KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/தெளிவென்னும் குழந்தைSign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

தெளிவென்னும் குழந்தை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ குழப்பத்தை நீங்கள் வெறுக்கத் தேவையில்லை; நீங்கள் வளருகிறீர்கள் என்பதற்கான அறிகுறிதான் குழப்பம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

❖ குழம்புவதில் தவறில்லை; குழம்பிக் கொண்டே இருப்பதுதான் தவறு.

❖ நீங்கள் குழம்புவது நியாயம்; அடுத்தவர்களைக் குழப்புவது அநியாயம்.

❖ இன்றைய குழப்பம் நாளைய தெளிவு.

❖ எது சரி - எது தவறு என்ற தெளிவை
ஏற்படுத்தும் மனதின் செயல்முறைதான்
குழப்பம்.

Portrait and floral design

மேற்சொன்ன வரிகளை
ஒன்றுக்கு இரண்டு முறை படித்து,
மனதில் தக்கவைத்துக் கொண்டாலே
குழப்பத்தைப் பாதி தூரம் ஓட்டிவிடலாம்.

❖ பிரச்சினை குழப்பத்தில் இல்லை.
குழப்பத்தை நீங்கள் அணுகும்
முறையில்தான் இருக்கின்றது.

❖ குழப்பமே குழப்புமளவுக்கு குழப்பத்தை
குழப்புவது, குழப்பத்தை குழப்பம் இல்லாமல்
எதிர்கொள்ளும்போதுதான் சாத்தியம்.

❖ குழப்பத்தை முழுமையாக வரவேற்றுக்
கொள்ளுங்கள்.
குழப்பத்தின் உச்சிக்குச் சென்றாலும்
பயப்படாதீர்கள்.

குழப்பத்தைத் தாண்டிய அடுத்த
நிமிடம் தெளிவு கிடைத்துவிடும்.
இது சூட்சுமமான உண்மை.
தெளிவு பெற்ற ஒவ்வொருவரும்
ஒத்துக்கொள்ளும் உண்மை.

❖ தெளிவு என்ற குழந்தை நம்முள் பிறக்க நாம் படும்பாடுதான் குழப்பம்.

❖ குழப்பத்திற்கு பயந்து குழப்பத்தைக்
கலைக்க நீங்கள் முயற்சி செய்வதால்
எத்தனைமுறை தெளிவைப் பிறக்க
விடாமல் கருவிலேயே கலைத்திருக்கிறோம்
என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

illustration