கள் நிறைந்த ஒரு பெண்தான், தனக்கு வரப்போகும் மனைவியாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்ற நிஜம் - அதீத கற்பனை
Sri Ramakrishna/Holy Mother image in oval floral frame

என்ற கரிப்புகையால் மறைக்கப்பட்டு விடுகிறது.

❖ இயல்பாகவே தங்களை மகாராஜாக்களாக
கற்பனை செய்து கொள்வது, அவர்களின் மனதின்
அடி ஆழத்தில் கர்வம் உருவாகுவதும் இயல்பு.

❖ இந்த கர்வம்தான் மலர் போன்ற பெண்மையை மதிக்கத் தவறி மதிக்கத் தூண்டுகிறது.

❖ இதேபோன்று கற்பனையில் அருமையான
ஹீரோவை எதிர்பார்ப்பவர்கள்...இயல்பாகவே
தங்களை அருமையான ஹீரோயினாக கற்பனை
செய்துகொள்வதும் அவர்களின் மனதின் அடி
ஆழத்தில் கர்வம் உருவாக்குவதும் இயல்பு.

❖ கற்பனையை எறிந்துவிட்டு, நிஜத்தை
ஏற்றுக்கொள்ளுங்கள். மனிதர்களை மனிதர்களாக
மதிக்க ஆரம்பிப்பீர்கள். நிம்மதி மலரும்!